நிகழ்காலம்
அதே நேரத்தில் மித்ருதா… துருவ் செலக்ட் செய்த அதே உடையை கையில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டு இருந்தாள்.
அவன் கூடவே இல்லை என்றாலும் தினமும் ஒரு சட்டையை எடுத்து அயன் செய்து வைப்பதை பழக்கமாகிவிட்டது. அதனை மீண்டும் துவைத்து காயப்பொட்டு இவள் உடைகளோடு மடித்தும் வைப்பாள். அவன் இருக்கும் போது என்ன செய்வாளோ அதே தொடர்ந்தாள். அப்போது தான் அவர்கள் முதல் சந்திப்பின் போது அவன் தேர்வு செய்த உடையை பார்க்கும் போது..…துக்கம் தொண்டை அடைக்க அதனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவர்களின் இரண்டாம் சந்திப்பை நினைத்துப் பார்த்தாள்.
அப்போது தான் மித்ருதா இரண்டாவது டிகிரி PG படிக்க முதல் நாள் கல்லூரி சென்று இருந்தாள். முதல் டிகிரி அதே கல்லூரியில் பயின்றதால் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. பாதி பேர் இவள் கூட பயின்ற மாணவர்கள் தான் எனவே சாதாரணமாகவே இருந்தது.
அன்று அவள் அந்த மஞ்சள் நிற உடையை தான் போட்டு வந்து இருந்தாள். வாயிலில் நுழையும் போதே பல விதமான மாணவர்களை பார்க்க முடிந்தது. பொண்ணுங்களை சைட் அடிக்கும் ஒரு கூட்டம், சிலர் புதுசாக வந்து இருக்கும் மாணவர்களை ரேகிங் செய்ய, சிலர் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொண்டு சென்றனர், செல்ஃபி எடுக்க என ஒரு கும்பல், திங்கள் கிழமையா இன்னைக்கு என சலிப்புடன் பலர் என பார்க்க முடிந்தது.
சந்தோசமாக வந்த சிலரில் ஒருவள் மித்ருதா. தோழிகள் எல்லாம் கேன்டீன் அருகில் இருக்கும் பெஞ்சில் அமர்ந்து இருந்தனர். அதில் ஒருவள் மித்ருதா பார்த்து கையை அசைத்து வரும் படி செய்கை செய்தாள். அவள் நித்யா. மித்ருதாவின் நெருங்கிய தோழி.
ஐந்தாறு பெண்கள் இருந்திருப்பார்கள்… ஆளுக்கு ஒரு புறம் உட்கார்ந்து செமஸ்டர் லீவில் நடந்ததை பேசிக்கொண்டு இருந்தனர். மித்ருதா பொதுவாக எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு அவர்கள் பேச்சில் இணைந்து கொண்டாள். பேச்சு இறுதி ஆண்டில் கடைசி நாள் தொடங்கி இன்னைக்கு காலையில் வீட்டில் நடந்தது வரை பேசினர். அவர்கள் சிரிப்பொலி தான் அந்த இடத்தை நிறைத்தது. அதில் இவர்கள் இப்போது சீனியர் ஆகிவிட்டனர் என்ற மிதப்பு கொஞ்சம் இருந்தது.
இடையில் நித்யா யாருடனோ சாட் செய்வதும் சிரிப்பதுமாய் இருந்தாள். அதனை மித்ருதா கவனித்தாள். ’என்ன’ என்று கண்களால் வினாவ… அதற்கு நித்யா அருகில் உள்ளவர்களை கண்களை காட்டி அப்புறம் சொல்கிறேன் என செய்கை செய்தாள்.
எல்லோரும் இப்படி ஒரு சூழலை கடந்து வந்து இருப்போம். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் ஒரு சில விஷயம் குறிப்பிட்ட ஆளை தவிர யாரிடமும் பகிர மாட்டோம் அதே நித்யா செய்தாள். மித்ருதா அதனை புரிந்து கொண்டு அமைதியாகி விட்டாள். ஆனால் மண்டைக்குள் அது என்ன என்று ஓடிக்கொண்டே தான் இருந்தது.
அந்த குரூப்பில் இருந்து ஒன்று இரண்டு பேராக அப்படியே கலைய… நித்யா , மித்ருதா மட்டுமே இருந்தனர். தோழியுடன் தனிமை கிடைத்ததும் அப்படி ஒரு பரபரப்பு இருவரிடமும். பகிர நிறைய விஷயம் இருந்தது.
மித்ருதா - என்ன டி ஏதோ அப்புறம் சொல்றேன்னு சொன்ன? என்ன விஷயம் அது? என வினாவிய படி தோழி நோக்கி திரும்பி அமர்ந்தாள்.
அவள் கேட்டதும் நித்யா முகத்தில் அவ்வளவு வெட்கம்; லேசாக சிரித்துக்கொண்டு
நித்யா - அது வந்து மித்து.. நான் சொல்லுவேன் ஆனா நீ கேலி பண்ணி சிரிக்க கூடாது இப்போவே சொல்லிட்டேன்
மித்ருதா - சரி டி, முதல்ல விஷயம் என்னனு சொல்லு.
நித்யா - மித்து… எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருக்கி டி. எங்க அத்தை பையன பேசி முடிசிட்டாங்க. அவர் கூடத்தான் மெசேஜ் பண்ணிட்டு இருந்தேன் என்றாள் சந்தோசம் பாதி வெட்கம் பாதியாக.
மித்ருதா கேட்டதும் முதலில் அதிர்ச்சியாகி விட்டாள். பின் தன் தோழிக்கு இதில் விருப்பம் இருக்கிறது என்பது தெரிந்த பின் அவளுக்கும் சந்தோசமே.
மித்ருதா - என்ன டி சொல்ற? நிஜமாவா? ரொம்ப சந்தோசம். ஆமா அண்ணன் என்ன செய்றாங்க? எந்த ஊரு? எப்போ கல்யாணம்? என்று கேள்விகளை அடுக்கினாள்.
நித்யா - ஒரு ஒரு கேள்வியா கேளு மித்து. அவங்களும் இந்த ஊரு தான். கல்யாணம் இன்னும் ரெண்டு மாசத்துல. இங்க ஒரு பிரைவேட் பேங்க்ல வேலை செய்றாங்க டி.
மித்ருதா - கல்யாணம் ஆன அப்புறம் படிக்களாம்னு சொல்லிருக்காங்களா? என கொஞ்சம் கவலையாக கேட்டாள். எங்கே கல்யாணம் ஆன பின் தன் தோழி கல்லூரி வர முடியாமல் போகுமோ என்ற பரிதவிப்பு அவள் குரலில் இருந்தது.
நித்யா - அவங்க கல்யாணம் பண்ணிட்டு படிக்கலாம்னு சொன்ன அப்புறம் தான் நான் ஓகே சொன்னேன். கல்யாணம் ஆன அப்புறம் அவங்க வீட்ல இருந்து வருவேன் அவ்வளவு தான் வித்தியாசம்.
மித்ருதாவுக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது. அவளிடம் இருக்கும் சந்தோசம் இப்போது இவளிடமும் ஒட்டிக்கொண்டது.
மித்ருதா - எப்படி டி, தீடீருனு கல்யாணம் பேசி முடிச்சாங்க? இதுக்கு முன்னாடியே மாப்பிளை பார்த்தாங்களா? என தெரிந்து கொள்ளும் ஆர்வர் அவளிடம்.
நித்யா - இல்லை மித்து, லீவ் அப்போ ஊருக்கு போயிருந்தோம். அங்க வெச்சு தான் இவங்க ஃபேமிலிய மீட் பண்ணோம். அவங்க பையனுக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருக்கிறதா சொன்னாங்க. அப்படியே பேச்சு அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்ட வந்துருச்சு. ஒரே ஊரு, நல்ல வேலை எல்லாமே அமஞ்சதுனால வீட்ல பேசி முடிச்சிட்டாங்க.
மித்ருதாவுக்கு தோழி முகத்தில் கல்யாண கலை நன்றாக தெரிந்தது. பின் நேரம் ஆவதை உணர்ந்து இருவரும் வகுப்பறைக்கு சென்றனர். சிலர் புதுசாக வந்திருக்க, முதல் நாள் என்பதாலும் பேராசிரியர்கள் பாடம் நடத்துவதில் ஆர்வம்காட்டவில்லை. ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள, பேச, சிரிக்க என்றே நேரம் சென்றது.
இடைவெளியில் கேன்டீன் செல்லலாம் என இருவரும் மீண்டும் கீழே வந்தனர். நித்யாவின் இரு கைகளிலும் சமோசா பிளேட் இருந்தது… மித்ருதா தான் டீ வாங்கினான். ஒரு டீ கப்பை விளிம்பில் பிடித்தாள் மற்றொரு கப்பை கடைக்காரர் அவள் உள்ளங்கையில் வைத்துவிட்டார். அதனை வாங்கிக்கொண்டு திரும்பும் வேலையில் உள்ளங்கையில் உள்ள டீ சுட ஆரம்பித்து விட்டது.
நித்யாவை கூப்பிடலாம் என்றால் அந்த கூட்டத்தில் கண்டிப்பாக கேட்காது. இருந்தும் “ அய்யயோ நித்யா கை சுடுது டி. இதை கொஞ்சம் வாங்கு” என்று கத்த. அருகில் இருந்த ஒரு நபர் அந்த கப்பை வேகமாக எடுத்தார். கப்பை எடுத்ததும் சூடு போக கையில் ஊதினாள், ஆனாலும் எரிச்சல் இருந்தது. நன்றி சொல்ல நிமிர்ந்து பார்க்கும் போது தான் தெரிந்தது அன்னைக்கு கடையில் பார்த்த அதே பையன்.
இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திப்பார்கள் என்று நினைக்கவில்லை, அதுவும் கல்லூரியில் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. மித்ருதா அவனையே பார்த்துக்கொண்டே இருந்தாள். ஏதோ ஒரு உணர்வு அவனை பார்க்க சொல்லியது. இவ்வளவு நேரம் சுற்றி கேட்ட கூச்சல் சத்தம் எதுவும் அவளுக்கு கேட்கவில்லை. நிசப்தமாக இருப்பது போல் ஒரு பிரம்மை ஏற்ப்பட்டது, அவன் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தான். அவனுக்கும் அதே தோன்றியதோ என்னவோ கண்ணிமைக்காமல் பார்த்தான். இருவரையும் தெளிய வைத்தது நித்யாவின் குரல் தான்.
நித்யா - என்ன டி மித்து, இங்கேயே நின்னுட்ட. தேங்க்ஸ் அண்ணா என்று துருவ் பார்த்து சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த டீ கப்பை வாங்கிக்கொண்டாள். பின் மித்ருதாவிடம் பேசிக்கொண்டே அவள் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
துருவின் உள்ளுணர்வுக்கு அவளை விட மனம் வரவில்லை. அவனுக்கே இது புதிதாக இருந்தது. திரும்பி நின்று தலை கொதிக்கொண்டான். முதல் சந்திப்பு அப்போது நடந்து நியாபாகம் வந்தது. அவள் போட்டு இருந்த உடை நினைவில் வர சடார் என்று திரும்பிப் பார்த்தான். அந்த மஞ்சள் உடையில் தான் அழகாக இருந்தாள்.
அவளும் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே தான் நித்யா இழுத்த இழுப்புக்கு நடந்தாள். அவன் திரும்பி பார்த்ததும் இருவரின் கண்களும் மோதிக்கொண்டன. துருவ் மனதில் இனம் புரியாத மாற்றம். அவளும் தன்னை பார்க்கிறாள் என்று தெரிந்த உடன் லேசாக அவளை பார்த்து சிரித்தான்… ‘நீ எனக்கு தெரிந்த பெண் தான்’ என்பதை தெரியப்படுத்த.
‘எனக்கும் உன்னை நினைவில் இருக்கிறது’ என்பதை சொல்ல பதிலுக்கு அவளும் லேசாக புன்னகை செய்தாள். அதில் துருவின் சிரிப்பு மேலும் விரிந்தது. அவள் உடையை காட்டி கைகளில் ‘சூப்பர்’ சென்று செய்கை செய்து காட்டினான். அன்று போல் இன்று வெட்கம் வர சிரித்துக்கொண்டுடே திரும்பிவிட்டாள் மித்ருதா.
அடுத்த வகுப்பில் கவனம் எதுவும் அங்கு இல்லை. சிந்தனை எல்லாம் அவன் மட்டுமே. ‘ அவன் இங்க என்ன செய்கிறான். பார்க்க நல்லா பார்மல்ஸ் போட்டு ரெடி ஆகி வந்து இருக்கான். ஒருவேளை புரோபசர் ஆ இருக்குமோ என்று நினைக்கும் போதே அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது. அப்படி எல்லாம் இருக்காது என அவளுக்கு அவளே சமாதானம் செய்தாள். அய்யயோ ஒருவேளை முதல் வருடம் வந்து இருக்கும் ஜூனியர் ஆ இருக்குமோ என்று நினைக்கும் போதே வெறுப்பாக இருந்தது ‘ இப்படியே அவனை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டே இருந்தாள்.
துருவ் அங்கு சேர்ந்து இருப்பது phd படிக்க. அவள் நினைவில் நேர்லாக லைப்ரரி சென்றான். அவனின் கைடு (guide) அங்கு இருக்க; அவரை நோக்கி சென்றான். அவர் இவனுக்கு சில பல வேலைகள் கொண்டுக்க அதை கவனமாக கேட்டுக்கொண்டான். பின் அவர் சென்றுவிட… அவனின் வேலை லைப்ரரியில் இருப்பதால் அங்கேயே அமர்ந்து அவர் சொல்லியவற்றை செய்தான். அவ்வப்போது மித்ருதா நினைவில் வந்து இம்சை செய்தாள். அவள் இங்கு தான் படிக்கிறாள் என்று நினைக்கும் போதே அவன் அறியாமல் ஒரு சந்தோசம். அடுத்த முறை பார்க்கும் போது அவளிடம் பெயர் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
மதிய இடைவெளியில் கிளாசில் உட்கார்ந்தே சாப்பிட்டனர். துருவ் கேன்டீன் வந்து அவள் அங்கு இருக்கிறாளா என்று தேடிப் பார்த்தான் அவள் அங்கு இல்லை என்றதுm4 மறுநாள் அவளை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.
காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு கிளம்பும் போது நித்யா பேச்சை தொடர்ந்தாள்.
நித்யா - ஆமா மித்து, உனக்கு எப்போ கல்யாணம் வைப்பாங்க?
மித்ருதா - வீட்ல கேட்டாங்க… படிப்பு முடிஞ்ச அப்புறம் தான் சொல்கிருகேன். பைனல் இயர் ல மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சிடு்வோம்னு அம்மா சொன்னாங்க சரினு சொல்லி வெச்சிருக்கேன் டி. என்ன தீடிருனு கேக்குற?
நித்யா - உங்க வீட்ல இந்த மாதிரி விஷயத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்ல அதான் கேட்டேன்.
மித்ருதா - ம்ம் ஆமா என்ன செய்ய. காதல், கல்யாணம்னு வந்துட்டா மட்டும் இந்த பெத்தவங்க பழைமைவாதிகளா மாறிடுறாங்க என்று சொல்லி சலித்துக்கொண்டாள். பேசிய அப்படியே பஸ் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
மித்ருதா வீட்டுக்கு சென்று உடை மாற்றிய போதும் அவன் நியாபகம் தான். அவன் மீண்டும் சூப்பர் என்று செய்கை செய்தது புன்னகை வரவழைத்தது. நாளைக்கு அவனை பார்க்க முடியாமா என்று எண்ணிக்கொண்டு தூங்கியும் விட்டாள்.
மறுநாள் அவள் பயந்தது போலவே அவனை அவள் வகுப்பில் பாடம் எடுக்க வரும் பேராசிரியர் ஆக பார்த்த போது அதிர்ச்சியாகி விட்டாள். ஆனால் அவனோ அவளை பார்த்த சந்தோசத்தை உள்ளே மறைத்துக்கொண்டு எல்லோரிடமும் அவர்கள் பெயர் என்ன என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். அவனுக்கு அவள் பெயரை தெரிந்துகொள்ள வேண்டுமே.
நிகழ்காலம்..
அந்த மஞ்சள் உடையை அணைத்துக்கொண்டு அழுதுகொண்டே அன்றைய நிகழ்வை நினைத்துப்பார்த்தாள். மீண்டும் அந்த நாளில் இருந்தே வாழ்க்கை தொடங்கினால் நன்றாக இருக்கு.. துருவ் உடன் மீண்டும் வாழலாம் என்று காதல் கொண்ட மனம் ஆசை காட்டியது. மூலையோ அதற்கு சாத்தியமே இல்லை அவன் இறந்து விட்டான் என்று நிதர்சனத்தை சொன்னது.
அவள் அறைக்கு சென்று தூங்க முயற்சி செய்தாள். கண்கள் மூடினால் அவன் மட்டுமே கண் முன் வந்து நின்றான். எங்கே கண்களை திறந்தால் காணாமல் போய்விடுவானோ என்று கண்களை மூடிக்கொண்டு படுத்து இருந்தாள். அப்படியே தூங்கியும் விட்டாள்.
இதனை மேலே இருந்து துருவ் பார்த்துக்கொண்டே தான் இருந்தான். அவன் மனைவி படும் துன்பம் இவனை மிகவும் வருத்தியது. அப்போது அந்த கடவுள் மீது கோவமாக வந்தது.