நடு இரவில் தூங்கிக்கொண்டு இருந்தவனுக்கு தீடீர் என்று ஏதோ சத்தம் கேட்க அசையாமல் அதே நிலையில் படுத்து இருந்தான். ஜன்னல் அருகே கேட்ட சத்தம் இப்போது பக்கத்து டேபிள் அருகில் கேட்ட…. பக்கத்தில் இருந்ததோ தலையணை மட்டுமே எனவே அதில் மெதுவாக கையை நகட்டி அறுகில்ருந்தவரின் முகத்தை மூட முயல யாரும் இல்லை. டேபிள் லாம்ப் ஆன் செய்து யாரு என்று பார்க்க அதுவோ ஒரு எலி. இவன் லைட் ஆன் செய்த உடன் அது திறந்து இருந்த கதவின் வழியே சென்று விட்டது.
அப்போது தான் கவனித்தான் அந்த எலி வெளிய செல்லும் முன் அது கவ்விக் கொண்டு இருந்த பொருளின் சிறிய அளவு கீழே விழுந்து கிடந்ததை. அது பார்பதற்கு சந்தேகத்தை தூண்ட… கவனமாக பையில் இருந்து கையுரை அணிந்து கொண்டு எடுத்துப் பார்த்தால் அதுவோ மனித விரல் காய்ந்த இரத்தம் என்று இருந்தது. பார்த்ததும் அதனை எடுத்துக் கொண்டு டாய்லெட் இல் ப்ளஷ் செய்து வந்த பின்பு தான் மூச்சே வந்தது.
தாமஸ் வீட்டில் அதிகம் பணம், நகை இருப்பது அவன் செய்த விசாரணையில் ஊர்ஜிதம் ஆகியது ஆனால் அவர்கள் செய்த கொலை எதற்கும் சாட்சி இல்லை எனவே அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவனுக்கு உண்மை புரிந்தது. எப்போது அசால்ட் ஆக இருபவனுக்குள் சிறு தயக்கம் ஏற்பட்டது.
வந்த வேலையை இன்னும் சீக்கிரம் ஆக முடிக்க எண்ணினான். வேலையை முடித்து அவன் ரகசிய இடத்துக்கு சென்ற பிறகு இவனை பிடிப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என அறிவான். எனவே இந்த வீட்டை கடந்து, காட்டை நல்ல படியாக சென்றால் போதுமானது என்று எண்ணியவாறு அருகில் இருந்த தண்ணீர் பாட்டீல் பார்க்க அதுவோ காலியாக இருந்தது.
எனவே கிட்சென் செல்ல கதைவை திறந்து இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் யாரோ நடக்கும் சத்தம் மீண்டும் கேட்க…. இவன் ரூமில் இருந்து வலது பக்கம் சத்தம் கேட்டது. ஒருவேளை தன்னை நோட்டம் விட வந்து விட்டார்களோ??!!! அதே போல் எலியாக இருக்குமோ??!!! எலியை பிடிக்க வந்த பூனையாக இருக்குமோ அல்லது அப்போது நடந்த விஷயத்தால் தோணும் பிரம்மையாக இருக்குமோ என்று பலவாறான சிந்தனைகள் ஓட… அதையும் பார்க்கலாம் என்று சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான்.
அங்கே டார்ச் லைட் ஒளி தெரிய… நிலவின் ஒளியில் அது தாமஸ், தேன்மை இல்லை என்பது தெரிய… ஒரு வேளை வள்ளியாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற ‘ச்சா!! அவங்க எப்பயோ கிளம்பி இருப்பாங்க ‘ அப்போ இது யாரு புதுசா என்று எண்ணியவாறு மறைந்து இருந்து பார்த்தான். அந்த உருவமோ எதையோ தேடிக் கொண்டு ஒரு ஒரு இடமாக வர அப்போது சரியாக விஸ்ரான் அருகில் வரும் போது பின்னிருந்து வாயை மூடி ஒரு கையை முதுகுக்கு பின்னால் மடக்கி பிடித்துக் கொண்டான் ஒரு தற்காப்புக்காக.
அந்த உறுவமோ அவன் பிடியில் இருந்து திமிறிகொண்டு இருந்தது. அப்போது தான் விஸ்ரானுக்கு புரிந்தது அது ஒரு பெண் என்று. அவள் பெயர் தாரா.
அப்போது தான் லேசாக பிடியை விடுவிக்க அவளோ ‘ஆ..!ஆ.!ஆ..!’ என்று கத்த வாயை திறக்கும் முன் மீண்டும் வாயை பொத்தி மறைவான இடத்துக்கு இழுத்து சென்றான்.
இதுவரை பெண்ணின் தீண்டல் படாமல் இருந்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய அதற்கு எதுவும் பெயர் வைக்காமல் அவளிடம்
விஸ்ரான் - யாரு நீ? இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?
தாரா - என்னமோ வீட்டு ஓனர் மாதிரி கேள்வி கேக்குற? நான் யாரா இருந்தா உனக்கு என்ன டா? என்றாள் தெனாவெட்டாக.
விஸ்ரான் - ஓங்கி அரஞ்சேனா!!! என்று கையை தூக்க அப்போதும் தைரியமாகவே தன்னை காட்டிக்கொண்டாள். ஆனால் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. பின்னே ஆறு அடி உயரத்தில் ஒருவன் இரும்பு கரங்களை கொண்டு அடிக்க வந்தால்.. அவன் கையின் பலத்த தன் கையை அழுத்தி பிடித்த அப்போவே தெரிந்தது.
விஸ்ரான் - எதுக்கு இப்படி திருட்டு தனமா வந்த? உன் பேரு என்ன? என்று குரலை எவ்வளவு இறக்கி பேசினாலும் கொஞ்சம் முரடாகவே வந்தது.
தாரா - நான் மட்டுமா திருட்டு தனமா வந்தேன். நீயும் தான
ஒரு நிமிடம் அவனே அதிர்ச்சி ஆகி விட்டான்.
விஸ்ரான் - என்ன சொன்ன நீ?
தாரா - ஆமா! நீயும் இங்க நிறையா பணம் நகை இருக்கிறது தெரிஞ்சுகிட்டு தான பேரன்னு சொல்லி ஏமாதிகிட்டு மத்தவங்க மாதிரி வந்திருக்க… என்று உண்மையை புட்டு புட்டு வைக்க
விஸ்ரான் அவளை மடக்க எண்ணி - அப்போ உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு… அது சரி… நான் அவங்க உண்மையான பேரன் இல்லனு தெரிஞ்சா அவங்க என்ன கொன்றுக்கணுமே… நான் அப்படியே தான இருக்கேன்.
தாரா - அப்போ உண்மையான பேரன்னா… நான் அத்து மீறி வீட்டுக்குள்ள வந்துருக்கேன்.. ஏன் கத்தி யாரையும் கூப்பிடாம மறைவான இடத்துக்கு இழுத்துட்டு வந்தீங்க? என்று நியாமாக கேட்க…
புத்திசாலி பொண்ணு தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு… இவளிடம் இன்னும் பேச்சு கொடுத்தால் நம் வாயை புடுங்குவாள்… மேலும் அவளுக்கும் எல்லாம் தெரிந்து இருக்கிறது என்பது புரிய… இருவரும் ஒரு சிறிய இடத்தில் நெருக்கமாக நின்று பேச அவளிடம் இருந்து வந்த மணம் நாசியில் வழியில் சென்று உள்ளே ஏதோ செய்ய இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருக்க கூடாது இவா கிட்ட ஏதோ இருக்கு என்று எண்ணிக் நேராக விஷயத்துக்கு வந்தான்.
விஸ்ரான் - ஆமா நான் திருடன் தான். நீ யாரு?
தாரா - நீ திருடன்னா… நான் திருடி என்று ஒற்றை கண்ணு அடித்து காட்ட…
விஸ்ரான் - சரி யாரை தேடி உள்ள வந்த?
தாரா - கூட்டாளி ஒருத்தன் உன்ன மாதிரி வந்தான். அவன் இன்னும் இருக்கானானு பாத்துட்டு வர சொன்னாங்க… நீ இருக்குற அப்போவே புரிஞ்சிக்கிட்டேன் அவனை மர்கயா பண்ணிட்டாங்க போல.
விஸ்ரான் - உன் கூட்டாளி சொல்ற… அவனை கொன்னுட்டாங்க சொல்ற.. கஷ்டமா இல்லையா என்றான் உணர்ச்சி அற்ற குரலில்.
தாரா - அவனை எனக்கு 1 வாரமாதான் தெரியும். அதுவும் இந்த வீட்டுக்கு வர்ற அன்னைக்கு காலைல தான் பார்த்தேன். போகாத சொன்னேன்… இன்னும் விசாரிச்சு பாத்துட்டு போகலாம் சொன்னேன் அவன் கேக்கல.
முதலில் இருந்த பயம் இப்போது கொஞ்சம் குறைவாக இருந்ததால் சரளமாக உரையாடினாள். அவனுக்கும் அது புரிந்தது.
தாரா - சரி..நான் வந்த வேலை முடிஞ்சது.. நான் கிளம்புறேன்… என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
விஸ்ரானுக்கு அவளிடம் இன்னும் பேசினால் என்ன என்று தோன்ற… இது வெறும் உணர்ச்சி தான் என்று எண்ணி இங்கு இருந்து சென்றது முதல் வேலையாக ஒரு பெண்ணை முழுமையாக தெரிந்து கொண்டுவிட்டால் சரியாக போகும் என்று எண்ணி நகர அப்போது சரியா மீண்டும் தாரா அவன் நெஞ்சில் வந்து மோதினாள்.
அவனையும் அறியாமல் விஸ்ரான் - என்ன டி உனக்கு வேணும்? அதான் கெளம்பி போனியே அப்படியே போக வேண்டியது தான? எதுக்கு திரும்ப வந்த என்றான் நெஞ்சை தடவி விட்டுக்கொண்டு
தாரா - உன் கிட்ட ஒரு டீலிங் பேசணும்
விஸ்ரான் - என்னது?
தாரா - என்னையும் உன் கூட சேர்துக்கோ… உனக்கு ஹெல்ப் பண்றேன்.. வர்ற காசுல பாதி பாதி, சரியா??
விஸ்ரான் ஒரு நிமிடம் கூட யோசிக்கவே இல்லை உடனடியாக “முடியாது” என்றுவிட்டன்.
தாரா - எனக்கு அந்த பணம், நகை எல்லாம் எங்க இருக்குனு தெரியும். என் உதவி இல்லாம உனக்கு கண்டுபிடிக்க நாள் ஆகும்.
விஸ்ரான் ஒரு நிமிடம் ஆழ்ந்து யோசித்து பார்க்க… - உன்ன எப்படி நம்புறது? உனக்கு எப்படி தெரியும்?
தாரா - அதுவா எங்க கூட்டாளி எல்லாம் ஒரு நாள் பேசிகிட்டாங்க.. இதுக்கு முன்னாடி அவங்க ஆள் ஒருத்தன் கண்டுபிடிச்சானாம்.. ஆனா அதுக்குள்ள அவனும் என்று நாக்கை ஒரு பக்கமாக வெளியே நீட்டி, கழுத்தில் கோடு கிழித்து செய்கை செய்து காமித்தாள்.
விஸ்ரானுக்கு இவளிடம் பேசும் அனுபவம் புதுமையாக இருந்தது. இப்படி எல்லாம் அவனிடம் யாரும் சகஜமாக பேசியது இல்லை.
மேலும் அவள் சொல்லும் விடயம் ஏற்றுக்கொள்ளும் வாரு இருந்தது… ஆனாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தான் சென்ற பிறகு இவள் இது போல வந்து தாமஸ் தேன்மையிடம் மாட்டிக்கொள்ள கூடாது, மேலும் இவள் உதவி இருந்தால் சீக்கிரம் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்பதற்காக ஒப்புக்கொள்ள செய்தான்.
விஸ்ரான் - சரி! ஆனா 50 - 50 இல்ல 75 - 25 சரியா?
தாரா - (எதுவுமே இல்லாததுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை) சரி! என்ன பிளான்னு நாளைக்கு பேசலாம்… எனக்கு நேரம் ஆச்சு என்று அவன் பேச வருவதற்குள் மறைந்து இருந்த இடத்தை விட்டு டார்ச் ஆன் செய்து வெளியே வந்துவிட்டாள்.
இவள் செய்கைய பார்த்து திகைத்தவன்… அவள் பின்னோடு சென்று கையை பிடிக்க… அவளோ அசையாமல் அதே இடத்தில் சிலை போல் நின்றுவிட்டாள்… அவள் டார்ச் அடித்த திசையில் தேன்மை நின்றுக் கொண்டு இருந்தார்.