அர்ஜுன் நினைத்தது போல ஆதிக்கும் சாராவுக்கும் இடையில் இருந்த நெருக்கம் கூடியது போல் தோன்றியது. இது அவனின் கணிப்பா இல்லை உண்மையாகவே அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் இவனை அவர்கள் ஒதுக்கவில்லை.
சாரா எப்போதும் போல் தான் பழகினாள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இருவரும் அவளுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்தனர். அதில் ஆதி பங்கு அதிகமாக இருந்தது. ஒருவேளை அவன் ரேசிங் எல்லாம் செய்வதாலும் இது அவனுக்கு கைவந்த கலை என்பதால் அதிக பங்கு எடுத்துக்கொண்டான் போல் என நினைத்துக்கொண்டான் அர்ஜுன். இப்போது சாரா பைக், கார் என எல்லாம் ஓட்டுவாள். அதில் அர்ஜூனுக்கு சந்தோசமே. சாராவின் வளர்ச்சி அவன் மூலமாகத்தான் இருக்க வேண்டும் என்று எப்போது எண்ணியது இல்லை.
சாரா அப்பா எப்போதும் யாரு என்ன சொன்னாலும் அமைதியாக பொறுத்து போகவே சொல்லுவார். அது படியே வளர்ந்ததால் யாரிடமும் எதிர்த்து பேச மாட்டாள். அவளுக்கே ஒரு அநியாயம் நடக்கும் போதும் அமைதியாக இருக்கும் பெண் இப்போது அர்ஜுன் அறிவுரையில் தனக்காக பேச பழகியிருந்தாள். யாரும் அவளை கேலி கிண்டல் செய்யும் போது எல்லாம் பதிலடி கொடுத்துவிட்டே தான் நகர்வாள்.
அப்பா இருக்கும் வரை அவர் சொன்ன படியே வளர்ந்த சாரா… இப்போது ஆதி மற்றும் அர்ஜுன் வளர்ப்பில் இந்த காலத்துக்கு தகுந்த பெண்ணாக கொஞ்சம் மாறி இருந்தாள். இந்த மாற்றம் அவளுக்கும் பிடித்த ஒன்றாகத்தான் இருந்தது.
அர்ஜுன் அவ்வபோது அவர்கள் கம்பனி சென்று வேலை பார்ப்பான் எனவே அவனுக்கு தொழில் முறை பேச்சு என்பது சாதாரணமாக விஷயம். ஒரு கம்பனி சென்றால் எவ்வாறு பேச வேண்டும், அவர்கள் கேட்கும் கேள்விக்கு எப்படி திறன் பட பதில் சொல்ல வேண்டும், உடல் மொழியில் எவ்வாறு இருக்க வேண்டும் என அவனுக்கு தெரிந்த வற்றை சொல்லிக்கொடுத்தான். அதான் அடிப்படையில் கேம்பஸ் இன்டர்வியூவில் கையில் ஒரு வேலையும் வாங்கி விட்டாள்.
சாராவின் உதவியோடு அர்ஜுன் மற்றும் ஆதி பரிட்சையில் தேர்ச்சி பெற்றனர். அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் பிரின்சிபாலுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் இருவரையும் மாறி மாறி பார்க்க….அவரின் கைகளை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து சுற்றிவிட்டனர்.
“டேய் விடுங்க டா. யூ பிளட்டி இடியட்ஸ். கைய விடுங்ககக…” என பிரின்சிபால் கத்திய பின் தான்
“அய்யயோ சார் நீங்களா. சாரி சார். ஏதோ தெரிஞ்சே தான்” என அர்ஜுன் நக்கலாக சொல்ல
“அர்ஜுன், ஜெட் அவுட்ட்ட்ட் “ என ஆதி அர்ஜுனை பார்த்து பிரின்சிபால் செய்வது போலவே செய்து காட்ட… இவர்களை பார்த்த பிரின்சிபால் கோவமாக முறைத்தார்.
“போத் ஆஃ யூ கெட் அவுட்ட்ட்ட்” என அந்த ஆளை கத்த வைத்து பிபீ-யை ஏற வைத்த பின் தான் அங்கு இருந்தே நகர்ந்தனர்.
பரீட்சை முடிந்ததும் சாரா ஹாஸ்டலில் இருந்து அவள் வீட்டுக்கு போய் விட்டாள். அவள் வேலை பார்க்க போகும் கம்பெனியில் இன்னும் ஒரு வாரத்தில் வேலைக்கு சேர வேண்டும். அவள் காலேஜ் இருந்த தூரம் விட கம்பெனி தூரம் அதிகமாக இருந்தது எனவே அதன் அருகில் ஹாஸ்டல் பார்த்து விட்டாள். இதில் இன்னொரு சிறப்பு அர்ஜுன் அப்பா கம்பெனியும் அருகில் தான் இருக்கிறது.
அர்ஜுனுக்கு சாராவை அவர்கள் கம்பெனிக்கு வேலைக்கு சேர சொல்ல ஆசையாக இருந்தது. திறமையான பெண், தோழியும் கூட… தனியாக இருப்பதால் அருகிலேயே வைத்துக்கொள்ள ஆசை. ஆனால் இப்போ அவள் கையில் இருக்கும் வேலை அவளாக வாங்கியது. ஒருவேளை அவர்கள் கம்பனியில் சேர்ந்த பின் சிபாரிசு மூலம் வாங்கிய வேலை என யாரும் சொல்லிவிட கூடாது மற்றும் அவளே அவ்வாறு நினைக்க வாய்ப்பு இருக்கிறது எனவே எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என எதுவும் கேட்காமல் விட்டுவிட்டான்.
பிரின்சிபால்வை நன்றாக காண்டு ஏற்றி விட்டு காலேஜ் வளாகத்தில் நடந்துகொண்டு இருந்தனர்.
“இனிமேல் இந்த மாதிரி எல்லாம் நாட்கள் திரும்பவும் வராதுல. நான் எல்லாத்தையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என சாரா வருத்தமாக சொன்னாள்.
“அதான் நீ வேலை பாக்க போற கம்பெனி நம்மலோடதுக்கு பக்கத்துல தான இருக்கு. நம்ம அடிக்கடி சந்திக்கலாம் . இதுக்கு ஏன் இவ்வளவு வருத்தம்?! ஈஸி சாரா” என அர்ஜுன் சமாதானம் சொன்னான்.
இதனை கேட்ட ஆதி சிந்திக்க ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் தினமும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது ஆனால் அவனுக்கோ அவர்கள் கம்பெனி வேறு இடத்தில் இருக்கிறது, வீடும், கார் ரேசிங் கிளப்பும் எதுவும் அருகில் இல்லை. எங்கே தான் மட்டும் தனித்து விட பட்டுவிடுவிமோ என பயம் சூழ்ந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
பேசிக்கொண்டே கேன்டீன் வந்தனர். எப்போதும் போல் நிறைய உணவு ஆர்டர் செய்துவிட்டு வந்து அமர்ந்தனர் ஆதி மற்றும் அர்ஜுன். வழக்கமாக செய்வது போல அனைத்தையும் மூன்று பிரிவாக வைத்து சாப்பிட ஆரம்பிக்க…. பேச்சு எல்லாம் வேலை பற்றியும், புது இடத்தில் பழகுவது பற்றியும் தான் இருந்தது. அர்ஜுனுக்கு அந்த இடம் பழக்க பட்ட இடம் என்பதா அவன் மட்டுமே பதில் சொல்லும் படி ஆகியது. ஆதிக்கு இதுவும் ஒருமாதிரி ஆனது… அவர்கள் தன்னை ஒதுக்குவது போல் தோன்றியது.
சாரா எப்போது போல் அளவாக பிளேட்டில் வைக்க இதனை கவனித்த இருவரும் எப்போது போல் அவள் தட்டில் அள்ளி வைக்க…. ஆதி வைப்பது எதையும் அவள் வேண்டாம் என்று சொல்லவில்லை, அர்ஜுனிடம் மட்டுமே சொன்னாள். ஆதியிடம் அவள் கொஞ்சம் மரியாதையாக நடந்துகொள்வது அவளே அறியாமல் வந்தது. ஆனால் இதனை உணர்ந்த அர்ஜுன்… ஆதிக்கு தான் அவள் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிந்தது.
ஆதியும் அவ்வாறே உணர்ந்தான்.
சாராவை தன் பக்கம் முழுவதுமாக நிறுத்தி விட்டால் அவர்கள் நட்புக்கு பங்கம் வராமல் இருக்கும் என எண்ணினான். யாரும் எனக்கும் சாராவுக்கும் இடையில் வரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
பார்கிங் நோக்கி நடக்கும் போது தான் அர்ஜுன் ஒன்றை கவனித்தான். சாரா உடையில் ஷால் ஊக்கு மாட்டி லேசாக கிழிந்து இருப்பதை. இதனை அவளிடம் சொன்னாள் கண்டிப்பாக சங்கட்டமாக இருக்கும். ஆதியிடமும் சொல்ல தோன்றவில்லை. கண்டிப்பாக இந்த உடையை ஐயன் செய்யும் போது அவள் கவனித்து விடுவாள் என்பதால் சாதாரணமாக தோளில் கையை போடுவதை போல் போட்டு அதனை மறைத்தான்.
ஆதி கண்களுக்கு மட்டும் இது வித்தியாசமாக தோன்றியது. தன் உடைமையை மேல் கையை வைப்பது போல் தெரிந்தது. அவன் நினைத்ததை உடனே செய்ய வேண்டும் என்ற வேகம் அவனிடம்.
***
ஆதி நேராக வீட்டுக்குள் புயலென நுழைய… ஆதியின் அப்பா ஹாலில் தான் இருந்தார். இவன் எப்போதும் கேஷுவலாக, எனக்கென்ன என்று இருப்பவன் இன்று ஏனோ கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.
“ஆதி, ஆர் யூ ஓகே?” என புருவ முடிச்சுடன் வினாவினார்.
“நோ டாட். ஐ அம் ஃபீலிங் லாஸ்ட்” (I'm feeling lost)
“வாட் மேக்ஸ் யூ ஃபீல் லாஸ்ட்?” (what makes you feel lost?)
“அது என்னோட பெர்சனல் டாட்” என்றான் மூஞ்சில் அடித்தது போல.
அதற்கு எல்லாம் அவர் வருத்த பட்டது போல் தெரியவில்லை. வளர்ந்த பிள்ளைகள், அவர்களுக்கு ஆயிரம் இருக்கும் என அவர்கள் போக்கில் விடும் தந்தை.
“என்னவா வேனா இருந்துட்டு போகட்டும். ஆனால் ஒன்னு மட்டும் நல்லா நியாபகம் வேச்சிக்கோ ஆதி, உனக்கு ஒன்னு வேணும்னா அதை நீ தான் அடையனும். கைய விட்டு போகுறதுக்கு முன்னாடியே அதை உன்னோடதா மாத்திக்கோ. நேரம் யாருக்காகவும் நிக்காது” என்றான் கூர்மையான பார்வையுடன்.
ஆதி பைக் ரேசிங்ல் எப்போது பங்குபெருவான். அதனை பற்றி தான் கவலை கொள்கிறான் என நினைத்து அவர் இவ்வாறு அறிவுரை சொன்னார். ஆனால் அவர் மகன் மனதில் இருப்பதோ வேறு என்று அறியாமல் போனார்.
அறைக்கு வந்த ஆதி சட்டையை கழட்டி கட்டிலில் வீசி விட்டு கண்ணாடி முன் வந்து தன்னை ஒரு முறை பார்த்தான். பாடி பில்டிங் செய்து சிலை போல் இருந்தான். பைக் ரேசிங்ல் இருப்பதால் அதிகமாக உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பான். அதிக நேரம் வண்டியை செலுத்த வேண்டும் என்பதால் கை மற்றும் கால்களின் தசைகள் வலிமையாக இருக்க வேண்டும். கண்டிப்பாக எந்த பெண்களுக்கும் தன்னை நிராகரிக்க ஒரு காரணம் இல்லை என்ற மிதப்பு அவன் முகத்தில்.
சாரா பற்றி நினைக்கும் போது முகம் மென்மையாக மாறியது. எத்தனை சாந்தமான பெண். அவள் அருகிலேயே அவனுக்கு இருக்க வேண்டும். வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அர்ஜுன் குறுக்கே வந்தால் எங்கே இவனுக்கும் சாராவுக்கும் இருக்கும் உறவு காணாமல் போய் விடுமோ என்ற பயம் மனதில் உலன்றது.
இவன் அப்பா கம்பெனில் அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணலாம் தான், ஆனால் இவனே அங்கு போக மாட்டான் பிறகு சாராவா மட்டும் அனுப்பி என்ன பயன். இதற்கு ஒரே வழி ‘கல்யாணம்’ மட்டுமே என்று தோன்றியது. (ஆனால் காதல்?)
சாரா இதற்கு ஒத்துக்கொள்வாளா என்ற பயம் வர ‘அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். பல ஆண்டுகளாக பழகிய நண்பன். குறை என்று சொல்வதற்கு அவனின் எதுவும் இல்லை. கண்டிப்பாக நன்றாக பார்த்துக்கொள்வான். அவளுமே ஏற்றுக்கொள்வாள் என்றே நம்பினான் ‘.
அவனின் பேராசை எல்லாம் சாராவுடன் இருக்க வேண்டும். சாரா அவனுக்கு என்று ஆன பின் அர்ஜுனுடன் அவள் நட்பு தொடர்வதில் அவனுக்கு எந்த ஆட்சியபனையும் இல்லை. சாராவை தக்க வைப்பதே அவன் எண்ணமே தவிர அர்ஜுனனிடம் இருந்து பிரிப்பது அல்ல.
***
அர்ஜுன் அவன் அறையில் ஃபோன் பார்த்துக்கொண்டு இருந்தான். சாரா அழகா புடவையில் சிரித்துக்கொண்டு இருந்தான். அது நியூ இயர் அன்று எடுத்த புகைப்படம். அதில் அர்ஜுன் மற்றும் ஆதி ஒரு பக்கமாக திரும்பி போஸ் கொடுத்திருந்தனர். இடையில் இருந்த சாரா நேராக நின்று சிரித்துக்கொண்டு இருந்தாள்.
இன்னும் சில ஃபோட்டோ இருந்தது. அதில் ஒன்று தான் ஆதி மற்றும் சாரா தனியாக எடுத்த ஃபோட்டோ. இருவரையும் ஒன்றாக பார்க்க மனம் வலித்தது. ஆனால் இன்னொரு மனமோ ‘அவர்கள் இருவரும் நண்பர்கள்; சேர்ந்து ஃபோட்டோ எடுக்க உரிமை இல்லையா’ என்று கேட்க… அவனுக்கு வந்த எண்ணத்தை துறத்தினான்.
‘சரியாக தானே மனம் சொல்கிறது. இருவரும் நண்பர்கள் சேர்ந்து எடுக்கிறார்கள்… சாரா எனக்கே என்று ஆன பின்பும் அவர்களை இருவரையும் சேர்த்து நானே ஃபோட்டோ எடுப்பேன். ஆனால் சாரா கூட நான் மட்டும் அறையில் இருக்கும் போது இன்னும் நெருக்கமாக….’ என நினைக்கும் போதே அர்ஜுன் முகம் சிவந்து விட்டது.
***
சாரா அவள் வாழ்வில் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆபீஸ் அருகே ஹாஸ்டல் வந்துவிட்டாள். இந்த ஒருவாரம் நிறைய தெரிந்துகொள்ளும் படி ஆனது. எனவே அவளுக்கு என்று நேரம் செலவிட முடியவில்லை இதில் எப்படி அர்ஜுனை பார்த்திருக்க முடியும்.
அவனும் அவன் அப்பா ஆபீஸ்ல் தான் முழு நேரமும் இருந்தான். ஆனால் அவளை பார்க்க முயற்சி செய்யவில்லை. சாரா அருகில் தான் இருக்கிறாள் என்றதில் அவனுக்குள் ஒரு நிம்மதி. ஆதி அவன் பைக் ரேசில் அதிகம் கவனம் செலுத்தினான். எனவே அவனை ஃபோனில் தொடர்பு கொண்டதோடு சரி… நேரில் சந்திக்கவில்லை.
வார இறுதி வந்துவிட்டதால் வெள்ளி அன்று வேலை முடிந்ததும் கிளம்பி சாரா அவள் வீட்டுக்கு சென்றுவிட்டாள். மறுநாள் ஆதி மற்றும் அர்ஜுன் அங்க எப்போது போல் வருவதாக சொல்லிவிட்டனர்.
அர்ஜுனுக்கு புது பிரச்சனையாக ரூபினி அவர்கள் கம்பெனிக்கு அவள் தந்தையால் அனுப்பப்பட்டாள். திங்கள் கிழமையில் இருந்து பகுதி நேரமாக தொழில் கற்க வருவதாக சொன்னார்.
மறுநாள் சாராவின் வீட்டில் வைத்து இதனை அர்ஜுன் அவளிடம் சொல்லிக்கொண்டு இருக்க… அந்நேரம் சரியாக ஆதி உள்ளே நுழைந்தான்.
“என்ன மச்சி, ஏதோ ரூபினினு சொன்னது கேட்டுச்சு. அவா இன்னும் பிரச்சனை பண்ணிட்டு தான் இருக்காளா? நாளைக்கு அவங்க அப்பா ஆபீஸ்ல போய்ட்டு பேசிட்டு வருவோம் என்ன சொல்ற?” என்றான் ஆதி.
“டேய் நீ வேற, அவங்க அப்பா தான் நம்ம கம்பெனிக்கு திங்கள் கிழமையில இருந்து போய்ட்டு வர சொல்லியிருக்காங்க. எங்க அப்பாவும் சரினு சொல்லிருக்காரு. அவா அங்க வந்து என் உயிர தான் வாங்குவா… பிசாசு” என திட்டினான் அர்ஜுன்.
“நல்லவேளை டா நான் தப்பிச்சேன். இல்லைனா அந்த சனியன் கூடலாம் குப்பை கொட்ட முடியாது. சரியான அராத்து டா அவா” என்றான் சிரித்துக்கொண்டே
“டேய் நாயே, நீ ஏதாவது ஹெல்ப் பண்ணுவன்னு பார்த்தா… தப்பிச்சேன்னு சொல்ற. பார்த்துட்டே இரு டா உனக்கு ரூபினி மாதிரி பஜ்ஜாரி தான் பொண்டாட்டியா வருவா” என சாபம் விட்டான் அர்ஜுன்.
“அய்யயோ நான் அப்போ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் டா சாமி. நான் வண்டிய எடுத்துட்டு கைலாசம் போயிடுவேன். ஜெய் நித்தி” என்று ஆதி சொல்ல… மூவரும் பல நாள் கழித்து சந்தோசமாக நேரம் செலவிட்டனர்.
ரூபினி அங்கு தான் வர போகிறாள் என்ற தெரிந்த பின் சாரா மனம் தவித்தது. அவளுக்கென்று அருகில் இருப்பது அர்ஜுன் மட்டும் தான். அவனையும் தன் பக்கம் இழுத்துகொள்வாலோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது… அவர்கள் இருவரும் பேசுவது கேட்டது. அதில் இருந்தே அர்ஜுனுக்கு அவளை பிடிக்காது என்று புரிந்தது. ஆனாலும் மனதின் ஓரத்தில் சின்ன தவிப்புடன் அர்ஜுனை பார்த்தாள். மற்றவர்கள் கவனிக்கும் முன் பார்வையை திருப்பிவிட்டாள்.
மூவரும் சாப்பிட்டு முடிந்த பின் ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து ஃபோன் பார்த்துக்கொண்டே அவ்வபோது பேசிக்கொண்டு இருக்க….
“டேய் இங்க பாருங்க. அடுத்த வாரம் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா வைக்க போறதா மெசேஜ் வந்திருக்கு” என சாரா சந்தோசத்தில் கத்த
மற்ற மூவருக்கும் அந்த சந்தோசம் தொற்றிக்கொண்டது. சாரா மனதில் என்ன உடை போடலாம் என யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். அர்ஜுன் எண்ணம் எல்லாம் அன்று எதுவும் மீட்டிங் இருக்க கூடாது அப்படியே இருந்தாலும் அதனை மாற்றம் என்னைக்கு செய்யலாம் என சிந்திக்க… ஆதி மட்டும் அன்று எல்லோரும் இருப்பார்கள் அப்போவே சாராவிடம் காதலை சொல்லி விட்டு தன்னவளாக அனைவருக்கும் அறிவித்துவிடலாம் என யோசித்தான்.
அவன் பார்க்கும் போது அர்ஜுன் சாராவுடன் சேர்ந்து அன்று அவளுக்கு எடுத்த சுடிதாரை கையில் வைத்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அர்ஜுன் எதுவோ சொல்ல அதற்கு சாரா அவனை அடிக்க என்று இருக்க… அங்கு தானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்று அந்த சூழலில் தன்னை தானே புகுத்திக்க முயற்சி எடுத்தான். அதில் அர்ஜுன் மேல இருந்த கவனம் போய் ஆதி மேல் சாராவின் கவனம் சென்றது. இப்போது அர்ஜுன் பார்க்கும்போது அவர்கள் இருவரும் கேலி செய்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அர்ஜுனுக்கு எதுவோ நெருடலாகவே இருந்தது.
****
திங்கள் அன்று காலையில் அர்ஜுன் அவன் அப்பா இருக்கும் கேபினின் அமர்ந்து எதுவோ சந்தேகம் கேட்டுக்கொண்டு இருந்தான். அப்போது நாகரிகம் இல்லாமல் கதவை படார் என்ற திறந்துகொண்டு ரூபினி வந்து நின்றாள். ஷார்ட் ஸ்கர்ட், சட்டை பட்டன் மேல ஒன்று ஒன்று கழற்றிவிட்ட படி, தூக்கலான மேக் அப் சகிதம் வந்து நின்றாள்.
அர்ஜுன் பார்த்த உடன் முகத்தை திருப்பிக்கொண்டான். வரதராஜன் வேலை என்று வந்துவிட்டால் கண்டிப்பாக இருப்பார். அதுவும் அவர் ஆபீஸ்க்கு இப்படி ஒரு உடையில் யாரையும் அனுமதிக்க மாட்டார். ரூபினி வந்து நின்ற கோலம் முகம் சுளிக்கும் வாரு தான் இருந்தது. ஆனால் நண்பனின் பொண்ணு என்பதால் எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அர்ஜுன் அப்படி இல்லயே
“ரூபினி இது ஒன்னு ஃபேஷன் ஷோ நடக்குற இடம் இல்ல. அப்படி நினச்சு வந்தீனா வாசல் திறந்து தான் இருக்கு. திரும்பி பார்க்காம கிளம்பு”
இந்த கம்பெனி எதிர்கால முதலாளி ஆக போகிற தன் பையன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என எதுவும் சொல்லாமல் அவன் சொல்வதை ஆமோதிப்பதாக அமைதியாக இருந்தார். அவர் சொல்ல நினைத்ததை மகன் சொல்லிவிட்டான்.
ரூபினி முகம் கறுத்து விட்டது. ஆனால் சிரித்தே சமலிப்பாக
“கொஞ்சமாச்சு ஃபேஷன் சென்ஸ் இருந்தா இது டிரென்டிங் ஆன டிரஸ்னு புறிஞ்சிருக்கும் ஆனால் நீ தான் சேலை பின்னாடியும் சுடிதார் பின்னாடியும் தான போற அதான் உனக்கு இதை பத்தி எதுவும் தெரியல” என அவர்கள் கம்பெனிக்கு வந்து அவர்களிடமே வாக்கு வாதம் செய்தாள்.
வரதராஜன்னுக்கு அவள் பேச்சு எரிச்சலாக இருந்தாலும்… வாரம் முதல் நாள் சண்டையுடன் ஆரம்பிக்க வேண்டாம் என்று
“ரெண்டு பேரும் அமைதியா இருங்க. இங்க வேலை கத்துக்க வந்திருக்கீங்க. அதனை மட்டும் பண்ணா போதும். ப்ரெண்ட்லி டாக் (friendly talk) எல்லாமே வெளியே வச்சுக்கோங்க” என சொல்லி அவர்கள் பேச்சை நிறுத்தினார்.
அர்ஜுனுக்கு தந்தை நிலமை புரிந்தாலும்… இவரும் சண்டை போட்டதை ப்ரெண்ட்லி டாக் என சொல்ல எப்படி மனசு வந்தது என்று தான் தெரியவில்லை.
அவர்களுக்கு தெரிந்த வேலைகளை பிரித்து கொடுத்து, சந்தேகம் இருந்தால் கேட்க அனுபவமான நபரை நியமித்து விட்டு சைட் விசிட் என்று காரணம் சொல்லி கிளம்பிவிட்டார்.
ரூபினி குத்தி காட்டியது சாராவைத் தான் என்று அவருக்கும் புரிந்தது. அர்ஜுன் சமாலிப்பான் என்று தான் கிளம்பிவிட்டார்.
ரூபினிக்கு என்று சொன்ன வேலையை தவிர மத்த எல்லா வேலையும் செய்தாள். இதில் அர்ஜுன் மண்டை தான் உருண்டது. சில நிமிடங்கள் தான் பொறுமையாக இருக்க முடிந்தது. அதற்கு பின் எழுந்து வேறு ஒரு கேபின் சென்றுவிட்டான். ‘எங்கே போகிறாய்‘ என்று ரூபினி குரல் ஒலித்தாலும் கேளாதது போல் சென்றுவிட்டான்.
சில நிமிடம் பின் ரூபினி அங்கேயும் சந்தேகம் என்று வந்து நிற்க… அர்ஜுன் எளிமையாக விளக்கினான். ஆனால் அவளோ மயக்கும் கண்களுடன் அர்ஜுனை அளவிடுவது போல் பார்க்க… பொருமை பறந்துவிட்டது. கையில் உள்ள பேப்பரை தூக்கி எறிந்து விட்டு கதவை டமால் என்று சாற்றி விட்டு கிளம்பிவிட்டான்.
நிறைய கம்பனி ஒரே வளாகத்துக்குள் இருப்பதால் பொதுவாக ஒரு கஃபேடேறியா (cafeteria) இருக்க அங்கு சென்றான். அவன் எதிர்பார்க்காத விதமாக சாரா அங்கு டீ வாங்கிக்கொண்டு இருந்தாள்.
அர்ஜுனுக்கு இருந்த கோவம் எங்க போனதோ தெரியவில்லை இதழ் பிரித்து சிரித்தான் அவன் தேவதையை பார்த்த பின். சாரா திரும்பி நின்றுக்கொண்டு இருக்க… அவள் கண்களை இருக்கரம் கொண்டு மூடினான்.
முதலில் தடுமாறிய சாரா… நாசியில் வந்த சென்ட் வைத்து “ டேய் அர்ஜுன், நீ தான டா அது. எனக்கு தெரியும்” என சொல்ல
தொட்டு கூட பார்க்காமல் அவள் கண்டறிந்தது வியப்பாக பார்த்த அர்ஜுன்
“எப்படி டி கண்டுபிடிச்ச?” என அவள் கையில் இருந்த ஒரு டீயையும் வாங்கி கொள்ள…
சாரா அவளுக்கு ஒரு டீ சொல்லிவிட்டு அங்கு இருந்த சேரில் அர்ஜுனுடன் அமர்ந்த படியே பதில் சொன்னாள்.
“பின்ன என்ன டா, கழுத வயசாகியும் இப்படி கண்ண பொத்தி விலையாடுறது நம்மலா தான் இருக்கும்” என கேலி செய்து சிரிக்க
அர்ஜுனுக்கு ரூபினி கொடுத்த தலைவலி பறந்தே போய் விட்டது.
அங்கே இருக்கும் பெரிய கம்பெனி முதலாளியின் பையன் வந்து இருப்பதால்… கடையில் வேலை செய்பவர் வந்து ஆர்டர் எடுக்க… பிரெட் ஆம்லெட் ரெண்டு எடுத்து வர சொன்னான்.
“என்ன டி முகம் ரொம்ப டல் அடிக்குது. ரொம்ப வேலையா இருக்கா?” என அக்கறையாக கேட்க.
“அப்படி எல்லாம் இல்ல டா. புது இடம் அட்ஜஸ்ட் பண்ணி கொஞ்சம் கஷ்டமா இருக்கு. வேற ஒன்னும் இல்லை. கொஞ்சம் நாள்ல எல்லாமே பழகிடும். ஆமா, உனக்கு எப்படி போகுது?” என ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு கேட்டாள்.
ரூபினி இன்று வந்து இருப்பால் என தெரிந்தே தான் அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள கேட்டாள்.
“அங்க முடியல. அதான் தல வலிக்குதுனு இங்க வந்தேன். அதையே நியாபக படுத்தாத சாரா. ரூபினி ரொம்ப அட்வான்டேஜ் எடுக்குறா” என கடுப்பில் சொன்னான்.
பெண்களுக்கு இது போல் நடந்தால் குரல் கொடுக்க ஆயிரம் பேர் வருவார்கள். அந்த பையனை லாடம் கட்டவே ஒரு கூட்டம் இருக்கும் ஆனால் ஒரு ஆணுக்கு இது போல் ஹராஸ்மெண்ட் நடந்தால் கேட்பதற்கு ஒரு நாதி இல்லை என்ற உண்மை விளங்கியது.
டேபிள் மேல் இருந்த அவன் கை மேல் இவள் கையை வைத்து
“ஃபீல் பண்ணாத அர்ஜுன். அவளே கொஞ்ச நாள்ல இங்க இருந்து ஓடிடுவா” என சாரா சொல்லும் போதே ரூபினி அவர்கள் இருக்கும் இடத்துக்கு தான் வந்தாள். சாரா அர்ஜுன் மேல் இருந்த கையை நகர்த்தி விட்டாள்.
சாராவும், அர்ஜுனனும் எதிர் எதிரில் அமர்ந்து இருந்தனர். ரூபினி அர்ஜுன் அருகில் இருக்கும் இடத்துக்கு வந்து அமர்ந்தாள்.
அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்த பிரெட் ஆம்லெட் வந்துவிட “ ஹே அர்ஜுன், எனக்கு இது ரொம்ப பிடிக்கும். இங்க தான் வர்றேன்னு சொல்லிட்டு வந்து இருக்கலாமே” என சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.
அர்ஜுன் செம்ம கடுப்பில் இருப்பது சாராவுக்கு நன்றாக தெரிந்தது. சாரா எழுந்து போக… ரூபினி முகத்தில் எகத்தாளமான ஒரு சிரிப்பு. அர்ஜுன் மனது காயப்பட்டு போனது சாராவின் செய்கையில்.
எல்லாம் ஒரு நொடி தான்…அவன் சற்றும் எதிர் பார்க்காத நேரம் திரும்பி வந்த சாரா அவன் கையை பிடித்து கொஞ்சம் தள்ளி இருந்த டேபிளுக்கு அழைத்து சென்றுவிட்டாள். சாரா கையில் சிக்கி இருந்த அவன் கைகளையே பார்க்க ‘அவளுடனே வாழ்க்கை முழுக்க பயணிக்க தோன்றியது’. இப்போது அர்ஜுன் திரும்பி ரூபினியைப் பார்த்து நக்கலாக சிரித்து விட்டு சாரா பின்னாடி சென்றான்.
வெயிட்டர் அழைத்த சாரா “அண்ணா, இங்க ரெண்டு பிரெட் ஆம்லெட். அந்த டேபிள் பில் அந்த மேடம் கொடுப்பாங்க” என சத்தமாக சொல்லிவிட… அர்ஜுன் சிரிப்பை அடக்க பேரும் பாடு பட்டான்.
முறைத்து பார்த்து கொண்டு இருந்த ரூபினி இப்போது வாயில் வைத்த உணவோடு அதிர்ச்சியாக பார்க்க காரணம் அவளிடம் கையில் பணம் இல்லை. ஃபோன் மேலேயே வைத்து விட்டு தான் வந்தாள். திருட்டு முழி முழித்து படி அமர்ந்து இருந்தாள்.
அர்ஜுன் மனது லேசானது போல் இருந்தது. சாரா காற்றில் பறந்து முடியை இடது கை கொண்டு காதுக்கு பின்னாடி சொருக்க, லேசாக ஆடிய ஜிமிக்கி என அனுஅனுவாக ரசித்தான். இவனின் பார்வை உணராமல் தன்னையே பார்க்கும் அர்ஜுனைப் பார்த்து லேசாக சிரித்து ‘என்ன’ என்று புருவம் உயர்த்தி கேட்க… தலையை கோதிக்கொண்டு சிரித்த படி திரும்பி விட்டான்.
இவர்கள் பில் கட்டிவிட்டு கிளம்பி விட… ரூபினியை கடைக்காரன் வண்டை வண்டையாக திட்டுவது தெரிந்தது. அவளுக்கு இது தேவைதான் என்று கிளம்பிவிட்டார். அதற்கு மேல் ரூபினி அன்று ஆபீஸ் வரவில்லை. அர்ஜுனுக்கு அதுவே நிம்மதியாக இருந்தது.