வாழ்க்கை அந்த போக்கில் சென்றது சாராவுக்கு. காலையில் இருந்து மதியம் வரை கல்லூரியிலும் சாயங்காலம் புட் டெலிவரி செய்யும் வேலைக்கும் என்று பிஸியாக இருந்தாள். அவள் உலகில் ஒருவர் குறைந்து மீதம் அர்ஜுன், ஆதி மற்றும் இருந்தனர்.
அவர்கள் இவளை எந்த அளவுக்கு பாதுகாக்க முடியுமா அந்த அளவுக்கு பொத்தி பொத்தி வைத்தனர். அவளின் அப்பா இடத்தை நிரப்ப முடியவில்லை என்றாலும் அவளுக்கு என்று யாரும் இல்லை என்ற எண்ணம் வராமல் பார்த்துக்கொண்டனர்.
நாட்கள் செல்ல செல்ல மூவரின் பிணைப்பு ஜாஸ்தி ஆகி கொண்டே சென்றது. விடுமுறை நாட்களில் சாரா அவள் வீட்டுக்கு சென்று சுத்தம் செய்வாள் பின் ஹாஸ்டலுக்கு ஒரே நாளில் திரும்பி விடுவாள். அப்பா இல்லாமல் வீட்டில் தனியாக இருப்பது தேவை இல்லாத எண்ணம் வரும் எனவே தனியாக இருப்பை தவிர்த்து விடுவாள். என்றேனும் ஒருநாள் ஆதி மற்றும் அர்ஜுன் அழுத்தி கூப்பிட்டால் மட்டுமே பீச், கோவில், ஹோட்டல் என சென்று வருவாள். மற்றபடி அவள் இருப்பிடம் ஹாஸ்டல் ஆகி போனது.
மேகம் சூழ மழை வரும் அறிகுறி தெரிந்தது. அன்று கல்லூரி கோலாகலமாக காட்சி அளித்தது. காரணம் அன்று கல்லூரி விழா. பெரிய பேனர், எங்கே திரும்பினாலும் வண்ணக் காகித தோரணம், மாணவ மாணவியர் டான்ஸ் ஆடும் உடை, மைம் (Mime - மெளன மொழி நாடகம்) செய்ய கருப்பு வெள்ளையும் சாயம் பூசிக்கொண்டு சிலபேர், ஃபேஷன் ஷோ செய்ய வித்தியாசமான உடை அணிந்து சில பேர், NSS மற்றும் NCC , வாலன்டீயர்ஸ் (Volunteers) என பார்பதற்கே வண்ணமயமாக இருந்தது. பாதி பேருக்கு மேல் ஏதோ ஒரு வகையில் இந்த கலை நிகழ்சியில் அங்கமாக இருந்தனர்.
கடைசி மூன்று ஆண்டுகளாக ஆதி மற்றும் அர்ஜுன் நிகழ்சியில் ஹீரோவாக தான் இருந்தனர். இருவரும் நன்றாக நடனம் ஆடுவர் என்பதால் இவர்களின் டான்ஸ் கான கூட்டம் கூடிவிடும். காலேஜில் இருக்கும் இரண்டு ஸ்மார்ட் ஆனா பசங்கள் ஒன்றாக ஆடுவது என்றால் சும்மாவா?! சாரா இதில் பார்வையாளராக மட்டுமே இருப்பாள். ஆனால் அவளையும் மேடைக்கு அழைத்து ஒரு ஸ்டெப் மட்டுமே ஆட வைப்பர். அதில் சாரா சந்தோசமாக கலந்துக் கொள்வாள்.
ஆனால் இந்த வருடமோ ஆதி மற்றும் அர்ஜுன் எதில் கலந்துக்கொள்ளாமல் சாரா அருகே அமர்ந்து இருந்தனர். அங்கங்கே பெஞ்ச் போடப்பட்டு இருக்க… சுற்றிலும் மரங்கள்…வெட்டவெளியாய் இருந்தது. மழை மேகங்கள் யாரையும், எதையும் நிறுத்தவில்லை. சந்தோசமாக சுற்றி வந்தனர் அனைவரும்.
மூவரும் அமர்ந்து போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு இருந்தனர். இவர்களைப் போல இன்னும் கொஞ்ச சிலரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அமைத்தியை உடைத்த சாரா
“நீங்களும் டான்ஸ் ல பெயர் கொடுத்திருக்கலாம்ல? ஏன் பண்ணல? எனக்கும் உங்க டான்ஸ் பார்க்க ஆசையா இருக்காதா?”
“நீ தான் சோகத்துலயே இருக்கியே? அதான் அதுலையும் நாங்க பங்கு எடுத்துக்கிறோம்? இல்ல டா?” என கடைசி கேள்வியை மட்டும் அர்ஜுன் ஆதியை பார்த்து கேட்டான்.
“ ஆமா…டா…” என அவனும் ஒரு மாதிரி இழுத்து ராகத்தோடு பதில் சொன்னான்.
அவர்களை பேசுவதில் ஏதோ நக்கல் ஒளிந்து இருப்பது போல் தோன்றியது. எதுவும் சொல்லாமல் சாரா வேடிக்கை பார்க்க திரும்பிவிட்டாள். திடீர்னு அவர்கள் இருக்கும் இடத்துக்கு மாணவ, மாணவியர் அதிகம் இருப்பது போல் தோன்றியது சாராவுக்கு.
பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்த கூட்ட இரைச்சலுக்கு நடுவே… அங்கு இருந்த ஸ்பீக்கர் ஒலிக்க ஆரம்பித்தது. எல்லோரின் கவனமும் அங்கு செல்ல… சாராவும் சத்தம் வந்த திசையைப் பார்த்தாள்.
இடையில் இடி இடிக்கும் சத்தம் வேற கேட்க… கவனம் எல்லாம் சத்தம் வந்த திசையை நோக்கி தான். ஆனால் ஆதி மற்றும் அர்ஜுன் எந்த ஒரு முக பாவனையும் காட்டாமல் கூட்டத்தை தான் வேடிக்கை பார்த்தனர். இப்போது ஒரு ஸ்பீக்கரில் ஒலித்த ஒலி சுற்றி இருந்த எல்லா ஸ்பீக்கரிலும் ஹிந்தி, தமிழ் என ஹிட் அடித்த பாடலான சம்மக் சல்லோ ( Chammak challo ) பாட்டின் முதலில் வரும் இசை ஒலிக்க ஆரம்பித்தது.
சுற்றி உள்ள அனைவரும் கூச்சல் போட… எதிர்பார்க்காத நேரம் அர்ஜுன் மற்றும் ஆதி அங்கே ஓடி சென்றனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்கள் பின்னே சாராவும் சென்றாள். கண்ணிமைக்கும் நொடியில் பாட்டு இசைக்கு ஏற்ப ஆதி மற்றும் அர்ஜுன் ஆட துடங்கி விட சாரா கண்களை விரித்து பார்த்தாள்.
கூட்டத்தின் கூச்சல் ஆதிகம் ஆகி விட்டது. வேடிக்கை பார்ப்போர் எல்லாம் வட்டமாக இருக்க… அனைவருக்கும் பார்க்கும் வாரு ஆதி மற்றும் அர்ஜுன் நடுவில் நின்று ஆடினர். அவர்களுடன் அடுத்த அடுத்த டான்ஸ் ஸ்டெப்புக்கு கூட்டத்தில் இருந்து ஒரு ஒருவராக வந்து சேர்ந்தனர்.
( Flashmob - முன்னாடியே பயிற்சி எடுத்து வைத்துவிட்டு… யாரும் எதிர் பார்க்காத நேரம் கூட்டத்தில் ஆடுவது)
எல்லோரும் கை தட்டி, விசில் அடித்து ,மாடியில் இருந்து பேப்பர் பறக்க விட்டு என உற்சாக செய்தனர். ஆனால் ஆதி மற்றும் அர்ஜுன் கண்கள் சாராவைத் தான் பார்த்தது. சாரா கவலை மறந்து அவளும் ஆர்பரிக்க ஆரம்பித்து விட்டாள்.
இருவரும் அனைவரின் கண்களை கவர்ந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த பாடலாக தூம் திரைப்படத்தில் உள்ள தூம்ம ச்சாலே பாடல் ஒலிக்க…. அதில் வரும் அதே ஸ்டெப் போட்டு இன்னும் நிகழ்ச்சியை கலைக்கட்டினர். அதை இன்னும் மிகைப்படுத்த மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அனைவரும் ஓஓஓ என்று கத்தி வேடிக்கை பார்த்த சிலரும் ஆடினர்.
சாராவுக்கு எல்லாம் புதுமையாக தெரிந்தது. ஒரு நொடியில் கவலை எல்லாம் மழையின் ஊடே வடிந்து விட்டது போல் தோன்றியது. சுற்றி இருந்த சந்தோசம் அவளையும் ஒட்டிக்கொள்ள தன்னை மறந்து வாய்விட்டு சிரித்தாள் பல நாள் கழித்து. அதனை பார்த்த ஆதியும் , அர்ஜுனும் நடனத்தின் இடையில் அர்த்தமாக பார்த்து கண்களை சிமிட்டிக் கொண்டனர்.
மழை வேகம் எடுத்தாலும் யாரும் களைந்து செல்லவில்லை. கூட்டம் கூடியதே தவிர குறையவில்லை. அடுத்து ஆங்கில பாடலான பேபி காம் டவுன் ( Calm down) பாடல் வந்தது. மொத்த கூட்டமும் கூடவே சேர்ந்து பாடலை பாடினார்.
ஆதி மற்றும் அர்ஜுன் மழையில் தொப்பலாக நனைந்து இருந்ததால் உடை உடலோடு ஒட்டி கவர்ச்சியாக காட்சி தந்தனர். அதனை பெண்கள் கூட்டம் வஞ்சனை இல்லாமல் சைட் அடித்தது.
இறுதி பாட்டாக நட்பே துணை படத்தில் இருந்து ‘பள்ளிக்கூடம்’ என்ற பாட்டில் இடையில் இருந்த வரி ‘காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்’ என்ற ஒலிக்க ஆர்ப்பரித்த கூட்டம் ஒரு நொடி அமைதியாகி விட்டனர். அவர்களின் இறுதி ஆண்டின் கலை நிகழ்ச்சி அல்லவா.
ஆடிக்கொண்டு இருக்கும் போதே ஆதி மற்றும் அர்ஜுன் சாராவிடம் வந்து அவளையும் ஆட அழைத்து வந்துவிட்டனர். ‘என் நண்பனை போல் யாரும் இல்ல‘ என்ற வரியில் ஆடிக்கொண்டு இருந்த அனைவரும் ஒருவரின் ஒரு தோளில் கையை போட்டு அனைத்த வாரும் மழையில் நின்றனர். சாராவின் இருபக்கமும் எப்போது போல் ஆதி மற்றும் அர்ஜுன் தான் நின்றனர். இருவரின் பார்வையும் சாரா மேல் தான் இருந்தது. சாரா மற்ற இருவரையும் பார்த்த மகிழ்சியாக சிரிக்க அது புகைப் படமாக கிளிக் செய்ய பட்டது கூட்டத்தில் இருந்து.
பார்த்த ஆசிரியர்கள், முதல் மூன்று ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அது அமைந்தது. பின் மழை வேகம் எடுக்க… அப்படியே கலைந்து சென்றனர். ஃபோட்டோ , வீடியோ எடுத்த நபரிடம் மறக்காமல் வாங்கியும்கொண்டனர்.
நடனமாடிய அனைவருமே சுற்றி இருந்த எல்லோருக்கும் இது ஒரு நினைவூட்டும் நாளாக இதனை மாற்றினர். மழை அந்த நாளுக்கு மேலும் அழகு சேர்த்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
அர்ஜுன் மற்றும் ஆதி அவர்கள் பழைய படி இருந்த சாராவை பார்க்க நினைக்க… அது அந்நாளில் நடந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ அந்த மூவருக்கும் அது ஒரு இனிமையான நொடிகள்.
****
கண்ணிமைக்கும் நொடிகளில் இறுதி ஆண்டின் முடிவுக்கு வந்து விட்டனர். அவரவரின் கனவுகளை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அர்ஜுன் கிடைக்கும் சமயம் எல்லாம் அவர்களின் தொழிலில் தான் முனைப்பாக இருந்தான். ஆதி எப்போதும் போல் ஜிம், ரேசிங் என நேரத்தை செலவு செய்தான். சாரா படிக்க, வேலை தேட என கடினமாக உழைத்தாள்.
சாரா முன்பு போல் அல்லாமல் துன்பத்தில் இருந்து தன்னை மீட்டு வந்துவிட்டாள். இதனை நாள் வரைக்கும் அர்ஜுன் மற்றும் ஆதி அவர்கள் சொன்னது போலவே ரூபினியை… சாராவை நெருங்க விடாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால் அது ரொம்ப நாள் நீடிக்க வில்லை.
கல்லூரி வளாகத்தில் எப்போது போல் நண்பர்களுக்காக சாரா காத்துக் கொண்டு இருக்கும் போது பின் பக்கம் அமர்ந்து இருந்த ரூபினி அவள் நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்ததை கேட்க நேர்ந்தது.
“உங்களுக்கு எல்லாம் ஒன்னு தெரியுமா, எங்க அப்பா அப்புறம் இன்னும் சில பெரிய ஆட்கள் எல்லாம் சேர்ந்து நியூ யேர் பார்ட்டி கண்டக்ட் பண்ண போறாங்க. இந்த வருஷம் என்னையும் கலந்துக்க சொல்லிருக்காங்க. இந்த பார்ட்டி ஒன்லி ஃபேமிலி அண்ட் ப்ரெண்ட்ஸ் காக மட்டும் தான்“ என முடியை சிலுப்பி விட்ட படி சொன்னாள்.
அந்த கூட்டத்தில் ஒருவள்…
“நீ கொடுத்த வச்சவ ரூபி. எங்களுக்கும் இது மாதிரி எல்லாம் நடந்தா நல்லா இருக்கும். எங்களையும் கூப்பிடுவியா?!”
“என்ன பேசுறீங்க நீங்க எல்லாம். அங்க எல்லாம் சாதாரண ஆள் எல்லாம் வர முடியாது. இன்னொன்னு தெரியுமா அங்க அர்ஜுன் அண்ட் ஆதி வருவாங்க. அவங்களுக்கும் இன்விட்டேஷன் போயிருக்கு” என பெருமையாக சொன்னாள்.
சுற்றி இருந்த அனைவருக்கும் அவள் பேச்சு ஒரு மாதிரி இருந்தாலும், இன்னும் கொஞ்ச நாள் இவளை சகித்து கொள்ள வேண்டி அமைதியாக இருந்தனர்.
“அதான் ஆதியும் அர்ஜூனும் தினமும் காலேஜ் வர தான செய்றாங்க. அந்த பார்ட்டில வெச்சு பாக்குறதுல என்ன ஸ்பெஷல்?” என நண்பன் ஒருவன் கேட்டான்.
“அங்க தான் விஷயமே இருக்கு. நான் இந்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தி அவங்க கூட ப்ரெண்ட் ஆகிடுவேன். அங்க எல்லாரோட ஃபேமிலி இருப்பாங்க கண்டிப்பா இவங்க ரெண்டு பேராலையும் என்ன அவாய்ட் பண்ண முடியாது. அங்க சாராவும் இருக்க மாட்டா அதனால் அவங்க ரெண்டு பேருக்கும் என் கூட இருக்கிறதா தவர வேற வழி இல்லை” என சொல்லி சிரிக்க…
இதனை கேட்ட சாரா அதிர்ச்சியாக அமர்ந்து இருந்தாள்.
“இன்னும் கொஞ்சம் நாள் தான் அதுக்கு அப்புறம் சாரா அவங்க வாழ்கையை விட்டு போயிடுவா. இவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா பிசினஸ் தான் பார்ப்பாங்க. எங்க மூணு பேருக்கும் தான் இனிமேல் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அதுக்கு அப்புறம் அவங்கள்ல ஒருத்தரை நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என கனவு கோட்டை கட்டினால் ரூபினி.
சுற்றி இருந்த அனைவருக்கும் அவள் கூற்றை வாயை பிளந்து கேட்பதை தவிர வேற வழி இல்லாமல் அமர்ந்து இருந்தனர்.
அவள் சாரா அமர்ந்து இருப்பது தெரிந்தான் தான் பேசினாள். அவள் எண்ணியது போல சாரா மனது கொஞ்சம் கொஞ்சமாக ரூபினி பேச்சில் உடைந்தது. அவளின் உலகத்தில் இருக்கும் இருவரையும் பிடுங்குவது போல் ரூபினி பேசிவிட்டாள். அவளின் கூற்றில் இருக்கும் சில உண்மை விளங்கியது. அவரவர் வேலையை பார்த்து தான் இனிமேல் செல்ல வேண்டும்… ‘ சரியாக தான சொல்கிறாள் ‘ ‘ அப்போ என்னோட உலகத்தில் தான் இவர்கள் இருப்பார்கள், அவர்கள் உலகத்தில் நான் இருக்க இடம் இல்லை ‘ என கற்பனை செய்து தன்மனதை தானே காயப்படுத்தினாள்.
இதனை பற்றி எதுவும் நண்பர்களிடம் கேட்கவில்லை. மனதில் அடியில் போட்டு தற்போதைக்கு புதைத்து வைத்தாள்.
***
ரூபினி சொன்ன அதே பார்ட்டி பற்றி தான் அர்ஜுனும் , ஆதியும் பேசிக்கொண்டு இருந்தனர்.
“டேய் மச்சி, எங்க அப்பா அங்க கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க டா. ஆனா எனக்கு அங்க போகவே இஷ்டம் இல்லை. உனக்கு எப்படி?” என ஆதி கேட்டான்.
“ எனக்கும் தான மச்சி. ஆனால் அங்க கொஞ்சம் பெரிய ஆட்கள் வருவாங்க. எதிர் காலத்துல அவங்க ஹெல்ப் கண்டிப்பா தேவை படும் அதுக்காக வேண்டி போகலாம்னு இருக்கேன். அதுவும் இல்லாமல் இது அபிசியல் (offical) பார்ட்டி கிடையாது. ப்ரெண்ட்ஸ் & ஃபேமிலி மட்டும் தான். நீயும் வா டா. கண்டிப்பா உனக்கும் ஏதோ ஒரு வகையில் இது உபயோகமா தான் இருக்கும்” என அர்ஜுன் பிசினஸ் மேனாக பேசினான்.
“மச்சி, என்ன டா இவ்வளவு தொலைநோக்கு பார்வையோட பேசுற. சரி வர்றேன். ஆனால் கொஞ்சம் நேரத்துல கிளம்பிடலாம்” என ஆதி சொல்ல
“எனக்கு அதே எண்ணம் தான் டா. முதல்ல தான் எல்லாரும் பேச வைக்க இருப்பாங்க… அந்நேரம் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுடு எஸ்கேப் ஆகிடலாம்” என முடிவு செய்தனர்.
அன்றே அர்ஜுன் தந்தை அவன் வீட்டுக்கு நுழையும் போதே இதனை பற்றி தான் கேட்டார். அவனுக்கு இதில் கலந்துக்க துளி விருப்பம் இருப்பதால் அவனும் வர இருப்பதாக சொன்னான். மேலும் அவர்
“ உன்னோட ப்ரெண்ட்ஸ் இன்வைட் பண்றது நாலும் பண்ணு அர்ஜுன். இது ப்ரெண்ட்ஸ் அந்த ஃபேமிலிக்காகத் தான். நல்ல சூட் செலக்ட் பண்ணி போட்டு வா” என்றார் வரதராஜன் (அர்ஜுன் தந்தை).
இதனை கவனித்த கல்பனா
“தயவு செஞ்சு அந்த சாராவ மட்டும் கூப்பிடாத. அவா சரியான பட்டிக்காடு. அவா மட்டும் வந்த கண்டிப்பா நமக்கு அது இன்சல்டிங் ஆ தான் இருக்கு. அப்பா நீங்க சொல்லுங்க பிளீஸ்” என அண்ணனிடம் ஆரம்பித்து அப்பாவிடம் கோரிக்கையுடன் முடித்தாள்.
அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே அர்ஜுன் முகம் கடுமையாக மாறி விட்டது. தந்தை இருவரையும் மாறி மாறி பார்க்க
“கல்பனா, யாரையும் அப்படி தரைகுறைவா பேச கூடாதுனு உனக்கு தெரியாதா?” என கொஞ்சம் கடுமையாக கேட்டார்.
அதில் எதையும் கண்டுகொள்ளாமல் “ அப்பா அவா மிடில் கிளாஸ் ப்பா. அங்க வர்றவங்க எல்லாரும் ரொம்ப பெரிய ஆளுங்க. இவா அங்க வந்த வேடிக்கை தான் பார்க்கணும். அந்த கூட்டத்துல சாதாரண டிரஸ் போட்டு அவா மட்டும் தனியா தெரிவா. அப்புறம் அவா யாரு கெஸ்ட்னு கேட்டா நம்மளை தான் கைய காட்டுவா. தேவையா இது எல்லாம்?!” …. “ அதுவும் இல்லாம அவா புட் டெலிவரி செய்யிற வேலை பண்ற. இந்த மாதிரி ஆட்களை கூப்பிடனுமானு நீங்ளே யோசிங்க” என எரிச்சலாக பேசினாள்.
அவள் பேச்சில் இருந்தே தெரிந்து…. அவளை சரியா வளர்க்கவில்லை என்ற உண்மை வரதராஜன் புரிந்து கொண்டார்.
“கல்பனா இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேச கூடாது. உன் அண்ணா அவன் பிரென்ட் அ கூப்பிடுறதும் கூப்பிடாம இருக்கிறது அவனோட தனிப்பட்ட விஷயம். அதுல நீ தலையிடாத. அர்ஜுன் நீ உன்னோட ரூமுக்கு போ” என சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
தந்தை போகும் வரை அமைதியாக படியில் நின்ற அர்ஜுன் அவர் கண்களை விட்டு மறைந்ததும்… வேகமாக இறங்கி வந்து முறைத்துக்கொண்டு கல்பனா முன் வந்து நின்றான். அவன் நின்ற தோரணையே ….. உச்சகட்ட கோவத்தில் இருக்கிறான் என்பது புரிந்தது.
அப்பா இருக்கும் தைரியத்தில் தான் இவ்வளவு பேசினாள். இப்போது பயம் பிடித்துக்கொண்டது.
“எப்படி எப்படி சாரா பட்டிக்காடா?!... அவா வந்தா உனக்கு இண்சல்டிங் ஆ இருக்குமா?” என தாடியை தேயித்த வாரு வினாவினான்.
கல்பனா எங்க அடித்து விடுவானோ என்ற பீதியில் அமர்ந்து இருந்தாள்.
“அது சரி! நீ இந்த செமஸ்டர்ல எல்லாம் சப்ஜெக்ட்லயும் பாஸ் பண்ணிட்டியா?” என கேட்க
திரு திருவேன முழித்துக்கொண்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.
“ சாரா காலேஜ் டாப்பர். அது தெரியுமா உனக்கு. ஃபெயில் ஆகிட்டு நீ அவளை பார்த்து பட்டிக்காட்டுனு சொல்றியா ம்ம்” என நக்காலக வினாவ.
கல்பனாவின் முகம் தொங்கி போய் விட்டது.
“அன்னைக்கே என்ன சொன்னேன். அவளை பாக்குற வேலைய பத்தி குறைவா பேசாதனு சொன்னேனா இல்லையா? நம்ம எல்லாம் அப்பா காசுல உட்காந்து சாப்பிட்டு இருக்கோம். நானாச்சும் பரவாயில்லை அப்போ அப்போ நம்ம பிசினஸ் பாக்குறேன். ஆனா நீ தண்டமா இருக்க. ஆனால் சாரா அவா சம்பாதிச்ச காசுல கௌரவமாக இருக்கா. அவளை பத்தி எல்லாரும் முன்னாடி சொல்றதுல எனக்கு பெருமை தான். உன்ன பத்தி பெருமையா சொல்றதுக்கு உன்கிட்ட ஏதாவது இருக்கா… யோசிச்சு பாரு” என கத்திவிட்டு சென்றுவிட்டான்.
மூக்கு உடைந்து போய் கல்பனா அங்கு இருந்து டேபிள் மேல் இருந்த விலை உயர்ந்த பூ ஜாடியை தட்டிவிட்டு சென்றுவிட்டாள்.
இதனை எல்லாம் மறைவில் இருந்து வரதராஜன் பார்த்துக்கொண்டு தான் இருந்தார். அர்ஜுன் பேசியவற்றில் இருந்து புரிந்தது அவனுக்கு மிகவும் முக்கியமான பெண் என்று. இதற்கு முன்பு கல்பனா, சாரா சந்தித்து அர்ஜுன் அவன் தோழிக்காக பேசிருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். அவருக்கே அந்த பெண்ணை நேரில் பார்க்க ஆர்வமாக இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று சென்றுவிட்டார்.
அடுத்து வந்த வார இறுதி நாட்களில் சாரா அவள் வீட்டுக்கு சென்று இருந்த சமயம் அர்ஜுன் மற்றும் ஆதி பேசிவைத்துக்கொண்டு சூட் வாங்க சென்றனர். அர்ஜுன் கருப்பு நிறத்திலும், ஆதி வெள்ளை நிறத்திலும் வாங்கினான். பின் சாராவுக்கு வாங்க வரும் போது பெண்கள் ஆடை இருக்கும் பிரிவைப் பார்த்து மலைத்து நின்றனர். அவ்வளவு வித்தியாசமான உடைகள் இருந்தது.
இருவரும் திருதிருவென முழிப்பதை பார்த்த கடை ஊழியர் ஒருவர் உதவி செய்ய வந்தார். அவரைப் பார்க்க 40 களில் இருக்கும் பெண்மணி போல் இருந்தார்.
சாரா ஃபோட்டோ எடுத்து அர்ஜுன் காட்டி அவள் அளவுக்கு ஏற்ற உடையை காட்ட சொன்னான். வண்ண வண்ண ஆடைகள் பார்த்தாலும் எதுவும் இருவருக்கும் பிடிக்கவில்லை. முதல் முறை என்பதால் குழம்பி போய் நின்றனர்.
அவள் அதிகம் மாடர்ன் உடை போடமாட்டல் என்பதால் டிசைனர் புடவை எடுக்க நினைக்க… அந்த பிரிவுக்கு சென்றனர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்பு கருப்பு கலர் புடவையில் வெள்ளை கற்கள் பதித்து இருந்த உடையை பார்த்ததும் பிடித்து விட்டது. அதையே தேர்வு செய்தனர்.
முதல் முதலில் கொடுக்கும் புடவை கருப்பு கலரில் இருப்பதால்… அவள் போட விரும்பும் காட்டன் சுடிதார் எடுத்து அதையும் பில் செய்தனர். ஆளுக்கு பாத்தியாக பணம் செலுத்தி சாரா வீட்டை நோக்கி சென்றனர்.
“ மச்சி, சாரா இதை வாங்கிப்பானு நினைக்கிற?” என ஆதி வினாவ
“அதான் டா தெரியலை. நம்ம இன்னும் அவளுக்கு பார்ட்டி போறதை பத்தி சொல்லவே இல்லை. ஆனா அதுக்குள்ள டிரஸ் எல்லாம் வாங்கிட்டோம். என்ன சொல்ல போறானு நினச்சு பயமா இருக்கு” என அர்ஜுன் புலம்பினான்.
சாரா அமர்ந்துகொண்டு எதிரில் நிற்கும் இருவரையும் கூர்ந்து பார்த்த படி இருந்தாள். அவர்கள் இருவரும் பாவமாக அவளை பார்த்த படி நின்றனர். அவளுக்கா இந்த பார்வையின் அர்த்தம் தெரியாது?!
“நான் எப்போ பார்ட்டிக்கு வர்றேன்னு சொன்னேன்?” என தீவிரமாக கேட்டாள்.
இருவரும் அதே பாவமாக முகத்தை வைத்து தப்பிக்க நினைக்க….
“இதுல காஸ்ட்லி டிரஸ் வேற. நான் கேட்டேனா? எனக்கு வர இஷ்டம் இருக்கு… எனக்கு டிரஸ் வேணும்னு சொன்னேனா?! நீங்களா ஒரு முடிவு பண்ணிடுவீங்களா? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க தோணலையா? “ என கோவமாக கேட்க.
அப்போது இருவரிடமும் மௌனம் தான். அவளை பேசி சரி கட்டி கூப்பிட்டு போகலாம் என்று நினைக்க அவளை பார்த்ததும் பம்மி விட்டனர். அவள் சண்டையிட்டால் பதிலுக்கு பதில் பேசிவிடலாம். ஆனால் அவள் மறைக்க நினைக்கும் கண்ணீரை… கண் இமை காட்டிக்கொடுக்க.. அமைதியாக இருந்தனர்.
“எனக்கு வர்றதுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அங்க பணக்காரங்க மட்டும் தான் வருவாங்க. நான் மட்டும் அங்க தனியா தெரிவேன். உங்க வீட்ல எல்லாம் எப்படி எடுதுப்பாங்கனு தெரியல” என கையில் உள்ள புடவையை வருடிய வாரு சொல்ல… அடுத்த நிமிடம் ஆதி மற்றும் அர்ஜுன் “ ஹே ஹே ஹே” என்று சந்தோசத்தில் கத்தினர்.
அவள் வர்றது சம்மதம் சொன்னதே அவர்களுக்கு போதுமான ஒன்று. இருவருக்கும் என்றும் மற்றவர்களை பற்றிய கவலை இல்லை. அவர்கள் எண்ணம் எல்லாம் சாரா வர விருப்பபடமாட்டாள் என்றே நினைக்க எதிர்பார்க்காத விதமாக அவள் பதில் இருக்க சந்தோசத்தில் திளைத்தனர்.
ஆளுக்கு ஒரு பக்கம் வந்து “ டி சாரா நீ வர்றேன்னு சொன்னதே போதும். எங்களுக்கு எவ்வளவு ஹேப்பி தெரியுமா?! தேங்க்ஸ் டி” என ஆதி வந்து தோளோடு அணைத்துக்கொள்ள…
“ ஆமா சாரா, நீ வரணும்னு எங்களுக்கு எவ்வளவு ஆசை இருந்தது தெரியுமா?! உனக்காக தேடி கண்டுபிடிச்சி அந்த சாரீ வாங்கினோம். உனக்கு பிடிச்சிருக்கா?” என எதிர்பார்ப்போடு கேட்ட…
இமைகள் தாழ்த்தில், சிரித்துக்கொண்டே ஆமா என்று தலையை அசைக்க… அர்ஜுன் கண்களுக்கு அழகாக தெரிந்தாள்.
சாரா மனதில் அவளையும் அறியாமல் இருவரின் நட்பு மீது ஒரு உரிமை உணர்வு எழுந்தது. இத்தனை நாள் வரையில் தோழியாக மட்டுமே இருப்பவள், அவர்களின் குடும்பமும் எதிலும் தலையிடாமல் இருப்பவள் இன்று அவர்களோடு நடக்கும் பார்ட்டிக்கு செல்ல தயாராகிவிட்டாள். எங்கே ரூபினி சொன்னது போல் செய்துவிடுவாளோ! எங்கே தனக்கு என்று இருக்கும் இருவரும் இல்லாமல் போய்விடுவார்களோ என்ற பயத்தால் வந்த உணர்வாக கூட இருக்கலாம்!... எப்படியோ அர்ஜுன் மற்றும் ஆதி மெல்லமாக அவள் மனதில் முதல் அடி எடுத்துவைத்தனர்.
பார்ட்டிக்கு அழைப்பார்கள் என நினைக்கவே இல்லை. அந்த நேரம் வரையிலும் ரூபினி வார்த்தை மட்டுமே மனதில் ஓடிக்கொண்டு இருக்க… இருவரும் வந்து உடையோடு வந்து அழைத்ததும் லேசாக கண்கள் கடலாகி விட்டது அவர்கள் அன்பில்.
ஏற்கெனவே ரூபினி சொன்ன வார்த்தை மனதில் ஓடிக்கொண்டு இருக்க…. அவர்கள் அழைத்ததும் மனம் சம்மதம் சொல்லிவிட்டது.
இருக்கையில் இருந்து எழுந்த சாரா “ஒரு இருபது நிமிஷம் வெயிட் பண்ணுங்க. சாப்பாடு ரெடி ஆகிடும். இந்தாங்க டிவி ரிமோட் “ என சொல்லி விட்டு கிட்சென் சென்றுவிட்டாள்.
இருவருக்கும் அவள் கையில் சமைக்கும் உணவு என்றாள் மிகவும் பிரியம். அதைவிட அருகில் இருந்து பரிமாறும் விதம் அதிகமாக ரசிப்பார்கள். அவர்களுக்கு என்று குடும்பம் இருந்தும் இவர்கள் சாபிட்டார்களா இல்லையா இன்னும் வேண்டுமா என கவனிக்க ஒருத்தரும் இருந்தும் இல்லாமல் இருக்க….. அவளின் கனிவான அன்பில் அடிமையாகிப்போனர்.
அவளின் மனம் பார்ட்டியில் எப்படி சமலிப்பதை பத்தி நினைக்க….அவள் குழம்பிய முகபாவனை வைத்து புரிந்துகொண்ட அர்ஜுன் “ அங்க நீ எங்க கூடவே தான் இருப்ப சரியா. உன் விட்டு எங்கேயும் போக மாட்டோம். ஏற்கெனவே நானும் ஆதியும் அங்க இருந்து சீக்கிரம் கிளம்பிட தான் யோசிச்சிருக்கோம். நம்ம கொஞ்சம் நேரம் அங்க என்ஜாய் பண்ணிட்டு வந்துடலாம்” என பரிவாக பேசினான்.
அதற்கு பின் தான் சாரா முகம் தெளிவடைந்தது. எப்போதும் போல் அவன் கூற்றுக்கு பொம்மை போல் சிரித்துக்கொண்டு ‘ சரி ‘ என்பதைப் போல் தலையை அசைக்க… அர்ஜுன் அவள் கன்னம் கிள்ளி சிரித்தான்.
சாப்பிட்டுக்கொண்டே “சாரீ ரொம்ப அழகா இருக்கு. அப்புறம் அந்த சுடிதார் அதை விட அழகா இருக்கு. தேங்க்ஸ்” என சொல்ல
மற்ற இருவரும் ஒரே நேரத்தில் “ யூ ஆர் வெல்கம் “ என கோரஸ் பாடினார்.
ஆதி மற்றும் அர்ஜுனுக்கு அவர்கள் கொடுத்த உடையை அவள் வாங்கிக்கொண்டது ஆச்சரியமாக இருந்தது. அதிகம் போராட வேண்டியது இருக்கும் என்றே நினைத்தனர். சாரா எப்போதம் அவர்கள் ஏதாவது இவளுக்காக வாங்கினால் அதனை கையில் கூட வாங்கி பார்க்க மாட்டாள். நட்பு இருந்து அது ஒரு கோட்டுக்கு வெளியே தான் இருந்தது. ஏற்கெனவே அவள் அவர்களுடன் பழகுவது பணதுக்காகத்தான் என்ற பேச்சு உண்டு எனவே கவனமாக இருப்பாள். இன்று அவள் சிறு எதிர்ப்பு முதலில் காட்டினாலும் வாங்கிக்கொண்டது அவள் மனமாற்றத்தை இருவருக்கும் சொன்னது.
பார்ட்டியில் அவளை அவர்கள் வாங்கிக்கொடுத்து உடையில் பார்க்க ஆவலாக எதிர்நோக்கி காத்திருந்தனர்…இருவரும்.