மித்ருதா வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தாள். கை அதன் போக்கில் வேலை செய்தாலும் கவனம் அங்கு இல்லை. எப்போது அழகா டிரஸ் போட்டு, தலை வாரி, கண்டிப்பாக ஒரு பூ வைத்து இருப்பாள். ஆனால் இப்போது எல்லாம் கசங்கிய உடையும், கொண்டையும் தான் தினமும். யாரு நம்மளை ரசிக்க போகிறார் என்ற எண்ணம். சமயலையும் ஏனோ தானோ என்று செய்து முடித்தாள்.
சாப்பிட்டு முடித்து விட்டு டீ கப்பை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கும் சின்ன தோட்டத்தில் வந்து அமர்ந்தாள். இது முழுக்க முழுக்க துருவ் உருவாக்கியது. தோட்டத்தில் அதிகமாக இருந்தது பூ செடிகள் தான். துருவுக்கு ஆர்க்கிட் மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதை தவிர்த்து நிறையா வண்ண மலர்கள் இருந்தது அது எல்லாம் அவன் மித்ராக்காக.
யாரு சொன்னார்கள் பெண்களுக்கு தான் பூ செடிகள் மீது விருப்பம் என்று துருவுக்கு பூ செடிகள் வளர்க்க பிடிக்கும் அதனை அவன் மனைவிக்கு சூடிப்பார்க்க அதை விட பிடிக்கும்.
செடிகளையே பார்த்துக்கொண்டு இருந்த மித்ருதா கவனித்தாள் மண் எல்லாம் காய்ந்து போய் இருப்பதை. துருவ் தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாக பாராம்பரிப்பான். அவன் இல்லாமல் எல்லாமே கலை இழந்து போய்விட்டது மித்ருதா உட்பட.
இப்போது செடிகள் எல்லாம் இவள் பொறுப்பு, எனவே அதனை வாட விடாமல் தண்ணீர் ஊற்றினாள். அதனிடம் இந்த ஒரு வாரமாக தண்ணீர் ஊற்றாமல் இருந்ததுக்கு ‘ சாரி ‘ என்றாள். அந்த பூக்கள் அதன் பின் மலர்ந்து சிரித்தது போல் தோன்றியது. பல நாள் கழித்து மித்ருதா லேசாக சிரித்தாள். ஒரு நிமிடத்தில் இயற்க்கை அவள் மனதை ஒரு துளி அளவு மாற்றியது.
அதில் ஆர்க்கிட் மலர்களை மட்டும் பறித்துக்கொண்டு, துருவ் கல்லறை நோக்கி சென்றாள். இது அவளுக்கு வாடிக்கையான ஒரு விஷயமாகி விட்டது. தினமும் துருவ் அருகில் அவளுக்கு இருக்க வேண்டும். அவன் எந்த உருவில் இருந்தாலும் சரி.
எப்போது கல்லறை முன்பு நின்றுக்கொண்டு அவனோடு மனதில் பேசுவாள். இப்போது எல்லாம் கல்லறையின் மேல் அமர்ந்துகொண்டு வாய் விட்டே முந்தன நாள் நடந்தவற்றை பேசிக்கொண்டு இருப்பாள்.
அதே தான் இன்றும் செய்தாள். அவனுக்கு ஆர்க்கிட் மலர்களை வைத்து விட்டு அவனோடு பேசிக்கொண்டு இருந்தாள். தூரத்தில் இருந்து பார்ப்பவருக்கு கண்டிப்பாக தனியாக பேசிக்கொண்டு இருக்கும் பைத்தியம் போல தான் தோன்றும். அதை பற்றி எல்லாம் மித்ருதா கவலை படவில்லை.
இதனை தூரத்தில் இருந்து சுபத்ரா பார்த்துக்கொண்டு இருந்தாள். மித்ருதா வீட்டுக்கு வர வீடு பூட்டி இருந்தது, ஏதோ ஒரு உந்துதலில் துருவ் கல்லறைக்கு வர, அவள் நினைத்தது போலவே மித்ருதா அங்கு தான் தனியாக பேசிக்கொண்டு இருந்தாள். தோழியை நினைத்து கவலையாக இருந்தது. எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் தோழி இப்படி சிதைந்து போய் இருப்பது வருத்தமாக இருந்தது. இது அவளுக்கும் துருவுக்குமான தனி பட்ட நேரமாக மித்ருதா கருதுவதால் அதனை மதித்து அவளை தொந்தரவு செய்யாமல் அங்கு இருந்து நகர்ந்தாள்.
மித்ருதா வீட்டுக்கு வந்து சில நிமிடங்கள் கழித்து, ஃபோன் செய்து தான் வந்து இருப்பதாக தெரிவித்தாள். அவள் கல்லறைக்கு வந்ததை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவள் காத்திருக்கும் நேரம் அஷோக் வந்தான்.
அஷோக் - ஹாய் சுபத்ரா, மித்ருதா இல்லையா வீட்ல? ஃபோன் பண்ணீங்களா?
சுபா - ம்ம் ஆமா, அவா கல்லறைக்கு போயிருக்கா. வர்றேன்னு சொன்னா. அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்ன இந்த பக்கம்?
அஷோக் - இந்த பக்கம் ஒரு வேலை விஷயமா வந்தேன். நீங்க வெளிய நிக்கிறது பார்த்ததும் வந்தேன். எதுவும் பிராப்ளம் இல்லயே? என கரிசனமாக கேட்டான்.
சுபா பதில் சொல்லாமல் அப்படியே நின்றாள். அவள் தோழி பழைய மாதிரி ஆக வேண்டும். அஷோக்கிடம் சொல்லி ஏதேனும் யோசனை கேட்கலாம் என நினைத்தாள்.
சுபா - மித்ருதா நினச்சா தான் கவலையா இருக்கு என கொஞ்சம் நேரம் முன்பு பார்த்ததை சொன்னாள்.
அஷோக் - பாவம் தான் அவங்க. தனிமையை எப்படி போக்கனும்னு அவங்களுக்கு தெரியல அதான் இப்படி பண்ணுறாங்க. அவங்களை திரும்ப வேலையில ஜாயின் பண்ண சொல்லுங்க. இது தான் ஒரே வழி.
சுபத்ராவுக்கும் அதுவே சரி என்று தோன்றியது. மித்ருதாவுக்கு கொஞ்சம் இடைவெளி தேவை என்று எண்ணியது தப்பாகிவிட்டது. அவளை இனிமேல் பிசியாக வைத்துக்கொள்ள எண்ணினாள்.
சுபா - கண்டிப்பா சொல்றேன் அஷோக் என சொல்லும் போதே மித்ருதா வந்துவிட்டாள்.
மித்ருதா - சாரி, ரொம்ப நேரமா வெயிட் பண்ண வெசிட்டேன்னா. உள்ள வாங்க என இருவரையும் அழைத்தாள்.
உள்ளே வந்ததும் இருவருக்கு தண்ணீர் எடுத்து வந்து குடுத்தாள்.
மித்ருதா - சுபா, வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?
சுபா - எனக்கு எல்லாம் நல்லா போய்ட்டு தான் இருக்கு. நீ எப்போ காலேஜ் ல திரும்ப ஜாயின் பண்ண போற?
மித்ருதா அமைதியாக இருந்தாள். அவளுக்கு இப்போதைக்கு லீவில் இருக்கனும் போல தான் தோன்றியது. மற்றவர் பார்வை இவளை பாவமாக பார்க்க விருப்பம் இல்லை. கொஞ்சம் நாள் லீவில் இருக்க விரும்பினாள். அதே இருவரிடமும் சொன்னாள்.
அஷோக் - மித்ருதா உங்க கஷ்டம் புரியுது. ஆனால் மத்தவங்களுக்காக நீங்க ஏன் வீட்டுக்கு உள்ளவே இருக்கணும். காலேஜ்ல ஸ்டுடன்ஸ் கூட இருந்தா உங்களுக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும்.
சுபா - ஆமா டி, அவர் சொல்லுறதும் சரிதான். எவ்வளவு நாள் தான் வீட்லயே இருப்ப. இப்போ காலேஜ் ல கல்சுரல்ஸ் ( Culturals) பெருசா வேலை எதுவும் இல்லை. சீக்கிரம் ஜாயின் பண்ணு டி மித்து.
இருவரும் இன்னும் பேசி அவளை சமாதானம் செய்து அவளை ஒத்துக்க வைத்தனர். அஷோக் அப்போது தான் நிம்மதியாக வீடு திரும்பினான். சுபா அன்று அவளுடன் தங்குவதாக முடிவு செய்துவிட்டாள். இப்போது எடுத்த முடிவு இல்லை, காலையில் அவள் தனியாக பேசிக்கொண்டு இருப்பது பார்த்த போது எடுத்த முடிவு.
துருவ் அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. அங்கு சுற்றி பார்க்க நிறைய இருந்தது. கற்பனைக்கு எட்டாத உயிரினம், இடங்கள், மனிதர்கள் எல்லாம் இருந்தது. எதையும் கவனிக்காமல் மித்ருதா நினைப்பில் படுத்து இருந்தான். அப்போது ராஜா, ராணி உள்ளே வந்தனர்.
ராஜா - என்ன துருவ் , வெளிய சுற்றி பார்க்கலையா? நெறைய இடம் இருக்கு. நான் வேணும்னா ஒரு தேவதையை உங்க உதவிக்கு வர சொல்லவா. அவங்க எல்லாம் இடத்துக்கும் கூட்டிட்டு போவாங்க என கரிசனமாக கேட்க
துருவ் சுவற்றை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தான். பதில் இல்லை அவனிடம்.
ராணி - துருவ் உங்களுக்கு பிடிச்சது ஏதாவது சொல்லுங்க. பூமில வாழ்ந்த அப்போ கிடைக்காத ஒரு பொருள் அதை சொல்லுங்க நான் மந்திரம் போட்டு தர்றேன். நான் மந்திரம் உபயோகம் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. சீக்கிரம் சொல்லுங்க துருவ் , எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு என்று சந்தோசமும், எதிர்பார்ப்பும் கலந்து வினாவினாள்.
இவர்கள் தனக்காக மெனக்கெட்டுவது புரிந்தது. இனிமேலும் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதனால் வாயை திறந்தான்.
துருவ் - கேட்டதே போதும், எனக்கு எதுவும் தேவையில்லை. தேங்க்ஸ் என்றான் வெறுமையான குரலில்.
ராஜா, ராணிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. இது போல் மனிதர்கள் இருந்தார்கள் ஆனால் சொர்கத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி அவர்கள் மனதை மாற்றியது. அதே போல் துருவ் மாறுவான் என எதிர்ப்பார்க்க அவன் நாளுக்கு நாள் சோகமாகிக்கொண்டே சென்றான்.
ராஜா துருவ் அருகில் வந்து அவன் தோல் தொட்டு திருப்பினான்.
ராஜா - இப்படி இருக்காத துருவ் . நீ இருக்கிறது சொர்கம். உன்ன சுற்றி உள்ளவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க பாரு. இந்த இடத்தோட இன்னொரு சிறப்பு மகிழ்ச்சி தான். அதை நீ புரிஞ்சிக்கணும். இனிமேல் இதுதான் உன்னோட இடம், இங்க தான் இருக்க போற. நீ தனி ஆள் துருவ் , உலகத்துல உள்ள எல்லா மனுஷங்களும் தனி மனிதர்கள் தான்.
ராஜா சொல்வதையே கூர்ந்து கவனித்தான்.
ராணி - ராஜா சொல்றது சரிதான். கடைசி வரைக்கும் நமக்கு பிடிசவங்க கூட நம்மளால இருக்க முடியாது துருவ் . என்னைக்காச்சும் ஒரு நாள் அந்த பூமியை விட்டு போய் தான் ஆகனும். உனக்கு மித்ருதாவுக்கு முன்னாடியே அது நடந்துருச்சு அவ்வளவு தான்.
ராஜா - சந்தோசமா இரு துருவ் . இந்த இடத்துக்கு வர நீ நெறைய நல்லது பண்ணிருக்கணும். அதான் நீ இங்க வந்திருக்க. செத்த அப்புறம் நமக்கு பொறுப்பு இல்லனு நினைக்காத. இந்த இடம் சந்தோசத்துக்கான இடம். அதன் சிறப்பு மாறாம பார்த்துக்க வேண்டியது உன்னோட கடமையும் தான்.
அவர்கள் சொல்லுவது அப்போது தான் மண்டையில் உரைத்தது. சொர்கத்தில் இருப்பவர்கள் இவன் சோகத்தால் மூழ்கடிக்க அவனுக்கு பிடிக்கவில்லை. இவர்களுக்காக மாற முயன்றான். அதனை அவர்களிடமும் தெரிவித்தான். அதில் ராஜா ராணி இருவருக்கும் சந்தோசம்.
துருவ் - மித்ருதா சந்தோசமா இருக்க ஏதாச்சும் வழி இருக்கா?
ராணி - துருவ் நீ இங்க இருந்துட்டு, பூமியில நடக்கிறதை எதையும் மாற்ற முடியாது. அவங்கவங்களுக்கு நடக்க வேண்டிய பிரச்சனை, துன்பம், கெட்டது எல்லாமே நடந்தே ஆகும். எல்லாமே நல்லதா நடந்துட்டா சொர்கத்துக்கும் , பூமிக்கு என்ன வித்தியாசம். எல்லாம் தாண்டி வாழுறது தான் வாழ்க்கை.
இதனை கேட்டதும் மீண்டும் துருவ் சோகமாகி விட்டான். அதனை சரி செய்ய ராஜா..
ராஜா - வருத்தப்படாத துருவ் . அவங்க சந்தோசம் உன்கிட்ட தான இருக்கு. உன்னோட சந்தோசம் அவங்க கிட்ட இருக்கு. நீ இங்க சந்தோசமா இரு துருவ். அதுவே அவங்களை வாழ வைக்கும். நீ செத்து சந்தோசமா இல்லனு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. அவங்க நல்லா இருக்கணும்னு நீ வேண்டிக்கோ. அதுவே போதுமானது.
இருவரும் முடிந்த அளவு அவனை சமாதானம் செய்து அப்போதைக்கு அவன் மனதை மாற்றினர். பின் இருவரும் விடை பெற்று பறந்து சென்றுவிட்டனர்.
துருவ் அவர்களை சொன்னதையே மனதில் அசைப்போட்டு பார்த்தான். அவர்கள் சொல்லுவது சரி என்று தான் தோன்றியது. அவன் காலம் முடிந்து விட்டது. மித்ருதா அவளுக்கு இருக்கும் காலம் வரை சந்தோசமாக இருக்க வேண்டும் என மனதார நினைத்தான்.
அதற்கு பின் தான் அவனுக்கு ஒரு தெளிவு வந்தது. அவன் இறந்து விட்டான் என உணர்வு பூர்வமாக மனதில் பதிய வைத்த பின் தான் சுற்றி உள்ளது அவன் கவனத்தில் பதிந்தது.
பல நாள் அப்புறம் அந்த அறையை விட்டு வெளியே வந்தான். சுற்றி சிரிப்பும், சந்தோசம் மட்டுமே நிறைந்த ஒரு உலகம். அவர்கள் சிரிப்பதை பார்த்து இவனுக்கு தானாக மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டது. அங்கு பறந்து கொண்டு இருந்த இறக்கை வைத்த ஆண் மற்றும் பெண் தேவதைகள் இவனை சுற்றி வட்டமிட்டு பறந்தனர்.
அதில் துருவுக்கு மனது லேசானது போல் ஆனது. அவர்கள் சந்தோசத்தை கொடுக்கவே அப்படி செய்கின்றனர் என புரிந்தது. அவர்களை போல் பறக்க அவன் ஆசைப்பட… அடுத்த நொடி அவர்களைப்போல் முதுகில் இறக்கை முளைத்தது. அதில் அந்த தேவதைகள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். துருவ் ஆச்சரியப்பட்டு போனான். அவன் முதலில் பறக்க சிரிமபட, அவனை உற்சாக படுத்தி அவனையும் அவர்களோடு பறக்க வைத்தனர்.
துருவுக்கு இது புதுவிதமான அனுபவமாக இருந்தது. மேலே இருந்து பார்க்கும் போது அங்கு உள்ளவர்கள் கைகளை அசைத்தனர். பதிலுக்கு இவனும் கைகளை அசைத்து டாட்டா காட்டி பறந்து சென்றான். பல நாள் கழித்து கிடைத்த சந்தோசம். அழகான நீர்வீழ்ச்சி, பறந்து விரிந்த கடல், மலை, பனி என எல்லாம் இருந்தது. மிருகங்கள் கூட பார்க்க முடிந்தது.
நன்றாக சுற்றி திரிந்து அவன் அறைக்கு வந்தான். என்ன சந்தோசம் கிடைத்தாலும், மித்ருதா கூட இருந்த சந்தோசத்தை இது ஈடுகட்டவில்லை என்பதே உண்மை. அப்போது எல்லாம் ராஜா ,ராணி சொன்னதை நினைத்துப் பார்த்து மனதை தேற்ற முயன்றான்.
பெட்டில் படுத்து யோசித்துக்கொண்டு இருந்தவன்… சாடர் என்று எழுந்து அமர்ந்தான். ராஜா கூறிய வார்த்தையில் ஏதோ ஒரு பொறி தட்டியது.
துருவ் அவனுக்கு அவனே பேசிக்கொண்டான். ராஜா கடைசியாக என்ன சொன்னான் ‘ நான் செத்தும் சந்தோசமா இல்லனு தெரிஞ்சா மித்ருதா வருதப்படுவானு சொன்னான்… நான் சந்தோசமா இல்லனு அவளுக்கு எப்படி தெரியும்…அப்போ…அப்போ… மித்ருதாக்கு என்னை தெரியப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழ
இதனை ராஜா , ராணியிடம் தெளிவு படுத்திக்க நினைத்தான்.