அவள் முகம் பார்க்கும் போது குழப்பத்தில் இருப்பதாக தோன்றியது. அஞ்சனாவிடம் இருந்து மெசேஜ் வரும் போது எல்லாம் இவள் முகம் மாறுவதை கவனித்தான். அவளை திசை திருப்ப எண்ணினான்.
ரோஹன் - ஸ்ருதி, இந்தா ரிமோட். உனக்கு பிடிச்ச படம் செலக்ட் பண்ணு. நம்ம பார்க்கலாம். வந்து சோஃபாவில் மறு முனையில் அமர்ந்துக்கொண்டான்.
அது சரியாக வேலை செய்தது. மெசேஜ் செய்து கொண்டு இருந்தவள் கவனம் இவன் பக்கம் சென்றது.
இங்கு அஞ்சனா தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள். தான் மெசேஜ் அனுப்ப அனுப்ப ஸ்ருதியின் பயம் அதிகமாகும், அங்கு இருந்து கிளம்பி வருவாள் என்று எதிர்பார்க்க ஸ்ருதியோ அவள் ‘அங்கு நன்றாக இருக்கிறதாக’ சொல்கிறாள். அதை கேட்ட பின் இன்னும் கோவமாக வந்தது.
தன் தோழி தன்னை விடுத்து வேறு ஒருவரிடம் நட்பாக இருப்பது பொறுக்கவில்லை. அஞ்சனாவும் ஒரு வாரமாக கவனித்து கொண்டு தான் இருந்தாள் அவள் நடவடிக்கையை. மற்றவர்களிடம் பேசுவது போல் அல்லாமல் ரோஹனிடம் பேசும் போது மாற்றங்கள் தென்பட்டது. கண்களில் ஒரு ஸ்பார்க் (spark). அவன் மற்றவர்களை விட ஒரு படி மேல் என்பது புரிந்தது.
எப்போதும் மெசேஜ் , ஃபோன் என ஒரு வாரம்… நேரம் இடைவெளி இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்ததும் பார்க்காது போல் இருந்தாள் அஞ்சனா. உள்ளுக்குள் அந்த ரோஹன் மீது கொலைவெறியே வந்தது. இவர்களின் உரையாடல் அதிக நாள் தொடராது என்று எண்ணினாள். அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று இவர்களின் டேட்.
ஸ்ருதி இன்று வந்து அவனுடன் டேட் செல்கிறேன் என்று சொன்னதும் அவளை அப்படியே அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் தன் தோழி தவறான வழியில் செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் இருந்தது. ஸ்ருதி இரவில் திரும்பி வருவேன் என்று சொன்ன பின் தான் சமாதானம் ஆகினாள்.
ஆனால் இப்போது அவள் அங்கு சந்தோசமாக இருப்பது தெரிந்ததும் வெறி கொண்டு அமர்ந்து இருந்தாள்.
ஸ்ருதிக்கு தான் மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும் என்ற உடைமை எண்ணம்.
ஸ்ருதி வந்ததும் இதை அவளிடம் சொல்லி இனிமேல் இப்படி செய்ய கூடாது என்று கண்டிக்க வேண்டும் என முடிவு எடுத்திருந்தாள் அஞ்சனா.
இங்கு ரோஹன் வீட்டில்….
படம் செலக்ட் செய்து கொண்டு இருக்கும் போதே
ஸ்ருதி - ரோஹன், இவ்வளோ பெரிய வீட்டில நீ மட்டும் தான் இருக்கியா? உனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா?
ரோஹனின் யோசனை ஸ்ருதின் கேள்வியில் அப்போதைக்கு நிறுத்தி வைக்க பட்டது.
ரோஹன் - ஃப்ரெண்ட்ஸ் லாம் இருக்காங்க. சில பேரு ஹாஸ்டல்ல இருக்காங்க. கொஞ்சம் பேரு அவங்க அம்மா அப்பா கூட இருக்காங்க. வெளிய போற அப்போ நேர்ல பார்த்துக்குவோம். அவ்வளவு தான், ஸ்ருதி. அப்புறம் இந்த வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன்.
ஸ்ருதி - ஏன் ரோஹன், ஃப்ரெண்ட்கூட சேர்ந்து தங்குவது இல்லையா??
ரோஹன் - இல்ல ஸ்ருதி. எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும் அதான் நான் மட்டும் இருக்கேன். இப்போ நீயும் இங்க இருக்க.
ஸ்ருதி - ஓகே ரோஹன், நான் செலக்ட் பண்ணிட்டேன். இதையே பார்க்கலாம்.
ஸ்ருதி வெப் சீரிஸ் செலக்ட் செய்து இருந்தாள். அதையே பார்க்க முடிவு செய்தனர்.
அஞ்சனா பேசிய வார்த்தை யாவும் மண்டையில் ஓடிக்கொண்டே தான் இருந்தது. இவ்வளவு நேரம் சகஜமாக அவனிடம் பழகிய ஸ்ருதி மீண்டும் அவனை பார்த்து குழப்பம் அடைந்தாள். அஞ்சனா சொல்வது போல் ஒருவேளை உண்மையாகவே இவன் கெட்டவனாக இருந்தால்? என்று சிந்திக்க ஆரம்பித்தாள். அப்போ சைகோ படம் போடும் போதும் ‘ நமக்கு ஏற்ற மாதிரி இருக்கும் ‘ என ஒரு மாதிரி சொல்லியது பின் சமாளித்தது எல்லாம் நினைவில் வந்தது. ஆனால் தான் அழுததும் உடனே சமாதானம் செய்தது எல்லாம் நினைவில் வந்தது. ‘ இவன் நல்லவனா, இல்ல கெட்டவனா?’ என யோசித்தாள்.
படம் ஓடிக்கொண்டு இருக்க… நினைவில் இருந்து மீண்டவள் தன்னை யாரோ பார்த்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது. இந்த வீட்டில் ரோஹனையும், ஸ்ருதியையும் தவிர யாரும் இல்லை. அப்போது ரோஹன் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறானா என தோன்றியதும் பயம் வந்துவிட்டது. லேசாக தலையை திருப்பி கடைக்கண்ணில் பார்க்க அவன் டிவி தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அப்போது தான் உயிரே வந்தது. அவளும் தன் பார்வையை டிவி பக்கம் செலுத்தினாள். இவள் பார்வை திரும்பிய நிமிடம் ரோஹன்… ஸ்ருதியை பார்த்தான். உதட்டில் கோணலான புன்னகை. கண்களில் இன்னதென்று புரியாத ஒரு பார்வையில் அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தான்.
ஸ்ருதிக்கு மீண்டும் அதே போல் உணர்வு வர ரோஹனைப் பார்க்க அவன் கவனம் டிவி மேல் தான் இருந்தது. அவள் திரும்பிய அடுத்த நொடி அவன் இவளை பார்ப்பான்.
ஸ்ருதிக்கு அசௌகரியமாக இருந்தது. தன் கவனத்தை படத்தில் செலுத்த முயற்சி செய்தாள்.
சில நிமிடம் கடந்த நிலையில் எதற்சியாக ரோஹன் புறம் திரும்ப அவன் இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் பார்வை இவளை சில்லிட வைத்தது. கூரான பார்வையில் துளைக்கும் பார்வை பார்த்தான். ஒருவழியாக தைரியத்தை வர வழைத்துக்கொண்டு
ஸ்ருதி - என்..ன்ன… ரோஹன். அப்படி பாக்குற? என்ன ஆச்சு? இதனை கேட்டு முடிப்பதற்குள் வேர்க்க ஆரம்பித்து விட்டது. கைகளில் லேசான நடுக்கம்.
அவளை நெருங்கி வந்து…. ஹஸ்கி வாய்ஸ் இல்
ரோஹன் - நீ என்னைப் பார்த்து பயப்படுர, சரியா??
அவள் இதயம் வெளியே வரும் அளவுக்கு துடித்தது. கண்கள் மிரட்சியை கொண்டு இருந்தது.
ரோஹன் - நான் உன்னோட ஃப்ரெண்ட் விட ஒரு படி மேல தான. ஏன் என்ன பார்த்து பயப்படுற? நான் உன்னை என்ன பண்ணிட்டேன்? (சிறிது இடைவேளை விட்டு) இன்னும் எதுவுமே பண்ணலையே?? என்றான் குதர்க்கமாக.
ஸ்ருதி - என்னை என்ன பண்ண போற ரோஹன்? என்ன விட்டுடு. நான் கிளம்பி போறேன். பிளீஸ் பிளீஸ்
ரோஹன் அறையே அதிரும் அளவுக்கு சிரித்தான்.
ரோஹன் - என்ன பேபி சொல்ற… உன்ன விடுறதுக்கா இங்க வர சொன்னேன். நான் என்ன எல்லாம் பிளான் வச்சிருக்கேன் தெரியுமா. பெரிய கத்தி எல்லாம் ரெடி பண்ணிருக்கேன்.
ஸ்ருதி திகைத்து நின்றாள். ரோஹன் குரலில் இருந்த மாற்றம் அவன் பேசும் விதம் எல்லாம் மாறுபட்டு இருந்தது. இதுவரை அவள் பார்த்து இனிமையாக பேசிய ரோஹன் இப்போது முற்றிலும் மாறுபட்ட மிருகமாக தெரிந்தான்.
ரோஹன் ஸ்ருதியை நெருங்கி வந்ததும் அவளுக்கு மூச்சுவிடக் கூட கஷ்டமாக இருந்தது. கண்களில் கண்ணீரோடு பின்னோக்கி நகர முயற்சி செய்தாள். ஆனால் ரோஹன் அவளை நன்றாக அழுத்தி பிடித்துக்கொண்டான்.
ரோஹன் - இது தான் பிடிச்சிருக்கு. என்ன பார்த்து நீ பயப்படனும்.. ஹ ஹ ஹ என கோரமான சிரிப்பு சிரித்தான்.
ஸ்ருதி கதறி அழுக ஆரம்பித்துவிட்டாள்.
ஸ்ருதி - என்ன விடு ரோஹன். எனக்கு பயமா இருக்கு.
அவள் சொல்லுவதை எதையும் அவன் காதில் வாங்கவில்லை. நேராக கெஸ்ட் ரூம் இழுத்து சென்றான். அவள் எவ்வளவோ முயற்சி செய்ய அவன் பிடி அழுத்தமாக இருந்தது.
ஒருவழியாக அவன் கையை கடித்து வைத்து விட்டு கதவு பக்கம் ஓடினாள். இதனை ரோஹன் எதிர்பார்க்கவில்லை. மறுநிமிடமே அவள் பின்னோக்கி சென்று அவள் முடியை பிடித்து இழுத்தான். இழுத்த படியே கெஸ்ட் ரூம் சென்றான். ஸ்ருதி வலியில் கதற எதையும் அவன் பொருட்படுத்த வில்லை. ஸ்ருதிக்கு உயிர் பயம் ஏற்பட்டது. எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வர நினைத்தாள். அஞ்சனா கொடுத்த பெப்பர் ஸ்ப்ரே இருக்கா என்று பாக்கெட் இல் துழாவ அதுவோ இல்லை.
தன் கதை முடிந்தது என்று எண்ணி அவனிடம் கெஞ்சிக் கொண்டே வந்தாள். அவன் அவளை விடுவதாக இல்லை. கெஸ்ட் ரூம் உள்ளே வந்து கயிறை எடுத்து கட்டில் காலில் இவளையும் சேர்ந்து கட்டிப் போட்டான்.
ரோஹன் - பேபி, உனக்கு என்ன கேக் பிடிக்கும்னு சொன்ன… (நெற்றியை தட்டி யோசித்து) ஹான்… ரெட் வெல்வெட் கரெக்ட் ஆ??? இரு உனக்கு செஞ்சி எடுத்துட்டு வர்றேன்
ஸ்ருதி - ரோஹன் பிளீஸ், நான் போறேன். ஏன் இப்படி பண்ற. நான் உன்ன என்ன செஞ்சேன்?? என்றாள் கதறிக்கொண்டு.
ரோஹன் அவள் சொல்லுவதை எதையும் கேட்ட மாதிரி தெரியவில்லை.
ரோஹன் - பேபி, ரெட் வெல்வெட் கேக் பண்ண.. எனக்கு ரெட் கலர் ல ஒன்னு தேவைப்படுது… அது கொஞ்சம் எடுத்துக்கவா??
இவன் பேசுவதை கேட்டதும்.. அவன் என்ன சொல்கிறான் என்பது புரிந்தது. அங்கிருந்து எங்கும் நகர முடியவில்லை.
ஸ்ருதி - ரோஹன் வேண்டாம் பிளீஸ் என்ன கொண்ணுடாத.. வேண்டாம் வேண்டாம் பிளீஸ்
ரோஹன் - பயப்படாத பேபி கொஞ்சம் தான்… என்றவன் அவள் கையில் கத்தியை எடுத்து லேசாக கொடு கிழித்தான். பின் எடுத்ததை கிச்சன் கொண்டு சென்றான். சில நிமிடங்களில் மீண்டு அறைக்கு வந்து கையில் இருந்த கேக் மீது சிவப்பு திரவத்தை ஊற்றி… அவளிடம் கொடுத்தான்.
ஸ்ருதி அங்கு அழுது கதறி பாதி மயக்கத்தில் இருந்தாள்.
ரோஹன் - ஸ்ருதி பேபி, நீ கேட்ட ரெட் வெல்வெட் கேக் ரெடி.
ஸ்ருதியோ கத்த கூட தெம்பு இல்லாமல் கிடந்தாள். கண் மங்கலாக தெரிந்தது. அறைக்கண்ணில் பார்க்கும் போது அவன் கையில் பல பல என்று ஒரு பொருள் தெரிந்தது. கைகளில் மற்றும் உடை எங்கும் சிவப்பு கலர். தலை தொங்கிக்கொண்டு இருந்தது.
‘ வேண்டாம் ‘ என சொல்ல வரும் போது எல்லாம் காற்று தான் வந்தது.
கத்தியை எடுத்துக்கொண்டு அருகில் வந்து அவள் கழுத்தில் வைத்த போது…
தொடரும்....🗡🗡🗡