logo

ரெட் வெல்வெட் | Red Velvet | Episode - 8

Mars

Administrator
நேரம் நள்ளிரவு ஆகி இருந்தது….



ஒருவழியாக இருவரும் கார் பார்க்கிங் வந்து சேர்ந்தனர். பல கார்கள் வரிசையாக நின்றது. அவள் கையை விடாமல் பிடித்துக்கொண்டு கார் இருக்கும் திசையை நோக்கி நகர்ந்தான். கார் நிற்கும் இடத்துக்கு செல்ல இன்னும் கொஞ்சம் தூரம் இருந்தது. அஞ்சனா இன்னும் படிவழியில் வந்து சேர்ந்திருக்க வில்லை.

அப்போது லிஃப்ட் கீழ் தளத்துக்கு வந்த சத்தம் கேட்டது. இந்நேரத்தில் யாராக இருக்கும் வந்தது அஞ்சனா என்றால் என்ன செய்வது என்பதால் முன் ஜாக்கிரதையாக இருவரும் ஒரு கார் பக்கம் சென்று மறைந்து கொண்டனர். இவர்கள் பயந்தது போல் அது அஞ்சனா தான்… வந்துக்கொண்டு இருந்தாள்… கையில் கத்தியுடன்.

படியில் இறங்கியவள் எப்படி லிஃப்ட் வழியாக வந்திருக்க முடியும்… ரோஹன் சொன்னது சரி தான் என்பது அப்போது ஸ்ருதிக்கு புரிந்தது.

இவர்கள் இருக்கும் கார் பக்கம் வரும் முன் இருவரும் காரில் பின்புறம் சென்று மறைந்துவிட்டனர். இதயம் வேகமாக துடித்தது. ஸ்ருதி கண்கள் எல்லாம் அழுது சிவப்பாக இருந்தது. காலையில் போட்ட மேக்-அப் எல்லாம் வேர்த்ததில் கரைந்து போனது.

அஞ்சனாவுக்கு ஸ்ருதி கிடைக்கவில்லை என்றது வெறி பிடித்தது. தன் கையை கீறி இரத்தத்தை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டாள். இதனை தள்ளி இருந்து பார்த்த ஸ்ருதி மட்டும் ரோஹன் பீதி ஆகிவிட்டனர். இப்படி ஒரு கொடூரமான செயல் இவர்கள் இதுவரைக்கும் பார்த்தது இல்லை. ரோஹன் சமையல் செய்து போது தெரியாமல் கத்தி பட்டாலும் அதற்கு எதிர்வினை செய்வான். ஆனால் அஞ்சனா வேணும் என்றே செய்வது கொடூரமாக தெரிந்தது.


காரின் முன்புறம் அஞ்சனா நின்றிருந்தாள். ஸ்ருதி, ரோஹன் கார்களின் பின்புறம் மறைந்து இருந்தனர். அஞ்சனா தேடிக்கொண்டே வலதுபுறம் இருக்கும் பைக் பார்க்கிங் சென்றுவிட்டாள்.


அவள் இவர்கள் பக்கம் வருகிறாள் என்றவுடன் கார்களின் முன்புறம் தவழ்ந்து வந்தனர். லேசாக எட்டிப்பார்க்க கண்ணுக்கு தென்படும் தூரம் அஞ்சனா இல்லை இப்படியே தவழ்ந்து சென்றால் கார் அடைய நேரமாக எனவே எழுந்து நின்று வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

வலதுபக்கம் வரிசையில் தான் கார் நின்றது. கார் அருகில் வந்துவிட்டனர் ஆனால் போன அஞ்சனா மீண்டும் வருவது தெரிந்தது… எனவே என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்ருதி கார் இருக்கும் வலது பக்கமும், ரோஹன் இடதுபக்கமும் பிரிந்துவிட்டனர்.


இதனை இவர்கள் இருவரே எதிர்பார்க்கவில்லை. ஸ்ருதி அதிர்ச்சியாகிட்டாள். ரோஹனுக்கும் பயமாகத்தான் இருந்தான். ஸ்ருதியை நினைத்து இன்னும் வருத்தமாக போய்விட்டது. அஞ்சான் இதே பக்கம் வருவதற்குள் ரோஹன் தன்னிடம் இருக்கும் சாவியை ஸ்ருதி பக்கம் தள்ளிவிட்டான். இங்கு இருந்தே செய்கையில் “மூன்று” என்று விரல்களால் செய்கை செய்தான் அவளிடம் இருந்து அவன் கார் மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்பதற்காக.


அதற்குள் அஞ்சனா வந்துவிட மீண்டும் இருவரும் கார் பின்புறம் மறைந்துவிட்டனர்.


அஞ்சனா - ஸ்ருதி, நீ இங்கதான் இருக்கனு தெரியும். வெளிய வா. உன்ன வலிக்காமல் தான் கொல்லுவேன். நீ கஷ்டப்பட்ட எனக்கு வலிக்கும் ஸ்ருதி என்று சோகமாக சொன்னாள்.



ஸ்ருதி தனியாக மறைந்து இருப்பது அச்சமாக இருந்தது. ரோஹன் கூட இருந்த போது துணைக்கு ஒரு ஆள் இருப்பது ஆறுதலாக இருந்தது. இப்போது அடுத்து என்ன நடக்குமோ? சரியான கார் ஐ கண்டுபிடிப்போமா? அஞ்சனாவிடம் மாட்டாமல் உள்ளே ஏறுவோமா? ரோஹன் என்ன செய்வான்? என பல எண்ணங்கள் ஓடின. மூச்சை இழுதுப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.


இங்கு ரோஹன், ஃபோன் இல்லை இருந்த சாவியையும் ஸ்ருதியிடம் கொடுத்துவிட்டான். அவனின் எண்ணப்படி அஞ்சன, தன்னை கொல்ல எண்ணவில்லை. ஸ்ருதி ஐ தான் இரண்டு முறை வெட்ட வந்தாள். அதனால் தன்னை காயப்படுத்துவாளே தவிர கொல்ல மாட்டாள் என்று நம்பினான். அவனும் ஸ்ருதி என்ன செய்ய போகிறாள் என்று பார்த்தான்.



அஞ்சனா அங்கும் இங்கும் நடந்துகொண்டு ஸ்ருதியை தேடினாள். ஸ்ருதி இங்கே தான் எங்கயோ இருக்கிறாள் என்று மனது சொன்னது.


ரோஹனின் காரில் இருந்து மூன்று கார்கள் தள்ளி அமர்ந்து இருந்தாள். இப்போது அடுத்த இருக்கும் வண்டி அருகில் போக வேண்டும். மெதுவாக சத்தம் எழுப்பாமல் நான்கு கால்களில் நடந்தாள். அஞ்சனா இவளுக்கு எதிர் திசையில் இருந்தவள் இப்போது ஸ்ருதி இருக்கும் திசைக்கு நடந்தாள். இப்போது நகர்ந்தாள் மாட்டிக்கொள்வாள் எனவே இருகைகளையும் கொண்டு வாயை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டாள். இன்னும் இரு கார்களே இருந்தது.


அஞ்சனா இப்போது ரோஹன் பக்கம் செல்ல திரும்பும் முன்… ஸ்ருதி மீண்டும் அடுத்த கார் அருகில் செல்ல நடக்க ஆரம்பித்து விட அப்போது காலையில் அஞ்சான் கொடுத்த பெப்பர் ஸ்ப்ரே ஸ்ருதி பேண்ட் பையில் இருந்து கீழே விழுந்து சத்தம் எழுப்பியது.


அஞ்சனா முகத்தில் அப்படி ஒரு கோரமான சிரிப்பு. அது ரோஹனுக்கு நன்றாக தெரிந்தது. ஸ்ருதிக்கு உடல் மொத்தமும் நடுங்க ஆரம்பித்தது. மாட்டிக்கொண்டோம் இனிமேல் தப்பிக்க வழி இல்லை என்பதால் மறைந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து கையில் உள்ள கார் சாவியின் பட்டன் அழுத்தினாள். இரண்டாவது கார் ஆன் ஆனது.


ஸ்ருதி கார் அருகில் வேகமாக ஓடி வந்துவிட்டாள். ரோஹன் அவன் ஒளிந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்துவிட்டான்.


அஞ்சனாவுக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ கண்ணிமைக்கும் நொடியில் ஸ்ருதி அருகில் வந்து உச்சி முடியை கொத்தாக பிடித்து காரில் ஏறிவிடாதபடி பிடித்து இழுத்தாள். அப்போது சாவி கீழே விழுந்துவிட்டது.


அஞ்சனா - என்ன விட்டு திரும்பவும் போகலாம்னு நினைக்கியா?? விட மாட்டேன் உன்ன ஸ்ருதி என்றவள் கத்தியை ஒங்கினாள். ஆனால் பின்னிருந்து ரோஹன் அவளை பிடித்துக்கொண்டான்.


ரோஹன் - விடு அஞ்சனா. நம்ம பேசி தீர்த்துக்களாம். ஸ்ருதி உன்னோட ப்ரெண்ட் தான ஏன் இப்படி பண்ணுற?? விடு அவளை என்றவன் எப்படியோ போராடி அவளை பிரித்துவிட்டான்.


ஸ்ருதி தோழியின் செயலில் மீண்டும் மனதளவில் காயப்பட்டாள். பேசி சிரித்து ஒன்றாக ஊரை சுற்றி சில பல ஃபோட்டோ எடுத்து சின்ன சின்ன சண்டை போட்டு அழகாக இருந்த அவர்களில் நட்பு இப்படி தலைகீழாக மாறும் என்று எனவே இல்லை.


ஸ்ருதி தன்னை காப்பாற்ற வந்த ரோஹனை அஞ்சனா சரமாரியாக அடித்துக்கொண்டு இருக்க …. விரைந்து சென்று ரோஹனை அவள் பிடியில் இருந்து காப்பாற்ற அஞ்சனாவை ஒரே தள்ளாக தள்ளி விட்டாள். அதில் அஞ்சானாவுக்கு இன்னும் வெறி ஏறியது.


ரோஹனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அஞ்சான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவளை தடுக்கவே எண்ணினர் இருவரும் அவளை காயப்படுத்த எண்ணவில்லை. இப்படியே விட்டால் சண்டை முற்றிவிடும் எனவே அவனாக ஒரு பிளான் போட்டான்.


வேகமாக சென்று சாவியை எடுத்தான். அங்கு ஸ்ருதி… அஞ்சனாவை தடுத்துக்கொண்டு இருக்க அஞ்சனா பின்னாடி வந்து அவள் எங்கும் அசையாத படி இருகைகளாலும் பிடித்து வைத்துக்கொண்டான்.


அஞ்சனா அவன் பிடியில் இருந்து விடுபட திமிறினாள். ஸ்ருதி வேகமாக அவள் துணியை ஒரு பாகத்தை கிழித்து அஞ்சனா கையில் இறுக்கமாக கட்டிவிட்டாள்.


அஞ்சனா - என்ன விடுங்க… ஸ்ருதி காட்டாத விடு.. எனக்கு உன்னை கொல்லனும். நீ என் கண்ணு முன்னாடி இருக்கவே கூடாது…


ரோஹன் - ஸ்ருதி நல்லா டைட் ஆ கட்டு.. சீக்கிரம்.. அப்படியே அவா கால பிடி… தூக்கிட்டு போய் கார் பின்னாடி சீட்ல போட்டிருவோம்… என்றான் அவசரமாக.


அவன் சொன்ன படியே செய்தனர். அஞ்சனா திமிறல் ஜாஸ்தியாக இருந்தது. ஸ்ருதி முன் சீட்டில் அமரவரும் முன்…


ரோஹன் - ஸ்ருதி, நீ வர வேண்டாம். இங்கே இரு… நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன்.


ஸ்ருதி - எதுக்கு ரோஹன்? நானும் வர்றேன். அவா உன்ன எதுவும் செய்திட போறா. எனக்கு பயமா இருக்கு என்றவள் வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவளை லேசாக அணைத்துக்கொண்டான். பின் தலையை நிமிர்த்தி


ரோஹன் - வேண்டாம் ஸ்ருதி. அஞ்சனா உன் பக்கத்துல இருந்தா உனக்கு அது பாதுகாப்பு இல்லை. அவா உன்னை கொல்ல பாக்குறா… என்னை இல்லை. உங்க ரெண்டு பேரையும் தனி தனியா வைக்கிறது தான் நல்லது. நீ நம்ம வீட்டுக்கு போ என்றவன் கார் ஏறி வண்டியை எடுத்துவிட்டான்.




சோர்வாக லிஃப்ட் இல் எட்டாவது மாடி இரண்டாம் வீட்டுக்கு வந்தாள். நேற்று மாலை இதே லிஃப்ட் இல் வரும் போது இவ்வளவு விஷயம் நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.


வந்தவள் கவனமாக கதை பூட்டிவிட்டு ஹால் சோஃபாவில் அமர்ந்தாள். நடந்த களோபரத்தில் கால் பயங்கரமாக வழித்தது. அவ்வபோது அஞ்சனா கையிலும், முகத்தில் ஏற்படுத்திய காயம் இரத்தம் உறைந்து போய் இருந்தது. இனிமேலும் இங்க இருக்க வேண்டாம் என்று தன்னை சுத்தம் செய்த பின் மீண்டும் கீழ் தளம் வந்துவிட்டாள்.


செக்யூரிட்டி இருக்கும் இடம் பல மணி நேரங்களாக காலியாக இருந்தது. சிறிது தூரம் நடந்த பின் ஒரு ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்த பின் தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. இவளும் அஞ்சனவும் வசிக்கும் வீடு இது.


சோர்வாக அமர்ந்து இருந்தாள். போலீஸ் எல்லாம் வரும் என்று முன்பே அறிந்து இருந்ததால் தயாராகவே இருந்தாள். அவளின் எண்ணம் எல்லாம் ரோஹன் நினைத்தே இருந்தது. அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று தெரியவில்லை. ஃபோன் செய்து பார்க்க அதுவோ யாரும் எடுக்காமல் முழு ரிங் போய் கட் ஆனது. கொஞ்சம் பயமாக இருந்தது.


நள்ளிரவில் தாண்டி விட்டது எனவே வெளியே லைட் போடாமல் ஹால் லைட் மட்டும் போட்டு அமர்ந்து இருந்தாள். வேறு உடை மாற்ற மாடியில் உள்ள அவள் அறைக்கு சென்றாள். ரோஹன்… அஞ்சனாவை போலீஸ் இடம் ஒப்படைத்துவிட்டு தனக்கு ஃபோன் செய்வான். எல்லாம் நல்ல படியாக முடியும் என்று மனதார நம்பினாள். லேசாக குளித்து உடை மாற்றி வந்தாள்.


நேரம் ஆக ஆக ரோஹன் ஃபோன் செய்யவே இல்லை. பாவம் ஸ்ருதி, அவனின் ஃபோன் வீட்டில் இருப்பது அவளுக்கு தெரியாது.. அவனும் நடந்த எந்த சூழழிலும் தெரிவிக்கவில்லை. மறைந்து இருந்த நேரம் பேசவே இல்லயே.


அவனுக்கு ஏதோ ஆபத்து அஞ்சனாவால் ஏற்பட்டு இருக்குமோ? அவன் போலீஸ் ஸ்டேசன் செல்லும் வழியில் ஏதேனும் ஆகி இருக்குமோ? என்று பயம் பிடித்துக்கொண்டது.


ஃபோன் சிக்னல் கொஞ்சம் விட்டுவிட்டு கிடைத்தது. இன்னும் நேரத்தை தாமதிக்க வேண்டாம் என்று இவளே போலீஸ்க்கு ஃபோன் செய்தாள். அது நல்லவேளையாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்ட் ஆனது.


ஸ்ருதி - ஹலோ… ஹலோ. நான் ஸ்ருதி பேசுறேன். ஹலோ


அந்த பக்கம் பேசியவர் குரல் விட்டு விட்டு கேட்டது.

அவள் குரல் கொஞ்சம் தெளிவு இல்லாமல் இருக்க…



போலீஸ் - சொல்லுங்க. உங்க பேரு ஸ்ருதி ஆ??


ஸ்ருதி - ஆமா சார். என்னோட ப்ரெண்ட் பெயர் ரோஹன் அப்புறம் அஞ்சனா.


போலீஸ் - என்ன நடந்தது? எங்க இருந்து பேசுறீங்க?


ஸ்ருதி - சார், என்னோட ப்ரெண்ட் ரோஹன், அஞ்சனா போலீஸ் ஸ்டேசன் வந்துட்டு இருக்காங்க சார். ஆன ரோஹன் ஃபோன் எடுக்கல. அஞ்சனாவல எனக்கு ஆபத்து அதான் சார்…. என்றாள்.


கோர்வையாக சொல்லாமல் தனி தனியாக சொன்னாள். கேட்டவருக்கு குழம்பித்தான் போனது.


போலீஸ் - என்ன மா சொல்ற நீ?.. கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன்.. இல்ல நீ குடிச்சிட்டு பேசிட்டு இருக்கியா??


ஸ்ருதி - அய்யயோ இல்லை சார். என்னோட ப்ரெண்ட் அஞ்சனா கொஞ்சம் மனதளவுல பாதிக்க பட்டு இருக்காங்க. அதனால் என்ன கொல்ல முயற்சி செஞ்சாங்க. என்ன அவா கிட்ட இருந்து காப்பாத்துனது என்னோட ப்ரெண்ட் ரோஹன். எங்க பாதுகாப்புக்காக போலீஸ் ஸ்டேசன் ல சொல்ல ரோஹன் வந்து கிட்டு இருந்தான். அஞ்சனாவை எப்படியோ கட்டி வெசிட்டோம். ரெண்டு பேரும் வந்துட்டு இருக்காங்க. இந்நேரம் வந்திருக்க வேண்டியது. ஆனால் ரோஹன் ஃபோன் எடுக்கல சார் பயமா இருக்கு என்று அழுக ஆரம்பித்துவிட்டாள்.


இவள் சொன்னதில் பாதி பாதியாகத்தான் கேட்டது அவருக்கு.


போலீஸ் - ஸ்ருதி… நான் சொல்றது கேக்குதா??? ஹலோ


ஸ்ருதி - ஹலோ சார் கேக்குது. ரோஹன் எங்க இருக்கான்னு கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணுங்க சார் பிளீஸ்.


போலீஸ் - ஸ்ருதி, நீங்க இருக்கிற சரியான லொகேஷன் சொல்லுங்க..


ஸ்ருதி - சார், என்னோட லொகேஷன் இல்லை. ரோஹன் ஓட லொகேஷன் பாருங்க சார். அவன் நம்பர் சொல்றேன்.


போலீஸ் - நீங்க எங்க இருந்தாலும் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு போங்க. இல்லை உதவிக்கு பக்கத்துல யாராச்சும் இருந்த கூப்பிடுங்க. உங்க லொகேஷன் சொன்னாதான் எங்களால சரியா வர முடியும்
 
Top