logo

அத்தியாயம் 8

Mars

Administrator
அர்ஜுனுக்கு அடுத்து வந்த நாட்களில் ரூபினியுடன் போராட்டமாக தான் சென்றது. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் ‘ வெளிய போகலாமா? டின்னர் டேட் வர்றியா? ஷாப்பிங் கூப்பிட்டு போறியா? செல்ஃபி எடுக்கலாமா? ‘ என அவன் உயிரை வாங்கி விட்டாள்.

சாரா வேலைப்பளு காரணமாக அதிக நேரம் நண்பர்களுடன் செலவிட முடியவில்லை.

ஆதி இந்த ஒரு வாரமாக ஆளையே காணவில்லை. ஃபோனில் மட்டுமே அவ்வபோது பேச முடிந்தது.

முட்டி மோதி அந்த வாரம் சனிக்கிழமை வந்தது. காலையில் அர்ஜுன் ஆபீஸ் வந்து விட கொஞ்சம் நேரத்தில் ரூபினி வந்தாள்.

“என்னமா இன்னைக்கு உங்களுக்கு கிராஜுவேஷன் டே தான. இங்க வந்திருக்க? “ என வரதன் கேள்வியாக கேட்க

“அர்ஜுன் கூட சேர்ந்து காலேஜ் போகலாம்னு தான் அங்கிள். என்ன அர்ஜுன் நம்ம போகலாமா?” என குண்டை தூக்கி போட்டாள்.

அர்ஜுன் சாராவை அழைத்துக்கொண்டு செல்வதாக முடிவு செய்து வைத்தான். அதனால் வெள்ளிக்கிழமை நேற்று சாரா அவள் வீட்டுக்கு போகவில்லை.

“இங்க பாரு ரூபினி உன் இஷ்டத்துக்கு சொன்ன நேரம் வர்றதுக்கு நான் ஒன்னும் உங்க வீட்டு டிரைவர் இல்லை புரியுதா? நீ எப்படியோ கிளம்பி போ. அதை பத்தி எனக்கு கவலை இல்ல ஆனா என்கூட வராத” என முகத்துக்கு நேராக சொல்லிவிட்டான்.

அவன் தந்தை அருகில் இருப்பதால் கண்களில் தண்ணீர் வரவழைத்துவிட்டு “பாருங்க அங்கிள் எப்படி பேசுறான்னு. ஒரே காலேஜ் சேர்ந்து போறோம்னு வீட்ல எல்லாம் சொல்லிட்டு வந்துட்டேன். இப்போ இப்படி சொன்ன எப்படி? நான் பிரெண்ட்லியா தான கேட்டேன்” என நாடகம் ஆட

“புரியுது மா. அர்ஜுன் நீங்க ரெண்டுபேரும் போய்ட்டு வாங்க. பின்ன ரூபினி வீட்ல என்ன நினைப்பாங்க. நம்ம பொறுப்புல தான விட்டுருக்காங்க அப்போ நம்ம தான் பார்த்துக்கணும். கிளம்புங்க” என முடிவாக சொல்லிவிட்டார்.

அர்ஜுன் மறுப்பு பேசாமல் அமைதியாக முன்னே நடந்தான். அவளின் முன்பு தந்தையிடம் வாக்கு வாதம் செய்யவில்லை. தானே தன் தந்தை வார்த்தையை மதிக்கவில்லை என்றால் நாளைக்கு இவளுக்கும் அவன் தந்தை இளக்காரமாக போய் விட கூடாது என்பதால் இந்த முடிவு.

நடக்கும் முன்பு ஆதிக்கு ஃபோன் செய்து சாராவை பிக்கப் செய்யும் வாரு கேட்டுக்கொண்டான். சாராவிடமும் இதே தகவல் பகிறப்பட்டது.

அவர்கள் கார் சாரா இருக்கும் ஹாஸ்டல் தாண்டி தான் சென்றது. அர்ஜுனை எதிர்பார்த்து வெளியே நின்றிருந்த சாரா… அவள் உட்கார போகும் இடத்தில் ரூபினி அமர்ந்து செல்வதை பார்த்து உறைந்து போய் நின்றுந்தாள். எதனால் வந்த ஏமாற்றம் என தெரியவில்லை.

அதே நிலையில் நின்றிருந்த சாராவை நினைவுக்கு கொண்டு வந்தது ஆதியில் பைக் ஹாரன் ஒளி. நண்பனை பார்த்ததும் தான் நிதானமானாள்.

“அழகா இருக்க டி சாரா. இந்த கிரே அண்ட் ஒயிட் (Grey & white) டிரஸ் சூப்பர் ஆ இருக்கு. வா வந்து வண்டியில ஏறு “ என்றான்.

அவன் பார்வைக்கு அவள் எப்போது அழகு தான் ஆனால் ரசனையான பார்வையா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை.

பின்னாடி இருக்கும் சீட் உயரத்தில் இருக்க ஆதி தோளை இறுக பற்றிய படி அமர்ந்து கொண்டாள். வண்டியை கொஞ்சம் வேகமாக செலுத்த அவள் பிடி இறுகியது. ஒருமுறை ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி இறங்கும் போது சாராவின் முன் பகுதி ஆதி முதுகில் அழுத்தமாக மோதி விட… அவனுள் எந்த வித மாற்றமும் இல்லை அதற்கு பதிலாக பதற்றம் தான்.

“ சாரா ஒன்னும் ஆகளையே. நான் தான் டி கொஞ்சம் வேகமாக வண்டிய ஓட்டிட்டேன். சாரி டி “ என்றான் பாவமாக.

“டேய் அதுலாம் ஒன்னும் இல்லை. நீ வண்டியை எடு. நம்ம போகலாம்”

அவளுக்கு தான் கொஞ்சம் சங்கடமாக போய் விட்டது. அவனுக்கு எதுவும் உணரவில்லை என்றதும் அவளும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

இவர்கள் இறங்கும் போது பார்த்தது கார் உள்ளே ஸ்டீயரிங் மேலே தலை கவிழ்ந்து படுத்திருந்தது அர்ஜுன் தான். வேகமாக ஓடி வந்து சாரா கண்ணாடி கதவை தட்டினாள்.

புருவ முடிச்சுடன் நிமிர்ந்து பார்த்த அர்ஜுன்… சாராவின் கதவை திற என்ற செய்கையை புரிந்து கொண்டு கார் கதவை திறந்து இறங்கினான்.

“என்ன ஆச்சு அர்ஜுன், ஏன் படுத்துட்டு இருக்க? எதுவும் பிரச்சனை இல்லையே?” என கொஞ்சம் பதற்றமாக கேட்க… அவளை நிமிர்ந்து பார்த்த பின் லேசாக புன்னகைத்துக்கொண்டே கீழே இறங்கிய வாரு பதில் சொன்னான்.

"இப்போ தான் சாரா பிரச்சனைய ட்ராப் பண்னேன். சாரி டி, என்னால உன்ன கூப்பிட வர முடியல. 'குறுக்க இந்த கௌசிக் வந்தா' அப்டினு ரூபினி வந்துட்டா. அதான் சாரா" என ரூபினி மேல் கொலை வெறியே இருந்தாலும் இவளிடம் நகைச்சுவையாக சொன்னான்.

பைக் பார்க்கிங் செய்துவிட்டு இவர்களிடம் வந்தான் ஆதி. அர்ஜுன் சொன்ன விதத்தில் சாரா சத்தமாக சிரித்துவிட

"டேய் சாரி லாம் எதுக்கு. எனக்கு தான் ஆதி இருக்கான்ல" என சாரா எதார்த்தமாக சொல்ல... இதனை கேட்ட மற்ற இருவரின் மன நிலை வேவ்வேறாக இருந்தது. அர்ஜுன் மனதில் 'சுருக்கென்று ஒரு வலி ' ஆனால் ஆதியின் மனதில் 'தான் எடுத்த முடிவு சரிதான்' என்றே தோன்றியது.

பட்டமளிப்பு விழா என்பதால் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர் அதில் பெற்றோர்களும் அடக்கம். ஆங்காங்கே ஸ்டால் போடப்பட்டு இருந்தது. அதில் கிராஜூவேஷன் கவுன் (பட்டமளிப்பு கருப்பு அங்கி) கொடுத்தனர். ஆளுக்கு ஒன்று பெற்றுக்கொண்டு ஆடிட்டோரியும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

சாராவுக்கு தான் மற்றவர்கள் பெற்றோரைப் பார்க்கும் போது அவள் தந்தை நியாபகம் அதிகம் வந்தது. முகம் அனைத்தையும் காட்டிக்கொடுக்க ஏக்கமாக பார்த்த படி அமர்ந்து இருந்தாள். மேலும் அவள் எதிர்காலம் பற்றிய பயம் வந்தது. ஒரு நல்லதுக்கு என்று தனக்குனு வர யாருமில்லை இதில் அவள் எதிர்காலம் எப்படி இருக்குமோ? இந்த உலகில் தன்னால் தனியாக வாழ்ந்திட முடியுமா? என்ற கேள்வி எழுந்து பெரும் பிரளயமே மனதில் உருவானது.

அவள் முகத்தையே பார்த்த ஆதி அவள் பார்ப்பவை சென்ற திக்கில் அவனும் பார்த்த போது புரிந்தது அவள் தந்தையை நினைத்து வருந்துகிறாள் என்று. மனதில் 'இன்னும் கொஞ்சம் நேரம் தான் சாரா... பொறுத்துக்கோ.. உனக்குன்னு யாரும் இல்லனு நீ வருத்தப்பட மாட்ட' என சொல்லிக்கொண்டான்.

விழா தொடங்கியது. கல்லூரி மேலாளர் வந்து உரையாட தொடங்கினார். மாணவ மாணவியர் எல்லாம் கருப்பு அங்கி, தொப்பி போட்டு பட்டதாரியாக அமர்ந்திருந்தனர். பின் ஒரு ஒரு டிபார்ட்மென்ட் ஆக பெயரை சொல்லி மேடைக்கு அழைத்து கையில் பட்டம் சான்றிதழ் கொடுத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர். சிவில் இன்ஜினியரிங் பிரிவில் சாராவுக்கு தான் கோல்ட் மெடல் கிடைத்தது.

முன்பே அறிந்த செய்து என்றாலும் அவள் மேடை ஏறும் போது அர்ஜுன் மற்றும் ஆதி கத்தில் ஆரவாரம் செய்து சந்தோஷப்பட்டார். அர்ஜுன் முறை வரும் போது அவர்கள் பிரின்சிபால் கையில் தான் பட்டம் வாங்கினான். ஃபோட்டோ எடுக்கும் முன்பு அவர் லேசாக சிரித்த வாரு அவன் தோளில் கையைப் போட… கிளிக் செய்யும் போதும் அவனும் அவர் தோளில் கையைப் போட்டு விட்டான்.

சுற்றி இருந்த அனைவரும் சிரிக்க… பிரின்சிபால் கூடவே சிரித்து விட்டார். மேலும் அவர் “நாஹ்டி பாய் (naughty boy)” என சொல்லி அவன் முதுகில் இரண்டு தட்டு தட்டி அனுப்பிவைத்தார்.

ஆதி முறை வரும் போது பிரின்சிபால் எண்ணம் ‘இவன் என்ன செய்ய காத்திருக்கானோ?’ என்றே நினைத்தார். அவர் எதிர்பார்த்தது போல் எல்லாம் அல்லாமல் கையில் பட்டம் வாங்கி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தவுடன் அவன் ஃபோனில் மேடையில் உள்ளவர்களோடு செல்ஃபி எடுத்தான்.

அவர்கள் என்ன தான் சேட்டை செய்து அவரிடம் திட்டு வாங்கினாலும்…அவர்கள் குறும்பு என்று பிரின்சிபால்லுக்கு மறக்க முடியாத நியாபகங்கள் அல்லவா.

பின் ஆதி, அர்ஜுன், சாரா என நிறைய புகைப்படங்கள் எடுத்து தள்ளினர். அர்ஜுன் என்னதான் சந்தோசமாக காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ தவறாக நடக்க போவது போலே தோன்றியது. ஆனாலும் அதனை சாராவின் புன்னகை உதவியோடு மறக்க முயற்சி செய்தான். ஆதியே என்றும் இல்லாமல் இன்னைக்கு அதிக உற்சாகத்துடனும் சாராவிடம் அதீத உரிமையோடும் பழகுவது போல் தோன்றியது.

சிலர் உணவுருந்த சென்றிருக்க மீதம் இருந்தவர்கள் மட்டுமே ஆடிடோரியமில் இருந்தனர். ஆதி சின்ன சிரிப்போடு மேடை ஏறினான். சாரா அவனை குழப்பமாக பார்க்க… அர்ஜுன் படபடக்கும் இதயத்துடன் பதட்டத்துடன் அவனையும் சாராவையும் மாறி மாறி பார்த்தான்.

நடக்க போவது புரிந்து போனது. அவன் தாமதித்த ஒவ்வொரு நொடியும் மற்றவனுக்கு சாதகமானது தெரிந்தது. நடக்க போகும் நிகழ்வுக்கு மனதை தேற்ற இப்போதே முயன்றான். ஆனால் அது தான் படபடப்பை குறைப்பேனா என்றது. பாக்கெட்டில் இருந்த கைக்குட்டை எடுத்து நெற்றியை ஒற்றிக்கொண்டான்.


மைக்கை ஆன் செய்து பேச ஆரம்பித்தான், ஆதி. முகத்தில் என்றும் இல்லாத பதற்றம்.. கைகள் லேசாக நடுங்குவது போல் இருந்தது ஆனால் சாமர்த்தியமாக மறைத்துவிட்டான். குரல் லேசாக கமற.. கூட்டத்தைப் பார்த்து “ ஹாய் கைஸ்! எல்லாரும் நான் என்ன பேசப்போறேன்னு யோசிகிக்றீங்கனு புரியுது… ஆனால் எப்பவும் போல அடாவடி தனம் பண்ண வரல “ என சொன்னதும் வேடிக்கையாக பார்த்துக்கொண்டு இருந்த கூட்டத்தில் ஆர்வம் அதிகமாகியது.

அவனும் சிறிது இடவிவெளி விட்டு தொடர்ந்தான் “ நீங்க கேட்டது சரிதான் அடாவடி செய்ய இல்லை என்னோட அன்பை வெளிப்படுத்த வந்திருக்கேன். ஆமா! அந்த நபர் கூட இருக்குற அப்போ நானா இருக்க முடியுது, வாழ்க்கை அழகானதா மாறுது, மனசுல இருந்து சிரிப்பு வருது இது எல்லாம் ஒரே நபர் கிட்ட இருந்து கிடைக்குதுனா அவங்க நம்ப வாழ்கை முழுக்க கூட இருந்தா எப்படி இருக்கு? “ என ரசனையாக சொல்லிவிட்டு கேள்வியை கூட்டத்தைப் பார்த்து கேட்டான்.

இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா என அனைவரும் பார்த்தனர். அவன் கேள்விக்கு பல வித சாதகமான பதில் வர… ஆதி வெட்கப்பட்டு சிரித்தான்.

அர்ஜுன் சிலை போல் நின்றிருந்தான். முதலில் ஆதி தன்னிடம் வந்து அவன் உணர்வுகளை பகிரவில்லையே என கோவமாக வந்தது. இதற்கு சாராவிடம் எதிர்வினை எப்படி இருக்கும் என தெரியாமல் நடப்பதை வேடிக்கைப் பார்த்தான்.

“சரியா சொன்னீங்க. அப்போ அதையே நான் நினைச்சதுலையும் தப்பு இல்லயே?! அதான் சொல்லிறலாம்னு முடிவு பண்ணி மேடை ஏறிட்டேன். எல்லாரும் முன்னாடியும் என்னோட மனச வெளிப்படுத்த ஆசைப் பட்டேன். அந்த பொண்ணு யாருன்னா?" என சொல்லிவிட்டு கூட்டத்தில் நடுவில் இருக்கும் சாராவை பார்க்க... அவளுக்கு மொத்த கூட்டமும் தன்னையே பார்ப்பது போல் தோன்றியது.

அந்த கூட்டத்தில் தான் ரூபினியும் நின்றிருந்தாள். ஆதி பேச ஆரம்பித்த உடனே அவன் வார்த்தை தனக்கானது என நினைக்க தோன்றிவிட்டாள். காரணம், அவள் அவனுக்கு நிறைய முறை அவன் மனதை வெளிப்படுத்திருக்கிறாள் மேலும் கல்லூரி முடிந்த பின் ஒருமுறை கூட சந்திக்கவில்லை, இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் தன்னை மிஸ் செய்ததாக நினைத்துக்கொண்டு, அவள் அருகில் இருந்த நண்பர்களிடம் அவன் என்னை தான் சொல்கிறான் என பெருமைப் பட ஆரம்பித்துவிட்டாள்.

ஆதி கேட்ட கேள்விக்கு எல்லோரும் 'சாரா ' என கத்தி கூச்சலிட... சாரா அதிர்ந்து போய் விட்டாள். அர்ஜுன் வேதனையின் உச்சியில் இருந்தான். அவன் காதல் கைநழுவி போவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

"ஆமா, என்னோட அந்த தேவதை சாரா தான். உண்மையான அன்பு அவளால மட்டுமே தான் கொடுக்க முடியும் "

இவ்வளவு நேரம் பொதுவாக கூட்டத்தைப் பார்த்து பேசிவயவன், இப்போது மேடையில் நின்று சாரா மட்டுமே அங்கு இருப்பது போல் அவளைப் பார்த்து பேசினான் "என்ன சாரா அதிர்ச்சி ஆகிட்டியா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. உன் மேல எனக்கு ஆர்வம் வரும்னு நான் நினைச்சதே இல்ல. ஆனா வர வச்சிட்டியே!!" என சந்தோசமாக தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தினான்.

"வாழ்க்கை முழுக்க உன்னோட இந்த அன்பு கிடைக்குமா? உன் வாழ்க்கையில என்னை ஒரு அங்கமா சேர்த்துப்பியா?" என கேட்டான்.

பொதுவாக காதலை சொல்பவர்கள்... என்னோட வாழ்க்கையில, சந்தோஷத்துல பங்கு எடுத்துக்கிறியா? என காதலிப்பவர்களை அவர்கள் வாழ்க்கையில் இணைப்பதைப் போல் கேட்பார்கள். ஆனால் ஆதி அவள் வாழ்க்கையில் தன்னை ஒரு பாகமாக சேர்த்துக்க வேண்டி நின்றான் அந்த நட்பு காதலன்.

அவன் பேச பேச சுற்றி இன்று அனைவரும் சாராவிடம் 'நீ லக்கி, கொடுத்து வெச்சவ, ஒகே சொல்லு' என பலவதிமான அறிவுரை வந்தது. ஆனால் ஆதி கேட்ட அடுத்த நொடி சாராவின் பார்வை அர்ஜுனை நொடிக்கும் குறைவான வினாடி அவனை தொட்டு மீண்டது. அது ஏன் என்று அவளுக்கும் புரியவில்லை.

சாரா மனதில் ஆதி கொஞ்ச நாளாக... சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவன் அப்பா தான் படிக்க வைக்கிறார் என்று தெரிந்த பின் மரியாதை உணர்வு ஏற்பட்டது. அவள் அவனுக்கு ஏதோ நன்றி கடன் பட்டிருப்பது போல் எப்போதும் தோன்றும். இன்று மற்றவர்கள் குடும்பத்தைப் பார்த்து தனக்கு என்று ஒரு குடும்பம் இல்லை என மனதில் மருகினாள். கல்யாணம் பயம் வேறு இரவில் தூங்கும் முன் வந்து மிரட்டுகிறது. கல்யாணம் செய்ய போகிறவன் எப்படி இருப்பானோ தன் தந்தை மற்றும் நண்பர்களை போல் நல்லவன் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? என பாதுகாப்பின்மை தந்தை இறந்த பின் அதிகம் வருகிறது.

இப்போது ஆதியே வந்து ப்ரொபோஸ் செய்ய... சிந்திக்க ஆரம்பித்தாள். அவன் ப்ரோபோஸுக்கு 'சரி' என்று சொன்னால் நன்றி கடன் தீர்ந்த படியும் இருக்கும், நல்லவன் ஒருவனை திருமணம் செய்தது போலவும் இருக்கும், வாழ்க்கை இறுதி வரை நட்பும் கிடைத்தது போலவும் இருக்கும் என அவளையும் அறியாமல் அவளின் பாதுகாப்பின்மை இவ்வாறு சிந்திக்க தூண்டியது.

இதற்க்கு இடையில் ரூபினியை அவள் நண்பர்கள் வெச்சு செய்துவிட்டனர். இதுநாள் வரையில் அவள் சொல்வதற்கு எல்லாம் ஆமா சாமி போட்டவர்கள்... கல்லூரி முடிந்த பின் அதற்கு அவசியம் இல்லாமல் போனது. முகம் கறுக்க அங்கு இருந்து சென்றுவிட்டாள்.

அர்ஜுன் நிலைமை தான் மோசமாக இருந்தது. ஆதி சொன்னதுக்கு சாராவிடம் எந்த ஒரு எதிர்மறை பாவனை அவள் முகத்தில் வரவில்லை.மாறாக சிந்தனை ரேகை தான் தெரிந்தது. மேலும் காதலான ஒரு பார்வையோ, சந்தோச அழுகையோ என காதல் இருக்கும் சுவடே தெரியவில்லை. ஆனாலும் தான் காதலித்த பெண்ணுக்கு இப்போது அவன் உயிர் நண்பன் ப்ரொபோஸ் செய்துகொண்டு இருக்கிறான்.

ஆதி "சாரா, உன்னோட முடிவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பேன்" என சந்தோசமாக சொல்லிவிட்டு அங்கு இன்று சென்றுவிட்டான்.

கூட்டம் கலைந்துவிட்டது. ஒருசிலர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க எல்லோரும் பேசுவது சாராவைப் பற்றி தான் என அவர்கள் பார்வையிலே சொல்ல முடிந்தது. கண்டிப்பாக ஏதோ தவறாகத்தான் பேசுகிறார்கள் என உடல் மொழியும், அலட்சிய பார்வையும் காட்டிக்கொடுக்க... அர்ஜுன் உடனே சாராவை அழைத்துக்கொண்டு அவன் காருக்கு சென்றுவிட்டான். அப்போது சரியாக ஆதி அர்ஜுனுக்கு போன் செய்து

"மச்சி, சாரி டா. இதை பத்தி உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும் சொல்லாம விட்டது என்னோட தப்பு தான். எனக்கே என்னோட சிந்தனை சரியான்னு தெரியலை அதான் டா இந்த ஒரு வாரம் யோசிச்சு இந்த முடிவுக்கு வந்தேன். நீயும் எனக்காக சந்தோசப்படுவனு எனக்கு தெரியும் டா. அப்புறம், நான் கிளம்பிட்டேன் டா. தைரியமா எல்லாரு முன்னாடியும் சொல்லிட்டேன் ஆனா சாராவ நேரடியா பார்த்து பேச ஒரு மாதிரி இருக்கு டா. நான் என்ன சொல்ல வர்ரேன்னு உனக்கு புரியுதுல... ஹலோ.. ஹலோ... டேய் அர்ஜுன் லைன் ல தான் இருக்கியா? " என மனதை நண்பனிடம் கொட்டினான்.

"ஹான்... கேட்டுட்டு தான் டா இருக்கே. எனக்கு புரியுது" என வரவழைத்த வார்த்தைகளோடு சொன்னான் அர்ஜுன். அருகில் இருந்த சாரா எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை எனவே அர்ஜுன் சோகம் தெரியாமல் போனது.

"ரொம்ப தேங்க்ஸ் மச்சி. நீ சாராவ கூப்டு கிளம்பு டா. சாரி மச்சி, நான் இருக்குற மனநிலையில இன்னைக்கு உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. சாரா இன்னும் அவா முடிவை சொல்லல. அதுக்கு அப்புறம் என்னனு பார்க்கலாம். பை டா" என வைத்துவிட்டான்.

இப்போது தான் அவன் காதலிக்கு ப்ரொபோஸ் செய்தான். ஆனால் அவளை என்னோட பாதுகாப்பில் விட்டு செல்கிறான்... நண்பனின் நம்பிக்கையை நினைத்து புல்லரித்தது. ஆதி கிளம்பிய விடையம் மட்டுமே சொன்னான். இதனை சாரா எதிர்பார்த்தது தான். எனவே ஒன்று சொல்லவில்லை.

காரில் ஏறிய சாரா அமைதியாக இருந்தாள். அவள் இப்போது ஹாஸ்டல் சென்றால் சரியாக இருக்காது என்பதால் அவள் வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தினான். அவள் முகத்தைப் பார்த்து எதையும் கண்டறியமுடியவில்லை. எனவே அவளிடமே கேட்க

"சாரா... சாரா.." என இருமுறை அழைத்த பின் தான் நினைவில் இருந்து மீண்டாள்.

"ஹ..ஹான்.. சொல்லு ஆதி..." என பெயரை மாற்றி அழைக்க. காதல் கைநழுவி போனதை விட இது மிகவும் வலித்தது. முகத்தை அழுத்த துடைத்துக்கொண்டவன் எதையும் காட்டிக்கொள்ளாமல்..

"வீடு வந்துருச்சு சாரா" என சொல்லிய பின் தான் சுற்று முற்று பார்த்தாள்.

கார் கதவை திறந்து இறங்கும் முன் "ஏன் அர்ஜுன்.. ஆதி சொன்னது பத்தி நீ என்ன நினைக்கிற?"

'என்னோட காதல் நீ தான்' என்று கத்தனும் போல் இருந்த மனதை அடக்கி "உனக்கு எது சரினு படுதோ அதை செய் சாரா. ஆனால் நல்லா யோசிச்சு முடிவு பண்ணு" என நண்பனாக அறிவுரை வழங்கினான்.

இப்போது அவன் மனதில் இருப்பதை சொன்னால் கண்டிப்பாக சாரா உடைந்து போய்விடுவாள். பழகிய இருவரும் ஒரே நாளில் வந்து காதலை சொன்னால்......மேலும் ஆதியின் நம்பிக்கையை உடைத்தது போல் ஆகிவிடும் எனவே ஆதி மூலம் சாராவுக்கு நல்ல துணை கிடைத்தால் போதும் என விட்டுவிட முடிவு செய்துவிட்டான்.

"ஹ்ம்ம்...நானும் அதே தான் நினைச்சேன் அர்ஜுன். வா வீட்டுக்கு உள்ள போகலாம்" என அவனையும் அழைக்க..

"இல்ல சாரா..இன்னொரு நாள் வர்ரேன். ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு" நழுவப்பார்த்தான்.

"என்ன அர்ஜுன்... ஆதி வந்து ப்ரொபோஸ் பண்ணதும்... நமக்குள்ள டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணலாம்னு யோசிக்கிறியா?" என சரியாக வினாவ..

"அது இல்ல...அப்படி சொல்ல வரல"

"உன்ன பத்தி எனக்கு தெரியாதா அர்ஜுன். எதையும் யோசிக்காம உள்ள வா. யாரு என்னோட வாழ்க்கையில வந்தாலும் உன்னோட இடத்தை நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்" என உறுதியாக சொன்னாள்.

'என்னைப் பற்றி தெரிந்த உனக்கு.. என் காதலைப் பற்றி தெரியவில்லையா?' என கண்களால் கேள்வி எழுப்பினான். அவன் மனதை அவன் வெளிக்காட்டவில்லை என்பது அவனுக்கு புரியாமல் போனது.

இது எதையும் உணராத சாரா... நேராக சென்று தந்தை படத்துக்கு முன்பு வந்து நின்று கண்மூடி என்ன முடிவு எடுக்க என்பதை தந்தையிடம் கேட்டு வேண்டினாள். அவள் கண்களை திறக்கும் சமயம் படத்தில் இருந்த பூ கீழே விழுந்த நேரமும்.. அர்ஜுன் வந்து நின்ற நேரமும் ஒன்று. இதனை கவனித்த சாரா என்ன முடிவு எடுக்க என்று தடுமாறித்தான் போனாள்.
 
Top