மித்ருதா சுபா சமையல் செய்து முடித்தனர். மித்ருதா மனது கேட்காமல் அஜய்க்கு ஃபோன் செய்தாள். அதற்காகவே காத்து கொண்டு இருந்தவன் போல் உடனே எடுத்தான். அவன் தோழி மேல் இருக்கும் கோவம் எல்லாம் பனித்துளி போல் தான்.
அஜய் - சொல்லு மித்து..
மித்ருதா - வீட்டுக்கு வா. சாப்பாடு ரெடி பண்ணிட்டேன்.
அஜய் கொஞ்சமும் சொரணை இல்லாமல் சரி என்றான். மித்ருதாவுக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது. அஜய் அப்படித்தான் எதையும் பெரிதாக எடுத்துக்க மாட்டான். அவனுக்கு அவள் தோழி நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். இங்கே இருந்தால் காலேஜில், அக்கம் பக்கத்தினர், கடையில் தெரிந்தவர் என பழையதை நினைவு படுத்தி வாழ விட மாட்டார்கள் எனவே வேறு இடத்துக்கு மாற சொன்னான். அது அவன் இருக்கும் இடம் ஆனால் அவனை கூப்பிடும் தொலைவில் இருப்பான் எனவே அவளை கூட கூப்பிட்டான். அவள் இதே வாழ்கையில் தேங்கி நிற்காமல் இருக்க ஒரே வழி வேறு ஊரு போவது.
அதே தான் வீட்டில் வந்ததும் மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் எடுத்துக் சொன்னான். அவன் சொல்லுவதில் இருந்த உண்மை புரிந்தது. மித்ருதா இதை பற்றி யோசிப்பதாக வாக்கு கொடுத்த பின் தான் சமாதானம் ஆனான்.
சுபா, அஷோக் அமைதியாக இருந்தனர். மித்ருதாவை போக வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை… அவள் இங்கு இருக்கும் வரை அவர்கள் பார்துக்கொள்ளுவார்கள் தான்… ஆனால் மித்ருதா வாழ்க்கை? இங்கேயே இருந்தால் அவள் மனம் மாறாது எனவே அவளுக்கு எது நல்லதோ அதை அவளே முடிவு செய்யட்டும் என அவளிடம் விட்டுவிட்டனர்.
ஒருவர் பின் ஒருவராக கிளம்பு விட… மீண்டும் வீடு வெறிச்சோடி விட்டது. இந்த அமைதி தாங்க முடியாமல் அருகில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு எடுத்தாள். இவளுக்கு இந்த வீட்டில் ஆறுதலாக இருப்பது துருவ் உருவாக்கிய தோட்டம் தான். பூக்கள் எல்லாம் இன்று ஏனோ மலர்ந்து சிரிப்பது போல் தோன்றியது. அதில் துருவ்வை கண்டாலோ என்னவோ அங்கு சென்று அமர்ந்து அதனுடன் பேசினாள். என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் இருப்பதனை அதனிடம் புலம்பித் தீர்த்தாள்.
பின் நேரம் ஆவதை உணர்ந்து கோவிலுக்கு கிளம்ப தயாராக சென்றாள். முதலில் துருவ் உடையை கட்டிலில் வைத்து விட்டு அவள் உடைகளை உடுத்தி தயாராகினாள். பெட்ரூம் கதவை மூடும் முன் அவன் உடையை ஒரு முறை நுகர்ந்து பார்க்க அவன் வாசம் வீசியது. மனதில் ‘ துருவ் , நீ இது எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கியா? எங்க இருந்தாலும் என்கிட்ட வந்துரு ‘ என மனம் கலங்கி பேசினாள்.
கடவுளிடம் சண்டை இட கோவிலுக்கு வந்தாள். பகல் நேரம் கூட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்தது. சாதாரண காட்டன் சுடிதார் மேலே குளிருக்கு இதமான ஸ்வெட்டர், ஜடயை பிண்ணி போட்டு இருந்தாள். முகத்தில் சின்ன பொட்டு இவ்வளவே.
கடவுளை வேண்ட கண்களை மூடினால் துருவ் தான் தெரிந்தான். கண்கள் லேசாக கலங்கியது. சண்டையிட வந்தவள் கடவுளிடம் கேட்டதோ ‘ தனியாக வாழ தைரியம் வேண்டும் ‘ என்பது தான். வேறு என்ன கேட்க முடியும் ‘ செத்து போன துருவ் வேண்டும் என்றா??? ஆனால் பேதைப் பெண் அதையும் கேட்டாள். கேட்டு முடிக்கும் போது இமைகள் உள்ளே அணை போட்டு வைத்து இருந்த கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. யாரும் பார்க்கும் முன் துடைத்து விட்டு திருநீர் எடுத்து வைத்து விட்டு அடுத்த சந்நிதி சென்று விட்டாள்.
அடுத்த சந்நிதிக்கு படிகளில் ஏறும் போது குழந்தை ஒன்று இறங்கிக்கொண்டு இருந்தது. குழந்தை முதல் படியில் இருந்து விழப்போக… விரைந்து செய்யல் பட்டு மித்ருதா கண் இமைக்கும் நொடியில் பிடித்துவிட்டாள். அந்த பெண் குழந்தையோ “ தேங்க்ஸ் ஆன்டி” என்று விட்டு பறந்துவிட்டாள்.
மித்ருதா மனதில் ‘குழந்தைய தனியா விட்டு பெத்தவங்க எங்க போனாங்க, கீழ விழுந்து இருந்தா கண்டிப்பா அடி பட்டு இருக்கும் ‘ என நினைத்தவாறே சாமி கும்பிட்டு விட்டு பிரகாரத்தை சுற்றினாள்.
சுற்றி முடித்து விட்டு தூண் அருகில் அமர்ந்தாள். அப்போது பின்னாடி இருந்து ஒரு ஆணின் “ ஒரு நிமிஷம்” என கூப்பிட்டான். திரும்பி பார்த்த நொடி அந்த குழந்தை அவன் அருகில் நின்று இருந்தது. அவள் அப்பா போல என எண்ணிக்கொண்டாள்.
எதுவும் பேசாமல் கேள்வியாக அவனை பார்க்க…. “ ரொம்ப தேங்க்ஸ், பாப்பா சொன்ன கீழ விழ போன அப்போ நீங்க உதவி பண்ணதா “. சின்ன சிரிப்புடன் “ பரவாயில்லை. இருக்கட்டும் சார்” என்றாள். பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அவளுக்கு பக்குவம் இல்லை எனவே மேலே எதுவும் தொடராமல் அந்த உரையாடலை அங்கேயே முடித்தாள்.
தகப்புடன் கொஞ்சம் தூரம் சென்ற குழந்தை மீண்டும் வந்து “ அழாதீங்க ஆன்டி. சாமி நீங்க கேட்டதை கண்டிப்பா கொடுக்கும் “ என சொல்லிவிட்டு ஓடியே விட்டாள். முகத்தை வைத்தே சோகத்தை புரிந்து கொண்ட குழந்தைய பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஆசையாகவும் இருந்தது. ஏக்கமாகவே போகும் அப்பா, பொண்ணையும் பார்த்தாள்.
துருவ் இருந்தால் எங்கள் குழந்தையும் இப்படி அழகாக பேசி சிரித்து இருக்கும் என வரும் எண்ணத்தை நிறுத்த முடியவில்லை.
கனத்த மனதுடன் வீட்டுக்கு திரும்பி விட்டாள். குளிர் ஜாஸ்தியாக இருக்க… ஃபயர் பிளேஸ் இல் விறகை போட்டு விட்டு அதற்கு முன் அமர்ந்துகொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் மூழ்கி விட்டாள்.
மேலே….
ராஜா ராணி துருவ் அறைக்கு வந்தனர். துருவ் யோசனையில் அமர்ந்து இருந்தான்.
ராணி - என்ன துருவ்? இன்னும் உன்னோட சந்தேகம் போகலையா?
துருவ் - அது இல்ல ராணி… ஆமா நீங்க ரெண்டு பேரும் எங்க போனீங்க. ஆளையே பார்க்க முடியல
ராஜா - அது ஒன்னும் இல்ல துருவ். கொஞ்சம் வேலையா இருந்தது. சரி உன்னோட குழப்பம் என்னனு சொல்லு. எங்களால முடிஞ்ச தீர்வு சொல்றோம்.
என இருவரும் அவனுக்கு இரு புறமும் அமர்ந்தனர்.
துருவ் - அன்னைக்கு எனக்கு ஆக்சிடென்ட் ஆகும் போது…வேற யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுனு நான் வண்டியை வலது புறம் திருப்பினேன். ஒரு வேளை நான் இடது புறம் திருப்பி இருந்தா என்ன ஆகிருக்கும்? நான் உயிரோட இருந்து இருக்க வாய்ப்பு இருக்கா?
பொதுவாக எல்லோருக்கும் இதே நினைப்பு அடிக்கடி வரும், ஒன்று செய்து அது தவறாக போய்விட்டால் அதனை வேறு வழியில் செய்து இருந்தால் சரியாக வந்து இருக்குமோ என்ற சந்தேகம் மனித இயல்பு தான் அதே தான் துருவுக்கு தோன்றியது.
ராணி - குட் கொஸ்டீன் துருவ். இதுக்கு வார்த்தையா பதில் சொன்னா உனக்கு புரியாது. ஒரு வீடியோவா காட்டுனாதா உனக்கும் தெரிஞ்சிக்க முடியும்.
ராஜா ராணி இருவரும் சேர்ந்து மந்திரம் போல் ஏதோ செய்து சொடுக்கிட… திரை ஒன்று முன்னாடி தெரிந்தது.
மூவரும் அதனை பார்த்தனர். அதில் ஆக்சிடென்ட் அன்று நடந்தது திரையில் ஓடியது. துருவ் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு வர… அருகில் ஒரு அப்பா பொண்ணு பைக்கில் வந்தனர். இடப்பக்கம் பெட்ரோல் பங்க், சிலிண்டர் கொண்டு வரும் வேன் என இவன் கருத்தில் அன்று பதியாதது எல்லாம் இன்று காணொளியில் பார்க்க முடிந்தது.
முன்னாடி அதிவேகமாக வந்த வண்டி துருவ்வை இடிக்க… இந்த காணொளியில் துருவ் வண்டியை இடப்பக்கம் திருப்பினான். அதில் அவன் அப்பா பொண்ணு இருந்த வண்டியில் இடிக்க அவர்கள் தூக்கி எரியப்பட்டனர், அவர்கள் வந்த வண்டி உரசிக்கொண்டு சென்றதில் பெட்ரோ லீக் ஆகி… அதில் இருந்து வந்த தீப்பொறி பட்டு சிலிண்டர் வேனில் இருந்து தொடங்கி பெட்ரோல் பங்க் வரை வெடித்து பெரிய விபத்தை ஏற்படுத்தியது. துருவ் சில காயங்களுடன் உயிர் பிழைத்து ஒரு ஓரத்தில் கிடந்தான். ஆனா சுற்றி இருந்த பலர் அதில் உயிர் இழந்து இருந்தனர். காணொளி அதோடு முடிந்து விட்டது.
ராஜா - இப்போ புரியுதா துருவ். நடக்குற எல்லா விஷயம் பின்னாடியும் ஒரு காரணம் இருக்கும்னு. உனக்கு ஒரு விஷயம் தப்பா நடந்தது ஆனா அது பல குடும்பங்களுக்கு நல்லதா அமஞ்சது. நீ மட்டும் அன்னைக்கு சுயநலமா இருந்து இருந்தா நீ உயிரோட இருந்து இருப்பா… ஆனா பலி ஆன உயிர்கள் நெறைய இருந்து இருக்கும்.
ராணி - நீ நிஜமாவே ஹீரோ துருவ். நீ அன்னைக்கு காப்பாத்த நினச்சது அந்த அப்பா பொண்ணு மட்டும் தான்… ஆனா உனக்கே தெரியாம நீ எவ்வளவு பேரை காப்பாதிருக்க பாத்தியா…
துருவ் பார்த்த காணொளியில் உறைந்து போய் இருந்தான். கோரமான ஒரு நிகழ்வு அவன் இறப்பால் தடுக்க பட்டு இருக்கிறது.
ராணி - துருவ், எப்போதும் நீ தான் எங்ககிட்ட கேள்வி கேட்டுட்டே இருப்ப. இப்போ நான் உன்கிட்ட ஒன்னு கேக்கவா?
நினைவுகளில் இருந்து மீண்ட துருவ் என்ன என்று கேட்க
ராணி - இதை நீ பார்த்த அப்புறம் கூட… நீ வண்டியை வேறு பக்கம் திருப்பி இருந்தா பிழச்சி இந்நேரம் உயிரோட இருந்து இருக்கலாம்னு தோணுதா உனக்கு? என குதர்க்கமாக வினாவினாள்.
ராஜா ராணி இருவரும் அவன் பதிலுக்கு மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்தனர். துருவ் கொஞ்சமும் யோசிக்காமல்
துருவ் - கண்டிப்பா இல்லை. நான் அதுக்கு இப்போ வருத்தப் படலை. ஆனா ஒருத்தன் பண்ண தப்பால இப்போ கஷ்ட படுறது நாங்க தான அதான் யோசிச்சேன். அவனுக்கு தண்டனை எதுவும் இல்லையா?
ராஜா - கண்டிப்பா இருக்கும். அது நடக்க வேண்டிய நேரத்தில கண்டிப்பா நடக்கும். சரி எங்களுக்கு வேலை இருக்கு. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லு துருவ்.
ராணி - நாளைக்கு சந்திக்கலாம் துருவ் என இருவரும் விடை பெற்று சென்றனர்.
துருவ் மித்ருதா இருவருக்கும் நடந்த அழகான நினைவுகளில் மூழ்கி விட்டான். அவன் இறந்து அவனுக்கு நிம்மதி தரும் ஒரே விஷயம் அவள் நினைவுகள் தான்.
மித்ருதா வீட்டில் படுத்து இருக்கும் போது அந்த குழந்தையின் நினைவு தான். ஒரே போல் நகர்ந்த அவள் நாட்களில் வித்தியாசமாக நடந்த நிகழ்வு தான் அந்த குழந்தையை சந்தித்தது. அவள் சொன்ன வார்த்தை ‘ சாமி நீங்க கேட்டதை கொடுக்கும் ‘ இது மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவளையும் அறியாமல் ஒரு நம்பிக்கை மனதில் தோன்றியது. பல நாள் கழித்து ஆழ்ந்த உறக்கம்.
ஒரு வாரம் ஆமை போல் மெதுவாக சென்றது. காலேஜில் தேவை இல்லாமல் பேசுபவர்கள் வார்த்தைகளை மித்ருதா காதில் வாங்கவே இல்லை. உண்மையான ஆறுதல் நடந்ததை பற்றி பேசாமல் இருப்பது என்பதை சிலர் புரிந்து கொண்டு அவளுடன் சகஜமாக பேசினர். காலேஜ் கல்சுரல்ஸ் என கொஞ்சம் ஓய்வுடன் சென்றது. தினமும் அவள் துருவ் கல்லறைக்கு செல்வதை விடவே இல்லை.
துருவ் இறந்து ஒரு மாதம் ஆகி விட்டது. மித்ருதா மனதில் அவளுக்கும் மாற்றம் தேவை என்ற எண்ணம் தோன்ற செமஸ்டர் லீவில் எங்கேனும் சென்று வரலாம் என முடிவு செய்தாள்.
தெரியாத மக்கள், புதிய இடம், பரிதாப பார்வையில் இருந்து ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என மனம் கேட்ட… உடனே பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேறு ஒரு ஹில் ஸ்டேஷன் ஊரில் தங்க டிக்கெட் புக் செய்தாள்.
ஒரு வாரம் துருவ்வை பார்க்க முடியாது ( கல்லறை ) அது கஷ்டமாக இருக்க… கொஞ்சம் தெம்பை வரவழைக்க இந்த இடைவேளை தேவை என்பதை புரிந்து வேறு இடத்தில் தங்குவது என முடிவு செய்து சுபா, விஷ்வா, அஜயிடம் சொன்னாள்.
துணைக்கு வருகிறேன் என சொன்ன சுபாவை வேண்டாம் என்று விட்டாள். வாழ்கையே இனிமேல் தனிமையில். தற்காலிகமான துணை எதுக்கு என்பதால் தனியே செல்ல தயாராகினாள்.