logo

உயிரோடிருந்தால் வருகிறேன் | Episode 6

Mars

Administrator
மித்ருதா கல்லூரிக்கு செல்ல கிளம்பிக் கொண்டு இருந்தாள். அவசரமாக சமைத்து, குளித்து, புடவை கட்டி ரெடி ஆகிவிட்டாள். துருவ் இருந்தால் சமைக்க ஹெல்ப் செய்வான். அவள் குளிக்கும் வரையில் சமையல் அவன் பார்த்துக்கொள்வான். அவன் குளிக்கும் போது மித்ருதா எல்லாம் சமைத்து இருவருக்கும் மதியம் கொண்டு போக பாக்ஸில் அடைத்து ரெடி செய்து வைப்பாள். வீட்டு வேலையில் இருவருக்கும் சரிபங்கு இருக்கும்.



இப்போது தனியாக எல்லாமே செய்தாள். இடையில் துருவ் நினைவு அவள் வேலைகளை தடை செய்து கொண்டே இருந்தது. ஆனால் நிற்காமல் ஓடினாள் மித்ருதா. எல்லாம் முடித்து வாட்ச் எங்கே என்று பார்க்க… கண்ணில் மாட்டுவேனா என ஆட்டம் காட்டியது. வீட்டை ஒதுக்கும் போது எங்கேயோ நினைவு இல்லாமல் வைத்து விட்டாள். பத்து நிமிடம் தேடலுக்கு பின் கப்போர்ட்ல் கிடைத்தது. அப்போது அருகில் ஒரு பொருள் கண்ணில் பட்டது. அது அவளும் நித்யாவும் ஒரே போல் வாங்கிய ஜிமிக்கி. அதனை பார்க்கும் போது பழைய நினைவுகள் தோன்றியது…



அன்று



மாலில் துருவ் , மித்ருதா சந்திப்புக்கு பின் இருவருக்கும் பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவரது ஒருவர் நம்பர் இருந்தாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.



கல்லூரியில் அவ்வபோது பார்க்கும் போது ஓரப்பார்வை அவ்வளவே. அவர்கள் உறவில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. அந்த நிகழ்வு நடக்கும் வரை….





அன்று காலேஜ்ல் மகளிர் தின விழா. எனவே வகுப்பு எதுவும் இல்லை. மாணவிகளை மட்டுமே ஆடிட்டோரியம் கூப்பிட்டு நிகழ்ச்சி நடந்துக்கொண்டு இருந்தது . மாணவர்கள் சிலர் கேன்டீன், கிரவுண்ட், கிளாஸ் ரூமில் அரட்டை என்று இருந்தனர். பாதி பேர் வீட்டுக்கு போய் விட்டனர். பெண்கள் எல்லாம் ஆடிட்டோரியத்தில் நன்றாக என்ஜாய் செய்து கொண்டு இருந்தனர்.



பல துறைகளில் சாதித்த பெண்கள், நிறைய விருது வாங்கியவர்கள், பெரிய நிலையில் இருக்கும் பெண்கள் என பல பேர் வந்து உரையாடல் கொடுத்தனர். அதில் குடும்ப தலைவியும் அடக்கம். அங்கீகாரம் கிடைக்காத ஒரு வேலை என்றால் அது குடும்ப தலைவி என்பதனால் அவர்களையும் கூப்பிட்டு பாராட்டினர்.



இடையில் மாணவிகள் ஆடல், பாடல் என நிகழ்ச்சி கலை கட்டியது. கீழே இருந்து ஆர்ப்பரித்த கூட்டத்தில் மித்ருதா, நித்யா இருந்தனர்.



அப்போது டான்ஸ் ஆட பெண்கள் ஸ்டேஜ் வர, குத்து பாட்டு வந்ததும் அரங்கம் அதிர பெண்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இன்று அவர்களுக்கான நாள் என்பதால் பெராசிரியர்கள் எதுவும் கண்டுக்கவில்லை. ஸ்டேஜ்ல் ஆடிய பெண்களை விட கீழே ஆடிய பெண்கள் அதிகம் என்ஜாய் செய்தனர். நித்யா ஆட போய் விட, மித்ருதா எல்லோரும் ஆடுவதை சிரிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்.



மித்ருதா பாத்ரூம் போக நினைக்க… நித்யாவிடம் உதட்டு அசைவில் சொல்லிவிட்டு அரங்கை விட்டு வெளியே வந்தாள். வெளியில் கும்பலாக பசங்கள் அங்கு இங்கு தென்பட்டனர். இவள் எதையில் கருத்தில் கொள்ளாமல் லைப்ரரி அருகில் இருக்கும் பாத்ரூம் நோக்கி சென்றாள். அப்போது துருவ் லைப்ரரியில் தான் இருந்தான்.



அவள் லைப்ரரி கிராஸ் ஆகும் போது துருவ் அவளை பார்த்தான். ‘ இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாள், ஆடிட்டோரியத்தில் தான இருக்க வேண்டும் என்று யோசித்தாலும், அந்த பக்கம் பாத்ரூம் இருப்பது நினைவில் வந்ததும், அதற்கு தான் வந்து இருப்பாள்’ என விட்டு விட்டான்.



மித்ருதா சென்ற பக்கம் பெரியதாக ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் இருந்தது. அவள் உள்ளே போனதை அவளை விட குறைந்த வயதில் இருக்கும் ஜூனியர் பசங்கள் பார்த்தனர். அந்த கும்பலுக்கு தலைவன் போல் இருவன் இருக்க… அவனை கூட உள்ளவர்கள் உசுப்பேற்றி தைரியம் இருந்தால் அவளை ‘ தொட்டுட்டு ‘ வா என ஏற்றிவிட்டனர். அவனும் அவர்களிடம் கெத்து காட்ட… அந்த பக்கம் யாரும் வருகிறார்களா என பார்த்துக்கொண்டே லேடீஸ் பாத்ரூம் பக்கம் சென்றான்.



உள்ளே சென்ற மித்ருதா கண்ணாடியை பார்த்துக்கொண்டு கையை கழுவிக்கொண்டு இருந்தாள். பைப் ஆஃப் பண்ண குனிந்து விட்டு நிமிரும் போது பின்னாடி அந்த பொறுக்கி நிற்பது கண்ணாடியில் தெரிந்தது.



நெஞ்சம் படபடவென துடிக்க ஆரம்பித்ததுவிட்டது. லேடீஸ் டாய்லெட்ல் ஒரு ஆடவன் நிற்பதற்கு காரணம் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் குழந்தை இல்லயே. அவள் அங்கு இருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசிக்கும் முன்பு அவன் வேகமாக அவள் அருகில் வர… மித்ருதா ஓடி சென்று முதலில் இருந்த பாத்ரூம் உள்ளே சென்று பூடிக்கொண்டாள்.



தாழ்ப்பாள் போட்டு விட்டாலும் பயமாக இருந்தது. யாரும் இந்நேரம் இங்கு வர வாய்ப்பு இல்லை என்பது அவளுக்கு நன்றாக தெரியும். இப்போது அவள் முழு நம்பிக்கையும் அந்த தாழ்ப்பாள் மீது இருக்க.. அதுவோ பழையதாக துருப்பிடித்து இருந்தது. வெளியில் இருக்கும் பொறுக்கி கதவை தட்ட தட்ட அது லேசாக உடைய ஆரம்பித்தது.



மித்ருதா - பிளீஸ், என்ன விட்டுடு.. எதுவும் பண்ணிடாத. வெளிய போ என அவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்.



தாழ்ப்பாள் பாதி உடைந்துவிட, அவள் பலம் கொண்டு அந்த கதவை தாங்கிப் பிடித்தாள். இவள் போராட்டம் எதையும் நித்யா அறியவில்லை. அங்கு அரங்கத்தில் பெண் உரிமை பற்றியும், பெண் சுதந்திரம் பற்றியும் ஒரு சாதனைப் பெண் குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார். பெண்கள் விண்வெளி வரை சென்றதை பெருமையா சொல்லிக்கொண்டு இருந்தார். அங்கு அரங்கத்தில் இருக்கும் பெண்கள் மனதில் அந்த நேரத்துக்கு சிங்கப்பெண் போல் உணர வைத்தார்.



கோடியில் ஒரு பெண் விண்வெளி போய் சாதித்து இருக்களாம். ஆனால் பாத்ரூம் செல்ல கூட துணைக்கு ஆள் தேவைப்படுகிறது என்பது தான் மற்ற பெண்களின் இன்றைய நிலை.



யாரும் அவர்களை சிங்கப்பெண்ணாக கருத வேண்டாம். சாதாரண பெண்ணாக முதலில் கருதினாலே போதும்.



துருவ் அவன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாலும் பார்வை எல்லாம் மித்ருதா திரும்பி செல்லும் நேரம் அவளை பார்க்கலாம் என்று ஆர்வமாக காத்திருந்தான். 10 நிமிடம் ஆகியும் அவள் திரும்பி போகாமல் இருக்க சந்தேகம் வந்தது. திரும்பி போக இந்த ஒரு வழி தான் இருக்கு என்பதை அவன் நன்றாக அறிவான். எனவே அவளை தேடி லைப்ரரி விட்டு வெளியே வந்தான்.



பாத்ரூம்ல் மித்ருதா போராடிக்கொண்டு இருந்தாள். இரண்டு கைகளைக் கொண்டு கதவை பிடிப்பதால், ஃபோன் செய்து உதவிக்கு அழைக்க முடியவில்லை. ஒரு நிலையில் அந்த தாழ்ப்பாள் உடைந்து விழ, மித்ருதா நம்பிக்கையும் உடைந்தது. யாரும் உதவிக்கு வர மாட்டார்கள் என நம்ப ஆரம்பித்து விட்டாள். இந்த மிருகத்துக்கு உணவாக போறோம் என நினைக்கும் போதே நரகம் கண் முன் வந்தது.



வெளியே நின்ற பொறுக்கி ஓங்கி தள்ளியதில் கதவு திறந்தது. அந்த வெஸ்டர்ன் டாய்லெட் என்பதால் அதன் சீட் மூடப்பட்டு இருக்க, மித்ருதா அதன் மேல உட்கார்ந்தது போல் விழுந்தாள்.



மித்ருதா அழுதுகொண்டே “ பிளீஸ் எதுவும் பண்ணிடாத, எனக்கு எதுவும் தெரியாது, நான் எந்த தப்பும் பண்ணல பிளீஸ் “ என கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினாள்.



அவனுக்கு அது எதுவும் காதில் கேட்கவில்லை. அவள் உடல் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. அருகில் வந்து கன்னத்தில் ஒரு அறை விட்டான் அவளை அமைதியாக்க. மித்ருதாவுக்கு கண்கள் இருட்டிகொண்டு வந்தது அந்த அறையில். பின் அவள் கையை இருக்கிப்பிடித்துக்கொண்டு முகம் முழுக்க முத்தமிட ஆரம்பித்து விட்டான். அறுவெருப்பில் உச்சத்தில் இருந்தாள் மித்ருதா. அவனின் ஒரு கை அவளின் இரண்டு கையை பிடித்து இருக்க மற்றொரு கை கழுத்தில் ஊர்ந்தது.



அந்த பெண்ணை உயிரோடு கொன்று கொண்டு இருந்தான். மித்ருதா முடிந்த அளவுக்கு விடு பட முயன்றாள்.



வெளியில் துருவ் வந்தததும் சுற்றி தேடினான். அவள் எங்கும் தென்படவில்லை. அப்போது அந்த பொறுக்கி கும்பல் லேடீஸ் டாய்லெட் பார்த்து பேசுவதும், சிரிப்பதுமாக இருக்க… சந்தேகம் வந்து எதை பற்றியும் யோசிக்காமல் டாய்லெட் உள்ளே வந்தான். உள்ளே வரும் போதே ‘ மித்ருதா ‘ என கூப்பிட்டான். மித்ருதாவுக்கு துருவின் குரல் கேட்டதும் லேசாக நம்பிக்கை துளிர்விட்டது.



அப்போது மித்ருதா அழுகையுடன் “துருவ்” என்று கதற



பதறி அடித்துக்கொண்டு வந்து பார்க்க அந்த பொறுக்கி அவளை பலாத்காரம் செய்து கொண்டு இருந்தான். அவள் உதட்டில் முத்தமிட செல்லும் போது துருவ் பின்னாடி இருந்து அவனை பிடித்து இழுத்து அவனை புரட்டி எடுத்தான். அவன் எழ முடியாத அளவுக்கு அடித்துவிட்டான். எங்கே இருந்து அவனுக்கு இவ்வளவு கோவம் வந்தது என்பது தெரியவில்லை.



அவனின் மித்ரா என வந்தவுடன் சுற்றி எதுவும் கருத்தில் பதியவில்லை. அவனை இழுத்து பாத்ரூம் உள்ளே போட்டு பூட்டிவிட்டு அவள் அருகில் வந்தான்.



உடை ஆங்காங்கே கிழிந்து இருந்தது. இரு கன்னத்திலும் கைவிரல்கள் அடையாளம். இதயத்தில் வலி என அப்போது தான் உணர்ந்தான் துருவ். முகம், கழுத்து, கை என எல்லாம் இடங்களிலும் நகக்கீரல்.



துருவ் - மித்து, டேய்…. என்ன ஆச்சு? ஃபோன் பண்ணிருக்களாம்ல? என அருகில் போக பார்க்க… அவள் கையை நீட்டி வரவேண்டாம் என்று செய்கை செய்தாள் அழுதுகொண்டே.



துருவ் - நான் ஒன்னும் பண்ண மாட்டேன் டா. நித்யாவ கூப்பிடவா. இரு அவளை வர சொல்றேன் சரியா ஒன்னும் இல்லை என அவள் ஃபோன் அங்கு இருக்க… நித்யாவுக்கு ஃபோன் செய்து லைப்ரரி அருகில் இருக்கும் பாத்ரூம் வர சொன்னான். பிரச்சனை என்றும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தெளிவாக சொன்னான்.



நித்யா வந்த உடன் மித்ருதா பாய்ந்து சென்று அணைத்துக்கொண்டு கதறினாள். நித்யா கண்களிலும் கண்ணீர்.



நித்யா - மித்து அழாத டி, நானும் உன் கூட துணைக்கு வந்து இருக்கணும். தப்பு பண்ணிட்டேன். சாரி டி என அவளை கூட்டிக்கொண்டு பைப்பில் தண்ணீர் பிடித்து அவளை முகத்தை துடைத்தாள்.



துருவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்கள் டிபார்ட்மெண்ட்ல் இருக்கும் ஒரு மேம்க்கு ஃபோன் செய்தான். அவர் ஸ்டூடண்ட்ஸ் ஃபேவரைட் (Favorite). தோழி மாதிரி பழகுவார் என்பதால் அவர் இந்த நிலைமையை புரிந்து கொண்டு முடிவு எடுப்பார் எனவே ஃபோன் செய்து நடந்ததை சொன்னான். அவர் துர்கா.



துருவ் மேல் எல்லோருக்கும் மதிப்பு அதிகம் என்பதால் அவன் வார்த்தை மதித்து வந்தார். வரும் போதே வெளியே ஆங்காங்கே உள்ள பசங்களை துரத்தி விட்டார். மித்ருதா வெளியே வரும் போது யாரும் பார்த்தால் சங்கட படுவாள் என்பதற்காக.



உள்ளே வந்தவர் விரைந்து செய்யல்பட்டு அவளை அனைவாக பிடித்துக்கொண்டு மெடிகல் ரூம் சென்றார். துருவ் சென்று டிபார்ட்மெண்ட்ல் புகார் கொடுத்தான். மெடிகல் ரூமில் உள்ளே அக்கா காயத்துக்கு மருந்து போடும் போது துடி துடித்தது போனாள். நகம் பட்டு தோல் கொஞ்சம் உரிந்து இருந்ததால் மருந்து பட்டவுடன் எரிச்சலாக இருந்தது. துருவ் டிபார்ட்மெண்ட்ல் சொல்லிவிட்டு மெடிகல் ரூம் வந்தான்.



அழகாக சிரித்துக்கொண்டு, அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருந்த பெண்ணுக்கா இந்த நிலமை என வருத்தமாக இருந்தது. அவளுக்கு உறுதுணையாக இருக்க மனம் சொல்லியது. மூளையோ அவள் தான் உன்ன பக்கத்துலயே சேர்த்துக் மாட்டாளே‌ என எடுத்துக்கூறியது.



மகளிர் தின விழா முடிந்து அனைவரும் வீட்டுக்கு திரும்பி இருந்தனர். காலேஜ்ல் இப்போது பெரியதாக கூட்டம் இல்லை. நித்யா வீடு பக்கம் என்பதால் அவளுடைய டிரஸ் ஒன்று எடுத்து வந்து மித்ருதாவுக்கு கொடுத்தாள்.



பின் பிரின்சிபால் அறைக்கு துர்கா, அந்த பொறுக்கி, மித்ருதா, துருவ், மித்ருதா வகுப்பு பேராசிரியர் என எல்லோரும் அழைக்கப்பட்டனர்.





அங்கு என்ன நடந்தது என விசாரணை செய்தனர். அப்போது துருவ் எப்படி சரியாக அங்கு சென்றான் என கேள்வி எழுந்தது. அனைவரின் கவனமும் இப்போது துருவ் பக்கம் சென்றது.
 
Top