logo

அத்தியாயம் 5

Mars

Administrator
அவரை பார்த்து இருவரும் அசையாமல் அப்படியே நின்றனர். அவருக்கு கண் தெரியாது என்பதால் டார்ச் லைட் ஒளி கண்ணில் பட்டாலும் எந்த வித உணர்ச்சியும் இல்லை என்பதனால் தப்பித்தனர். விஸ்ரான் செய்கையில் வாயில் விரலை வைத்துக்காட்டி அமைதியாக இருக்கும் படி சொன்னான். மேலும் இடது பக்கம் மெதுவாக நகர்வோம் என்று கையில் இரண்டு விரல்களை வைத்து நடக்கும் வாரு செய்கை செய்தான். இவன் ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு திரும்பி பார்க்க தாரா அதே இடத்தில் அசையாமல் நின்றுக்கொண்டு இருந்தாள்.


என்ன என கேள்வியோடு அவளை நோக்க… அவளோ ஸ்கர்ட் தூக்கி காலில் உள்ள கொலுசை காட்டினாள். இது எல்லாம் 30 நொடிகளில் நடந்திருக்க… தேன்மை… தாரா இருக்கும் திசை பக்கம் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர்கள் இருவருக்கும் வேர்த்து வடிய ஆரம்பித்தது. எதையும் யோசிக்காமல் விஸ்ரான் சத்தம் எழுப்பாமல் அவளின் இடுப்பை பிடித்து தூக்கிக்கொண்டு நகர்ந்து விட்டான். மேலும் அவளை தரையில் இறக்கி விடாமல் தன் கால் பாதத்துக்கு மேல் நிற்கவைதுக்கொண்டான். ஏனெனில் இவருக்கு காது கேட்கும் திறன் அதிகம் உள்ளதால் கொலுசின் சத்தத்தையும் கண்டுபிடித்து விடுவார்.

இவர்கள் ஓரமாக ஒதுங்கவும் தேன்மை வரவும் சரியாக இருந்தது. அவர் அருகில் வந்து ஜன்னலை சாற்றி விட்டு மெதுவாக கீழே இறங்கிவிட்டார்.

இருவரும் உடல் உரச அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தனர் மீண்டும் அவர் வந்துவிட்டால் என்ன செய்வது என்பதற்காக. சில நிமிடம் சென்ற பிறகே இருவரும் பிரிந்தனர்.

தாரா - நாளைக்கு பாக்கலாம்.. நா…. நா… நான் கிளம்புறேன்… என்று திக்கி திணறி பேசினாள்.

விஸ்ரான் - சரி வா… வந்த வழியா உன்ன இறக்கிவிட ஹெல்ப் பண்றேன்.

தாரா - ஒரு நிமிஷம் நில்லுங்க…. காலில் உள்ள கொலுசை கழட்டி… இந்தாங்க உங்க பேக்ல வெச்சிருங்க அப்புறம் வாங்கிக்கிறேன். திரும்ப எதுவும் பிரட்சனை ஆகிட போது…

அவனும் வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டான். அவள் வந்த ஜன்னல் அருகே வந்து கையை குடுத்து இறக்கி விட்டான். அவள் இறங்கும் இடம் தோட்டம் ஆதலால்… அவளிடம் “இறங்கினதும் மண்ணுல உள்ள உன்னோட கால் தடத்தை அழிச்சிடு” என்றான்.

அவளோ வந்த கயிற்றில் மீண்டும் இறங்கி விட்டாள். அவன் சொன்னது போலவே மண்ணை கிளறி விட்டு ரோட் பக்கம் சென்று மறைந்துவிட்டாள்.

மீண்டும் அறைக்கு வந்த விஸ்ரான் ஆச்சரியமாக உணர்ந்தான்.. தன்னால் ஒரு பெண்ணிடம் சகஜமாக உரையாட முடிந்ததா??!!! அவளிடம் அக்கறை காட்ட முடியுமா??!! என்று அவனில் மேலயே சந்தேகம் எழுந்தது. அவள் கொடுத்து விட்டு சென்ற கொலுசை பத்திரமாக சூட்கேஸ் உள்ளே இருக்கு ஒரு பகுதியில் மறைத்து வைத்துவிட்டான்.

மேலும் தேன்மை எதற்கு மாடிக்கு வந்தார் என்பது சந்தேகத்தை கிளப்பியது. ஒரு வேளை கண்டுபிடித்து விட்டார்களோ என்ற எண்ணம் தோன்ற…அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. அவர் எதற்சியாக கூட வந்திருக்கலாம் என தன்னையே சமாதானம் செய்து துங்கியும் விட்டான்.

காலை உணவு உன்ன கீழே செல்லும் போது… தேன்மை.. வள்ளியிடம் ஏதோ கூறிக்கொண்டு இருந்தார். தாமஸ் நியூஸ் சேனல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தாமஸ் - வா தீரா!! நைட் நல்ல தூங்கிடியா?!! பயணம் பண்ணது களைப்பா இருந்திருக்கும்…

விஸ்ரான் (தீரன்) - ஆமா தாத்தா… இப்போ பரவாயில்லை.

தேன்மை - தீரா! எப்போ உங்க அப்பாவ எங்கட்ட பேச வைக்க போற ???

திகைப்பை உள்ளுக்குள் மறைத்துவிட்டு தீரன் - அதுக்கு என்ன பாட்டி பேச வச்சிட்டா பேச்சு. ஆனா இப்போ அங்க நைட் ஆ இருக்கும். அதுனால சாயங்காலம் மேல பேசலாம் அப்போ அங்க கொஞ்சம் விடியல் இருக்கும்… அப்பா அம்மா எழுந்துப்பாங்க…

தேன்மை - அப்படியே செய்யலாம் ப்பா

இவனின் மேல் இருந்த 20% சந்தேகம் பாதியாக குறைந்தது. சில மணி நேரத்துக்கு தப்பித்தேன் என்று நினைத்துக்கொண்டான்.

அப்போது திரும்பவும் கேட் திறக்கும் சத்தம் கேட்க… யாராக இருக்கும் என்று அனைவரின் பார்வையும் வாசல் பாகம் சென்றது.

அங்கு ஒரு பெண்…. தோளில் பையுடன்… விரித்து போட்ட முடி அதையும் அழகாக ஸ்டைல் செய்து இருந்தாள்… சிம்பிள் மேக் அப் இன்னும் அழகாக காட்டியது.

வள்ளியோ மனதுக்குள் ‘ என்ன எப்பயும் ஆம்பள பசங்க தான் வருவானுங்க.. இப்போ என்ன பொம்பள புள்ள வந்துருக்கு…பிரச்சினை முடிஞ்சது பாத்தா வேற ஒன்னு வருதே ‘


விஸ்ரானின் கண்களோ ஆச்சரியம், கோவம் என கலந்த உணர்ச்சியோடு இருந்தான். எப்போது அசால்ட் ஆக இருப்பான் ஏன் என்றால் போடுற பிளான் ஓட்டை இல்லாமல் இருக்கும் ஆனால் இருந்த முறை நன்றாக சொதப்ப போறது புரிந்தது.

வந்தவள் நேராக விஸ்ரானை வந்து கட்டிபிடித்து “சர்ப்ரைஸ்!!!” என்றாள்.

தேன்மையை தவர மற்ற மூவரும் ஆட்சரியமாக பார்த்தனர். வந்தவள் வேறு யாரும் இல்லை தாரா தான்.

தாரா - “என்ன தீரன்… என்ன பாத்து சந்தோச படுவீங்கனு பார்த்தா… ஷாக் ஆகிட்டீங்க??? போங்க” என்று செல்லமாக கோபித்து கொண்டாள்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்தனர்.

தாமஸ் - யாரு நீ? உனக்கு எப்படி தீரன தெரியும்? உன் பேரு என்ன?

தேன்மை - யாரு தாமஸ் வந்திருக்கா? யாருனு கேட்காமயா உள்ள விட்டீங்க

தாமஸ் - தெரியல யாருனு… உள்ள வந்து அவா பாட்டுக்கு நம்ம பேரனை கட்டிப்புடிக்கா

தாரா - என்ன தீரன்.??!! நான் யாருனு கூடவா இன்னும் சொல்லாம இருக்கீங்க?

‘ அடி பாவி!! நீ யாருனு எனக்கே தெரியாத அப்போ.. நீ யாருனு அவங்கட்ட என்னனு சொல்லுவேன் ‘

தாரா - நான் தான் உங்க பொண்டாட்டினு சொல்ல வேண்டியது தான…

தேன்மை - என்ன?? தீராக்கு கல்யாணம் ஆகிடுச்சா???

தாமஸ் - ஏன் ப்பா எங்ககிட்ட எதுவுமே சொல்லல..?? என்றவருக்கு இவன் மேல் போன சந்தேகம் மீண்டும் வர ஆரம்பித்தது.

தீரன் - அதுவந்து தாத்தா…. ஏற்கனவே நம்ம பிரிந்து இருந்துட்டோம்…. இப்போ தான் பல வருஷம் அப்புறம் சேர்ந்திருக்கோம்… இதுல கல்யாணம் ஆகிட்டு சொன்ன மேலும் வருத்தப்படுவீங்க… அதான் கொஞ்ச நாள் அப்புறம் சொல்ல நெனச்சேன்.

தேன்மை - நீ சொல்லாம மறச்சது தான் கஷ்டமா இருக்கு. நீ சந்தோசமா இருந்தா எங்களுக்கும் சந்தோசம் .. நீ உள்ள வா மா.

வந்தவள் அவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்து வணங்கினாள். வந்து விஸ்ரான் அருகில் நின்றுக்கொண்டாள்.

தாரா - தாத்தா, பாட்டி… என் பேரு தியா. இவங்களை நான் வெளிநாட்டுக்கு படிக்க போன அப்போ பார்த்தேன். அப்படியே வீட்லயும் சொல்லி படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி வெசிட்டாங்க. ஒரு வேலை விஷயமா தான் இந்தியா வர்றதா சொன்னாரு… இங்க இருக்காருனு தெரிஞ்சுகிட்டேன். அதான் நானும் வந்தேன்…. நான் வந்தது அவருக்கு கூட தெரியாது… அவர எதுவும் சொல்லாதீங்க பிளீஸ்… என வாயில் வந்த கதையை அள்ளிப் போட்டாள்.

தீரன் - மேல வர்றியா??!! உன் கூட கொஞ்சம் பேசணும் என்றான் பல்லை கடித்துக்கொண்டு.

தேன்மை - நீ போய்ட்டு வா மா. வள்ளி சமைத்ததும் சொல்லி அனுப்புறேன் அப்போ வாங்க…

உள்ளுக்குள் உதறல் இருந்தாலும்… தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலே சென்றாள். பின்னாடி அவள் வருகிறாள் என்பது முன்னே சென்று கொண்டிருந்தவனுக்கு புரிந்தது. அவள் ரூம் உள்ளே வந்ததும் வேகமாக கதவை சாற்றினான்.
 
Top