logo

உயிரோடிருந்தால் வருகிறேன் | Episode 9

Mars

Administrator
இத்தனை நாள் ஜோடியாக வந்த பெண் இப்போது தனியாக வருவது பலரின் பரிதாப பார்வைக்கு ஆளானது. இதில் சிலர் அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காணுவது போல வெளியே பரிதாபமாக பார்த்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தனர்.



மற்றவர்கள் கண்ணு வைக்கும் அளவுக்கு எல்லாம் அவர்கள் காலேஜ் உள்ளே ஜோடி போட்டு சுற்றவில்லை. இத்தனைக்கும் இருவரும் பேச நேர்ந்தால் ‘ மேம் ‘ , ‘ சார் ‘ என்று தான் மரியாதையாக பேசுவர். காலையில் ஒரே வண்டியில் வருவார்கள் அவ்வளவே. இதற்கே இவ்வளவு பார்வை பட்டு இருக்கும் போல்.



துருவுக்கு எப்போது வெளி இடங்களில், முக்கியமாக காலேஜ் உள்ளே அளவாகவே பேசுவான். இருவரும் தாண்டி போகும் போது கூட கண் ஜாடை பார்வை இருக்காது. இதுக்கே வாழ்க்கையில் இவர்களுக்கு இவ்வளவு அடி.





ஏதும் அறியா பிள்ளைகள் பேராசிரியருக்கு ஆறுதல் சொல்லுவதாக நினைத்து… நடந்த நிகழ்வையே நியாபக படுத்தினர்.



இதில் தினமும் அவள் வைத்து வரும் பூவுக்கு என தனி ரசிகை பட்டாளம் உண்டு. அதில் சில புதுமை பெண்கள் வந்து “ மேம், யாரு சொன்னா என்ன மேம் நீ பூ வெச்சிட்டு வாங்க” , “ இந்த காலத்துல எல்லா சகஜம், பூ வைக்கிறது நம்ம விருப்பம் தான், யாரு என்ன சொல்றாங்கனு பார்ப்போம் “ என வேங்கையாக சீறினர்.



அவர்கள் சொல்லுவது எல்லாம் சரி தான், ஆனால் வைத்து விட கணவன் இல்லயே என்பது தான் வேதனை, எனவே அவர்கள் கூற்றுக்கு எல்லாம் புன்னகையுடன் தலையை அசைத்து வைத்தாள்.



பாடம் எடுக்கும் போதும் வகுப்பில் என்றும் இல்லாத அசாதாரண அமைதி நிலவியது. அவளை டென்ஷன் செய்து விட கூடாது என்பதில் பிள்ளைகள் கவனமாக இருந்தனர். இதனை பார்த்த மித்ருதாவுக்கு மனம் உருகித்தான் போனது. எனவே கடைசி 10 நிமிடம் அவர்களுக்காகவே ஃப்ரீ ஆக விட்டு விட்டாள்.





காலேஜ் முடிந்த பிறகு சுபத்ரா பார்க்கிங்ல் வெயிட் பண்ணுவதாக ஃபோன் செய்து சொன்னாள். எனவே, டிபார்ட்மெண்ட் அறையில் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பலாம் என உள்ளே வந்தாள். உள்ளே இரண்டு பேராசிரியர்கள் இருந்தனர். அதில் ஒருவள் “ என்ன மேம் சீக்கிரம் கிளம்பிட்டிங்க? கல்சுரல்ஸ் வேலை நிறையா இருக்கு” என்றாள்.



மித்ருதா - இல்ல மேம். கல்சுரல்ஸ் ல எதுலையும் நான் இன்சார்ஜ் இல்லை. என்னோட வொர்க் முடிஞ்சு அதான் கிளம்பிட்டேன் என தன்மையாகவே பதில் சொன்னாள்.



அருகில் இருந்த ஒருவள் “ அதுனால என்ன மேம், உங்களுக்கு வீட்ல யாரு காத்துகிட்டு இருக்க போறா? பெண்டிங் வொர்க் நிறையா இருக்கு. ஃபேமிலி இருக்க எங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணா என்ன? “ என சுருக்கு என்று கேட்டாள்.



திட்டுவதற்கு வாய் வரை வார்த்தை வந்தாலும் அழுத்த பார்வை பார்த்து அங்கு இருந்து நகரும் நேரம் ஒரு குரல் அவளை தடுத்து நிறுத்தியது.





“வேலை செய்ய அவ்வளவு கஷ்டமா இருந்தா, வேலைய விட்டு போங்க. அதை ஏன் மத்தவங்க தலையில கட்டுறீங்க” என்றான் அஜய் கிருஷ்ணா காட்டமாக.



அவன் வரவை மித்ருதா அந்நேரம் எதிர்பார்க்கவில்லை. சில மாணவ மாணவியர் உள்ளே வர அவர்கள் பேச்சு அப்படியே நிறுத்தம் செய்ய பட்டது. ஆனால் அஜயின் உக்கிர பார்வை மட்டும் மாறவில்லை. இதனை பார்த்த மித்ருதா அவனை கண்களால் மிரட்டி போகும் படி சொன்னாள். அவள் செய்கை செய்த பின் தான் அங்கிருந்தே நகர்ந்தான்.



அவள் பேக் எடுத்துக்கொண்டு பார்க்கிங் வரும் போது சுபத்ராவும், அஜையும் பேசிக்கொண்டு இருந்தனர்.



சுபா - ஏன் மித்ருதா, அவங்க அப்படி பேசுனா ஏன் அமைதியா இருந்த? பதிலுக்கு நல்லா திட்டிவிட வேண்டியது தான?



மித்ருதா - அவங்க சொன்ன வார்த்தை தப்பா இருந்தாலும், அதுல உள்ள அர்த்தம் உண்மை தான. அதான் அமைதியா இருந்தேன். என்ன அஜய் வந்ததும் உன் வேலைய காட்ற?



அஜய் - நீ உனக்காக பேசி இருந்தா நான் ஏன் அப்படி பேச போறேன். இப்படி பேசுறவங்களா முதல்லையே நிருத்தனும் இல்லைனா அடிக்கடி இப்படி ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாங்க மித்ருதா. அதுவும் இல்லாம நீ வேலை பாக்குற இடம், அங்க டென்ஷன் ஃப்ரீ ஆ இருந்ததா உன்னால வேலையே பாக்க முடியும் என இன்னும் பேச போனவனை ஒரு பார்வை தான் பார்த்தாள் அதிலே வாய் மூடிக்கொண்டான்.





மித்ருதா - வந்ததும் வீட்டுக்கு போகாம இங்க ஏன் வந்த? ஃபோன் பண்ணாம வந்திருக்க… என்ன விஷயம்?



அஜய் - உன்ன பாத்துட்டு போக தான் வந்தேன். அன்னைக்கு அம்மா ரொம்ப கவலையா இருந்தாங்க அதான் அவங்க கூடவே கிளம்பிட்டேன். அடுத்து உன்கிட்ட பேசவே முடியல. அதான் கிளம்பி வந்துட்டேன். சுபா அக்கா, இந்த மித்ருதா ஏன் என்ன முறச்சி பாக்குறா?



மித்ருதா அவனை முறைதுக்க கொண்டு தான் இருந்தாள். எனவே அஜய் சுபாவிடம் அவ்வாறு வினாவினான்.



சுபா - என்ன ஏன் டா கோர்த்து விடுற? நான் வேடிக்கை தான டா பாத்துட்டு இருக்கேன்



மித்ருதா - உங்க அம்மாக்கு தான் என்னய பிடிக்காதுல அஜய், அப்புறம் ஏன் அவங்களுக்கு தெரியாம என்ன பார்க்க வந்த. தப்பா பேசுவாங்க டா என்றாள் கவலையாக.



கணவனை இழந்த பின் ஒருவரிடம் பேசுவதற்கு கூட கவனமாக இருக்க வேண்டியதாக உள்ளது. பார்வையாக இருக்கும் நகை போட முடியாது, பூ வைக்க கூடாது, பளிச்சென்று இருக்கும் உடை அணிய பயம்… இன்னும் எத்தனை நாட்களுக்கு?





அஜய் - ரொம்ப யோசிக்காத மித்ருதா, நம்ம ஒரே ஃபேமிலி. அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க. நீயா மத்தவங்க இது தான் நினைப்பாங்கனு ஒரு முடிவுக்கு வராத என்றான் எடுத்து சொல்லும் விதமாக.



சலிப்பாக இருந்தது. அதை அவள் முகம் பிரதிபலிக்க



சுபா - சரி இங்க வெச்சு பேச வேண்டாம். வீட்டுக்கு போய் பேசலாம். வா மித்ருதா. அஜய் வண்டில தான வந்திருக்க?



அஜய் சாவிய எடுத்து காட்ட… மூவரும் அவரவர் வண்டியில் கிளம்பினர். சுபத்ரவுக்கு மனதில் நன்றி சொன்னாள், அவள் சூழழ் புரிந்து பேசியதற்கு.





வீட்டுக்கு வந்தது, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து விட்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டாள். அஜய், சுபா அவள் செய்கையை பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். அந்த வீட்டில் ஒருவர் தான் இருக்கிறார் என்று சொல்லவே முடியாது அந்த அளவுக்கு துருவின் பொருட்கள் அங்காங்கே இருந்தது. வெளியில் செருப்பில் தொடங்கி, கொடியில் காயும் துணி வரை அவன் இருப்பை பார்க்க முடிந்தது.



அவள் துருவின் நினைவுகளோடு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்பது புரிந்தது.



மித்ருதா - அஜய், வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? ஃபாரீன் போக வாய்ப்பு இருக்குனு ஒரு நாள் உன் அண்ணா கிட்ட சொல்லிட்டு இருந்த.. என்ன ஆச்சு?



அஜய் - ம்ம், அதை ஏன் கேக்குற? இன்னும் ஒரு மாசத்துல லண்டன் போகனும். அதுக்கான வேலை நடந்துட்டு இருக்கு என்றான் ஆர்வமே இல்லாமல்.



சுபா - ஹே சூப்பர் அஜய். லண்டன் போய்ட்டு வர்ற அப்போ எங்களுக்கு எல்லாம் என்ன வாங்கிட்டு வருவ? என விளையாட்டாக கேட்டாள்.



அஜய் மித்ருதா ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு… சுபா பக்கம் திரும்பி



அஜய் - எனக்கு தனியா போக பிடிக்கலை. கூட மித்ருதா வர சொல்லு, உங்களுக்கு என்ன வேணுமோ நாங்க வாங்கிட்டு வர்றோம்.



விளையாட்டாக பேசிக்கிட்டு இருந்த சூழல் கனமாக மாறியது. மித்ருதா அதிர்ச்சியாக அஜய் பக்கம் திரும்பி பார்க்க… அவள் கண்களைப் பார்த்து



அஜய் - பிளீஸ் மித்து, என் கூட வந்துரு என சொல்லி முடிக்கும் முன் சுபா சண்டைக்கு போய் விட்டாள்.



சுபா - டேய், அஜய்… அறிவு இல்லையா என்ன பேசுறனு தெரிஞ்சி தான் பேசுறியா? அவா உன்னோட அண்ணி…



மித்ருதா - அஜய், வீட்டை விட்டு வெளிய போ என்றாள் ஒரே வார்த்தையாக.



அஜய் - நான் எதுக்கு சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளு மித்து. நீ இப்படி இருக்கிறது பார்க்க முடியல. நீ என் கூட அங்க வந்தா மட்டும் போதும். உனக்கு பிடிச்ச வாழ்கையை வாழு. இங்க இருந்தா உன்ன யாரும் வாழ விட மாட்டாங்க. நான் தப்பான அர்தத்துல சொல்லல





மித்ருதா - வெளிய போன்னு சொன்னேன் உன்ன என்றாள் கோவமாக.



சுபாவம் அமைதியாக இருக்க…



அஜய் - நான் சொல்ல வர்றது யாருமே புரிஞ்சிக்கலைல… என அவனும் கோவமாக வெளியேறி விட்டான்.



சுபா - என்ன மித்து, இவன் இப்படி பேசிட்டு போறான்? என்ன ஆச்சு இவனுக்கு?



மித்ருதா - அவனுக்கு நான் அண்ணி அப்படின்ற உறவுக்கு முதல்ல ஒரு நல்ல ப்ரெண்ட். அதுனால தான் இப்படி சொல்லிட்டு போகுது அந்த லூசு. விடு டி.





வெளியே வந்த அஜய் நேராக பார்க்க சென்றது அஷோக் தான்.



அஷோக்கு ஃபோன் செய்து இருவரும் ஒரு டீ கடையில் சந்தித்தனர். காலேஜில் நடந்தது தொடங்கி வீட்டில் நடந்த வரை அஜய் சொன்னான். கேட்ட அஷோக் கோவப்பட்டான்.



அஜய் - புரியாம பேசாதீங்க. ஒரு பொண்ணு ஹஸ்பாண்ட் இல்லாம வாழ முடியும் ஆனா சுத்தி உள்ளவங்க நிம்மதியா வாழ விடமாட்டாங்க. அதான் தெரியாத ஊரு, புது மக்கள் இருக்குற இடத்துக்கு வர சொல்றேன்.



அஷோக் - நீ சொல்றதும் உண்மை தான். ஆனா அவங்களை நீ உன் கூட வர சொல்றது எப்படி சரியா இருக்கும்? இன்னும் தான் ஊரு தப்பா பேசும்.



அஜய் - எனக்கு அவா ஒரு நல்ல ப்ரெண்ட். அதுக்கு அப்புறம் தான் அண்ணி. உங்களுக்கு ஒன்னு தெரியுமா… துருவ் , மித்ருதா கல்யாணம் பண்ணி வெச்சதே நான் தான்.



இதனை கேட்ட அஷோக் ஆச்சரியமாக பார்த்தான். அதே நேரம் மித்ருதா சுபாவுக்கு இதே செய்தியை சொன்னாள்.



அன்று



மித்ருதா நடந்த நிகழ்வில் இருந்து மீண்டும் வந்து பழைய படி வீடு , காலேஜ், படிப்பு என சாதாரணமாக அவள் நாட்கள் சென்றது. காலேஜில் அவ்வபோது துருவ்வை பார்க்கும் போது கண்களில் ஒரு ஸ்பார்க் வரும். அது துருவ் அறிவான். அவனுக்கு மித்ருதாவை பிடிக்க ஆரம்பித்து விட்டது. அவள் படிப்பை முடித்த பின்

சொல்லலாம் என அமைதி காத்தான். ஆனால்…

நித்யா கல்யாணம் வந்தது. துருவ் அவன் காதலை சொல்லும் நாளாக அது அமைந்தது.
 
Top