logo

அத்தியாயம் 6

Mars

Administrator
விஸ்ரான் - என்னால நம்பவே முடியல!!! எப்படி உன்னால என்ன உன்னோட புருஷன்னனு சொல்ல முடிஞ்சது. அவங்களுக்கு சந்தேகம் வரும்னு உனக்கு புரியலையா??!!! ஏன் டி இப்படி பண்ண? என்று உட்சக்ட்ட கோவத்தை வார்த்தைகளில் காட்டினான்.

தாரா - உங்களுக்கே இந்த வீட்ல நேரம் இல்லாத அப்போ இன்னும் நம்ம பிளான் பண்ணி அதை பண்றதுக்கு… நானே ஒரு பிளான் பண்ணேன்…. அவ்ளோதான்.. எப்படியும் நீங்க அவங்க பேரன் இல்லனு மூணு நாள் ல கண்டுபிடிச்சிடுவாங்க என்றாள் பயத்தை உள்ளே மறைத்துக்கொண்டு.


விஸ்ரான் - அதுக்கு இப்படி புது கதைய சொல்லுவியா!!??? … இல்ல என்னால நம்ப முடியல… உனக்குள்ள வேற ஏதோ ரகசியம் இருக்கு… மரியாதையா என்னனு சொல்லுடி??

‘ஐயோ கண்டுபிடிச்சிட்டான்… ‘ சற்றே திணறிய தாரா - இங்க பாருங்க…எனக்கு வேற வழி தெரியல. நானும் காசுக்காக தான் வழி இல்லாம இருக்கேன். எனக்கு இந்த ஊரை விட்டு புதுசா ஒரு ஊருக்கு போய்ட்டு செட்டில் ஆகனும். இன்னும் நேரத்த கடத்திகிட்டு இருந்த வேலைக்கு ஆகாது அதான் அப்படி பண்ணேன்.

அவளையே துளைக்கும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தான் விஸ்ரான். கடினப்பட்டு இருவரிடமும் நம்பிக்கை பெற்று இருக்கிறான். மீண்டும் சந்தேகம் எழும் படி ஒரு கதையை சொன்னால் பெற்ற நம்பிக்கையை திரும்ப பெற வேண்டியது தான். அவள் என்ன காரணம் கூறினாலும் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை. இன்று இரவு அவள் வந்ததும் பேசணும் என்று நினைத்துக்கொண்டு இருந்தான். மொத்தமும் இப்போது மாறிவிட்டது.

விஸ்ரான் - உன்ன நம்பி எல்லாம் சொன்னேன். ஆனால் இப்போ என்னோட நம்பிக்கையே கேள்விக்குறி ஆகிடுச்சு என்றான் ஆற்றாமையுடன்.

தாரா - நான் உங்களையும் மனசுல வெச்சுகிட்டு தான் இப்படி பண்ணேன். எங்க உண்மைய சொல்லுங்க பார்ப்போம்.. அவங்களுக்கு உங்க மேல 100% நீங்க தான் அவங்க பேரன் என நம்பிக்கை இருந்தது என்று??

அதற்கு அவனிடம் பதில் இல்லை.

விஸ்ரான் - அதை நான் சரி பண்ணிகிட்டே வந்தேன். நீ வந்து மொத்தமா கெடுத்துட்ட. அதை விடு… உன்ன எவ்வளவோ நம்பினேன் … உன் கிட்ட நான் இத எதிர்பார்க்கவே இல்லை

அவனுக்கு இவளிடம் ஏற்பட்ட சின்ன வேதியியல் மாற்றம்… இவளிடமும் ஏற்ப்பட்டது. அன்று இரவு இவனிடம் நெருக்கமாக இருந்ததை எண்ணி தூங்காமல் இருந்தாள் பெண். அவனின் நம்பிக்கையை குழைத்து விட்டோம் என்றதும் கொஞ்சம் அழுகை எட்டிப்பார்த்தது.

தாரா ( அழுதுகொண்டே) - நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இதை சரி பண்ணலாம். பிளீஸ் என்னோட நிலைமையும் புரிஞ்சிக்கோ என்றாள் தேம்பிக்கொண்டு.

அவள் அழுததும் இவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவள் சொல்லுவதும் ஒரு விதத்தில் சரி தானே அவர்கள் இவனை முழுமையாக நம்பவில்லை. அட்லீஸ்ட் இவள் கூட இருந்தாள் பணம் இருக்கும் இடத்துக்கு சீக்கிரம் சென்று வேலையை முடிந்த அளவில் வேகமாக முடிக்க முடியும் என்று எண்ணினான்.

அவள் அருகில் சென்றவன்…அவள் உயரத்துக்கு குனிந்து… அவள் நாடியில் ஒரு விரல் கொண்டு தன்னை பார்க்கும் வாரு நிமிர செய்தான்.

விஸ்ரான் - சரி, உனக்கும் ஏதோ பிரட்ச்சனை இருக்குனு புரியுது. இதை நம்ம சமாளிக்கலாம். ஆனாலும் உனக்கு என்ன நடந்தாலும்.. இல்லை ஏதாச்சும் ஐடியா வந்தாலும் என்கிட்ட வந்து உண்மைய சொல்லுவேன்னு வாக்கு குடு.

தாரா - நிச்சயமா. இனிமேல் எதுவும் உங்ககிட்ட கேட்காம செய்ய மாட்டேன். எது நடந்தாலும் நேரடியாக சொல்றேன் என்றாள்.

அப்போது தான் அவன் முகத்தை நன்றாக பார்க்க முடிந்தது. அதிலும் அவன் கண்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. அவன் கண்மணிகளில் தான் முகம் பார்க்கும் அளவுக்கு நெருங்கி நின்றவள் அவன் கருவிழிகளையே அசையாமல் பார்க்க

தாரா - ஓ!!! இதுதான் அந்த ரகசியமா!! இது தான் உனக்கும் அவங்க பேரனுக்கும் உள்ள ஒற்றுமையா. அதான் அவங்க உன்ன கொல்லாம கொஞ்சம் நம்பி விட்டுறுக்காங்க. இப்போ தான் புரியுது.


விஸ்ரான் - பரவாயில்லையே நான் நினைச்சத விட சீக்கிரம் கண்டுபுடிசிட்ட. சரி அதை விடு. அந்த பணம் நகை எல்லாம் எங்க இருக்கு??

அவள் சொல்ல வரும் முன் கதவு தட்டப்பட்டது. ‘ அய்யோ! இந்த நேரத்துல வந்து தான் கதவ தட்டனுமா ‘ என்று எரிச்சல் பட்டவன்…. சென்று கதவை திறந்தான். அங்கே வள்ளி இருவரையும் சாப்பிட அழைக்க நின்றுக்கொண்டு இருந்தாள். அவளிடம் இருவரும் வருவதாக கூறியவன் கதவை வேகமாக சாற்றிவிட்டான்.

விஸ்ரான் - ஒரு முக்கியமான விஷயம். உன் பொருள் எல்லாமே பேக் ல வெச்சு உபயோகம் பண்ணு. வெளிய எதுவும் வைக்காத. கண்டிப்பா உன்னோட உண்மையான அடையாளம் காட்டுற எந்த பொருள் இருந்தாலும் பேக் குள்ள வெச்சு லாக் போடு. இந்த ரூம் தவற கீழ போன அப்புறம் எந்த பொருளையும் தொடாத.. சரியா???

தாரா - பேக் பூட்ட சொன்னீங்க ஓகே. ஆனா ஏன் எதையும் தொட கூடாது??

விஸ்ரான் - இப்போதான் உன்ன அறிவாளி சொன்னேன்.. அதுக்குள்ளயா?? என்று தலையில் அடித்தவன்.
இங்க பாரு… அவங்க ஒன்னு சாதாரணமானவங்க இல்லை. நம்ம ஆக்டிவிடீஸ் எல்லாமே நோட் பண்றாங்க. நீ ஏதாவது பொருள் தொட்டா கைரேகை ஒட்டும்ல.. உன் மேல சந்தேகம் வந்தா உன் கைரேகை வெச்சு சீக்கிரம் நீ யாருனு கண்டுபிடிச்சிவாங்க. அப்புறம் இந்த பெர்ஃப்யூம், வாசனைப் பொருள் யுஸ் பண்ணாத…..

தாரா - சரி கவனமா இருக்கேன்! வாங்க கீழ போகலாம் அவங்க சொல்லி நேரம் ஆச்சு.

விஸ்ரான் - அடுத்து… சாப்பாடு… என்று சொல்ல வரும் முன்

தாரா - புரியுது… ரெண்டு நாள் இங்க சாப்டுகலாம்… அவங்களுக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சதும் இந்த வீட்ல சாப்டுற மாதிரி ஆக்டிங் பண்ணனும்
ஏன்னா சாப்டுல விஷம் வைக்க வாய்ப்பு இருக்கு. அவ்ளோதான?? இல்ல வேற இருக்கா???

விஸ்ரான் - குட்!

இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வருவதை தாமஸ் பார்த்தார். தேன்மை டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க.. வள்ளி கிச்சனில் இருந்து உணவை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

தாமஸ் - வாங்க ரெண்டு பேரும் வந்து உட்காருங்க. சேர்ந்து சாப்பிடுவோம்.

தாமஸ் சாதாரணமாக பேசினானும் அவர் தியாவை (தாரா) கூர்ந்து கவனிப்பது புரிந்தது. அவ்வபோது தீரனையும் நோட்டம் விட்டார். இதனை தீரன் கவனித்தது விட்டான். மனதிற்குள்ளும் கணக்கும் போட்டுவிட்டான்.

அவள் அமரும் இருக்கையை அவளுக்காக நகர்த்தி உட்காரும் போது.. சாப்பிட எசவாக டேபிள் அருகில் நகர்த்தியும்விட்டான். பிளேட் ஐ எடுத்து அவளுக்கு வேண்டியதை அவனே பார்த்து பார்த்து எடுத்தும் வைத்தான் பல நாள் அவளுடன் குடும்பம் நடத்தும் கணவன் போல். இவை அனைத்தும் சகஜமாக செய்வது போல் இருந்தாலும் தாமஸ் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்தான்.


தேன்மை, தாமஸ் முன்பு அக்மார்க் ஜோடி போல் நடிக்க இவ்வாறு செய்கிறான் என்பது புரிந்தது. தன் பங்கும் இதற்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு பரிமாறுவது, புறை ஏறிய போது தலையை தட்டி தண்ணி குடுப்பது, அவன் குடித்து வைத்த டம்ளர்ல் குடிப்பது என்று அவனுக்கு மேல் ஆக்டிங் செய்தாள்.

இவள் செய்வது எல்லாம் மனதுக்குள் அவனுக்கு சாரல் வீசியது உண்மை. அவள் நடிக்கிறாள் என்பது தெரிந்தாலும்… சின்ன வயதில் இருந்து பொய் கரிசனம் கூட கிடைக்காமல் இருந்ததுக்கு இவள் அருகாமை இதமாக இருந்தது. அப்போது அவன் அவளை பார்த்த பார்வையில் துளியும் நடிப்பு இல்லை.


இதனை பார்த்த தாமஸ் மனது சிறிது சமாதானம் அடைந்தது. சாப்பிட்டு முடித்த பின்னர் அவரவர் அறைக்கு திரும்பினர்.

தாமஸ்… தேன்மையிடம் அவருக்கு தியா மேல் இருந்த சந்தேகம் மற்றும் அவர் சாப்பிடும் போது பார்த்த காட்சி என்று விவரித்து எடுத்து கூறினார். எனவே தியா மேல் இருந்த சந்தேகம் குறைந்தது. மேலும் அவன் அப்பாவிடம் பேச வைத்த பிறகு முழுமையாக நம்பலாம் என்று தீர்மானித்து அப்போதைக்கு அதனை விட்டனர்.

மாடிக்கு வந்த விஸ்ரான் அவனது மடிக்கணினியை எடுத்து வேலை செய்ய அமர்ந்து விட்டான். அப்போது என்ன நினைத்தானோ

விஸ்ரான் - தாரா! இந்த வேலையில நம்ம ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருக்க வேண்டும். உன் மேல சந்தேகம் வர கூடாது. அதுக்காக நீ என்னை நம்பி ஒத்துழைப்பு தரணும்.


கீழே நடந்தவற்றை பற்றி கூறுகிறான் என்பதை புரிந்துகொண்டாள்.

தாரா - எனக்கு புரியுது தீரன்! என்னோட ஒத்துழைப்பு கண்டிப்பா இருக்கும். நான் எதையும் செய்ய தயார்.

சரி என்பதற்கு தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தான்.

தாரா - ஆமா! உங்க உண்மையான பெயர் தான் என்ன?

விஸ்ரான் - இந்த வீட்டை விட்டு வெளிய போன அப்புறம் சொல்றேன். இல்லைனா பழக்க தோஷத்துல அவங்க முன்னாடி உண்மையான பெயர் சொல்லி கூப்பிட்டா என்ன செய்யுறது. அதுனால தீரன்னே கூப்பிடு.

தாரா - ரொம்ப விவரம் தான்!!

அவள் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள். அப்போது சரியாக காளி விஸ்ரானுக்கு ஃபோன் செய்தான்.

விஸ்ரான் - காளி! வெளிய வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு? எதுவும் பிரச்சனை இல்லயே?

காளி - அண்ணே அதுலாம் இல்ல… நாளைக்கு இடம் ரெடி ஆகிடும். நீங்க பொருள் எடுத்துட்டு வர்ற டைம் ரெடி ஆ இருக்கும்.

விஸ்ரான் - சரி காளி! அப்படியே வேற ஊருக்கு போறதுக்கும் ரெடி பண்ண சொன்னேன்ல அது என்ன ஆச்சு?

காளி - அது எல்லாம் பக்காவா ரெடி ஆகிடுச்சு. என்ன ஆச்சு அண்ணே எப்பவும் இவ்வளோ கவலை படமாடீங்க?

(அவன் கேள்வியில் பின் தலையை கோதிக்கொண்டு) விஸ்ரான் - அது ஒன்னும் இல்ல என் கூட இன்னும் ஒருத்தர் வர்றாங்க அவங்களுக்கு சேர்த்து ஏற்பாடு பண்ணிடு.

சிங்கிள் ஆக சுற்றிக்கொண்டு இருக்கும் விஸ்ரான் தீடீர் என்று இப்படி சொன்னதும் யோசித்தவன்… மறுநிமிடமே என்ன ஏது என்று கேட்காமல்

காளி - சரி அண்ணே… நான் பார்த்துக்கிறேன். ரெடி பண்ணிடலாம். வேற எதுவும் பண்ணனும்னா சொல்லுங்க

அவன் எதுவும் கேட்காமல் உடனே சரி என்றதும் அவன் இங்கிதம் கருதி நடந்துகொள்வது பிடித்திருந்தது. அவன் எதுவும் கேட்காமல் செய்வான் என்பது விஸ்ரானுக்கு தெரியும் எனவே மனது கேளாமல்


விஸ்ரான் - அது… வந்து… அது… என் கூட வர்றது ஒரு பொண்ணு.. சரி வேற எதுவதா இருந்தாலும் நான் ஃபோன் பண்றேன் என்று வைத்துவிட்டான்.

இந்த பக்கம் காளியோ ‘ ஓ! கதை அப்படி போகுதா.. நல்ல இருந்தா சரிதான் ‘ என்று அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.


அப்போது ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தவள் நேராக சென்று ஃபோன் பார்க்க உகர்ந்துவிட்டாள். இவனும் மடிக்கணினியில் அவன் வேலையை மும்முரமாக செய்துக் கொண்டு இருந்தான். அவனை பார்த்தவள் மனதில் அவனுடன் நெருக்கமாக நின்ற நினைவு வந்து இம்சை செய்தது.

மேலும் அவன் கண்கள்.. பார்த்துக்கொண்டே இருக்கனும் போல் இருந்தது. கண்களில் ஏதோ ஒரு மாயை இருப்பதாக தோன்றியது.

நேரம் கடந்த நிலையில் போர் அடித்துவிட அவன் என்ன செய்கிறான் சென்று அவன் எதிரில் சென்று உட்கார்ந்தாள்.

தாரா - என்ன வேலை செய்றீங்க?

விஸ்ரான் (சிரிப்புடன்) - உனக்கே தெரியுமே. நான் யாருனு அப்புறம் என்ன கேள்வி

தாரா ( முன்னே நெருங்கி வந்து) - எனக்கு தெரியுமா… நீங்க சொல்லாம எனக்கு எப்படி தெரியும்??? (ஒரு நிமிடம் யோசித்த பின்பு) நீங்க திருடன் ஆனா லேப்டாப் வெச்சிட்டு என்ன… செய்றீங்க என்று லேப்டாப்பை எட்டி பார்த்தாள்.
 
Top