logo

அத்தியாயம் 3

Mars

Administrator
காலேஜ் முடிந்து சாரா ஹாஸ்டல் சென்று விட… ஆதி, அர்ஜுன் இருவரும் அவர்கள் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்ப தாயாராகினர். அந்நேரம் ஒரு கார் இவர்கள் முன் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் இருந்த ஒரு பெண் கையை அசைத்து உதடு குவித்து காற்றில் முத்தமிட்டு சென்றாள். தான் ஏதோ பெரிதாக செய்து விட்டது போல் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே காரில் சென்றாள். அவள் ரூபினி மறைந்திருந்து பார்த்த அதே உருவம்.

அவள் செய்த செய்கை, காற்றில் வந்த முத்தம் ஆதிக்கா இல்ல அர்ஜூனுக்கா என்று இருவரும் குழம்பி போய் நின்றனர். அவள் கார் சென்ற பின் கேலியாக சிரித்த அர்ஜுன்

“என்ன மச்சி, அவளை பார்த்ததும் மூஞ்சி பிரகாசமாக ஆகிடுச்சு? என்ன மேட்டர்? ம்ம்!!” என நக்கலாக கேட்க.

அவள் செய்கையில் ஏற்கெனவே கடுப்பில் இருந்த ஆதி அதே முறைப்போடு அர்ஜூன் பக்கம் திரும்பி… காற்றில் வந்தது முத்தத்தை அர்ஜுன் பக்கம் மொத்தமாக திருப்பி விடுவது போல் செய்கை செய்ய “ ச்சீ ச்சீ கருமம் “ என அஸ்டகோனத்தில் முகத்தை வைத்தான்.

அதனை திருப்தியாக பார்த்த ஆதி “ இப்படி தான் எனக்கு இருந்தது. மச்சி அவா ரொம்ப டார்ச்சர் பண்றா டா. தினமும் வழிய வந்து பேசுறது, வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்புறதுனு கடுப்பா இருக்கு. நான் அமைதியா சொல்றதுனால இன்னும் இந்த மாதிரி செஞ்சிட்டு சுத்துறா ஒரு நாள் அவளுக்கு இருக்கு” என உச்சகட்ட கடுப்பில் பேசினான்.

பின் இடைவெளி விட்டு “ அப்புறம் உனக்கு அவாகூட எப்படி போய்கிட்டு இருக்கு” என ஹெல்மெட் மாட்டிய படி அர்ஜுனிடம் கேட்டான்.

அவனோ வண்டியில் அமர்ந்து இருக்கால் கொண்டு பேலன்ஸ் செய்த படி “ அதை ஏன்டா கேக்குற… மீட் பண்ணலாமா? வெளிய போகலாமா? உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும் அதை சொல்ல ஏன் தயங்குறனு அவா பாட்டுக்கு மெசேஜ் பண்ணி தள்ளுறா. நான் பிளாக் பண்ணி விட்டேன். அதுக்கு கால் பண்ணி அழுது எங்க அப்பா கிட்ட சொல்லி உன்ன என்ன பண்றேன்னு பாருனு சீன் வேற. முடியல டா. அவங்க அப்பா அவளுக்கு மேல மோசமான ஆளு” என புலம்பி தீர்த்தான்.

“எப்படி டா உனக்கு எனக்கு சேர்த்து தூண்டில் போடுறா. கொஞ்சம் கூட இங்கிதமே இருக்காதா? இத்தனைக்கும் நம்ம ப்ரெண்ட்ஸ், நம்ம இதை பத்தி பேசுவோம்னு கூடவா அவா யோசிக்க மாட்டா?”

“அது ஒன்னும் இல்ல மச்சி, அவளுக்கு நம்மல்ல ஒருத்தர கரெக்ட் பண்ணனும். அது தான் டார்கெட் அதான் கொஞ்சமும் வெக்கம் இல்லாம இப்படி பண்ணுது. சரி விடு பார்த்துக்கலாம் “ என்று வண்டியை ஸ்டார்ட் செய்த படி அர்ஜுன் சொன்னான்.

“எப்பா சாமி, இப்படி பட்ட பொண்ணு மட்டும் என் லைஃப்ல வேண்டவே வேண்டாம் டா. அப்புறம் அவ்வளவு தான் லைஃப், லிவிங் ஹெல் (Living hell) ஆகிடும். நமக்கு சாரா மாதிரி பொண்ணு தான் டா செட் ஆகும்” என சொல்லிய படி பைக் ஸ்டார்ட் செய்து கிளம்ப தயாராகினான். பின் அர்ஜுன் பக்கம் திரும்பி “கொஞ்சம் நேரம் அப்புறம் சாரா கூட துணைக்கு போகனும் டா. நான் இப்போ கிளம்புறேன்” என போகிறபோக்கில் சொல்லிவிட்டு பறந்து விட்டான்.

ஆதி சொல்லி சென்றதையே வண்டி ஓட்டி கொண்டு இருந்த அர்ஜுன் மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது. ‘ சாரா மாதிரி ஒரு பொண்ணு தான் செட் ஆகும் ‘ அவள் மாதிரி பெண் கிடைத்தால் வாழ்கையே வரம் தான் என சிந்தித்தான். ஒரு மனமோ ‘ சாரா மாதிரி என்ன… சாராவே கிடைச்சா?!!’ என சிந்தனை வர சென்று கொண்டு இருந்த பைக் கன்ட்ரோல் இல்லாமல் வேகத்தடையில் வண்டியை விட்டுவிட்டான். அப்போது தான் அவன் சிந்தனை கலைந்தது. இப்படி ஒரு சிந்தனை வந்ததுக்கு அவனை அவனே திட்டிய படி ‘ அவா ஒரு நல்ல ஃப்ரெண்ட். இப்படி யோசிக்க கூடாது. அது நல்லதும் இல்லை ‘ என தனக்கு தானே கூறிய பின் தான் ரோட்டில் கவனம் சென்றது.


ஆதிக்கு அதே எண்ணம் தான். அர்ஜுன் போல் அவன் அந்த எண்ணத்தை மாற்றவில்லை. சாராவே கிடைத்தால் என்ன என்று தான் தோன்றியது. எப்போதும் போல் அசால்டாக நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணப்போக்கில் அவனுக்கு அவனே லேசாக சிரித்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.


சிறிது நேரம் கழித்து சாரா அவள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிளம்பி நீல உடை போட்டு தயாராக இருக்க ஆதி சரியான நேரத்துக்கு வந்தான். சில நொடிகளில் அர்ஜூனும் வந்து சேர்ந்தான். சாராவும், ஆதியும் அர்ஜுனை பார்க்க… அவன் கண்டுக்காமல் வண்டியில் இருக்கும் சைட் மிரரில் தலைமுடியை கை வைத்து வாரினான்.

“என்ன அர்ஜுன் சொல்லிக்காம கொள்ளிக்காம வந்திருக்க?” என சாரா யோசனையுடன் வினாவா

கேட்ட இருவரும் அவள் பாஷையில் சிரித்துவிட்டனர்.

“மண்டு சாரா, அது சொல்லாம கொள்ளாம” என அவளை திருத்தம் செய்தான் அர்ஜுன்.

“ஏதோ ஒன்னு, நான் ஒருத்தர் தான சொன்னேன். இப்போ என்ன ரெண்டும் பேரும் என் கூட வந்து எதுக்கு… உங்களுக்கு தான் டைம் வேஸ்ட் “

“அப்போ என்னை ஏன் டா வந்தனு கேக்குறியா டி?” என்ற பொய் கோவமாக கேட்டான் அர்ஜுன்.

“டேய் அப்படி சொல்லல டா. நான் என்ன சொல்ல வர்றேன்னா…” என ஆரம்பிக்கும் முன்பே ஆதி அவளை நிறுத்தினான்.

“எம்மா தாயே இதை பத்தி ஏற்கெனவே பேசிட்டோம். இதுக்கு முன்னாடி என்ன மூணு பேரும் போனதே இல்லையா. சும்மா பேசிட்டு இருக்காம கிளம்பலாம்” என பேச்சை முடித்தான். ஆதி & அர்ஜுன் ஒரு வண்டியில் வர, சாரா அவள் வண்டியில் வந்தாள்.


வரும் ஆர்டர் எல்லாம் அந்த அந்த இடத்தில் டெலிவரி செய்ய ஆதி, அர்ஜுன் துணைக்கு வந்தனர். அவள் டெலிவரி கொடுக்கும் போது அவள் மட்டுமே தான் செல்வாள். நேரம் கடந்த நிலையில் நடுவில் கொஞ்சநேரம் இடைவெளி கிடைக்க… வண்டியில் அமர்ந்த வாரே ஒரு ஓரமாக நின்று இருந்தனர். நன்றாக இருட்டி விட்டது. ரோட்டில் வாகனங்கள் போகவும் வரவுமாக இருந்தது. அந்த இடத்தில் ஒலித்தது எல்லாம் வண்டி ஹாரன் சத்தம் மட்டும் தான்.

சாரா ஹன்ட்பரில் தலையை கவிழ்ந்து படுத்து இருந்தாள். அருகில் தான் மற்ற இருவரும் வண்டியில் நின்று இருந்தனர். ஆதி என்ன நினைத்தானோ “ ஆமா சாரா, உனக்கு எந்த மாதிரி பையன் வேணும்” என தீடீரென்று கேட்ட.

ஹாரன் சத்தம் மத்தில் அவன் கேட்டது அவள் காதில் மெதுவாகத்தான் விழுந்தது. சடார் என்று நிமிர்ந்து பார்க்க ஆதி மீண்டும் அதே கேள்வி தான் கேட்டான். அவன் கேட்டதும் சாரா கடுப்பில் அவனை பார்க்க… ஆனால், அர்ஜூனுக்கு அவன் எதற்காக இப்படி கேட்கிறான் என்று புரிந்தது.

அவன் கண்களில் காதல் எல்லாம் இல்லை ஏதோ தாங்கள் நினைத்தது போல் அவளுக்கு இவர்களைப் போலவே ஒரு பையன் வேண்டும் என்று சொல்லுவாளோ என்ற எதிர்பார்ப்பு தான் இருக்க கொஞ்சம் நிம்மதி ஆனான். அவனிடம் காதல் இல்லை என்றால் தான் ஏன் நிம்மதி ஆக வேண்டும் என யோசிக்க மறந்தான்.

ஏகெனவே சோர்வாக இருந்த சாரா இவனின் இந்த கேள்வியில் வண்டியில் இருந்து இறங்கி அவன் புஜத்தில் நன்றாக அடிக்க ஆரம்பித்துவிட்டாள். அடி அவனுக்கு மட்டும் இல்லாமல் பின்னாடி சும்மா அமர்ந்து இருந்த அர்ஜுனுக்கும் சேர்த்து விழுந்தது.

“என்ன பார்த்து ஏன் டா அப்படி கேட்ட? என்ன பார்த்தா கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இருக்குற மாதிரி தெரியுதா….?” என கத்த.

“ சரி சரி விடு டி சும்மா தான் கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி போட்டு அடிக்கிற எரும” என அர்ஜுன் பதிலுக்கு பேசினான்.

‘ ஆத்தி, சும்மா பையன பத்தி பேசுனதுக்கே இந்த அடி அடிக்கிற. கல்யாணம் பண்ண புருஷன என்ன அடி அடிப்பளோ ‘ என அர்ஜுன் முணுமுணுக்க…. அது ஆதி காதில் தெளிவாக விழுந்தது.

“மச்சி எப்படி டா நான் மனசுக்குள்ள நினைச்சத சரியா சொன்ன” என ஆதி சொல்லி சிரிக்க… அர்ஜுன் அவனுக்கு ஹை-ஃபை (Hifi) கொடுத்தான்.

“டேய் அர்ஜுன் என்ன டா என்னைய பத்தி சொன்ன? சொல்லு டா இல்லைனா உன்ன… “ என சொல்ல வரும் போது ஆர்டர் வந்த சவுண்ட் கேட்க… அந்த பேச்சு அதோடு நின்றுவிட்டது.

அடுத்த ஆர்டர் வாங்கிக்கொண்டு டெலிவரி செய்ய போகும் போது ட்ராஃபிக்ல் மாட்டிவிட்டனர். இது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. சாரா கொஞ்சம் பதற்றமாக இருப்பதை அர்ஜுன் கவனித்து விட

“ஈஸி சாரா, ஆன் டைம்க்கு கொண்டு போய் கொடுத்துடலாம்” என்று சமாதானம் செய்தான்.

ஆனால் ஆர்டர் செய்த நபரோ வந்துக்கொண்டு இருப்பதை ஃபோனில் பார்த்த பிறகும் ஃபோன் செய்து கொண்டே இருந்தார். அதனை அட்டென்ட் செய்து பேசிவிட்டு மீண்டும் புறப்படும் போது தான் ட்ராஃபிக்ல் நிற்கும் படியாகிவிட்டது.

எப்படியோ வேகமாக வந்து விட்டாள் ஆர்டர் செய்த நபரில் வீட்டுக்கு. அதுவோ ஆறாவது மாடியில் இருக்க…

“ இங்கேயே இருங்க டா, நான் போய் கொடுத்துட்டு வர்றேன். இன்னைக்கு இது தான் லாஸ்ட்… வந்ததும் வீட்டுக்கு போகலாம்” என அவர்களை பார்த்து சொன்னவள் ‘ ரொம்ப டயர்ட் ஆ இருக்கு ‘ என போகிற போக்கில் முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தாள்.

“இருந்தாலும் ஆர்டர் பண்ணவன் ரொம்ப தான் டா துள்ளுறான். ஏன் அவனுக்கு ட்ராக்கிங் பாக்க தெரியாதாவாம்!!” என ஆதி டென்ஷன் ஆகி விட்டான்.

“ அது ஒன்னும் இல்ல மச்சி, எல்லாம் திமிரு. அவன் ஆர்டர் பண்ணி இருக்கிறத பாத்தியா… ஹெவி ஆ இருக்கு. ப்ரெண்ட்ஸ் கேங் ஆ இருப்பாங்களா இருக்கும் அதான்… “ என தனக்கு தெரிந்த வற்ரை சொன்னான் அர்ஜுன்.

சரியான நேரத்துக்கு வந்துவிட்டாள் தான் ஆனால் மாடி ஏறிப்போக சில நிமிடங்கள் ஆகிவிட்டது.

ஆர்டர் செய்தது இவளை விட கம்மியான வயதில் இருக்கும் பையன் தான்… கண்டபடி கத்திக்கொண்டு இருந்தான் சாராவிடம். அவளோ எவ்வளவு சாரி சொல்லியும் இழிவாக பேச… அவள் இருந்த சோர்வுக்கு அவனின் பேச்சுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

அவன் மட்டும் அல்லாமல் வீட்டுக்குள் இருந்த மாடர்ன் தோழன், தோழிகள் என கும்பலாக வந்து இன்னும் பேச கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. பெண்கள் அதீத மாடர்ன் உடைகளும், முகத்தில் மேக் அப் அதிகமாக போட்டு இருக்க, ஆண்களின் பார்வை ஒரு மாதிரியாக இவளை பார்க்க… வெறுப்பாக இருந்தது. அதில் ஒருவன் அவள் கையை பிடித்து உள்ளே இழுக்க முயல… வேகமாக பின்னாடி நகர்ந்து விட்டாள்.

இரு உள்ளங்கையையும் இருக்க மூடியவள், இறுதி ஒரு முறை அழுத்தமாக சாரி என்று விட்டு விறுவிறுவென படி இறங்கி விட்டாள். ஏற்கெனவே உடல் சோர்வாக இருந்தது, மாடி ஏறி இறங்கி என பலமே இல்லாமல் தான் கடைசி ஆர்டர் எடுத்தாள்… அவர்களும் இவ்வாறு இவளை நடத்த முழுவதுமாக உடைந்து விட்டாள் அவளின் நிலையை எண்ணி.

அவள் தூரத்தில் வரும் சுபாவமே ஏதோ சரி இல்லை என்று அர்ஜுன் உணர்ந்தான். அருகில் வந்தது இருவரின் முகத்தை பார்க்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய போக… அர்ஜுன் அவளை நிறுத்தினான். ஆதி அவளை குழப்பமாக பார்க்க காரணம்… அவள் தலை குனிந்து இருந்தது.

ஒரு விரல் கொண்டு நாடியை நிமிர்த்தி அவள் முகத்தை பார்க்க அர்ஜுன் முயல… கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. இருவரும் பதறியே விட்டனர்.

“ என்ன டி ஆச்சு, யாரு என்ன சொன்னா? “ என ஆதியும்

“ அந்த ஆர்டர் பண்ணவன் தான… இரு அவனுக்கு இருக்கு… மச்சி வாடா போகலாம் “ என அர்ஜுன் ஆதியையும் அழைத்துக்கொண்டு சாராவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மேலே வந்தான். படி ஏறும் போதே சாரா நடந்தவையை சொல்லிவிட்டாள்.

வந்து கதவை தட்ட… உள்ளே இருந்தவன் கெட்ட வார்த்தை போட்டு திட்டிக்கொண்டே வந்தான். அறையை திறக்கும் போதே உள்ளே இருந்து புகையாய் வந்தது. வெளியில் வந்தவன் அறை போதையில் சாராவை மட்டும் பார்த்து

“என்ன பேபி வந்துட்டியா? எனக்கு தெரியும் நீ வருவனு. ஏன் அங்கேயே இருக்க வா வந்து ஹக் மீ” என கையை விரிக்க அர்ஜுன் அவன் நெஞ்சில் ஒரு மிதி மிதிக்க பறந்து சென்று விழுந்தான்.

ஆதி சாராவிடம் கையை பிடித்து தகராறு செய்தது யாரு என்று அடையாளம் காட்ட சொல்ல… அவனை ஆதி புரட்டி எடுத்தான். பறந்து போய் விழுந்தவனை அடித்தது துவைத்த அர்ஜூனை ஒரு குரல் நிறுத்தியது.

“அண்ணா” என்ற கல்பனாவின் குரல். அவனின் தங்கை.

அதிர்ச்சியில் மூவரும் அவள் இருக்கும் பக்கம் தான் பார்த்தனர்.

“கல்பனா, நீ இங்க என்ன பண்ணுற? அறிவு இல்லை உனக்கு?!!” என மூச்சு ஏற இறங்க பேசினான். இன்னும் அவனிடம் வெறி அடங்கவில்லை. அதுவும் தங்கையை அங்கு பார்த்த பின் இன்னும் அதிகமாவிட்டது. சண்டையிட்டதில் தலை முடி எல்லாம் களைந்து, வேர்த்து, மூச்சு வாங்க நின்று இருந்த தோரணையே சொன்னது அவன் கோவமாக இருப்பதை.

“உனக்கு முதல்ல இருக்கா? இன்னும் அவா கூட தான் சுத்தி கிட்டு இருக்கியா. இப்படி பட்டவா உனக்கு ப்ரெண்டா?!! அவளே ஒரு பிச்சைக்காரி, நீயும் இப்போ அவா கூட சேர்ந்து பிச்சை எடுக்க வீடு வீடா போறீயா ? “ என முடிக்கும் முன்பே அறைந்து இருந்தான் அர்ஜுன்.

கண்கள் ரத்தமென சிவந்து விட்டது. அவனை இப்படி ஒரு தோரணையில் இதுவரைக்கும் ஆதியோ, சாராவோ பார்த்தது இல்லை. அவர்களுக்கும் ஆச்சரியம் தான்.

ஒரு விரல் நீட்டி “ இந்த அறை சாராவ பத்தி பேசுனதுக்கு மட்டும் இல்லை அவா செய்யிற வேலையை கீழ்தனமா பேசுனதுக்கும் தான். என்ன தெரியும் உனக்கு காசோட அருமை. உனக்கு என்ன காசு நீ கேட்டதும் உன்னோட அக்கவுண்ட்ல வந்து விழும். இப்படி குடிச்சி கூத்தடிச்சி கரியாக்குற நீ எங்க... உழச்சு சம்பாதிச்சு அவா அப்பாவையும் பாதுக்க நினைக்கிற சாரா எங்க!! அவா கூட உன்ன கம்பர் பண்ற அளவுக்கு கூட நீ லாயக்கு இல்லை” என கண்டபடி கத்தி விட்டான்.

முதலில் அவன் தங்கச்சி இங்கு இருப்பதே கோவமாக வந்தது, அதுவும் அவள் நண்பர்களை பார்த்த பின் இன்னும் அதிகமாகி விட்டது. அவளை பற்றி சிலர் சொல்லும் போதும் எல்லாம் நம்பவில்லை. இந்த காலத்து பெண் , செலவு செய்து சுற்றிக்கொண்டு இருக்கிறாள் என்றே நினைத்தான் ஆனால் இப்படி பட்ட நண்பர்களோடு குடித்து கும்மாளம் அடிப்பாள் என கொஞ்சமும் நினைக்கவில்லை. அதுவும் அவன் நண்பர்கள் முன் தங்கச்சி செய்த காரியத்தை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டே அவளை ஏற இறங்க பார்த்தான். பின் இருகைகளையும் இடுப்பில் வைத்து வாயை குவித்து காற்றை ஊதி கோவத்தை குறைக்க முயன்றான்.

“காசு நிறையா தான இருக்கு?” என சம்மந்தமே இல்லாமல் ஒரு கேள்வியை கேட்க

கன்னத்தில் கை வைத்துக்கொண்டே ‘ ஆமா ‘ என்று தலையை அசைத்தாள் கல்பனா…

விரலை நீட்டி அவளை மேலேயும் கீழேயும் காட்டி “ என்ன டி டிரஸ் இது? ஒரு நல்ல டிரஸ் கூடவா உன்னால வாங்க முடியல. பாண்ட் பாரு அங்க அங்க கிழிஞ்சு இருக்கு. இதுல நீ சாராவ பார்த்து பிச்சக்காரினு சொல்ற…”

சாரா… அர்ஜுனின் இன்னொரு முகத்தை பார்த்து எப்போதோ ஆதி முதுகுக்கு பின் மறைந்து விட்டாள். சுற்றி உள்ளே எல்லோரும் அர்ஜுனையும், கல்பனாவையும் தான் வேடிக்கை பார்த்தனர். அடி வாங்கிய இருவரும் எழுந்திரிக்க முடியாமல் படுத்து கிடந்தனர். கல்பனா பேசிய பேச்சுக்கு ஆதிக்கும் கோவமாக வந்தது, ஆனால் அவள் நண்பனின் தங்கை என்பதால் அவனே பேசட்டும் என அமைதியாகி விட்டான். மற்றொரு காரணம் பின்னாடி ஒளிந்து கொண்டு அவன் சட்டையை இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்த சாரா.

கல்பனா அப்போது அவள் செய்கையை உணராமல் சாரா இருக்கும் திசையை தான் பார்த்து முறைத்துக்கொண்ட இருந்தாள். அவள் பார்த்த திசையில் அர்ஜுன் பார்க்க… அவளின் கோவப்பார்வைக்கு அர்த்தம் புரிந்தது.

“ சாரா இங்க வா” என அவளை அர்ஜுன் அழைக்க… லேசாக எட்டிப் பார்த்து மாட்டேன் என்று தலையை அசைக்க… அதனை கவனித்த ஆதி அவள் கையை பிடித்து இழுத்து முன்னாடி விட்டான்.

“ம்ச்… இங்க வான்னு சொல்றேன்ல.. வா” என ஒரு கையை விரித்து அழைக்க

மெதுவாக சுற்றி பார்த்துக்கொண்டே அர்ஜுன் பக்கம் வந்து நின்றாள். ஒரு பக்கம் அவளை தோளோடு அனைத்து

“இவா எங்க ப்ரெண்ட் சாரா. அவா புட் டெலிவரி வேலை செய்யுற. அவளுக்கு அப்பா காசு கொடுக்கணும்னு அவசியம் இல்லை. உழைச்சு சம்பாதிக்க அவளுக்கு தெரியும். ஆனா உங்களுக்கு என்ன தெரியும்?.... உங்களை சுத்தி பாருங்க.. உங்களுக்கு என்ன தெரியும்னு அதுவே சொல்லுது” என எகத்தாளமாக எல்லோரையும் பார்த்து சொல்ல அமைதியாகி விட்டனர். ஆனால் கல்பனா முகத்தில் ஏளனமாக ஒரு சிரிப்பு வந்து போனதை ஆதி கவனித்தான்.

“வா அர்ஜுன் போகலாம்” என அர்ஜுன் காது அருகில் மெல்லமாக சொல்ல… அவளை பார்த்து மன்னிக்கும் பார்வை பார்த்தான் அவன் தங்கை பேசியதுக்காக. மேலும் கல்பனா பக்கம் திரும்பி

“ சாரா கிட்ட மன்னிப்பு கேளு” என சொன்னதும் அடி வாங்கிய போது கொடுத்த ரியாக்ஷன் விட இப்போது அதுக்கு மேலாக கொடுத்தாள் கல்பனா.

“ வாட்?!? நான் போய் இவா கிட்ட… “ என கல்பனா ஒரு மாதிரி சாராவை பார்த்த வாரு சொல்ல

“உன்ன சாரி சொல்ல சொன்னேன் “ என அர்ஜுன் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தத்தில் கல்பனா வாய் தானாக “சாரி” என்று முணுமுணுத்தது.

பின் அர்ஜுன், ஆதியிடம் “மச்சி நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. எனக்கு வேற வேலை இருக்கு” என கடைசி வரியை கல்பனாவை பார்த்த படி சொன்னான்.

சாராவிடம் அவன் மன்னிப்பை கூற வரும் முன் அவனை தடுத்துவிட்டாள் சாரா. மன்னிப்பு கேட்க வேண்டிய ஆள் கேட்டுவிட்டாயிற்று, அர்ஜுன் மன்னிப்பு கூற வேண்டிய அவசியம் இல்லை.

ஆதியும் , சாராவும் கீழே இறங்கும் போது அவள் கண்கள் கலங்கி இருப்பதை ஆதி கவனித்தான். அவளை தோள் தொட்டு திருப்பி முகத்தை கையில் ஏந்தி கட்டை விரல் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டான். பின், வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர் .


அர்ஜுன் கல்பனாவை அவன் கையோடு அழைத்து செல்ல நினைக்க… அவள் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்தாள். ஏற்கெனவே நண்பர்கள் முன் அவளை அடித்து விட்டு, உடையை பற்றி பேசி, சாராவிடம் மன்னிப்பு சொல்ல வைத்தது எல்லாம் அவளை அசிங்க படுத்தியதாக அவள் நினைக்க… இப்போது அர்ஜுன் கூப்பிடும் போது உடனே சென்றுவிட்டால் இன்னும் அவமானமாக இருக்கும் என்று எண்ணி வர மாட்டேன் என்றாள். அர்ஜுன் மீண்டும் மற்றொரு கன்னத்தில் அறைவிட… அப்போது தான் அவனோடு நகர்ந்தாள்.

சாராவின் வண்டியில் ஆதி கிளம்பி இருக்க…. அர்ஜுன் வந்த வண்டியில் கல்பனாவுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

ஹாஸ்டல் அருகில் வந்த இருவரும் அமைதியாக இருந்தனர். ஆதி அவன் வண்டியை பார்க்கிங்கில் இருந்து எடுத்து கிளம்ப தயாராகும் முன்

“அதையே நினைக்காத டி, நாளைக்கு பார்க்கலாம் என்ன… நல்லா தூங்கு. நான் கிளம்புறேன்” என ஆதி சொல்ல… சாரா இன்னும் யோசனையுடனே இருந்தாள். அவளை பார்க்க பாவமாக இருக்க… அதனை முகத்தில் காட்டாமல்

“என்ன டி யோசிக்கிற?! எதுவா இருந்தாலும் சொல்லு” என கரிசனமாக கேட்க… சில நேரம் முன்பு நடந்தவை பற்றி தான் ஏதோ சொல்ல போகிறாள் என நினைக்க.. அவளோ

“அப்போ அர்ஜுன், உன்னோட காதுல முனுமுனுனு ஏதோ சொன்னானே. ரெண்டு பேரும் சிரிச்சீங்கல.. என்ன சொன்னான்?” என அவன் சற்றும் ஏதிர் பார்க்காத கேள்வியை கேட்க

“ சாரா நீ சரியான பைத்தியம் இல்லை சரியாகாத பைத்தியம். என்ன நடந்துட்டு இருக்கு… நீ என்ன கேக்குற. போ டி உள்ள” என அவளை எண்ணி வியந்தவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

அவனின் கூற்றில் சாரா சிரிக்க… அதை திருப்தியாக பார்த்த பின் தான் ஆதி அங்கு இருந்து நகர்ந்தான். அவள் முயற்சி அவனுக்கு புரிந்தது.

ஆதியிடம் அர்ஜுன் ஃபோன் செய்து பேசினான். சாராவைப் பற்றியும் அவள் கேள்வியை பற்றியும் அவள் சிரித்தது சொன்ன பின் தான் நிம்மதி ஆனான் அர்ஜுன்.

இன்றைய நாள் மிகவும் பெரியதாக இருந்த மாதிரி மூவருக்கும் தோன்றியது.
ஆதி கோவித்து கொண்டு போனது….. பின் சமாதானம் ஆனது, மற்றவர்கள் முன் அவளை விட்டு கொடுக்காமல் அர்ஜுன் பேசியது, அவள் செய்யும் வேலையையும் நிறைவாக பேசியது, உணர்ச்சிபூர்வமாக இருக்கும் போது ஆதி கண்ணீரை கண்டு துடைத்து விட்டது என நடந்தவையை சாரா மனதில் ஒட்டிப்பார்த்தாள். அவரவர் இடங்களில் படுத்துக்கொண்டு மூன்று பேரு இன்றைய நிகழ்வை பற்றி தான் சிந்தித்த படி தூங்கினர்.
 
Top