ஆதி மலை பாதை வரும் முன்னே இருக்கும் ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான். மூவருமாக உணவருந்தினர். இடையில் ஆதி சாராவை அது வேண்டுமா? இது வேண்டுமா? என விழுந்து விழுந்து கவனித்தான். இது எல்லாம் மற்ற இருவருக்கும் அதிகப்படியாக இருந்தாலும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டனர்.
மலை பாதையில் ஆதி வண்டியை செலுத்தும் போது ஆதியின் போன் அடித்தது.
"டேய் அர்ஜுன் யாருனு பாருடா"
அர்ஜுன் பார்க்கும் போது நம்பர் மட்டுமே தெரிய
"ஏதோ நம்பர் டா" என சொன்ன படியே எடுத்து ஸ்பீக்கரின் போட்டான் அர்ஜுன்.
"ஹாய்ய்ய்ய் ஆதி" என பெண்ணின் குரல் உற்சாகமாக கேட்டது.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க... ஆதி பதறிய படியே தலையை ஆட்டி தெரியாது என்பது போல் செய்கை செய்தான்.
"ஹலோ ஆதி கேக்குதா?" என மீண்டும் அதே பெண் குரல்
"ஹான் யாரு நீங்க?"
"ஆதி அதுக்குள்ளயும் என்னை மறந்துட்டீங்களா. நான் தான் ஏஞ்சலா"
இவள் இப்படி தீடீரென்று போன் செய்தது எரிச்சலாக இருக்க... அதுவும் சாரா இருக்கும் போது.. என நினைத்துக்கொண்டே கண்ணாடி வழியாக சாரா முகத்தை பார்க்க அதுவோ சாதாரணமாகத்தான் இருந்தது.
"என்ன சொல்லுங்க?" என சுருக்கமாகவே பேசினான் ஆதி.
"உங்க போன் நம்பர் கிடைச்சது அதான் சும்மா போன் பண்ணேன். ஈவினிங் இன்னைக்கு ரேசிங் கிளப் வருவீங்களா?" எதிர்பார்ப்போடு கேட்க
"இல்ல. நான் என்னோட கேர்ள் பிரண்ட் கூப்டு வெளிய போய்ட்டு இருக்கேன். வேற எதா முக்கியமான விஷயம் இருந்தா ஜார்ஜ் காண்டாக்ட் பண்ணுங்க" அதற்கு மேல் எனக்கு போன் செய்யதே என்று மறைமுகமாக சொன்னான்.
அர்ஜுன் மனம் இன்னும் இன்னும் காயப்பட்டு போனது அவனின் கேர்ள் பிரண்ட் என்ற அழைப்பில். இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது என்று சொல்லிக்கொண்டான்.
"ஆதி உங்.. உங்களுக்கு லவர் இருக்காங்களா?!" என கலங்கிய குரலில் கேட்க
அர்ஜுனுக்கு அந்த பெண்ணின் மனது புரிந்தது. தன்னைப் போலத்தான் என்று நினைத்துக்கொண்டு அந்த பெண்ணுக்காக வருந்தினான். சாரா வேடிக்கை பார்த்த வாறு வந்தாள். ஏஞ்சலா என்ற பெண்ணில் பேச்சில் இருந்தே ஆதியின் மேல் அவளுக்கு சிறு அபிப்பிராயம் இருப்பது தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆதி மற்றும் அர்ஜுன் சண்டையில் எப்படி தலையிடாமல் இருந்தாலோ அதே போன்ற மனநிலையில் தான் இருந்தாள். ஆனால் ரூபினி அர்ஜுனிடம் பேசும் போது மட்டும் கோவம் வருவது எதனால் என சிந்திக்க தவறினாள்.
காதலில் பொறாமை கூட உரிமையின் வெளிப்பாடு என்பது காதலிப்பவர்கள் அறியவில்லை.
"ஆமா. நான் வைக்கிறேன். பை" என சொல்லி வைத்துவிட்டான். பின் ஏஞ்சலா யாரு என்பதை இருவரிடமும் சொன்னான்.
கொண்டை ஊசி பகுதிகளில் ஆதி லாவகாம வண்டியை செலுத்தினான். வியூ பாயிண்ட் இடத்தில் ஏற்கெனவே சிலர் இருந்தனர். பார்க்கும் இடம் எல்லாம் பச்சை பசேலென்று இருந்தது. மேகம் எல்லாம் தொட்டும் விடும் உயரத்தில் தெரிய அதனை தொட முயன்று தோற்று போனால் சாரா. அவளின் குழந்தை தனமான செய்கையில் ஆதி சிரித்துக்கொண்டு
"லூசா டி நீ. அது பார்க்க தான் பக்கத்துல தெரியுது. ஆனா அது தூரமாத்தான் இருக்கும். இது எல்லாம் பனி தான். முன்னாடி பார்த்து நட" என கேலி செய்ய... அவனை போட்டு அடித்தாள்.
பின்னாடி வந்த அர்ஜுனிடம் "பாரு அர்ஜுன் லூசுனு சொல்றான். நிஜமாவே மேகம் தொடுற மாதிரி எல்லாம் வீடியோ நான் பார்த்திருக்கேன். அது போல தான் நினைச்சேன்" என இருவரிடமும் பொதுவாக பேசிக்கொண்டே வந்தாள்.
எப்போது போல புகைப்படம் நிறைய எடுத்துக்கொண்டனர். அப்போது சாரா கவனத்தை ஈர்த்தது வேறு ஒரு ஜோடி. அவன் அவளை அணைப்பதும், காதில் ரகசியம் பேசுவதும் என இருக்க... அவளை ஆதியையும் அந்த இடத்தில் வைத்து கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் காதலர்கள் தான் ஆனால் ஏன் என்னுடைய கற்பனையில் கூட என்னால் ஆதியிடம் நெருங்க முடியவில்லை என கவலையாக இருந்தது. ஒருவேளை ஆதியே இன்னும் ஒரு படி முன்னே நெருங்கி வந்தால் தன்னால் உணர்வு வரும் என்று நினைத்துக்கொண்டாள்.
ஒரு பகுதியின் நின்று பார்க்கும் போது மலையில் இருக்கும் நீர்வீழ்ச்சி தெரிய ஆதி சாராவை அழைத்துக்கொண்டு அங்கே சென்று பார்த்தான். விரல் சுட்டி அவளுக்கு அது எந்த இடம் என்று காட்ட அவளும் ஆவலாகவே பார்த்தாள். அர்ஜுன் தான் யாரோ போல் அருகில் நின்றிருந்தான்.
ஆதி மெதுவாக சாரா தோளில் கையை போட.. சாராவுக்கு அவள் பார்த்த ஜோடி தான் நினைவில் வந்தது.
சாரா பார்த்ததை ஆதியும் பார்க்கத்தான் செய்தான். அவனுக்கு என்று நெருங்கும் உணர்வு எதுவும் தோன்றவில்லை. அவள் மனது ஏங்காமல் இருக்கவே இவ்வாறு செய்தான்.
இவர்கள் இருவரும் ஜோடியாக நிற்க தான் அங்கு அவசியம் இல்லை என மனம் உடைந்து செல்ல போன அர்ஜுன் கரங்களை சாரா பிடித்து நிறுத்தினாள். அர்ஜுன் திரும்பி பார்க்க.. சாரா அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள். இதனை ஆதி கவனிக்கவில்லை. சாரா 'போக வேண்டாம்' என்பது போல் தலையை ஆட்ட அதனை புரிந்து கொண்ட அர்ஜுன் இடைவெளி விட்டு சாரா அருகில் நின்றான். சாரா அவன் கையை விடவும் இல்லை... அதனை விடுவிக்க அர்ஜுனுக்கு மனமும் இல்லை. ஆதி சாராவின் தோளில் போட்ட கையின் அர்த்தம் விட இவர்கள் கோர்த்த கைகள் பல அர்த்தம் சொன்னது.
ஏஞ்சலா ரேசிங் கிளப்பில் தான் ஆதியின் நம்பர் வாங்கினாள். அவளின் கலகல பேச்சுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எல்லோரும் ஆதியை ஆகா ஓஹோ என்று புகழ அதுவே அவள் மனதில் ஆதி ஹீரோவாக பதிந்து போக காரணமாகிவிட்டது. அவனிடம் பேச வேண்டும் போல் இருக்கும் யோசிக்காமல் போன் செய்துவிட்டாள். அப்போது தான் அவனுக்கு லவர் இருப்பது அவளுக்கு தெரியும். ஆசை கொண்ட மனம் காயப்பட்டு தான் போனது. இந்த விடயம் முன்பே தெரிந்திருந்தால் கண்டிப்பாக நட்பாக மட்டுமே தான் ஆதி அவள் மனதில் பதிந்திருப்பான்.
***
மூவரின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
வாரம் முதல் நாள் அன்று.
அர்ஜுன் சொன்னது போலவே காலையிலேயே மழை பெய்ய அவன் கொடுத்த குடையுடன் தான் ஆபீஸ் சென்றாள். நடக்கும் போது அன்றைய நினைவு தான் வந்தது. இவள் அர்ஜுன் கையை பிடித்து நிறுத்திய போது அர்ஜுன் கண்கள் வேறு ஏதோ கதை சொல்லுவது போல் தெரிந்தது. மேலும் அர்ஜுன் அவள் கரத்தை பிடித்தபிடி இறுக்கமாக இருந்ததை அவளும் உணர்ந்தாள். அதனை நினைத்த வாறே ஆபீஸ் வந்து வேலையை தொடர்ந்ததாள்.
ஆதியின் தந்தை அவனை தொழிலை கத்துக்க வர சொல்ல... தட்டிக்கழித்த படியே இருந்தான். அவனுக்கு ஆசை எல்லாமே பைக் ரேசிங் மேல் தான். காலையிலேயே கிளப் புறப்பட்டு விட்டான். ஏஞ்சலா என்ற ஒருத்தி நினைப்பு கொஞ்சமும் இல்லாமல் அங்கு புதுசாக சேர்ந்தவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வேலையை தொடர்ந்தான்.
அர்ஜுனுக்கு ரூபினி என்னும் தலை வலி பிடித்துக்கொண்டது. அர்ஜுனின் தந்தை இருவருக்கும் ஒரு வீட்டின் ப்ளூ பிரிண்ட் ரெடி செய்ய சொல்லிருக்க அர்ஜுன் முனைப்போடு செய்துக்கொண்டு இருந்தான். ஆனால் ரூபினி அவனையே பார்த்துக்கொண்டு இருக்க... கண்களை திரையில் இருந்து எடுக்காமல் அர்ஜுன் அவள் பார்ப்பதை உணர்ந்து
"என்னோட மூஞ்சில வரஞ்சி முடிச்சது போதும். ஸ்க்ரீன்ல இனிமேல் வரையலாம்" அவன் கண்கள் இன்னும் அவளை பார்க்கவில்லை.
"இதோ முடிக்க போறேன் அர்ஜுன். இந்த வீட்டுக்கு பேரு வைக்கிறது மட்டும் தான் பாக்கி. அதான் யோசிச்சிட்டு இருக்கேன். அரூபினினு வைக்கலாமா?" என வெட்கபட்டுக்கொண்டு கேட்க
நிமிர்ந்த பார்த்த அர்ஜுன் கண்களில் அனல் அடித்தது.
"உனக்கு வெக்கமாவே இல்லையா?! கொஞ்சம் டீசென்ட் ஆ பிஹேவ் பண்ணு"
அதில் எள்ளலாக சிரித்த ரூபினி "நீ மட்டும் டீசென்ட் ஆ? லவர்ஸ் வெளிய போயிருக்காங்க கூட நீயும் போயிருக்க அப்போ இந்த வெக்கம் எல்லாம் எங்க போச்சு. அப்படி இப்படி இருக்க ஆசை படுவாங்கனு உனக்கு தெரியாதா? இல்ல தெரிஞ்சே தான் போனியா"
அர்ஜுன் முகமே மாறிவிட்டது. ஆதியின் கோவத்தை தான் ரூபினி பார்த்து இருக்கிறாள் ஆனால் அர்ஜுன் தேளாக கொட்டுவானே தவிர அதிரடியாக பார்க்காததால் பேசிக்கொண்டே போனாள்.
"ரூபினி உனக்கு அவ்வளவு தான் மரியாதை. வாயை மூடிட்டு வெளிய போ" என சிவந்த கண்களுடன் கோவத்தை அடக்கிய வாறு சொல்ல
"உண்மைய சொன்ன கோவம் வருதா உனக்கு. ஒருவேளை உன்னையும் அவங்க கூட சேர்த்துக்கிட்டாங்களோ?!" என சொல்லிமுடிக்கும் முன் ரூபினி கால்கள் அந்தரத்தில் தொங்கியது. கழுத்தை பிடித்து சுவரோடு சாய்த்து தூங்கிவிட்டான்.
"இன்னொரு முறை இப்படி உன்னோட கேவலமா புத்தியில எங்களை கற்பனை பண்ணி பார்த்தாலே கொன்னுடுவேன்" அவள் கண்கள் மேலே சொருக.. கையை எடுத்துவிட்டான்.
இருமிக்கொண்டே அவனை மிரட்சியாக பார்த்தாள்.
"உன்ன... உன்ன என்ன பண்ணுறேன்னு பாரு. அப்போ தெரியும் இந்த ரூபினி யாருனு" என சொல்லிவவிட்டு அழுது கொண்டே கிளம்பிவிட்டாள்.
அவள் செய்ய போகும் காரியம் அவன் லட்சியத்தையே குலைக்கும் என தெரியாமல் போனது.
****
பொழுது சாயும் நேரம் எப்போதும் போல் ஏஞ்சலா வந்தாள். அவனை பார்த்ததும் வரும் உற்சாகம் முகத்திலும் தெரிய... ஆதியின் கவனத்திலும் விழுந்தது. என்னை பார்த்தால் இந்த பெண்ணுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா? என வியப்பாக பார்த்தான்.
"ஹாய் ஆதி"
"ஹலோ ஏஞ்சலா. ப்ராக்டிஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?" முதல் முறையாக அவனாக அவளிடம் பேச்சு கொடுத்தான்.
அதில் புருவம் உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தவள் "ஹ்ம்ம் சூப்பரா போய்ட்டு இருக்கு. நீங்க இப்போ எந்த ரேஸ்லையும் கலந்துக்கிறது இல்லையா"
"இல்லை. நான் அடையாத வெற்றி இல்லை... நிறையா டோர்னமெண்ட்ல ஜெயிச்சிருக்கேன். பாஸ்ட்டெஸ்ட் ரேசர் அவார்ட் (fastest racer) எல்லாம் வாங்கியிருக்கேன். அதுனால எனக்கு ஒரு ரேசிங் கிளப் ஸ்டார்ட் பண்ணனும்னு ஆசை"
"ஓஓ சூப்பர் ஆதி"
"தேங்க்ஸ்"
"ஆனா எனக்கு ஒரு சந்தேகம்" ஒரு விரலை கன்னத்தில் தட்டி யோசித்தவாறே கேட்ட
அவளின் சின்ன சின்ன அசைவும் அவன் கண்களில் சிக்கியது.
"என்ன அது"
"நீங்க நினைச்சா இன்டர்நேஷனல் லெவல் காம்பெடிஷன்ல கலந்துக்கிட்டு நிறையா சம்பாதிக்கலாம். ஆனா ஏன் அதை விட்டுட்டு ஒரு கிளப் ஸ்டார்ட் பண்ண நினைக்கறீங்க?"
"நான் பணக்கார பையன் எனக்கு பெரிய அகாடமில சேர காசு ஒரு விஷயமா தெரியல ஆனா மிடில் கிளாஸ் பசங்களுக்கு அப்படி இல்லை. ஒரு நல்ல பைக் வாங்குறதே அவங்களுக்கு கனவு தான் இதுல பைக் ரேசர் எல்லாம் நினச்சு கூட பார்க்க முடியாது. அதுவும் இல்லாம இதுல ஆக்சிடேன்ட் ஆகும்னு சிலர் வீட்ல இந்த வேலையை தேர்ந்தெடுக்க விடுறது இல்லை. ஆனா சரியான பறிச்சியுடன் செஞ்சா இதுல ஆபத்து கம்மினு அவங்களுக்கு புரியுறது இல்லை. அதுக்காக வேண்டி தான் இந்த கிளப். நிறையா ஐடியா இருக்கும்... எதிர்காலத்துல முடிஞ்ச அளவு எல்லாம் செயல் படுத்தனும்"
மனதில் பல நாள் திட்டத்தை எல்லாம் கொட்டி தீர்த்தான். பகட்டாக இருப்பான் என்று அவன் வைத்திருக்கும் kawasaki பைக் வைத்து அவனை எடை போட்டிருக்க அவனோ நடுத்தர பசங்களின் கனவுக்கு மதிப்பளிக்கிறான் என்று பெருமையாக இருந்தது.
அவனும் இதனை எல்லாம் அவளிடம் சொல்லும் போது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் சரளமாக உரையாடினான். அவள் விலகி போக நினைக்க இவன் ஒரு படி முன்னே வந்தான்.
"உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் ஆதி. சரி நான் என்னோட ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்றேன்" என ஹெல்மெட் மாட்டிக்கொண்டு வண்டியை முறுக்கினாள்.
அவனிடம் பேச நன்றாக இருந்தாலும் வந்த வேலையிலும் கண்ணாக இருந்தாள் ஏஞ்சலா. வண்டியில் புழுதி பறக்க அவள் பறக்க அவளை 'பே' வென பார்த்தான் ஆதி. அவளிடம் இப்படி ஒரு வேகத்தை எதிர்பார்க்கவில்லை. இப்போது தான் கத்துக்கொண்டு இருக்கிறாள் என்று நினைக்க அவளோட பல வருட ரேசர் போல் லாவமாக வளைவுகளில் சென்றாள். ஆச்சரியமாக இருந்தது. கண்ணெடுக்காமல் அவளையே தான் பார்த்துக்கொண்டு இருந்தான் உதட்டில் உறைந்த புன்னகையோடு.
ஏஞ்சலா என்ற பெண்ணுக்கு பறக்க இறக்கைகள் தேவை இல்லை பைக் இருந்தாலே போதும் என்றே தோன்றியது.
அவள் திரும்பி வருவதற்குள் இவன் வந்த வழியில் நடந்துவிட... அவன் நடந்துக்கொண்டே திரும்பி பார்க்கும் போது ஏஞ்சலா அவள் பைக்கை தடவி கொடுத்து.. ஹெல்மெட்டுக்கு முத்தம் வைத்தாள். அதில் இருந்தே அவளுக்கு பைக் என்றால் எத்தனை பிரியம் என்று தெரிந்தது. அவளின் செய்கையில் சிரித்துக்கொண்டே நடந்துவிட்டான்.
****
ஆதி சாராவின் காதலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆதி எப்பவும் போல் தான் இருந்தான் ஆனால் சாரா மற்றவர்களை பார்த்து அதே தன் வாழ்க்கையில் ஏன் நடக்கவில்லை என ஏங்கினாள். ஆதி அவ்வப்போது போன் செய்து பேசுவான் என எதிர்பார்க்க அப்படி ஒன்று நடக்காமலே போனது. அவளும் தன் எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் வாழலாம் என முடிவு செய்துவிட்டாள்.
ரூபினி அதற்கு பின் ஆளையே காணவில்லை. அர்ஜுன் அதனை பெரியாதாக கண்டுக்கவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான். சில நேரம் கண்ணாடி ஜன்னல் வழியே சாராவின் தரிசனம் கிடைக்கும் அதுவே போதுமானதாக இருந்தது. அவளை சென்று பார்க்க நினைக்கவில்லை அதற்கு பின் அவர்கள் இருவரும் வெளியே அழைத்தால் கண்டிப்பாக போக கூடாது என்று முடிவு எடுத்துவிட்டான்.
வார இறுதி நாட்களில் சாராவுக்கு அவள் வீட்டுக்கு செல்ல முடியாத படி வேலை கழுத்தை நெரித்து. மூவரும் அவர்கள் வேலையில் பிஸியாக இருந்தனர் என்று தான் சொல்லவேண்டும். இடையிடையில் சாரா அர்ஜுனின் பார்வைக்கு அர்த்தம் என்ன என்று தேடிக்கொண்டு இருந்தான் இருந்தாள். மேலும் வந்த நாட்களில் ஏஞ்சலாவுடன் ஆதிக்கும் ஒரு நல்ல நட்பு கிடைத்தது.
பல நாள் கழித்து அந்த வார இறுதியில் சாரா அவள் வீட்டுக்கு சென்றாள்... வழக்கம் போல் அர்ஜுனையும் அழைக்க வேலை இருக்கிறது என்று சொல்லி சமாளித்துவிட்டான். எனவே ஆதியும் சாராவும் தனியே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அர்ஜுன் அறிந்தாலும் ஒரு மனதாக இருக்க அவனால் முடியவில்லா. அவர்கள் இருவரிடமும் எந்த ஒரு எல்லை தாண்டி உணர்வு இல்லை என்பதை நன்றாக அறிவான். ஆனால் இன்றோ அவன் மனம் நிலையில்லாமல் இருந்தது... இது தவறு என அறிந்தாலும் தறிக்கெட்டோடும் எண்ணம் அடக்க வழி தெரியவில்லை.
சாரா அவள் வீட்டில் சமைத்துக்கொண்டு இருக்க... ஆதி வருவான் என்று கதவை திறந்து வைத்திருந்தாள். சமையல் கவனத்தில் காலடி ஓசை எதுவும் கேட்கவில்லை. கிட்சேன் வாசலில் இருந்தே அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதி... படங்களில் வருவது போல் பின் நின்று அனைத்து அவளின் மேல் ஆசையாக அவன் உணர்வை வெளிக்காட்ட தோன்றவில்லை.
இதனை எதுவும் அறியாத சாரா ஒரு ரொமான்டிக் பாட்டை முணுமுணுத்துக்கொண்டே வேலையை கவனித்தாள். அவளுக்கு இது போன்ற ஆசை எல்லாம் இருக்கிறது என்று அறிந்த பின் சும்மா இருப்பது தவறு என்று அறிந்த ஆதி மெதுவாக மூச்சு படும் தூரம் வந்து நின்றான். அவள் தோள் தொடும் முன் கைகள் நடுங்க பின் இழுத்துக்கொண்டான். அவன் உடல் எல்லாம் ஏதோ செய்ய கூடாததை செய்தது போல் அவளிடம் இருந்து இரண்டடி பின்னாடி நகர்ந்துவிட்டான்.
இது எல்லாம் இரண்டொரு நொடிகளில் நடந்திருக்க... சாரா அறியாமல் போனாள். எதிர்ச்சியாக திரும்பிய போது ஆதி முழித்துக்கொண்டு நிற்க
"எப்போ வந்த ஆதி. கூப்டு இருக்கலாமே. இரு டீ போடுறேன்"
அவளுடன் தன்னால் நெருக்கமாக இருக்க முடியாதோ என்றோ கவலை வர... அவள் முகம் பார்க்க தயங்கினான். அவளை தவிர சுற்றி இருந்த எல்லாம் பொருட்களையும் பார்த்து பேசினான்
"இல்ல வேண்டாம் சாரா. எனக்கு அதுக்குள்ள ஒரு வேலை வந்துட்டு நான் போகணும். அதான் உன் கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். கிளம்புறேன் இன்னொரு நாள் பார்க்கலாம்" என்று விட்டால் போதும் என்று ஓடிவிட்டான்.
இவனின் செய்கை விசித்திரமாக தெரிய வழியனுப்பி வைத்துவிட்டு வந்தாள். அப்போது டிவியில் ஒரு ரொமான்டிக் பாட்டு ஓட அதில் லயித்துவிட்டாள்.
நேராக ரேசிங் கிளப் சென்றான் ஆதி...அந்நேரம் அங்கு ஏஞ்சலாவை எதிர்பார்க்க ஆதி
"ஹே நீ இந்நேரம் இங்க என்ன பண்ற?"
"என்னோட பிரண்ட் இங்க சேர வந்தா அதான் நானும் அப்படியே வந்துட்டேன்"
"நீ இங்க வர்றத என்கிட்ட சொல்லவே இல்ல " என உரிமையாக சொல்லிவிட்டு அங்கிருந்த நகர.. பின்னாடியே ஏஞ்சலா ஓடி வந்தாள்.
"இல்ல ப்பா எனக்கே இன்னைக்கு காலையில தான் தெரியும். அதுவும் இல்லாமல் நீ வீக் எண்டு பிஸியா இருப்ப" என அன்று சனிக்கிழமை சாராவுடன் சென்றதை வைத்து சொல்ல
சாரா நினைவு மீண்டும் வந்து சோகமாக்கியது. ஏதோ சரி இல்லை என்பதை புரிந்து கொண்ட ஏஞ்சலா..
"என்ன ப்பா சோகமாகிட்ட. வா உன்ன சில் பண்ற வழி எனக்கு தெரியும்" என அவன் கையை பிடித்து அழைத்து சென்றாள்.
அவள் இழுத்த இழுப்புக்கு அவனும் சென்றான் என்ன செய்ய போகிறாள் என்ற சுவாரசியமாக இருந்தது. ஹெல்மெட் எடுத்து அவனை போட சொல்லிவிட்டு... வண்டியை அவன் முன்பு வந்து நிறுத்தி பின்னாடி ஏறும் படி கண்களால் சொல்ல... அதில் ஆதியின் முகத்தில் அதிர்ச்சி
"நோ வே... ஏஞ்சல்"
"ஏறு ஆதி.. சும்மா ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாம்"
பின்னாடி ஏறி அமர்ந்த நொடி வண்டி ஏஞ்சலா கைகளில் சீறிப்பாய்ந்தது. அவளின் தோள் வரை இருந்த முடி இவன் முகத்தில் உரச, காற்றோடு கலந்து அவளின் நறுமணமும் அவன் நாசியை துளைத்தது. அவள் உடம்பில் இருக்கும் சூடு நெருங்கி அமர்ந்திருந்ததால் அவனுக்கு உணர முடிந்தது. அவள் பின்னாடி இருக்கு ஆதிக்கு அவளின் நெருக்கும் இன்னும் வேண்டும் என்பது போல் இருக்க…. ஆனால் சாராவிடன் தன்னால் ஏன் நெருங்க முடியவில்லை என்பது பற்றி யோசித்தான்..... சரியாக ஏஞ்சலாவும் வண்டியை நிறுத்த
"இப்போ எப்படி பீல் பண்ற ஆதி? ஒகே தான" என தலையை ஆட்டி கேட்ட... அதற்கு அவனின் தலையும் தானாக ஆடியது.
"சரி என்னோட பிரண்ட் கூப்டுற. நான் கிளம்புறேன்"
தூரத்தில் ஓடி செல்லும் ஏஞ்சலாவையே பார்த்த வாறு இருந்தான் ஆதி.
****
அர்ஜுன் ஜிம்ல் ஒர்க் அவுட் செய்துக்கொண்டு இருந்தான். அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே மனம் வலித்தது. அதனை மறக்கத்தான் ஒர்க் அவுட்ல் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்க நினைத்தான் அது தான் முடியவில்லை. அன்று சாரா அவன் கையை பிடித்து நிறுத்தியதே நினைவுக்கு வந்தது. ஆதி அவளின் காதலன் அப்படி இருக்கும் போது அவர்கள் இருவரின் நேரங்களின் தன்னை ஏன் நிறுத்தி வைக்கிறாள் என்று தான் புரியவில்லை.
இன்றுமே அவள் நினைத்தால் இவனை வீட்டுக்கு அழைக்காமல் இருந்திருக்கலாம் ஆனால் இவனையும் தான் கூப்பிட்டாள். ஒருவேளை அவள் முழு மனதாக காதலிக்க வில்லையா? இல்லை என்றால் ஏதோ ஒரு காரணம் தான் இவளை இப்படி செய்ய வைக்கிறதா? ஆதியை போல தான் என்னையும் நினைக்கிறாளா? என்ற கேள்விகள் மண்டையை குடைந்தது.
ஏஞ்சலா அவள் அறையில் மேனெக்வின் (mannequin - ஆடை அணிந்து காட்சி அளிப்பதற்காக அமைக்கப்பட்ட பொம்மை) பொம்மைக்கு அளவு பார்த்து உடை ஒன்றை வடிவமைத்துக்கொண்டு இருந்தாள். அவள் பேஷன் டிசைன் படிக்கிறாள். கழுத்தில் இன்ச் டேப்பை அணிந்து கொண்டு, கத்திரிக்கோல் கொண்டு முன்னாடி இருந்த துணியை வெட்டிக்கொண்டு இருந்தால் ஏஞ்சலா. எண்ணங்கள் எல்லாம் ஆதி மீது தான். அவனிடம் சில மாற்றங்கள் தென்பட்டது. அவனுக்கு காதலி இருக்கிறாள் என்று தெரியும் எனவே தான் தள்ளி இருக்க நினைக்கிறாள் ஆனால் ஆதியின் செயல்கள் யாவும் அப்படி இருக்கிறது இல்லை.
எந்த ஒரு காதலியாக இருந்தாலும் தன் காதலன் வேறு ஒரு பெண்ணிடம் உரிமையாக பழகுவது சிறு பொறாமை உணர்வை தரும் அப்படி எதுவும் சாராவுக்கு வருவதில்லையா என கேள்வி எழுந்தது. முதலில் தான் பேச தயங்கிய ஆதி இவளின் கலகல பேச்சில் அவனும் இணைத்துக்கொண்டான். பல வருட நட்பு போல் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வு எல்லாமே பகிர்ந்தான்...குறிப்பாக அர்ஜுன், சாராவை பற்றி.
அவளும் ஆங்கிலோ இந்தியன் என்பதால் அவள் குடும்பம் பற்றி சொல்ல நிறைய இருந்தது. அவளின் அம்மா அப்பாவும் இன்னும் அயல் நாட்டில் இருக்க... படிப்புக்காக இங்கு பாட்டியுடன் இருக்கிறதா சொன்னாள். மேலும் இருவருக்கும் ரேசிங் மீது அலாதி பிரியம் இருக்க நொடிகளில் முடிந்த உரையாடல் எல்லாம் இப்போது மணிக்கணக்கில் தொடர்கிறது.
இப்படி இருப்பது ஏஞ்சலாவுக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்க அதனை ஆதி அல்லது சாராவிடம் தெரிவு படுத்திக்க நினைத்தாள். ஆனால் அவளின் நேரமோ அர்ஜுன் தான் கிடைத்தான்.
சாரா ஆதி வீட்டுக்கு போன அன்று அர்ஜுன் போன் செய்து 'புது வண்டி' வாங்க இருப்பதாக சொன்ன போது தான் அங்கு நடப்பவை தெரிந்து சண்டை போட்டது. அதனை நினைவில் வைத்த ஆதி தான் அர்ஜுனை கூட்டிக்கொண்டு வண்டி வாங்க ஒன்றாக கிளம்பினர்.
"டேய் மச்சி, கிளப் போய்ட்டு போகலாம். அங்க ஜார்ஜ் சார மீட் பண்ணனும் அவரு அடுத்து பாரின் போயிடுவாரு அடுத்து மீட் பண்ண சான்ஸ் கிடைக்காது"
"சரி டா. நான் வெயிட் பண்றேன்"
சொன்னது போல் ஆதி அவரிடம் பேச சென்றுவிட... அர்ஜுன் அங்கு தனியாக அமரும் படி ஆனது. எவ்வளவு நேரம் தான் பேன் சுற்றுவதையே பார்க்க என நினைத்தவன் ரேசிங் செய்யும் கிரௌண்ட்க்கு வர அப்போது தான் ஏஞ்சலாவை சந்தித்தான்.
அவள் எப்போதும் போல் ஸ்நேகமாக பார்த்து சிரிக்க... இவனும் பதிலுக்கு லேசாக சிரித்தான். பின் அவளே வந்து
"ஹாய் அர்ஜுன்... ம்ம் அர்ஜுன் தான?"
"ஆமா. உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியுமா?"
"சும்மா வா போனே கூப்பிடுங்க. நான் உங்கள விட சின்ன பொண்ணு தான். நான் ஏஞ்சலா. ஆதி சொன்னது இல்லையா?"
அன்று போனில் பேசிய பெண் குரல் இவள் தான் என்பது புரிந்தது. மேலும் ஆதி அவனுக்கு லவர் இருக்கிறாள் என்று சொன்ன பின் சோகமானதையும் நினைவில் வந்தது.
"ம்ம் சொல்லிருக்கான். நியாபகம் இருக்கு"
"உங்களுக்கு மட்டும் தான் என்னை தெரியுமா? இல்ல அவங்களுக்கு என்னை தெரியுமா?" என கொஞ்சம் தவிப்பாக கேட்க
"வேற யாருக்கு?" என நிஜமாகவே புரியாமல் கேட்க
"அவங்க தான் சரஸ்வதி"
"அவளுக்கு தெரியுமே. ஆனா ஏன் இதை கேக்குற? அவளுக்கு தெரிஞ்சா என்ன?" ஏதோ இருக்கிறது என்பது புரிந்தது.
"இல்லை. யாருக்கு தான் அவங்க லவர் வேற ஒரு பொண்ணு கூட பிரின்ட்லியா இருக்குறது பிடிக்கும். என்னால அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வந்திற கூடாதுல அதான் கேட்டேன்"
அவளின் கூற்றில் இருக்கும் பொருள் விளங்கியது. தனக்கு பிடித்த பையன் வேறு ஒரு பெண்ணை காதலித்தாலும் அவர்கள் உறவுக்கு இவள் கொடுக்கும் மதிப்பு இவள் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.
எங்கே சாரா இவளை போட்டியாக நினைத்து விட கூடாது என்பது தெளிவு படுத்திக்க கேட்டுருக்கிறாள் என்பது நியாயமாகவும் பட்டது. ஆனால் அதே போல் ஆதி தன்னை அவனுக்கு போட்டியா நினைக்கவில்லையா? எனவும் தோன்றியது.
"அவளுக்கும் உங்களை தெரியும். ஆதி சொல்லிருக்கான்" அப்போது தான் நிம்மதியாக இருந்தது. தன்னோடு இருக்கும் ஆதியின் நட்பு ரகசியம் இல்லை என்பது.
அவள் முகத்தில் இன்னும் கேள்வி மிச்சம் இருக்க...வேணும் என்றே "சரி நான் கிளம்புறேன்" அப்போது தான் அவள் கேட்பாள் என்பதற்காக
"இருங்க இருங்க ஒரு நிமிஷம்" என்றாள் அவசரமாக
"ஹ்ம்ம் சொல்லு ஏஞ்சலா"
"அது வந்து... ஆதி நிஜமாவே லவ் பன்றானா?!" இதே சந்தேகம் அவனுக்கும் இருக்கிறதே!
"இல்லையா அப்போ?!" என அவளிடமே திருப்பி கேட்க
"என்னங்க நீங்க.. நான் உங்க கிட்ட கேட்டதை திருப்பி என்கிட்ட கேக்குறீங்க" என சிரிக்க.. அதில் அர்ஜுனும் இணைந்து கொண்டான். இதனை தூரத்தில் இருந்த ஆதியால் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் எரிச்சலுடனே பார்த்தான். ஜார்ஜ் அவனை பேச்சில் இழுப்பதில் தான் குறியாக இருக்க... அவனால் அங்கு இருந்து நகர முடியவில்லை.
"இல்ல... ஏதோ ஒரு விஷயம் தான உனக்கு அப்படி தோன காரணமா இருக்கு. அது என்னது?"
"ஆதியோட நடவடிக்கை தான். நாங்க அடிக்கடி பேசிப்போம் ஆனா அவரு சாரா கிட்ட அப்படி பேசுறது போல தெரியல. அதுவும் இல்லாம அவரு அதீத நட்புக்கும் காதலுக்கும் குழப்பிக்கிறாறோருனு தோணுது" என பல நாள் அர்ஜுன் மனதில் எழுந்த கேள்விக்கு எல்லாம் ஏஞ்சலா வாயால் பதில் கிடைத்தது.
மேலும் ஏஞ்சலாவே தான் தொடர்ந்தாள் "ஒருவேளை இது ஆதியோட குழப்பம்னா...இவரு இந்த உறவுல இருந்து சுலபமா விலகிடலாம் ஆனா சாரா உண்மையா நேசிச்ச அவங்களால இதை தாங்கிக்க முடியாது" என சாராவின் மனதை எண்ணி வருந்த... அவளின் மேல் இருக்கும் நல்ல எண்ணம் கூடிக்கொண்டே தான் போனது.
சாராவை எப்போதும் கொட்டி தீர்க்கும் வார்த்தைகள் மட்டுமே பேசும் கல்பனாவும், ரூபினியும் அந்நேரம் சம்மந்தமே இல்லாமல் நினைவில் வந்து சென்றனர். இதுவரைக்கும் சாராவிடம் நேரடியாக பார்க்காத பேசாத பெண்ணுக்கு எவ்வளவு அக்கறை என்று நினைத்தான்.
"நீ பேசுறதுல இருந்தே அவங்க உறவுக்கு நீ கொடுக்கும் மதிப்பு புரியுது. ஒருவேளை நீ சொல்ற மாதிரி ஆதிக்கு உண்மையாவே சாராவை பிடிச்சு இருந்ததுனா? " என வேணும் என்றே அவள் மனதை அறிந்து கொள்ள கேட்க
"நான் ஆதி உண்மையா லவ் பண்ராறானு கேட்ட கேள்விக்கு நீங்க 'ஆமான்னு' அழுத்தமா சொல்லவே இல்லையே. அப்போது உங்களுக்கு அந்த சந்தேகம் இருக்குனு தான அர்த்தம்" என தான் ஒரு புத்திசாலி பெண் என்பதை நிரூபித்தாள்.
இவளும் அர்ஜுன் போல தன் மனதில் இருப்பதை மறைத்தாள். எனவே அர்ஜூனால் அவள் மனதை அறியமுடியவில்லை.
அவள் பதிலில் புருவம் உயரத்தில் வியப்பாக பார்த்தான் அர்ஜுன் "சரிதான்" என சொல்லும்போதே ஆதி வந்துவிட்டான். வந்தவன் ஏஞ்சலாவையே முறைத்து பார்க்க... அவளோ எதற்காக இந்த பார்வை என தெரியாமல் குழம்பி நின்றாள். அர்ஜுன் ஆதியின் முகத்தை தான் பார்த்தான்... பொறாமை நன்றாக தெரிந்தது.
"ஒகே. ஏஞ்சலா அப்புறம் பார்க்கலாம்" என அர்ஜுன் சொல்ல
"சூர் அர்ஜுன்" என்றாள் முடியை காதோரம் ஒதுக்கியபடி.
இன்னும் ஆதியின் பார்வை சூடாக மாற... ஏஞ்சலாவும், அர்ஜுனும் அர்த்த பார்வை பார்த்தனர். அதற்கு மேல் பொறுக்காத ஆதி "உனக்கு இங்க என்ன வேலை.. ட்ராக்ல போய் ப்ராக்டிஸ் பண்ணு. எப்போ கட் அடிக்கலாம்னு பாக்குறது” அடுத்து அர்ஜுன் பக்கம் திரும்பி “உனக்கு என்ன தனியா சொல்லனுமா போய் வண்டியை எடு" என இருவரையும் பிரித்துவிட்டான்.
வண்டியை செலுத்தும் போது "சொல்லு டா" என ஆதி கேட்க
"என்ன சொல்லணும்" என அர்ஜுன் தெரிந்துகொண்டே வேணும் என்று கடுப்படித்தான்.
"அதை தான்" ஆதிக்கு நேரடியாக கேட்க ஒருமாதிரி இருந்தது.
"எதை தான்?"
கண்ணாடி வழியே முறைத்தவன் "நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருந்தீங்க?"
"சும்மா ஒரு கேசுவல் டாக் அவ்வளவு தான்"
"அவ்வளவு தான?" என இன்னும் நம்பாமல் கேட்க
"அவ்வளவு தான் மச்சி. ரோடு பார்த்து ஓட்டு" ஆனாலும் ஆதியின் மனதில் ஒரு சிறு நெருடல்.
அர்ஜுனின் எண்ணம் எல்லாம் ஏஞ்சலா சொன்னது போல் தான் ஆதி நடந்துகொள்கிறான் என்றே தோன்றியது. அவன் மீது சிறு கோவமும் எழுந்தது உண்மை. பின்னே சாராவிடம் காதலை சொல்லிவிட்டு ஏஞ்சலாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறான் என்று. ஆதியின் கதையில் அர்ஜுன் குழம்பித்தான் போனான்.