logo

உயிரோடிருந்தால் வருகிறேன் | Episode 7

Mars

Administrator
துருவ் - நான் எதர்ச்சியா வெளிய வந்தேன். அப்போ கூட்டமா ஜூனியர் பசங்க லேடீஸ் பாத்ரூம் ல அவன் ‘இன்னும் உள்ள என்ன செய்துட்டு இருக்கான்‘ என சிரிச்சி பேசிட்டு இருந்தாங்க… அதை கேட்டதுக்கு அப்புறம் தான் சார் உள்ள போனேன் என அவன் தரப்பு நியாயத்தை சொன்னான்.



அவன் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்க cctv காட்சி இருந்தது. பெரிய சாட்சியாக மித்ருதா இருந்தாள். அவளின் நிலை கருதி அவளிடம் பெரியதாக வாக்குமூலம் யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த பொறுக்கியை காலேஜ் விட்டு தூக்கினர். மித்ருதா கேட்டுக்கொண்டதால் பிரச்சனை அவள் வீட்டாரிடமும் சொல்லவில்லை.



எல்லாம் முடிந்த பிறகு அவரவர் வீட்டுக்கு செல்ல கிளம்பினர். துருவ்வுக்கு மித்ருதாவிடம் பேசணும் போல இருந்தது. ஆனால் அவள் பேசும் நிலையில் இல்லை என்பதால் விலகிக்கொண்டான். நித்யா துருவ்விடம் நன்றி சொல்லிவிட்டு துர்கா மேம் கூட சென்றாள்.





அன்று அவளை அவள் மேம் காரில் வந்து இறக்கி விட்டார். மித்ருதா உள்ளே செல்லும் போது ஹாலில் யாரும் இல்லை… எனவே வேகமாக சென்று அவள் அறை கதவை சாற்றிக்கொண்டாள். அம்மா கேட்டதுக்கு வயிறு வலி என சொன்னாள். பொதுவாக வயிற் வலி போது யாரையும் அருகில் விட மாட்டாள் என்பதால் பெற்றோக்கு அது பெரியதாக தெரியவில்லை.



நித்யா அவளுக்கு இரவுவில் ஃபோன் செய்து அவளது உடல் நிலையை கேட்டுக்கொண்டாள். மருந்து போட்டதால் முகத்தில் இருக்கும் தடம் மறைந்துவிட்டது.



பெட்டில் படுத்து இருக்கும் போது துருவ் நியாபகம் தான். விசாரணையின் போது அவன் எல்லோரிடமும் சொன்ன காரணம் பொருந்தி போனது தான் ஆனால் அவன் பாத்ரூம் உள்ளே வரும் போதே பெயர் சொல்லி அல்லவா கூப்பிட்டான். அப்போது நான் உள்ளே ஏதோ பிரச்சனையில் இருப்பது தெரிந்தது தான் வந்தானா என கேள்வி எழுந்தது. யோசித்து கொண்டே படுத்து இருந்தாள்.



துருவுக்கும் தூக்கம் தொலை தூரம் சென்று இருந்தது. மித்ரா என்ன செய்கிறாள், துங்கினாளா , வலி குறைந்ததா என கேள்வி தான் மண்டைக்குல் ஓடியது. அவள் நம்பர் இருக்கிறது ஆனால் பேச தயக்கமாக இருந்தது.



தயக்கம் உடைத்து அவளுக்கு ஃபோன் செய்தான். மித்ருதா நம்பர் பதிவு செய்து வைத்து இருப்பதால் அவன் தான் கூப்பிடுகிறான் என புரிந்தது.



மித்ருதா - ஹலோ சொல்லுங்க துருவ் என்றாள் எடுத்த உடனே. துருவ் மனதில் நான் தான் கூப்பிடுறேன்னு அவளுக்கு தெரியுமா? என்னோட நம்பர் அவகிட்ட எப்படி என யோசித்தான். ஆனால் சிந்தனை ஒதுக்கி விட்டு அவள் உடல் நிலை பற்றி கேட்டான்.



துருவ் - ம்ம்ம்… மித்ரா, இப்போ எப்படி இருக்கு பெயின்? டேப்லெட் போட்டியா?



மித்ருதா - கொஞ்சம் பரவாயில்லை துருவ். ம்ம் டேப்லெட் எல்லாம் போட்டுட்டேன். அப்புறம் ( தயக்கத்துடன்) … ரொம்ப தேங்க்ஸ்



துருவ் - என்ன மா எதுக்கு தேங்க்ஸ் எல்லாம். நமக்குள்ள என்ன தேங்க்ஸ் என இருவரின் உறவையும் நெருக்கமாக பேசினான். அவன் மனதில் மித்ரா நெருக்கமாகி விட்டாள். எனவே பேச்சி அதுபடியே வந்தது.



மித்ருதா மனதில் அவன் தனி இடம் பிடித்தான். அவன் சரியான நேரம் வரவில்லை என்றால் அவள் நிலமை என்னவாகி இருக்கும். உடை எல்லாம் கிழிந்து போய் இருந்த போதும் ஒரு பார்வை கூட தப்பாக பார்க்காததை அவள் கவனித்தாள்.



மித்ருதா - நீ மட்டும் அந்நேரம் வரலைன்னா… என்னோட நிலமை என மேல சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.



துருவ் - ரொம்ப யோசிக்க வேண்டாம் மித்ரா. நான் வரலைன்னா என்ன…. நீயே உன்ன காப்பாத்திருப்ப… இது தான் உண்மை என தைரியம் கொடுத்தான்.



இந்த நிகழ்வை பயன்படுத்தி அவனை அவனே பெருமையாக பேசாமல் அவளுக்கு அவளே துணை, உனக்குள் தைரியம், பலம் எல்லாம் இருக்கிறது என மறைமுகமாக சொன்னான். இதே போல் இன்னும் ஒரு நிகழ்வு வேறு எங்கும் நடக்காது என்பது உறுதி இல்லை எனவே அவளை அவளே காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு தைரியமான பெண் என்பதை பதிய வைக்கவே இப்படி சொன்னான்.



மித்ருதா மனதுக்கு அவனை இன்னும் பிடித்தது. அவன் வார்த்தையில் ஒரு புதுவித தைரியம் வந்தது உண்மை. யாரும் இல்லை என்றாலும் என்னாலும் அந்த நிலைமையில் இருந்து தப்பி இருக்க முடியும் என நினைக்கும் போதே அவள் மனபலம் கூடியது போல் உணர்ந்தாள்.



காயப்பட்ட மனம் அவன் வார்த்தையில் கொஞ்சம் குணமாகியது.



மித்ருதா - நிஜமாவா? என்னால முடிஞ்சு இருக்குமா?



துருவ் - ஆமா மா. நமக்கு பிடிக்காத ஒரு விஷயம் ரொம்ப திணிக்கும் போது அதுல இருந்து விடுபட ஏதாவது ஒரு வழி இருக்கும்னு தோணும். அதுவும் உடல்ல பிடிக்காத ஒரு விஷயம் நடக்கும் போதே இது வரைக்கும் இல்லாத பலம் யாராக இருந்ததாலும் கண்டிப்பா வெளிப்படும். அதை தான் நான் சொல்றேன். நான் வர கொஞ்சம் லேட் ஆகி இருந்தாலும் நீயே அவன் கிட்ட இருந்து தப்பிச்சு இருப்ப. சரி அதை பற்றி ரொம்ப யோசிக்காம தூங்கு. நம்ம நாளைக்கு பேசலாம் சரியா



மித்ருதா - ம்ம் என சொன்னாலும் அவளுக்கு இருக்கும் சந்தேகம் கேட்காமல் ஃபோன் வைக்க அவளுக்கு விருப்பமில்லை.



துருவ் அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பது புரிந்தது.



துருவ் - என்ன மித்ரா… எதுவும் சொல்லனுமா என்கிட்ட என மென்மையாக கேட்டான்.



மித்ருதா - அது எனக்கு ஒரு சந்தேகம் அதான்…



துருவ் - எதுவா இருந்தாலும் கேளு மித்ரா, என்கிட்ட ஏன் தயங்குற



மித்ருதா - பிரின்சிபால் கிட்ட வெளிய உள்ள பசங்க பேசிக்கிட்டு இருந்ததை வெச்சு உள்ள வந்தேன்னு சொன்னீங்க. ஆனா உள்ள என்ன பார்க்கும் முன்னாடியே என்னோட பெயரை சொல்லிட்டு தான் உள்ளேயே வந்தீங்க. நான் தான் உள்ள இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?



அவளின் நுணுக்கமான கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அதில் லேசாக சிரிப்பு எட்டிப்பார்த்தது.



துருவ் - பிரில்லியன்ட் கொஸ்டீன் மேடம். அதே மாதிரி எனக்கும் ஒரு சந்தேகம் இருக்கே… அதுக்கு நீ பதில் சொல்லு உன்னோட கேள்விக்கு நான் பதில் சொல்றேன் என அவன் வார்த்தைகளில் கேலி இருந்தது.



அதே அவளுக்கும் தொற்றிக்கொள்ள, மனதில் இருந்த கவலை இருந்த இடம் தெரியாமல் போனது.



மித்ருதா - அது என்ன துருவ்? எங்க கேளுங்க பார்ப்போம் என ஆர்வமாகவே கேட்டாள்





துருவ் - நான் இப்போ ஃபோன் பண்ண அப்போ நான் தான்னு எப்படி கண்டுபிடிச்ச. எடுத்த உடனேயே என்னோட பெயர் சொல்லி தான் கூப்பிட்ட, என்னோட ஃபோன் நம்பர் எப்படி கிடைச்சது?



மித்ருதா - இதே கேள்வியை நானும் உங்ககிட்ட கேக்கலாம் மிஸ்டர் துருவ் என கெத்தாக பதில் தந்தாள்.



துருவுக்கு அவள் இயல்பாக பேசியதில் சந்தோசமாக இருந்தது. முதலில் இருந்த குரலுக்கு இப்போது இருக்கும் குரலுக்கு வித்தியாசம் தெரிந்தது.



துருவ் - சரிதான். நான் உண்மைய சொல்லிடுறேன். அன்னைக்கு மால்ல நீ பில் போடும் போது நம்பர் சொன்னியே அப்போ நோட் பண்ணேன். இப்போ நீ சொல்லு…



மித்ருதாவுக்கு அவள் செயல் வெட்கமாக இருந்தும் உண்மையே சொன்னாள்.



மித்ருதா - அப்போதான் நானும் நோட் பண்ணேன் என ஒரு வாரு சொல்லிவிட்டாள். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருக்கும் க்ரஷ் ஐ உணர்ந்தனர்.



மித்ருதா - சொல்லுங்க துருவ். எப்படி நான் தான் உள்ள இருக்கேன்னு உங்களுக்கு தெரியும்



துருவ் - அது ஒன்னும் இல்ல மா. நீ லைப்ரரி தாண்டி போகும் போது தான் நான் அங்க தான் இருந்தேன். அப்போ உன்ன பார்த்தேன். நீ திரும்பி வரவே இல்லை, ஒருவேளை வெளிய எங்கேயும் நின்னுட்டு இருக்கியானு பார்க்க வெளிய வந்தேன், அப்பவும் இல்லை. அந்த நேரம் தான் ஜூனியர் பசங்க பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுட்டு வந்தேன். அப்படி தான் தெரியும். இதனை எல்லோருகிட்டயும் சொன்னா நம்மளை பத்தி தான் பேசுவாங்க அதான் பாதி மட்டும் சொன்னேன்.



மித்ருதா அமைதியாக இருந்தாள்.



துருவ் - என்ன மித்ரா, அமைதியாகிட்ட. என்ன ஆச்சு?



மித்ருதா - ஹான்… ஒன்னும் இல்லை துருவ். ஓகே, இன்னொரு நாள் பேசலாம். நான் தூங்க போறேன்.



அப்படி பேச்சை அவள் முடிக்க நினைத்தாலும், அவன் தன்னை மட்டும் தனியாக கவனிக்கிறான் என்று புரிந்தது.





பேசிய பின் தான் இருவருக்கும் தூக்கமே வந்தது. துருவ் வார்த்தைகள் இதம் தர கண்கள் தானாகவே மூடிக்கொண்டது.



அந்த நாள் முழுக்க அறைக்கு உள்ளே இருந்த படி தான் பெற்றோரிடம் பேசினாள்.



அடுத்து வந்த நாட்களும் காலேஜ்ல் நன்றாகவே சென்றது. இந்த விஷயம் தெரிந்த யாரும் அவளிடம் அதையே பேசி காயப்படுத்தவில்லை. அதுவே அவள் அந்த நிகழ்வில் இருந்து மீண்டு வர உதவியாக இருந்தது.



இன்று….

காலேஜ்ல் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்த மித்ருதாவுக்கு இப்போது இருக்கும் நிலமை வெறுமையாக இருந்தது. காதலிக்கும் முன்பே துருவ் அவளுக்கு கஷ்ட , நஷ்டத்தில் உறுதுணையாக இருந்ததை நினைக்கும் போது உள்ளம் கனிந்தது.



பின் நேரம் ஆவதை உணர்ந்து கல்லூரிக்கு சென்றாள். சுபத்ரா அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.
 
Top