மித்ருதா காலேஜ் செல்லும் முன் கல்லறைக்கு சென்றாள். அங்கு எப்போது போல் கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு காலேஜ் நோக்கி சென்றாள். அங்கு சுபத்ரா அவளுக்கு காத்துக்கொண்டு இருந்தாள்.
துருவ்.. ராஜா சொன்ன விஷயத்தை மனதில் அசைப்போட்ட படி படுத்து இருந்தான். அப்போது ராஜா, ராணி எப்போதும் போல் சேர்ந்தார் போல் வந்தனர். துருவ் நேரத்தை வீணடிக்கவில்லை. ஓடி சென்று அவர்கள் இருவரின் உயரத்துக்கு குனிந்து எதிர்ப்பார்ப்புடன்
துருவ் - ராஜா இங்க பாரு, நீ சொன்ன மாதிரி மித்ருதாவுக்கு என்ன தெரியப்படுத்த முடியுமா. அது வழியா நான் அவா கூட பேசலாமா? சீக்கிரம் சொல்லு பிளீஸ்… என்னால என்னோட மித்ரா கூட பேச முடியுமா? என ஆர்வமும், எதிர்ப்பார்ப்பும் கலந்து கேட்டான். கண்கள் லேசாக கலங்கி இருந்தது.
அவன் எதை சொல்கிறான் என நன்றாக புரிந்தது. இருவருக்கும் அவனை பார்த்து பாவாமாகி விட்டது.
ராணி - துருவ், நீ ராஜா சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்ட. நீயும் மித்ருதாவும் மனசால சேர்ந்து இருந்தீங்க. அதை தான் ராஜா அப்படி சொன்னான். நீ உன்னோட மனசளவுல சந்தோசமா இல்லைனா அவங்களும் சந்தோசமா இருக்க மாட்டங்கனு சொன்னான்.
இதனை அவன் முழுதாக கேட்கவில்லை… அதற்குள் அங்கு இருந்த பொருட்களை தூக்கி வீசப் போனான் பின் அவன் இருக்கும் இடம் அறிந்து கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு ‘மித்ரா மித்ரா’ என அழுக ஆரம்பித்துவிட்டான். அவனால் அவனை அந்த இடத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியவில்லை.
நேற்று அவர்களது அவனை பார்க்கும் போது மனது மாறிவிட்டான் என்றே நினைத்தனர். நாளுக்கு நாள் அவன் நிலை மோசமாகிக்கொண்டே தான் சென்றது.
துருவ் வெறுத்தே போய் விட்டான்.
துருவ் - இந்த இடம் என்னோட மனச மாத்தும்னு சொன்னீங்க… அதை பண்ணுங்க பிளீஸ். என்னால முடியல. மித்ருதா நினைச்சி எனக்கு பயமா இருக்கு. அவளுக்கும் இப்போ யாருமே இல்லை. என்ன மட்டுமே நம்பி வந்த பொண்ணு அவா, இப்போ அவளை நான் தனியா விட்டுட்டேன் என அழுதான்.
தைரியமாக வளம் வந்த ஆண்மகன், இப்போது துணைவி இல்லாமல் கோலையாகி இருந்தான். அவனின் பலம் அவன் மனைவி மட்டுமே என்பதை உணர்ந்தனர்.
ராணி அருகில் வந்து அவன் தோளில் கை வைத்தாள். அவன் நிமிரவே இல்லை. அந்த அறையில் அமைதி மட்டுமே நிலவி இருந்தது. அதனை உடைத்தது துருவ்வின் குரல்.
துருவ் - நான் ஏன் செத்தும் நிம்மதி இல்லாமல் இருக்கேன்.
இருவரும் பதில் இன்றி அமைதியாக இருந்தனர். கண்களை துடைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்து நின்றான்.
துருவ் - இங்க பாருங்க, எனக்கு கடவுளை பார்க்கணும்? அப்படி ஒருத்தர் நிஜமாவே இருந்தா நான் அவருகிட்ட போய்ட்டு நியாயம் கேக்கணும். அவரை பார்க்கணும்னா நான் யாருக்கிட பெர்மிஷன் வாங்கணும். பிளீஸ் என்னை அங்க கூப்பிட்டு போங்க.
ராஜா, ராணி அங்கு வாழும் தேவதைகளின் ஒரு வகை தான். எனவே கடவுளுக்கு அவர்கள் நெருக்கமானவர்களாக இருக்கலாம் எனவே அவர்களிடம் கேட்டான்.
அவன் கேள்வியில் ராணி சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் சம்மந்தமே இல்லாமல் . அவளுடன் ராஜாவும் சேர்த்துக்கொள்ள
துருவ் ஒரு நிமிடம் அவன் கேள்வியை யோசித்து பார்த்தான். அவன் யோசித்த வரையில் அவன் எதுவும் தவறாக கேட்கவில்லை. அழுதுகொண்டு இருந்தவன், அவர்களின் வித்தியாசமான நடவடிக்கையில் குழம்பி போய் பார்த்தான்.
ராணி - நீ கடவுளை பார்க்கணும்னா யாருகிட்டயும் அனுமதி வாங்க வேண்டாம். நீயே பேசலாம் என்று சிரித்த வாரு சொன்னாள்.
துருவுக்கு ஆச்சரியமாக இருந்தது. கோவிலில் கடவுளை சீக்கிரம் பார்க்க வேண்டும் என்றாலே தரிசனம் டிக்கெட் என்று சொல்லி கொள்ளை காசு வாங்குவார்கள். இவர்கள் சொல்லுவது நம்பும் படி இல்லை. எனவே அவர்களை சந்தேகமா பார்க்க…
ராஜா - அப்படி சந்தேகமா பார்க்காத துருவ். நிஜமா தான் சொல்றோம். இங்க எல்லாருமே சமம். நம்மளுக்கு மேல ஒருத்தர் இருந்து வழி நடத்துறாரு, அவ்வளவு தான். அவரை பார்க்கனும்னா யாருகிட்ட கேட்கணும் என சாதாரணமாக சொல்லியபடி அவன் பெட்டில் ஏறி அமர்ந்தான்.
துருவ் - எங்க ஊர்ல சாதாரண அரசியல்வாதியவே வெளிய பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் நம்மளை பார்த்து கேவலமா ஒரு பார்வை பார்ப்பாங்க. நீ என்னடானா இங்க எல்லாரும் சமம்னு சொல்ற.. அதன் எனக்கு சந்தேகமா இருந்தது
ராணி - அது நீ இருந்த இடத்துல. இங்க அப்படி கிடையாது. இங்க சந்தோசம் மட்டுமே நிறைந்த ஒரு இடம் என அவனை சுற்றி ரெக்கை வைத்து பறந்து சந்தோசமாக சொன்னாள்.
துருவுக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொல்லிவிட்டனர். அப்படி இருப்பதாக இருந்தால் அவர் எந்த மத கடவுள் என தெரிய ஆர்வமாக இருந்தது. மேலும் மனிதர்களாக இருக்கும் போது மகிழ்ச்சியை தேடி ஓடிக்கொண்டு இருந்தோம், சொர்கத்துக்கு அருகில் வந்தாயிற்று. இங்கு எல்லோரும் மகிழ்சியாக இருக்கிறார்கள் ஆனால் மேல உள்ள சொர்கத்தில் என்ன இருக்கிறது என கேள்வி எழ அதை அவர்களிடமே கேட்டான்.
துருவ் - நம்ம சொர்கத்துக்கும், பூமிக்கு இடையில இருக்கோம்னு சொன்னீங்க. இங்கேயே எல்லாமே இருக்கே. அப்போ சொர்கத்துல என்னதான் இருக்கும்? மகிழ்ச்சிய விட முக்கியமான ஒன்னு வேற என்ன?
இருவரும் அவனை பார்த்து லேசாக சிரித்துக்கொண்டு, ஒரே பதிலை ஒன்று போல் சொன்னார்கள்…
ராஜா & ராணி - நிம்மதி.. நிம்மதி அங்க இருக்கும்.
ராஜா - உன்னோட வாழ்க்கையில எல்லாமே கிடைச்சது. காதல், சந்தோசம் , மகிழ்ச்சி, சிரிப்பு, புன்னகை ஆன நீ செத்தும் கிடைக்காம இருக்கிறது என்னது? என அவனை பார்த்தே கேட்டான்.
அப்போது தான் துருவுக்கு விளங்கியது அவன் நிம்மதி இல்லாமல் அழைவது. செத்ததுக்கு அப்புறம் தான் பல வாழ்க்கைப் பாடம் புரிந்தது… மகிழ்ச்சியை விட முக்கியமான ஒன்று நிம்மதி என்பது. அவன் முகம் அப்போது தான் தெளிவடைந்தது.
ராஜா, ராணி அவனை பார்த்த சிரித்துக்கொண்டு “கடவுளை பார்க்க போலாமா” என வினாவினர். துருவ் ஆர்வமாகவே கிளம்பினான். மூவரும் நடந்து சென்றனர்.
அவனுக்கு இருக்கும் இன்னொரு சந்தேகத்தை தெளிவு படுத்த நினைத்தான்.
துருவ் - ஆமா, இங்க இருக்கிற கடவுள் என்ன மதம்?
ராஜா - இங்க மதம் அப்படினு ஒன்னு கிடையவே கிடையாது துருவ். நீ கடவுளுக்கு என்ன உருவம் குடுக்குறியோ அது உன்னோட விருப்பம் தான்.
இவன் பதில் துருவ்வை குழப்பியது. அவன் பூமியில் பார்த்தது வேறு, இங்கு இவர்கள் கூறப்படும் விஷயம் வேறு. ராஜா மழுப்பலான பதில் சொல்கிறான் என்றே நினைத்தான்.
அவனின் யோசனை முகத்தை பார்த்த ராணி
ராணி - ரொம்ப யோசிக்காத துருவ் . அது நல்லதுக்கு இல்லை என்றாள் நக்கலாக.
இவர்களிடம் போட்டு வாங்கவே எண்ணினான்.
துருவ் - அது சரி. இங்க இருக்கிற கடவுளுக்கு என்ன மொழி தெரியும். தமிழா, இங்கிலீஷா, ஹிந்தி, உருது என்ன மொழி அவருக்கு தெரியும்?
இவர்கள் கூறப்போகும் பதிலை வைத்து எந்த மதம் என்று கண்டுபிடிக்கலாம் என்று நினைத்தான்.
ராணி - நீ எந்த மொழி பேசினாலும் அதே மொழியில் உனக்கு பதில் கிடைக்கும். இங்க இருக்கிற எல்லாருக்கும் அப்படிதான். நீ தமிழ், அதுனால நாங்க தமிழ் பேசுறோம். இதே உலகத்துல வேற எந்த மொழி பேசுறவங்க வந்தாலும் அவங்க மொழிலையே பேசுவோம். அப்போதான் அவங்களுக்கு புரியும் என எளிமையான பதில் சொன்னாள்.
துருவுக்கு கீழ நடக்கும் சிலர் பார்வைக்கு படாத மொழிப் பற்றில் நடக்கும் கலவரம் நினைவில் வந்தது.
துருவ் - அப்போ இங்க உள்ள கடவுள் எல்லாம் மொழியும் பேசுவாரு இல்லையா?
ராஜா & ராணி பொதுவாக தலையை அசைத்தனர். துருவுக்கு இங்கே உள்ள கடவுள் என்ன மதம் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகியது.
துருவ் - சரி ஓகே. அவரை பார்க்க போற அப்போ சும்மா வெறும் கைய வீசிட்டு போக முடியாது. என்ன கொண்டு போகட்டும்? சக்கரை பொங்களா, அப்பம் ஆ, இல்லை பிரியாணி?
ராஜா - துருவ் , நீ ஏற்கெனவே உன்னோட ஆன்மாவா கொடுத்துட்டியே. வேற எதுவும் அவருக்கு தேவைப்படாது.
துருவ் - பிளீஸ் சொல்லு. முதல் முறை அவரை நான் பார்க்க போறேன். சும்மா போன நல்லாவா இருக்கு. சொல்லுங்க ரெண்டு பேரும்.
ராணி - அப்போ சொன்ன அதே பதில் தான் துருவ் . நீ என்ன கொடுத்தாலும் வாங்கிப்பாரு. இதுதானு இல்லை. அவருக்கு எல்லாமே பிடிக்கும். நீ எதுவும் கொண்டு போகலைனாலும் பரவாயில்லை. அவருக்கு வேண்டியது பக்தி மட்டும் தான்.
எப்படி கேட்டாலும் அவனுக்கு வேண்டிய பதில் அவனுக்கு கிடைக்கவே இல்லை. கடைசி முயற்சியாக..
துருவ் - சரி அதை விடு. அவருக்கு என்ன கலர் பிடிக்கும். காவி கலரா, வெள்ளையா இல்ல பச்சையா?
இந்த கேள்வியில் அவர்கள் மாட்டுவார்கள் என ஆர்வமாகவே எதிர்பார்த்தான். நடந்து கொண்டு இருந்தவர்கள் அவனின் கேள்வியில் அப்படி நின்றுவிட்டனர்.
ராஜா - நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறனு தெரியுது துருவ் . நீ தெரிஞ்சிக்க நினைக்கிறதுல தப்பே இல்லை. நீ பூமியில பார்த்த , கேள்வி பட்ட விஷயம் உன்னோட ஆர்வத்தை தூண்டி இருக்கும். ஆனா உண்மையிலேயே மதம் அப்படினு ஒன்னு இங்க இல்லை. எல்லாமே உன்னோட நம்பிக்கை மட்டும் தான்.
ராணி - உண்மை தான் துருவ் . நீ எந்த மத கடவுளை நாலும் மனசுல வச்சுக்கோ. அது உன்னோட விருப்பம். நீ மனசுல கொடுக்குற உருவம் தான் உனக்கு கடவுள். இது தனி நபர் விருப்பம் மட்டும் தான்.
துருவ் - அப்போ கீழ நடக்குற மத கலவரம் எல்லாமே அர்த்தம் இல்லாததா? என அதிர்ச்சியாக கேட்டான்.
ராஜா - அப்படினும் சொல்லலாம். எந்த கடவுளும் நான் தான் பெருசுனு சொல்லல. கீழ இருந்து மேல பாக்குற உங்களுக்கு கடவுள் வேணும்னா வேற வேறையா தெரியலாம். ஆனா மேல இருந்து உங்க எல்லாரையும் பாக்குற கடவுளுக்கு நீ எல்லாரும் ஒன்னு தான். அந்த கடவுள் யாருன்னா… தனி நபரோட விருப்பமான கடவுள்.
இவர்கள் சொல்லுவதை கேட்டு அதிர்ச்சியாகி விட்டான். சுற்றி உள்ளது எல்லாம் சுழழுவது போல் ஒரு பிரம்மை ஏற்ப்பட்டது. அதே அதிர்ச்சியுடன்..
துருவ் - அப்போ கீழ நடக்குற ஜாதி, மத சண்டை, கலவரம் எல்லாமே இல்லாத ஒன்ன அடையத் தானா? என மில்லியன் டாலர் கொஸ்டீன் கேட்டான்.
ராணி - அப்படியும் சொல்லலாம். சரி சீக்கிரம் நட. நம்ம பக்கத்துல வந்துட்டோம்.
துருவ் - ஹே இரு இரு… மெதுவா நட. இப்போ நீங்க சொன்னது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா. நீ சாதாரணமா சொல்லிட்ட. இந்த பிரச்சனையில எவ்வளவு பேரு அவங்க வாழ்கையை இழந்து இருக்காங்க தெரியுமா? என கேட்டான் இன்னும் அதிர்ச்சி மாறாமல்.
ராஜா - அது எல்லாம் உன்னால மாத்த முடியாது. நடக்குற ஒரு ஒரு விஷயம் பின்னாடிம் வேற வேற காரணம்.
துருவ் - அது என்ன காரணம்?
ராணி - அது தெரிஞ்சா கடவுளுக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடுமே.
துருவ் நன்றாக இருந்தவன், தேவையில்லாமல் கடவுளை பற்றி ஆராய்கிறேன் என்ற பெயரில் குழம்பிப்போய் விட்டான்.
ராணி - துருவ் அதான் சொன்னேன் ரொம்ப யோசிக்காதனு. தேவையா உனக்கு. முன்னாடி போ. நம்ம வர வேண்டிய இடம் வந்துருச்சு. உன்னோட குழப்பம் எல்லாம் சரி ஆகனும்னு வேண்டிக்கோ என கிண்டல் செய்தாள்.
சுற்றிலும் மலை, அங்காங்கே ஓடை தென்பட்டது. மஞ்சள் வெயில் வீச, லேசான குளிர் காற்றும், இதமான சூழழை உருவாக்கியது.
துருவ் மனதில் ஏதோ அவனை வழி நடத்துவது போல் கொஞ்சம் தூரம் நடந்து தரையில் அமர்ந்தான். கண்கள் தானாக மூடிக்கொண்டது. மனதில் அவன் இஷ்ட கடவுளை நினைத்தான். நினைத்த நொடி வானில் இருந்து ஒரு ஒளி அவன் மேல் பட்டது. அவன் உடல் முழுவதும் பரவியது. ஒவ்வொரு அங்கத்திலும் அந்த ஒளியில் சூடு பரவியது.
ஒரு அன்பின் அரவணைப்பை உணர்ந்தான். அவனின் மனதில் இருந்த அனைத்து பயங்களும், சந்தேகங்களும் மறந்து அமைதிமட்டுமே நிறைந்தது அந்த நொடி. அப்போது அவன் உணர்ந்தது, கடவுள் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை.
அவன் ஆன்மா ஒரு இலகுவான பறவை போல் உணரச் செய்தது. மலைகளில் உயரம், ஓடைகளில் சலசலப்பு எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. அவன், பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக உணர்ந்தான்.
அந்நேரம் அவன் வேண்டிக்கொண்டது அவனின் ஆத்ம நிம்மதி அல்ல மித்ருதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்பது மட்டுமே. அவள் இழந்த காதல் வாழ்கை அவளுக்கு வேறு வழியில் கிடைக்க வேண்டும் என மனமார கேட்டான். அவன் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதுக்கு சாட்சியாக அவன் மேல் விழுந்த ஒளி பிரகாசமாகியது.
ராஜா, ராணி இதனை ஆர்வமாக பார்த்தனர். அவர்கள் விரிந்த கண்களை சொன்னது இது போல் ஒரு காட்சி அவர்கள் முன்பு பார்த்தது இல்லை என்பதை.
சில நொடிகள் கழித்து, ஒளி மெதுவாக மறைந்தது. ஆனால், அந்த அமைதி அவன் மனதில் நீடித்தது. கண்களை திறந்தான் துருவ் . மலைகளும், ஓடைகளும் முன்னதை விட அழகாக தெரிந்தன. பின் ராஜா, ராணியை நோக்கி நடந்து வந்தான்.
ராணி - என்ன துருவ் , பிரகாசமாக இருக்க. உன்னோட கேள்விக்கு எல்லாம் பதில் கிடைச்சதா? என விளையாட்டாக.
துருவ் அதற்கு பதில் சிரிப்பை தந்தான்.
துருவ் - எனக்கு வேண்டியதை கேட்டதும் தான் நிம்மதியாக இருக்கு. நிஜமாவே கடவுள் இருக்காரு ப்பா. சரி வாங்க போகலாம்.
அவனிடம் இப்போது ஒரு தெளிவு காணப்பட்டது. வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை கொடுத்த தெளிவாக கூட இருக்கலாம். மூவரும் அங்கு இருந்து பறந்து சென்றனர்.
காலேஜ் சென்ற மித்ருதா அங்கு பலரின் பரிதாப பார்வைக்கு ஆளானாள்.