உள்ளே அவள் எதிர்பார்த்ததை விட பயங்கரமாக இருந்தது. சாதாரணமாக இருந்த கை நடுக்கம் கண்டது.
கண்கள் வெளியே வரும் அளவுக்கு…… இல்லை இல்லை ஃப்ரிட்ஜ் இல் உள்ளே ஒரு பிளேட்டில் வெளியே வந்த கண்களே இருந்தது. வார்த்தை எதுவுமே வரவில்லை. கண்ணீர் மட்டுமே வந்தது. கால்கள் எல்லாம் நடுங்க மெதுவாக பின்னோக்கி நகர்ந்தாள்.
கண்கள் மட்டும் இல்லை கூடவே கை, கால்கள் எல்லாமே இருந்தது. இப்படி ஒரு கோரமான காட்சி படத்தில் கூட பார்த்தது இல்லை.
இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்த ரோஹனின் வேலையா இது??!!!. பயம் பயம் பயம் மட்டுமே அவன் மேல் மீதம் இருந்தது.
அப்போது சரியா கதவு தட்டு கேட்டது. ஸ்ருதி அப்போதும் அசையாமல் ஃப்ரிட்ஜ் ஐ பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளின் உணர்வு எல்லாம் செயல் இழந்து போனது.
ரோஹன்… ஸ்ருதி கதவை திறக்க வில்லை என்றதும் அவனிடம் இருந்த இன்னொரு சாவி கொண்டு கதவை திறந்து வந்தான். அவன் பார்த்தது… வேர்த்து நடுங்கிக்கொண்டு கெஸ்ட் ரூம் கதவு அருகே நின்றுக்கொண்டு இருந்த ஸ்ருதி தான்.
அவளுக்கு என்ன ஆகிவிட்டதோ என்று வேகமாக அவளை தொட்டு திருப்பி
ரோஹன் - ஸ்ருதி, என்ன ஆச்சு? ஏன் இப்படி நிக்கிற??
அவன் தொட்டதும் தான் நினைவில் இருந்து மீண்டாள். ஒரே தள்ளாக தள்ளினாள். அதில் ரோஹன் நிலை தடுமாறி இரண்டடி பின்னாடி போய் நின்றான்.
ஸ்ருதி - என்ன விட்டுடு… பிளீஸ்.. கொண்ணுடாத… வேண்டாம் வேண்டாம் என பிதற்ற ஆரம்பித்தாள்.
ரோஹனுக்கு அப்போது தான் புரிந்தது ஃப்ரிட்ஜ் உள்ளே எல்லாம் அவள் பார்த்துவிட்டாள் என்பது. இவனே சொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான். ஆனால் அவளாக பார்த்தது தான் இப்போது பிரச்சனை.
ரோஹன் - இங்க பாரு ஸ்ருதி, நான் சொல்றத கொஞ்சம் கேளு… நீ நினைக்கிற மாதிரி இல்லை…
ஸ்ருதி - போதும் ரோஹன், எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் கிளம்புறேன் என சொல்லி நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
பின்னாடியே சென்ற ரோஹன் - ஒரு நிமிஷம் நான் சொல்றது கேளு… இது எதுவுமே உண்மை இல்லை ஸ்ருதி… பிளீஸ்
ஸ்ருதி - எது உண்மை இல்லை ரோஹன்… நான் நேர்ல பார்த்ததா??
அவனை மேற்கொண்டு பார்க்கவே இல்லை.. பயமாக இருந்தது. விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டாள். பின்னாடி வந்த ரோஹன் அவள் கையை பிடித்து கிச்சன் இழுத்து சென்றான். இதை எதிர்பார்க்காத ஸ்ருதி “ விடு டா….நான் என்ன பண்ணேன் உன்னை… கொலை பண்ணிடாத பிளீஸ்” என கெஞ்சிக்கொண்டே வந்தாள். கிச்சனில் இருந்து ஒரு கத்தி எடுத்தான்.
ஒரு கையில் கத்தி, மறு கையில் ஸ்ருதி என கெஸ்ட் ரூம் வந்து சேர்ந்தான். ஸ்ருதிக்கு கனவில் வந்தது கண்முன்னே நடக்க போவது புரிந்தது. கெஸ்ட் ரூம் உள்ளே வந்து அவளை விட்டவன்… நேராக ஃப்ரிட்ஜ் திறந்து… விரலில் இருந்து முழங்கை வரை இருக்கும் உடல் பாகத்தை வெட்டி வைத்திருக்கும் ஒரு பிளேட் ஐ கையில் எடுத்தான்.
ஸ்ருதிக்கு பார்க்கவே முடியவில்லை. அவளுக்கு அடுத்த நடக்க போவது தெரியும் அல்லவா… ரோஹன் அருகில் வந்து இவள் கையை வெட்டி கேக் இல் ஊற்ற போகிறான். நடக்க போவது தெரிந்த பின் அடுத்த நிமிடம் நரகமாக இருந்தது.
ரோஹன் வேகமாக கேக் மற்றும் கத்தி எடுத்து வந்து ஸ்ருதி அருகில் வந்தான். ஸ்ருதி பயத்தில் கண்களை மூடிக்கொண்டுடாள்.
நேராக ஸ்ருதி கையில் கத்தி கொடுத்து பிளேட்டில் உள்ள கையை வெட்டினான். அதுவோ அழகாக வெட்டியது. மீண்டும் ஒரு கோடு போட.. அழகான துண்டாகியது.
ரோஹன் - கண்ணை தொறந்து பாரு ஸ்ருதி.. அது என்னனு… அப்போ உனக்கு புரியுதானு பார்க்கலாம்.
தன் கையில் தான் கத்தி உள்ளது என்பது ஸ்ருதிக்கு தெரிந்தது. கண்களை திறந்து பார்த்தவள் அதிர்ந்தாள். அவள் வெட்டியது கேக். ஆனால் அதன் வடிவமைப்பு மட்டும் மனிதனின் கை போன்று இருந்தது.
பேந்த பேந்த விழித்து ரோஹன் பார்த்தாள்.
ரோஹன் முகத்தில் வருத்தம் தெரிந்தது.
ரோஹன் - இது கேக் தான். இந்த ஃப்ரிட்ஜ் ல உள்ள மற்றது எல்லாமே கேக். இது ஒரு கம்படிஷன்க்கு பண்ணிருகேன். நாளைக்கு கொண்டு போகனும்.
மீண்டும் ரோஹனே தொடர்ந்தான்.
ரோஹன் - நான் இத உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கனும். நான் ஒரு செஃப் (chef). சிலருக்கு செஃப்னா ரொம்ப இளக்காரம்… நீயும் அப்படி நினச்சு என்ன ஒதுக்கிடுவியோனு தான் சொல்லல. ஆன நீ என்ன கொலைகாரன் ரேஞ்ச்க்கு நினைப்பனு எதிர்பார்க்கல…. (சொன்ன வார்த்தையில் எல்லாம் வலி மட்டுமே இருந்தது) இப்போ நீ பயந்தத பார்த்து சந்தோச படுறதா இல்ல வருதப்படுறதா என்னனே புரியல…
மனதுக்கு பிடித்த பெண் தன்னை பார்த்து பயந்ததை எண்ணி கவலையாக இருந்தது மறுபக்கம் அவன் செய்த கேக் உண்மையான உடல் பாகங்கள் போல் இருந்ததை பார்த்து வந்த பயம்… அவன் அவ்வளவு உண்மை போலவே செய்து இருந்ததை நினைக்கும் போது உள்ளம் ஒரு ஓரத்தில் சந்தோசத்தை தந்தது.
ஸ்ருதி மீண்டு கத்தியை எடுத்து அந்த கேக் இல் இருக்கும் ஒரு விரலை வெட்டிப் பார்க்க… அதுவும் கேக் தான். அவள் செய்கையை பார்த்த ரோஹனுக்கு லேசாக சிரிப்பு எட்டிப்பார்த்தது. அவள் அருகில் வந்தவன்… அவள் வெட்டிய விரலை (கேக்) எடுத்து வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டான். ஸ்ருதி அவனையே கண்ணிமைக்காமல் பார்க்க…
ரோஹன் - என்ன ஸ்ருதி? இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா??
ஸ்ருதி - அது… அது இல்லை ரோஹன்.. நான் வந்து… சாரி… அஞ்சனா சொன்னது.. அப்புறம் அந்த படம்… இந்த கேக்… அந்த கண்ணு… கத்தி… சாரி ரோஹன்… வார்த்தை எதுவும் கோர்வையாக வரவில்லை.
தண்ணி எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.
ஸ்ருதி - சாரி ரோஹன்… நான் இப்படி நடந்திருக்க கூடாது. வேணும்னே பண்ணல சாரி… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… இந்த நேரத்துல நான் என்ன சொன்னாலும் தப்பா தான் இருக்கும்… நான் கிளம்புறேன். நம்ம நாளைக்கு பேசலாம்.. பிளீஸ் என்றாள் கெஞ்சலான பார்வையில்..
அவள் இடத்தில் இருந்து பார்க்கும் போது அவனுக்கும் அவள் நிலமை புரிந்தது. அவள் வந்ததில் இருந்துதே கொஞ்சம் சோர்வாகத்தான் தான் இருந்தாள்… அவள் தோழி மீண்டும் மீண்டும் ஃபோன் செய்து தொல்லை பண்ணியது.. உடல் பாகங்கள் போல் இருக்கும் கேக் பார்த்து பயந்தது எல்லாம் அவளை அசாதாரண நிலமைக்கு தள்ளியதுபுரிந்தது.
இவ்வளவு நடந்த பின் மீண்டும் தன்னிடம் பேசுவாளா என்பது தெரியாது. ஆனால் அவள் முடிவை மதித்து கனத்த மனதுடன்
ரோஹன் - சரி ஸ்ருதி என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
ரோஹனுக்கு …. இவர்கள் இடையில் கொஞ்சம் இடைவெளி வந்தது போல தோன்றியது. ஸ்ருதி ஹாலுக்கு வந்திருக்க “ஒரு நிமிஷம் ஸ்ருதி” என்றவன் வேகமாக பெட்ரூம் சென்று கையில் ஒரு கிஃப்ட் உடன் வெளியே வந்தான். நேராக ஸ்ருதியிடம் சென்று கிஃப்ட் ஐ நீட்டினான்.
ரோஹன் மனதில் ‘ இதை அவா வாங்கிட்டா… கண்டிப்பா அடுத்து நாங்க மீட் பண்ண வாய்ப்பு இருக்கு… வாங்கலைனா.. ஸ்ருதி அடுத்து என்கூட பேசவே மாட்ட ‘ என அக்மார்க் 90’s போல் எண்ணினான்.
ஸ்ருதி அதை வாங்குவதா வேண்டாமா என்பது தெரியவில்லை. சாயங்காலத்தில் இருந்து முதலில் கெட்டவனாக தெரிந்தவன் பின் நல்ல விதமாக தெரிந்தான் மீண்டும் கெட்டவனா அப்புறம் நல்லவனாக என்று மாறி மாறி தெரிந்ததால் குழப்பமாக இருந்தது. ஆனால் மனதில் ஓரத்தில் ஒரு குரல் அவன் தந்த பரிசை வாங்க சொல்லியது. அதன் படியே அவள் அதனை வாங்கிக்கொண்டாள்.
ஸ்ருதி - தேங்க்ஸ் ரோஹன்… நான் வர்றேன்.
ரோஹன் அவள் வாங்குவாளா மாட்டாளா என்று பதற்றத்தில் இருந்தவன் அவள் வாங்கிய பின் தான் உயிர் வந்தது.
ரோஹன் - இதுல என்ன இருக்கு ஸ்ருதி… பாத்து போய்ட்டு வா.. ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு..
வாசல் வரை வந்தவள்
ஸ்ருதி - அப்புறம் சாரி ரோஹன்… உன் கேக் என்னால வீணா போயிடுச்சு. நாளைக்கு கம்படிஷன் இருக்குனு வேற சொன்ன… என்றாள் தயக்கத்துடன்..
இவ்வளவு நடந்த பின்னும் அவள் தனக்காக யோசிக்கிறாள் என்று எண்ணும் போது சந்தோசமாக இருந்தது.
ரோஹன் - பரவாயில்லை ஸ்ருதி… வேற கை செய்துப்பேன்… ஐய்யோ சாரி வேற கேக் செய்துப்பேன்… ஒன்னும் பிராப்ளம் இல்லை டா.. என சாதாரணமாகவே பேசினான்.
ஸ்ருதிக்கு மேலும் குற்ற உணர்வு அதிகமாகியது. வந்ததில் இருந்து அவன் அவளை நன்றாக தான் பார்த்துக்கொண்டான். ஒரு படி மேலயே பார்த்துக்கொண்டான். ஆனால் நான் தான் அவனை சந்தேகப்பட்டு கொண்டே இருந்திருக்கிறேன் என்பதால் தன் மீதே கோவமாக வந்தது.
‘ சரி ‘ என்றவள்.. கேப் கொஞ்சம் நேரத்தில் வர இருப்பதால் கிளம்பினாள். கதவை திறந்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி. வெளியே அஞ்சனா நின்றுக்கொண்டு இருந்தாள். இவளுக்கு எப்படி ரோஹன் வீடு தெரியும்?? ஏன் வந்தாள்? சொல்லவே இல்லையே என பலவாறு சிந்தனைகள் மனதில் ஓடின.