வளைந்த சாலை, தொலைவில் சிறியது என்ற ஆரம்பித்து அருகில் வர வர பெரியதாக மரங்கள் தெரிய; பச்சைப்பசேல் என்று பார்பதற்கு குளிர்ச்சியாக இருந்தது. வானம் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு , மஞ்சள் நிறங்களில் நிறைந்து, அற்புதமான சூரிய உதயத்திற்கு பின்னணியாக அமைந்தது. ஒட்டு மொத்த சூழ்நிலையும் அழகாகவும், அமைதியாகவும் ஒரு காட்சியை தந்தது.
வளைந்த சாலையில் ஒன்று இரண்டு வாகனங்கள் காணப்பட்டது. காலை வேளை என்பதால் மக்கள் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்தனர். பெரியதாக ஆள் நடமாட்டம் இல்லை. இப்போது இருக்கும் நடமாட்டம் கூட இரவில் இருக்காது. வண்டியில் செல்பவர்களே இந்த இடம் வரும் போது வேகமா கடந்துபோவர். சிலர் இந்த வழியில் வராமல் சுற்றி கொண்டு செல்வதும் உண்டு. அப்படி ஒரு இடம் அது.
சாலையில் இருந்து பார்க்கும் போது கொஞ்சம் தள்ளி ஒரு பெண் நின்றுக்கொண்டு இருந்தாள். சாதாரண சேலை கட்டி, முடியை சீவாமல் ஒரு கிளிப் கொண்டு அடக்கி இருந்தாள் ஆனால் அதுவே அழகாக இருந்தது. மெஸ்ஸி ஹெர் ஸ்டைல் ( Messy hair style ). ஏன் என்றோ அவளுக்கு அவளை அழகு படுத்துக்கொள்ள ஆர்வம் இல்லை என்பது அவளை பார்க்கும் போதே தெரிந்தது. அவள் கையில் சின்னதாக ஆர்க்கிட் மலர்கள் பூங்கொத்து. ஒரு கையில் வாட்ச் மறு கையில் ஒரு வளையல் மட்டுமே. கழுத்து வெறுமையாக இருந்தது. நெற்றியில் சின்னதாக ஒரு கருப்பு பொட்டு மட்டுமே.
கண்கள் சிவப்பாகவும், சுற்றி கருவளையம், முகம் பொழிவிழந்து காணப்பட்டது. இன்னும் அழுக… கண்ணீர் தீர்ந்து போய் இருந்தது. முகத்தில் சோகம் மட்டுமே மீதம் இருந்தது. கையில் உள்ள பூங்கொத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்தாள். சுற்றிலும் மயான அமைதி. ஆம்! அவள் நிற்பதே மயானத்தில் தானே. ஒரு கல்லறை முன்பு நின்றுக்கொண்டு இருந்தாள். அதன் மேல் காய்ந்த மலர்கள் இருந்தது. நேத்து வைத்து இருப்பாள் போல். அந்த கல்லறையில் இருந்த பெயர், துருவ் கிருஷ்ணா. அவனின் 28 ஆம் வயதில் இறந்து விட்டான்.
கல்லறை முன்பு அவனுக்கு பிடித்த ஆர்க்கிட் மலர்கள் பூங்கொத்து கொண்டு நிற்பது அவனின் 25 வயது மனைவி மித்ருதா துருவ் கிருஷ்ணா. நடந்த நிகழ்வை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது.
துருவ் கிருஷ்ணா - விஜயா, பாலகிருஷ்ணணின் மூத்த மகன். இளைய மகன் அஜய் கிருஷ்ணா.
மித்ருதா - ஜெயந்தி, சங்கரின் ஒதே மகள்.
இரண்டு ஆண்டு முன்பு இருவரும் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்தனர். வீட்டில் இருவரையும் சேர்த்துக்கொள்ளவில்லை எனவே வீட்டை விட்டு வெளியேறி குடித்தனம் செய்தனர்.
அப்போது தான் துருவ் டாக்டரேட் (phd) படிப்பை முடித்து இருந்தான். அதே ஊரில் இருக்க வேண்டாம் என்பதாலும் மித்ருதா ஆசைப் பட்டாள் என்பதற்காகவும் ஹில் ஸ்டேஷன் ஊரில் செட்டில் ஆகி விட்டனர். அங்கேயே அருகில் உள்ள ஒரு டவுன்ல் இருக்கும் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தான் துருவ். அதே கல்லூரியில் அவளுக்கு phd படிக்கவும் பதிவு செய்திருந்தான்.
துருவ் phd மற்றும் மித்ருதா PG ஒரே கல்லூரியில் பயின்றார். அப்போது ஏற்ப்பட்ட தொடக்கம் இது.
கல்யாணம் ஆகிய இந்த இரு ஆண்டுகள் காதல் காலம் தான் இவர்களுக்கு. படிப்பை முடித்து விட்டு கொஞ்சம் நாள் முன்பு தான் மித்ருதாவும் அதே கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்தாள். கல்லூரியில் மரியாதை நிமிர்தமாக ஒன்று இரண்டு வார்த்தை பேசுபவர்கள் வீட்டில் மீண்டும் காதலர்களாக வலம் வருவர். திகட்டாத காதல் அவர்களுடையது….
ஒரு வாரம் முன்பு…..
மித்ருதாவுக்கு கொலுசு வாங்கலாம் என்று வண்டியை எடுத்துக்கொண்டு சென்றான். அப்போது எதிரில் ஒரு வண்டி அதிகப்படியான வேகத்தில் வர… அதற்குள் இவன் வண்டியை திருப்பப் பார்க்க அருகில் ஒரு குழந்தை முன்னாடி வைத்துக்கொண்டு ஒரு வண்டி இருந்தது. இவன் திருப்பினால் அவர்கள் மேல் தான் இடிப்பான் எனவே இன்னொருபுறம் திருப்ப எண்ணும் போதே வேகமாக வந்த வண்டி இவனை இடித்தது. தூக்கி அடிக்க பட்டு லாரி அடியில் போய் விழுந்து அப்போதே துருவ் உயிர் பிரிந்தது. இறுதியாக கண்ணை மூடும் முன்பு மித்ருதா சிரித்த முகம் தோன்ற.. அதனை பார்த்துக்கொண்டே கண்களை மூடி விட்டான்… நிரந்தரமாக.
தகவல் முதலில் அஜய்க்கு தான் தெரிய வந்தது, துருவின் நண்பன் அஷோக்கின் மூலம். அஷோக் அதே ஊரில் இருக்கும் துருவின் நண்பன். அஜய் மட்டுமே இவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தான். இவனுக்கும் மித்ருதா வயது தான் இருக்கும்.
தகவல் தெரிந்த உடன் நேராக ஹாஸ்பிடல் சென்று உறுதி செய்தான் தன் அண்ணன் தானா என்று. அவனால் நம்பவே முடியவில்லை. இதனை எப்படி அண்ணியிடம் சொல்வது என்று அழுகையாக வந்தது. அவள் அண்ணி என்பதை விட அவனுக்கு நல்ல தோழி. அவர்கள் வாழ்ந்த காதல் வாழ்கைக்கு இவனும் ஒரு சாட்சி. கலைந்த முடியுடன், அழுது சிவந்த கண்கள், எப்படி சொல்ல போகிறோம் என்ற பரிதவிப்புடன் வீட்டுக்கு வர மித்ருதா… கணவனுக்காக சமைத்துக்கொண்டு இருந்தாள். இதனை பார்க்க அவனுக்கு இன்னும் வேதனையாக இருந்தது.
அவனைப் பார்த்தது ஏதோ சரி இல்லை என்பதை புரிந்த கொண்ட மித்ருதா ‘என்ன’ என்று அழுத்திக் கேட்டாள். பதில் எதுவும் கூறாமல் அழுதுகொண்டு இருந்த அஜய் அப்போது தான் வாயை திறந்து திக்கி திக்கி சொன்னான்.
கேட்டதும் நெஞ்சம் அடைத்துக்கொண்டு, தலை சுற்றியது. அஜய் வந்து பிடித்துக்கொண்டான். அவள் அழுத அழுகையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. ஒரு வழியாக சமாதானம் செய்து ஹாஸ்பிட்டல் அழைத்து சென்றான். அதற்குள் இருவீட்டாரின் பெற்றோர்கள் வந்து இருக்க… துருவின் அம்மா அங்கு வைத்தே மித்ருதாவைவும், அவள் பெற்றோர்களையும் வசைப் பாடினார். அங்கு உள்ளவர்கள் அவரை திட்ட பின் அழுகை மட்டுமே அவரிடம்.
இது எதுவும் மித்ருதா கருத்தில் பதியவில்லை. கண்கள் எல்லாம் கணவனை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தது. பொட்டலம் கட்டி கொடுத்து இருந்தனர். அவ்வளவு சிதைந்து போய் இருந்தான். கணவனின் கையை இறுதியாக ஒரு முறை பிடிக்கலாம் என்று பார்க்க அதற்கும் வழி இல்லை.
சம்பர்தாயதுக்கு சில நேரம் வீட்டில் வைத்து விட்டு அன்றே எல்லாம் காரியங்களும் செய்தனர். அவனை கொண்டு செல்லும் முன் கடைசி முத்தம் லேசாக தெரியும் அவன் முகத்தில் வைத்தாள்.
இதனை பார்த்த அஜய், அஷோக் கதறியே விட்டனர். சில மணி நேரம் பிறகு காரியம் எல்லாம் அப்போது தான் முடிந்து வீட்டுக்கு வந்து இருந்தனர். வீட்டில் அதிக உறவினர்கள் இல்லை. இருவரின் பெற்றோர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மேலும் நண்பர்கள் மட்டுமே.
துருவின் அம்மா, அப்பா மட்டும் அவள் மேல் கோவமாக இல்லை வந்ததில் பாதி பேருக்கு மேல் அவளை தூற்றும் வார்த்தை போட்டு திட்டத்தான் வந்தனர்.
விஜயா - நீ நல்லாவே இருக்க மாட்ட டி. நாசமா போய்டுவ. என்னோட பையன கொன்னுட்டா பாவி. நீ கடைசி வரைக்கும் இப்படியே தனி மரமா தான் இருப்ப என்று துருவ்வின் அம்மா இன்னும் சில வார்த்தைகள் பேசினார்.
அவனின் தந்தை பாலகிருஷ்ணன்… மித்ருதாவின் தந்தையைப் பார்த்து
பாலகிருஷ்ணன் - இதுக்கு தான் உங்க பொண்ணை பெத்தீங்களா. பாருங்க என்ன பண்ணி வெச்சி இருக்கானு. ராசி இல்லாத குடும்பம். இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்தா எங்களையும் காவு வாங்கிருவா உங்க பொண்ணு என்று வார்த்தைகளை அள்ளி வீசினார்.
அஜய் எவ்வளவோ சமாதானம் செய்ய எண்ணினான். ஆனால் அவனையும் பார்வையால் அடக்கினர்.
இன்னும் சில சொந்தங்கள் “ இதுக்கு தான் ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணனும்னு சொல்றது. இந்த காலத்து பிள்ளைங்க அவங்க இஷ்டத்துக்கு பண்ணா இப்படி அனுபவிக்க வேண்டியது தான். எல்லாம் அவங்க தலை எழுத்து “ என்று வேதனை பட்ட நெஞ்சத்தில் இன்னும் வலி சேர்த்தனர்.
இதனை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த மித்ருதா… கணவனின் மாலையிட்ட ஃபோட்டோ அருகில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். அவள் மனதில் எல்லாம் ‘ என்னோட துருவ் இந்நேரம் இருந்திருந்தா இப்படி எல்லாம் யாரையும் என்ன பார்த்து பேச விட்டுருக்க மாட்டான் ‘ என்ற எண்ணம் தான் ஓடியது. தன்னை இப்படி தனியாக தவிக்க விட்டு சென்றவனின் மீதும் கோவமும் இருந்தது.
விஜயா - டேய், அஜய் என்னடா பார்த்துட்டே இருக்க. வா டா போகலாம் இங்க இருந்து அப்புறம் உனக்கும் எதுவும் ஆகிட போகுது என்றவர் கிளம்பிவிட்டார். அவரில் சொந்தங்களும் அவர் பின்னே சென்றனர்.
போகும் முன் அஜய்.. அஷோக்கிடம் பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு தான் சென்றான்.
விஜயா இப்படி பேசினாலும் மகன் மேல் அதிகம் பாசம் உண்டு. அவரும் சொல்ல முடியாத சோகத்தில் தான் இருந்தார். எனவே கோவத்தை எல்லாம் மருமகள் மேல் வார்த்தையாக கொட்டி விட்டார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே பையன் அஜய். அவனும் அவர் பின்னாடி செல்லாமல் ஆறுதலாக மித்ருதா அருகில் இருந்தால்… விஜயாவுக்கு கண்டிப்பாக தாங்கிக்கொள்ள முடியாத வலி தரும் எனவே அம்மா பின்னாடி சென்றான் அஜய்.
இவர்கள் வெளியேறும் நேரத்தில் மித்ருதா தோழி சுபத்ரா தகவல் அறிந்து வந்தாள். அந்நேரம் சரியா மித்துவின் அம்மா ஜெயந்தி…. அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
இதனை எதிர்பார்க்க அஷோக் மற்றும் சுபத்ரா அவளை மறைத்தது போல வந்து நின்றனர். இந்நேரம் அஷோக் அவளுக்கு சாதகமாக பேசினால் கண்டிப்பாக சிலர் அதனை தவறாக நினைக்க கூடும் எனவே அமைதியாக இருக்க. ஆனால் சுபா அப்படி இல்லயே
சுபத்ரா - இன்னொரு முறை அவா மேல கைய வெச்சீங்க மரியாதை கெட்டு போயிடும். மித்து அம்மானு எல்லாம் பார்க்கவே மாட்டேன். சொல்லிட்டேன். உங்களுக்கு உங்க பொண்ணு மேல கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா.. அவளுக்கு ஆறுதலா இருக்காம இப்படி போட்டு அடிக்கீங்க என்று கத்தினாள்.
ஜெயந்தி - நீ ஈசியா சொல்லுவ. அந்த அம்மா எங்களைத்தான நாக்கு புடுங்கிற மாதிரி பேசிட்டு போகுது. எல்லாம் இதை பெத்ததால வந்தது என்று மீண்டும் அடிக்க போக.. சுபா அவர் கையை தடுத்தாள்.
ஜெயந்தி - கல்யாணம் பண்ணா அப்படியே போய் தொலைய வேண்டியது தான எங்களை இன்னும் எதுக்கு உன் அம்மா அப்பானு காரியத்துக்கு எல்லாம் கூப்பிட்ட என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசினார்.
இதனை கேட்ட மித்ருதா காதை மூடிக்கொண்டாள். சுபா பதிலுக்கு பேச அதற்கு சொந்தக்காரர்கள் பேச என வீட்டில் கூச்சல் சத்தம் மட்டுமே கேட்டது.
ஒரு கட்டத்தில் மித்ருதா மட்டுமே எல்லாதுக்கும் காரணம் என்று பேசி அவள் மனதை உயிரோடு கொன்றனர்.
சங்கர் - எங்க பொண்ணு எப்பயோ செத்து போய்ட்டா. வா ஜெயந்தி இவா கிட்ட என்ன பேச்சு நமக்கு என்று அவரை கையோடு கூட்டிக்கொண்டு சென்றார்.
இப்போது வீட்டில் அஷோக், சுபா மட்டுமே துணைக்கு இருந்தனர். வீட்டில் இவ்வளவு நேரம் இருந்த கூச்சல் சத்தம் போய் அமைதியாக இருந்தது. இது நாள் வரையில் கேட்ட மித்ருதா சிரிப்பு சத்தம் காலையிலேயே நின்று விட்டது. வீட்டில் மணக்க மணக்க செய்த சமையலில் வாசம் போய் ரோஜா பூ வாசமும், ஊதுபத்தி வாசம் மட்டுமே நிறைந்து இருந்தது.
சுபா - மித்து உன்னோட கஷ்டம் புரியுது. இதுக்கு ஆறுதலும் சொல்ல முடியாதுனு தெரியும். ஆனாலும் என்னால எதுவும் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு கண்டிப்பா பண்ணுறேன்.
அவளிடம் அமைதி மட்டுமே இருந்தது. அழுக கூட திரணி இல்லாமல் இருந்தாள்.
அஷோக் - சுபா, அவங்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கா பாருங்க. இல்லைனா வாங்கிட்டு வர்றேன் என்றான். தோழனுக்கு எப்படி துணையாக இருப்பானோ அதையே அவனின் மனைவியிடமும் காட்டினான்.
சுபா கிச்சன் சென்று பார்க்க… சமைத்தது இருந்தது. பிளேட்டில் போட்டு வந்து அவள் மறுக்க மறுக்க வாயில் திணித்தாள்.
மித்ருதா - நீங்களும் யாரும் சாப்டு இருக்க மாட்டீங்க. பிளீஸ் சாப்பிடுங்க என்றாள்.
அந்த சோகத்திலும் தோழிக்கும், கணவனின் நண்பனுக்கு சாப்பாடு பரிமாறினாள். துருவாக இருந்தால் வீட்டுக்கு வரும் நண்பர்களை சாப்பிடாமல் செல்ல அனுமதிக்க மாட்டான். அவன் இடத்தில், அவன் மனைவி இருந்து கவனித்துக்கொண்டாள்.
அழகான வீடு கலைந்து போய் இருந்தது. சுபா சுத்தம் செய்ய ஆரம்பிக்க அவளுடன் அஷோக் சேர்ந்துகொண்டான்.
சுபா - ஐய்யோ, நீங்க ஏன் இது எல்லாம் செய்றீங்க. நான் பார்த்துக்கிறேன்.
அவள் கையில் இருந்த துடப்பத்தை வாங்கி
அஷோக் - இது என்னோட நண்பன் வீடும் தான். எனக்கும் உரிமை இருக்குங்க. சேர்ந்தே பண்ணலாம் என்றான். இதற்கு சுபா பதில் பேச எதுவும் இல்லை என்பதால் விட்டு விட்டாள்.
கொஞ்சம் நேரத்தில் அவர்களுடன் வேலை செய்யும் ஆசிரியர்கள், படிக்கும் பிள்ளைகள் என சிலர் துக்கம் விசாரிக்க வந்தனர். நாகரீகம் கருதி வந்த சிலர் நிமிடங்களிலே சென்று விட்டனர்.
இடையில் சுபா வீட்டினரும், அஷோக் வீட்டில் இருந்தும் வந்து ஆறுதல் சொல்லி விட்டு சென்றனர். சுபா வீட்டில் ஒரு படி மேலே போய் அவள் துணைக்கு சுபா அங்கு சில நாள் இருப்பாள் என்று கூறிவிட்டு சென்றனர். அஷோக் மனதில் அப்போது கொஞ்சம் நிம்மதி வந்தது.
இந்த நேரத்தில் துணைக்கு ஆள் இல்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம். அதுவும் மித்ருதா எவ்வாறு சமாளிக்க போகிறாள் என்ற பயம் இருந்தது. தற்போதைக்கு அதுவும் நீங்கியது.
அவனும் சுபாவிடம் மட்டும் சொல்லி விட்டு சென்றான். மித்ருதாவிடம் போய்ட்டு வர்றேன் என்று துக்கம் நடந்த வீட்டினரிடம் சொல்ல கூடாது அல்லவா.
மறக்காமல் சுபா நம்பர் வாங்கிக்கொண்டு அவனின் நம்பர் கொடுத்து எப்போது வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ள சொன்னான்.
அவன் கிளம்பும் முன் மித்ருதா அவனுக்கு நன்றி கூறும் விதமாக கை எடுத்து கும்பிட… அவன் கண்டிப்பான பார்வை பார்த்தான். காலையில் இருந்து வேலை எல்லாம் இழுத்து போட்டு செய்தது அவன்தான்.
அஷோக் - துருவ் என்னோட நண்பன். அவனோட மனைவி எனக்கும் தோழி. எதுக்கு நன்றி எல்லாம் சொல்லுறீங்க மித்ருதா. கவலை படாதீங்க. காலப் போக்கில எல்லாமே மாறும் என்று பைக் எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.
அன்று இரவு அவளுக்கு தூக்கம் எட்டா கனி தான். அழுது கொண்டே இருந்தாள். நேற்று கணவனின் மார்பில் தூங்கிக்கொண்டு இருந்த தருணம் நினைவில் வந்தது. இன்று அவன் உயிரோடு இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. விடியல் வரும் போது தான் கண்கள் தானாக மூடியது.
சுபா காலையில் எல்லாம் சமையல் செய்து முடித்து விட்டாள். வீட்டின் பொறுப்பு இரண்டு நாள் அவள் வசம் தான். அஷோக் இரண்டு நாளும் வந்தான். எதுவும் வேண்டும் என்றால் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து செல்வான். இரண்டு நாள் கழித்து மித்ருதா… சுபாவிடம் அவள் இனிமேல் பார்த்துக்கொள்வதாக சொல்ல மூன்றாம் நாளில் இருந்து சுபா கல்லூரிக்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். மித்து இன்னும் விடுமுறையில் தான் இருந்தாள்.
துருவை புதைத்த இடத்தில் கல்லறை கட்டி முடித்து விட்டனர். மூவரும் சென்று மலர் வைத்து விட்டு அவனுக்கு பிடித்த இன்னும் சில பொருட்கள் வைத்து சாமி கும்பிட்டு விட்டு சில நேரம் அங்கு இருந்துவிட்டு வந்தனர்.
அங்கு இருக்கும் போது மித்ருதா மனதில் கணவனோடு சண்டையிட்டுக்கொண்டு இருந்தாள். அவளை தனியா விட்டு சென்றதுக்கு அவனோடு கோவித்தும் கொண்டாள். இதே அவள் நேரில் சண்டை போட்டாள், அவளை ரசித்து பார்ப்பதே அவன் வேலையாக இருக்கும். மேலும் பல சேட்டை செய்து அவள் எதுக்கு சண்டை போட்டாள் என்பதை மறைக்க வைத்து விடும் கணவன் அவன். கொஞ்சம் கூடுதலாக கோவம் அவளுக்கு வந்துவிட்டால் அதனை சமாதானம் செய்த பின் தான் அவனுக்கு வேலையை நடக்கும்.
ஆனால் இப்போது அவளின் ஆறுதல் எல்லாம் அவள் மனசாட்சி மட்டுமே. மனதில் அவன் கூறும் சமாதான வார்த்தை எல்லாம் அவளுக்கு அவளே கூறி ஆறுதல் பட்டுக்கொண்டாள்.
ஒரு வாரம் சென்ற நிலையில் சுபாவை அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். இன்னும் சில நாள் துணைக்கு இருக்கேன் என்று சொன்னவளிடம்… தான் நன்றாக இருப்பதாக சொல்லி அனுப்பிவிட்டாள். மனமே இல்லாமல் அவளும் சென்றாள். கல்லூரியில் தினம் அவளை காணலாம் அவள் எதுவும் சரியாக இல்லாமல் இருப்பது தெரிந்தால் பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டாள் சுபா. அஷோக்… சுபா இருக்கும் போது வந்து சென்றான். மித்ருதா தனியாக இருக்கும் போது செல்வது நல்லா இல்லை என்பதால் அவனும் போகவில்லை.
இன்று…
கையில் உள்ள ஆர்க்கிட் மலர்களை அவன் கல்லறை மேல் வைத்தாள். பழைய மலர்களை கீழே தள்ளிவிட்டாள். கல்லறை மேல் லேசாக தூசி இருக்க… புடவை முந்தானை கொண்டு துடைத்தாள். அவன் பெயர் இருக்கும் எழுத்தை கைக்கொண்டு லேசாக வருடிப்பார்த்தாள். மனம் பாரமாக இருந்தது. இனிமேல் இது தான் …. இதனை பழகிக்கொள்ள வேண்டும் என்று அவள் எண்ணங்கள் கட்டளை இட்டது. சில நிமிடம் அங்கே இருந்தது மனதில் அவனோடு பேசி, சண்டை போட்டு, அழுது பின் வீட்டுக்கு சென்றாள்.
இதனை எல்லாம் மேலே இருந்து துருவ் கிருஷ்ணா பார்த்துக்கொண்டு தான் இருந்தான். தினமும் அவள் சிந்தும் கண்ணீரை துடைக்க இயலாத தன் நிலையை வெறுத்தான்.