logo

உயிரோடிருந்தால் வருகிறேன் | Episode 11

Mars

Administrator
உடனே துருவுக்கு ஃபோன் செய்து நடந்ததை சொல்ல…



துருவ் - மித்ருதா, நீ பயப்படாத சரியா. நம்ம எந்த தப்பும் பண்ணல. நீ உங்க வீட்ல பேசு, நான் எங்க வீட்ல பேசுறேன். முக்கியமா அழாம இருக்கணும் புரியுதா?



மித்ருதா வீட்டில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சொல்ல… அம்மா அப்பா இருவரும் கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டனர். காதலை மறந்து விட்டு அவர்கள் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட சொல்ல… மித்ருதா அவள் மறுப்பில் அவ்வளவு உறுதியாக இருந்தாள். அது பொறுக்காத பெற்றோர் அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

துருவ் வீட்டில் அவ்வளவாக சப்போர்ட் இல்லை. பெரிய பிரச்சனை செய்தனர். குலம், கோத்திரம் என அவன் காதலை எதிர்த்தனர்.



ஒரு முறை கலந்தாலோசித்து இரு வீட்டாரும் பேசி இருந்தால்… இது போல் ஒரு மருமகள், மருமகன் கிடைக்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பர். ஆனால் நடந்ததோ வேறு. துருவ் எதிர்பார்த்த ஆதரவு அஜய் கொடுத்தான்.



அவன் மித்ருதா வயது தான். தம்பியை கூட்டிக்கொண்டு மித்ருதா வீட்டில் பேச வர, அவள் அடிவாங்கிய தெரிந்ததும் மித்ருதா வீட்டில் சண்டைப் போட்டான். அவர்கள் காதலை ஏற்றுகொள்ளததுக்கு இல்லை, மித்ருதா வை அடித்ததுக்கு. பெரிய வாக்கு வாதத்தில் வந்து முடிந்தது. மீண்டும் மித்ருதாவை அவன் கண் முன்னே ஒரு முறை அடிக்க, அவ்வளவு தான் அவளை கையோடு கூப்பிட்டு வந்து விட்டான்.



அவன் பேச போனதோ இவர்கள் தரப்பு நியாயத்தை சொல்லத்தான், மற்ற படி அவர்கள் சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ண அல்ல. இருவீட்டிலும் சேர்த்துக்கவில்லை என்றதும் அஜய் தான் அவர்கள் கொஞ்ச நாள் தங்க அவன் நண்பனின் இன்னொரு வீட்டு சாவி வாங்கிக்கொடுத்தான். அந்த வீட்டுக்கு நித்யா மற்றும் விஷ்வா நடு இரவு என்று பாராமல் இவர்களை பார்த்து ஆறுதல் சொல்ல வந்தனர்.



அஜய் தான் முதலில் அவர்கள் திருமண பேச்சை எடுத்தான். முதலில் மறுத்த மித்ருதா பின் இதுதான் ஒரே வழியாக இருக்க…அஜய், அஜய் நண்பன், நித்யா, விஷ்வா, துருவ், மித்ருதா எல்லாம் சேர்ந்து நாளைக்கு கோவில் திருமண வைத்துக்கொள்ளாமல் என்று முடிவு செய்து அதனை நடத்தியும் காட்டினர். துருவ் மனதில் எல்லாம் மித்ருதா எந்த சூழ்நிலையும் நன்றாக, பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தான்.



அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க அது அவர்கள் வீடு இல்லை என்பதால் கல்யாணம் ஆகியும் இருவரும் தள்ளியே இருந்தனர். அடுத்த ஒரே வாரத்தில் ஹில் ஸ்டேஷன் ஊரில் காலேஜில் துருவுக்கு வேலை கிடைத்து விட அங்கேயே விஷ்வா உதவியோடு ஒரு வீடு பார்த்துவிட்டான்.



அங்கு இருந்து கிளம்பும் போது அஜய் நண்பன் கையில் பணம் கொடுக்க… அந்த நண்பனோ வாங்க மறுத்தான். வற்புறுத்தி கையில் பணத்தை வைத்துவிட்டு அங்கிருந்து நித்யா, விஷ்வா விடம் சொல்லிவிட்டு கிளம்பினர் அவர்கள் காதல் பயணத்தை நோக்கி.



அவர்களோடு அஜய் துணைக்கு வந்தான். வந்தவன் மதியம் வரை இருந்து அவர்கள் வீடு செட் செய்து கொடுத்து, துருவ் வண்டியை அந்த ஊருக்கு வேனில் வந்து இறக்கி கொடுத்து என அவனால் முடிந்த உதவி செய்தான். பின் அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.



எல்லாம் முடிக்க இரவாகி விட்டது. அவர்கள் இருந்த ஊரில் சூரியன் சீக்கிரம் விடை பெற்று சென்று விட்டார். ஹில் ஸ்டேஷன் என்பதால் குளிர் ஜாஸ்தியாக இருந்தது. அவர்களுக்கு பழக்க படாத ஒன்று என்பதால் உடனடியாக பழக்கபடுதிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வீட்டில் ஹாலில் விறகு போட்டு எரித்து குளிர்காய என்ற இடம் (Fireplace ) இருக்க… அதன் அருகில் கம்பளி போர்வை போர்த்தி அமர்ந்து இருந்தான் துருவ் .



வீட்டுக்கு உள்ளேயும் நன்றாக குளிர் அடிக்க… நெருப்பில் வெளிச்சம் மட்டுமே இருந்தது. அவர்களின் வீடு, புதிதான தனிமை, காதல் ஜோடிகள் கேட்கவா வேண்டும்… இனிமையாக இருந்தது. மித்ருதா அங்கு வர… துருவ் அவளை அருகில் அழைத்தான்… படபடப்புடன் அருகில் சென்று அமர போக.. அவளை இழுத்து இருகால்களுக்கு இடையில் அமர வைத்து இருவருக்குமாக போர்வையை போர்த்தி கொண்டான்.



முதல் நெருக்கம் இருவருக்கும்… உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது. கன்னத்தோடு கன்னம் வைத்து அவன் முதல் முத்தத்தை அவள் நெற்றி ஓரத்தில் பதித்தான். லேசாக மித்ருதா அவனை திரும்பி பார்க்க அடுத்த முத்தம் அவள் கன்னத்துக்கு என்று போய் கொண்டே இருந்தது. தரையில் அமர்ந்து இருந்தவள் எப்போது அவன் மடிக்கு போனாள் என்று தெரியவில்லை.



இப்போது பதில் முத்தம் அவளின் முறையாக இருந்தது. அவன் கன்னத்தில் கிடைத்ததும்… அதற்கு மேல் நேரம் விரையம் செய்யாமல் அவளை கைகளில் தூக்கிக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்று வாழ்கையை தொடங்கினான். சேர்த்து வைத்த பரிசை பரிமாறிக்கொண்டனர்.



மறுநாள் அவள் அவன் கண்களுக்கு புதுமையாக தெரிந்தாள். காதலி மனைவியாக பார்ப்பது அழகாக இருந்தது. சமையல் இருவருமாக செய்தனர். அன்று முதல் நாள் அவனுக்கு கல்லூரி செல்லனும் என்பதால் சீக்கிரம் சென்று விட்டான். பகல் முழுவதும் மித்ருதா எண்ணம் எல்லாம் துருவ் தான். இரவில் செய்த வேலை அப்படி.



வெளியில் தெரியும் மலைகளை பார்த்துக்கொண்டு இருக்க திகட்டவே இல்லை அவ்வளவு அழகாக இருந்தது. சாயங்காலம் ஆகி இருக்க துருவ் வந்ததும் அவனுக்கு டீ போட்டு இருவருமாக இயற்கையை ரசித்தனர்.



சில நாட்கள் கொஞ்சம் சிக்கனமாக இருந்தனர்… எனவே அடுத்து வரும் மாதம் அவர்களால் நன்றாக செலவு செய்து இருக்க முடிந்தது. அதே கல்லூரியில் அவளுக்கு phd படிக்க ஏற்பாடு செய்து விட்டான். வீட்டிலே இருந்தால் கண்டிப்பாக கண்டதையும் நினைக்க தோன்றும், தனிமை சில நேரம் நிம்மதி தரும் பல நேரம் தேவையில்லாத எண்ணம் தரும் என அறிவான்… எனவே அவளை படிக்க சேர்த்து விட்டான்.



நாட்கள் அழாக சென்றது. இதுவரைக்கும் தேவைக்கு மட்டுமே பொருட்கள் இருக்க… மாதங்கள் சென்ற நிலையில் வீட்டை அழகு படுத்த பொருட்கள் வாங்கினர்… துருவ் ஆசைப்படி அவன் பூ செடிகள் வாங்கி ஒரு சின்ன தோட்டம் அமைத்தான். அங்கேயே அமர்ந்து டீ குடிக்க என மூங்கில் சேர், டேபிள் என வாங்கி அங்கே அமைத்தான். அங்கு இருந்து பார்க்க மலைகள் ஃபோட்டோ ஃப்ரேம் (Photo frame) போல் தெரிந்தது. அது அவர்களின் விருப்பமான இடமாக மாறியது.



சமையல் செய்யும் போது பின் வந்து அணைப்பதும், அவளை மடியில் அமர்த்திக்கொண்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்க என அவளை காதலால் ஒரு வழி செய்தான். அவன் மேட்ச் பார்த்தால் அடுத்த சில நொடிகளில் அவள் தூங்கி விடுவாள் அதனை சொல்லி அவளை கேலி செய்வது என நண்பர்களாக, காதலர்களாக, கணவன் மனைவியாக, அவள் படிக்கும் போது ஆசானாக என எல்லாமுமாய் இருந்தனர்.



மித்ருதா அவள் பெற்றோர்கள் திட்டினாலும் அடிக்கடி ஃபோன் செய்து பேசிவிடுவாள். துருவ் பெற்றோர்கள் பற்றி அஜய் மூலம் தகவல் வந்து விடும். இடையில் அஜய் அவ்வபோது வந்து செல்வான். கல்யாண வாழ்கையில் தன் அண்ணன், அண்ணி போல் இருக்க வேண்டும் என்று அவர்களை பார்க்கும் போது எல்லாம் நினைத்துக்கொள்வான் அஜய்.



இரண்டு வருடம் காதல் காதல் மட்டும் தான். இதே போல் இறுதி வரை வாழ பல கனவுகள் கொண்டு இருந்தனர். அது எல்லாம் ஒரே நாளில் நொறுங்கி விட்டது.



இவர்கள் கதையை சுபாவிடம் மித்ருதாவும், அஷோக்கிடம் அஜய்யும் சொல்லிக்கொண்டு இருந்தனர். ( அஜய் அவன் பார்த்த வற்றை மட்டும் சொன்னான்).



இவர்கள் காதல் கதையை கேட்ட மற்ற இருவருக்கும் துக்கமாக இருந்தது.



மித்ருதா - துருவ் , அடிக்கடி எப்பவும் உன்ன விட்டு போகமாட்டேன். உன்கூடவே இருப்பேன்னு சொல்லிட்டே இருப்பான் சுபா… ஆனா இப்போ … என முடிக்க முடியாமல் அழுதுவிட்டாள்.



சுபா - அழாத மித்ருதா. அஜய் சொன்ன மாதிரி நீ வேற எங்கயாச்சு கொஞ்ச நாள் இருந்துட்டு வா. அப்போதான் உனக்கு கொஞ்சம் மாறுதலா இருக்கும். துருவ் நினைவுகள் உனக்குள்ள இருக்கு… அது நீ எந்த இடத்துக்கு போனாலும் உயிர்ப்போடு தான் இருக்கும்.



மித்ருதா - யோசிக்கிறேன் சுபா. எனக்கும் கொஞ்சம் நேரம் வேணும். தனியா முடிவு எடுத்து பழக்கம் இல்லை. யோசிச்சு சொல்றேன்.



துருவ் எல்லாம் சொல்லிக்கொடுத்தான்… ஆனால் அவன் இல்லாமல் வாழ சொல்லிக்கொடுக்கவில்லை எனவே அவன் இல்லாமல் எந்த ஒரு விஷயம் ஆனாலும் முடிவு எடுக்க தடுமாறினாள்.



மேலே இருந்து இதனை எல்லாம் துருவ் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் இல்லாமல் அவள் திணறுவது பார்க்க பாவமாக இருந்தது. ஒன்னும் செய்ய முடியாததை நினைத்து வருத்தம் இருந்தாலும் நல்லது ஒன்று நடக்கும் என்று அவன் மனம் நம்பியது.
 
Top