logo

அத்தியாயம் 4

Mars

Administrator
கல்லூரி வளாகத்தில் எப்போது போல் ஆதி மற்றும் அர்ஜூனுக்கு காத்துக்கொண்டு இருந்தாள் சாரா. லைட் பிங்க் கலர் சுடிதார் போட்டு, இருபக்கமும் ஷால் பின் செய்து நேர்த்தியாக அணிந்து இருந்தாள். வீட்டில் இருந்து வரும் நபர்களை எல்லாம் வர தொடங்கி இருந்தனர்.

அந்த கூட்டத்தில் ரூபினியின் கார் சீறிப்பாய்ந்து கொண்டு வந்தது. முடிக்கு பிரவுன் கலர் டை அடித்து இருப்பால் போல் செம்பட்டை முடி போல் இருந்தது. காலில் பெஞ்சில் ஹீல்ஸ் போட்டு அன்ன நடை போட்டு நேராக சாரா இருக்கும் பக்கம் வந்தாள்.

சாரா அமர்ந்து இருக்கும் இடத்துக்கு கொஞ்சம் முன்பே இருக்க இருக்கையில் அமர்ந்தாள். அவள் வந்தது சுற்றி சிலர் பக்கத்தில் வந்து அமர்ந்தனர். நண்பர்கள் என சொல்ல முடியாது… அவர்களுக்கு அவள் பணத்துக்காக தேவை எனவே போலி சிரிப்போடும், நடிப்போடும் இருந்தனர். அதில் பெண்களும், ஆண்களும் அடக்கம்.

வந்தவள் சும்மா இருக்காளம்… சாராவை சொடுக்கிட்டு அழைத்தாள். இதனை எதையும் கவனிக்காமல் சாரா வாசலை பார்த்த வண்ணமே அமர்ந்து இருந்தாள். சுற்றில் இருந்த சத்தத்தில் சொடுக்கு சத்தம் கேட்காமல் போக…

“ ஏய், இங்க வா..” என சாராவைப் பார்த்து சத்தமாக அழைக்க…

சுற்றி முற்றி பார்த்த சாரா… இப்போது சத்தம் வந்த திசையை பார்த்தாள். அங்கு தான் ரூபினிஅவளை ஆள் காட்டி விரல் நீட்டி அருகே வரும்வாரு அழைத்தாள்.

சாதாரணமாகவே கொஞ்சம் பயந்த சுபாவம் எனவே ரூபினி கூப்பிடுவதுக்கு என்ன என்று கேட்க அவளை நோக்கி சென்றாள். இதனை கவனித்த ரூபினிக்கு எள்ளலாக ஒரு சிரிப்பு வந்தது. சுற்றி இருந்த அவள் நண்பர்களும் சாராவை இளக்காரமாகத் தான் பார்த்தனர்.

எதிர் வந்து நின்ற சாரா வை மேலும், கீழும் பார்த்த ரூபினி “ உன்ன மாதிரி பசங்க எல்லாம் இங்க படிக்க எப்படி அனுமதிச்சாங்கனு தான் தெரில. கொஞ்சம் கூட இந்த மேனேஜ்மென்ட்க்கு அறிவே இல்லை. ஸ்டேட்டஸ் பார்த்து அட்மிஷன் கொடுக்க மாட்டாங்க போல” என திமிராக பேசினாள்.

அவள் சொல்வது கஷ்டமாக இருந்தாலும், எதும் சொல்லாமல் அமைதியாகத்தான் இருந்தாள் சாரா. எதற்கும் வம்பு என்ற எண்ணம் தான்.

“ எதுக்கு வர சொன்ன? “

“ ம்ம், உன் பேரு என்ன?... என யோசிப்பது போல் பாவனை செய்து… ஹான் சரஸ்வதி ரைட்? இனிமேல் ஆதி, அர்ஜுன் கூட உன்ன நான் பார்க்கவே கூடாது. புரியுதா? அதை சொல்ல தான் கூப்டேன். இந்தா அர்ஜூனுக்கு லெட்டர், ஆதிக்கு தெரியாம நீ இதை கொடுக்கணும். அது தான் கடைசி சந்திப்பா இருக்கணும். இப்போ நீ கிளம்பலாம்” என போ என்பது போல் செய்கை செய்தாள்.

அவர்கள் இருவருக்கு மேல் ஒரு கண்ணு இவளுக்கு இருக்கு என்பது தெரியும் ஆனால் இப்படி அனைவருக்கும் தெரியும்படி அதனை வெளிப்படுத்துவாள் என நினைக்கவே இல்லை. அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அந்த லெட்டரை வாங்க கையை நீட்டும் போது வேணும் என்றே லெட்டரை கீழே போட்டாள் ரூபினி. அது இப்போது அவள் காலுக்கு கீழே இருந்தது.

சாரா பெரு மூச்சு விட்டு அதனை எடுக்க குனியும் முன் அவளை பின்னுக்கு இழுத்தது ஒரு உருவம். அது ஆதி. அவனை அந்நேரம் ரூபினி எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தாள். இருந்தாலும் அவனைப் பார்த்து லேசாக சிரிக்க… அவனோ முறைத்த வண்ணமே இருந்தான்.

சாராவை பின்னாடி இழுத்து அவன் பக்கம் நிற்க வைத்தான். சாரா நிமிர்ந்து அவனைப் பார்க்க… அது வரைக்கும் கடுமையாக இருந்த அவன் முகம்… அவளைப் பார்த்ததும் லேசாக கண்களை சிமிட்டி சிரித்தான். கருகும் வாடை ரூபினி பக்கம் இருந்து வீசியது.

குனியாமல் ரூபினி காலுக்கு அடியில் இருந்த லெட்டரை ஆதி ஷூ காலுடன் அவன் பக்கம் இழுத்தான். ஷூ வில் இருக்கும் அச்சு அதில் நன்றாக பதிந்தது. ரூபினிக்கு அவமானம் பிடிங்கி தின்றது. அவள் நண்பர்கள் எல்லோரும் சுவாரஸ்யமாக பார்த்தனர்.

லெட்டரை லேசாக தட்டி விட்டு பிரித்து படித்தான் ஆதி. அதில் அவள் நேற்று அவனுக்கு அனுப்பிய அதே மெசேஜ் ஆனால் பெயர் மற்றும் அர்ஜுன் பெயர் இருந்தது. ரூபினி பார்த்து கேவலமாக சிரிக்க… அவள் முகத்துக்கு மேலேயே அதனை தூக்கி வீசினான்.

“ இன்னொரு முறை சாரா கிட்ட இப்படி நடந்துக்கிறத பார்த்தேன்… நடக்க காலு இருக்காது” என மிரட்டினான்.

“சாரா வா போகலாம்” இவ்வளவு நேரம் கடுமையாக இருந்த குரல் மென்மையாக மாறியது.

இதனை எல்லாம் வேடிக்கை பார்த்த சாரா எதுவும் சொல்லவில்லை. ரூபினி செய்கை எல்லாம் பணக்கார புத்தி என்றே நினைத்தாள். தன்னை தரைகுறைவாக பேசியது மட்டும் மனசை காயப்படுத்தியது.. அதனை முகமே சொன்னது.

லெட்டரை கொடுக்கும் போது தான் ஆதி வந்தான் எனவே அதற்கு முன்பு நடந்தது எதுவும் அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் முகத்தை வைத்தே ஏதோ நடந்து இருக்கிறது என்று சரியாக கவனித்தான்.

சாரா முன்பு அமர்ந்து இருந்த பெஞ்சில் அமர்ந்து

“ நீ ஏன் டி அவா கிட்ட அமைதியா இருக்க. நல்லா நாலு வார்த்தை கேட்க வேண்டியது தான?” என கேட்டான். ரூபினி முன்பு பேசாமல் தனியாக அழைத்து வந்து விசாரித்தான்.

“என்ன பேச சொல்ற அவா கிட்ட. பெரிய பணக்காரங்க அவங்க எல்லாம். எனக்கு எதுக்கு வம்பு அதான் அமைதியா இருந்தேன். தளபதியே சொல்லிருக்காரு… உசுப்பேத்துரவங்கட்ட உம்முனும் , கடுப்பேத்துரவங்கட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்னு “

மண்டையிலேயே கொட்டி “இதுக்கு.. இதுக்கு ஒன்னு கொறச்சல் இல்ல. இந்த வாய் பேசுற… அதனை அவா கிட்டையும் காட்ட வேண்டியது தான” என கொட்டும் போதே அர்ஜுன் வந்தான்.

நிதானமான வேகத்தில் இவர்களை நோக்கி நடந்து வந்தவன்… ஆதி அவளை கொட்டுவதைப் பார்த்து வேக எட்டுக்களை வைத்து நெருங்கி விட்டான்

“ டேய் டேய்!! ஏன் டா கொட்டுர??... நீ ஏன் வாங்கிட்டு இருக்க திரும்ப அடிக்க வேண்டியது தான?” என முதல் கேள்வியை ஆதியிடமும் அடுத்த கேள்வியை சாராவிடமும் கேட்டான்.

“ மச்சி, எல்லாம் அந்த ரூபினி பேய் பண்ணி வெச்ச வேலை டா. சாராவ அவா கால்ல விழ வைக்க டிரை பண்ணிட்டு இருக்கா டா. இந்த அம்மாவும் விழ போறா. அவளுக்கு நாலு அரை வைக்க வேண்டியது தான” என முறைப்போடு சொன்னான்.

இருவரையும் பாவமாக பார்த்த படி அமர்ந்து இருந்தாள் சாரா.

“ என்ன சாரா நீ? ஏன் அப்படி பண்ண. கண்டபடி திட்ட வேண்டியது தான. ஒரு நாள் அந்த ரூபினி வசமா வாங்க போறா எங்ககிட்ட.” என அவனும் டென்ஷன் ஆகி விட்டான்.

ரூபினி அர்ஜுனுக்கு எழுதிய லெட்டரை படித்ததை ஆதி சொன்னான். அதில் இருப்பது எல்லாம் பொய் என்பதால் இருவருக்கும் அவளை நினைத்து கேவலமாக இருந்தது.
இதில் எதுவும் சாரா தலையிட மாட்டாள். மூவரின் குடும்பமும் ஃபேமிலி ப்ரெண்ட்ஸ் என்பதால் அவள் அனைத்தையும் கேட்டும் கேட்காத மாதிரி இருப்பாள். அவளின் உலகத்தில் அவள் அப்பா, அர்ஜுன், ஆதி அவ்வளவே. அவளின் சிந்தனைகளும் அவர்களை பற்றி மட்டுமே இருக்கும் இதில் எங்கே ரூபினி பற்றி நினைக்க.

இந்த பிரச்சனையில் நேற்று நடந்தது பற்றி யாரும் பேசவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்பதே தோன்றியது. அவளை அவமான படுத்திய இடத்தில் நண்பர்கள் அவளை உயர்வு படுத்தினர். அதுவே சாராவுக்கு அமைதியை தர அதை பற்றி கேட்கவும் இல்லை பேசவும் இல்லை.

“இனிமேல் அவா உன்கிட்ட நெருங்காமல் நாங்க பார்துக்கிறோம் சரியா? அதுவும் இல்லாம இப்படி யாராவது பண்ண நீயும் அமைதியா இருக்காத. புரியுதா? சில இடங்கள்ல உன்னோட மரியாதையா காப்பாதிக்க நீ தான் பேசணும்” என அர்ஜுன் நிதர்சனத்தை சொன்னான்.

சரி என்பது போல் தலையை ஆட்டினாள்.

“அப்புறம் சாரா இந்த வார வீக் எண்ட் அப்பா கூடவா? என அவளின் வார இறுதி பற்றி கேட்டான் ஆதி.

அதில் முகம் பிரகாசம் ஆகி விட “ ஆமா ஆதி, இந்த வாரம் மார்கெட் போகலாம்னு சொல்லிருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிளான்?” என ஆர்வமாக கேட்டாள்.

ஆதி எப்பவும் போல ஜிம் என்று அர்ஜுன் அவர்களின் கம்பனி என்றும் பதிலளித்தனர்.

“ எப்பா கேட்டாலும் இதே சொல்றீங்க. உங்களுக்கே போர் அடிக்கலையா?!... இந்நேரம் உங்க இடத்தில வேற பசங்க இருந்தா பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு இருப்பாங்க. உங்களுக்கு அப்படி யாரு மேலேயும் லவ் வரலையா?” என சாதாரணமாக கேட்க.

இருவர் மனதிலும் ஒரு நொடி சாரா முகம் வந்து சென்றது. அர்ஜுன் இதயம் எக்கு தப்பாக துடிக்க… அதனை அமைதி படுத்த முயன்றான். ஆனால் ஆதி எந்த வித உணர்வு இல்லாமல் அன்று அவன் மனதில் அன்று தோன்றியதை சொல்ல வரும் முன் சாரா ஃபோன் அடித்தது. எனவே ஆதி அமைதியாகி விட்டான்.

பதிவு செய்து வைத்து இருந்த நம்பர் ‘மதி அக்கா’ என்று வர… சந்தேகத்துடன் எடுத்து பேசினாள் சாரா.

“மதி அக்கா என்ன இந்த நேரத்தில ஃபோன் பண்ணிருக்கீங்க?”

“ பாப்பா, உங்க அப்பா தீடீருனு நெஞ்ச பிடிச்சிட்டு விகுந்திட்டாரு. காலையில மோட்டார் போட அப்போ எங்க வீடுக்காரரும் உங்க அப்பாவும் பேசிக்கிட்டு இருந்த அப்போ தான் இப்படி ஆச்சு. எங்க வீட்ல அவரை கூப்பிட்டு ஆஸ்பத்திரி போயிருக்காங்க. அதான் உன்ன கூப்பிட்டு சொல்றேன். நீ சீக்கிரம் போ. உங்க அப்பா உன்ன கண்டிப்பா தேடுவாரு” என அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே சாரா கண்களின் கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது.

கூட இருந்த இருவரும் பதறியது. ஏதோ சரி இல்லை என்பதை அவள் முகத்தை வைத்தே கண்டுபிடித்தனர். என்ன என்று கேட்டதுக்கு அவளிடம் பதிலே இல்லை. பின் அர்ஜுன் தான் அவள் கையில் இருந்த ஃபோன் வாங்கி என்ன என்று மதி அக்காவிடம் பேசி தெரிந்து கொண்டான். ஆதி சாராவை சமாதானம் படுத்திக்கொண்டு இருந்தான்.

பின் ஆதியிடமும் விஷயத்தை சொல்ல நொடியும் தாமதிக்காமல் மூவரும் கிளம்பினர். அன்று பார்த்து அர்ஜுன் காரில் வந்திருக்க… அதில் சாராவை கூப்பிட்டு கொண்டு கிளம்பினர்.

“ஒன்னும் ஆகிருக்காது சாரா, அழாத. பிளீஸ் அதான் நாங்க இருக்கோம்ல. பாத்துக்கலாம் சரியா?!” என கூறிய சமாதானம் எதுவும் அவள் சேவியை எட்டவில்லை. எண்ணம் முழுவதும் அப்பா தான்.

ஆதி அர்ஜுன் இருவரும் அவள் நிலமையை பார்த்து வேதனையாக இருந்தது. கொஞ்சம் நேரம் முன்பு தான் அப்பா உடன் இந்த வார இறுதியில் செலவு செய்யும் நேரம் எண்ணி பிரகாசமான அந்த முகம் இப்போது இருண்டு போய் இருந்தது.

ஆதி கார் ரேசர் என்பதால் அதி வேகத்தில் காரை செலுத்தி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். சாரா அழுதுகொண்டே ஓட அவளுக்கு பின்னாடி ஆளுக்கு ஒரு பக்கம் ஆதி மற்றும் அர்ஜுன் வந்தனர்.

உள்ளே நுழையும் போதே மதியின் கணவர் அங்கு தான் நின்றார். என்ன என்று அவரிடம் கண்ணீரோடு விசாரிக்கும் போது செல்வராஜ் ( சாராவின் தந்தை) கொஞ்சம் சீரியஸ் ஆக இருப்பதாகவும் ஹேர்ட் அட்டாக் வந்ததால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். அப்போதைக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு பிழைக்க வைத்து இருந்தனர்.

இதனை கேட்ட சாரா தேம்பி தேம்பி அழுக… யாராலும் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் ஆபரேஷன் சொல்லியதால் அவரை கான உள்ளே சென்றாள். கால்கள் தள்ளாட… ஆதி மற்றும் அர்ஜுன் ஒரே நேரத்தில் அவளை வந்து பிடித்துக்கொண்டனர்.

அவரை ஆபரேஷன் தேட்டர் கூப்பிட்டு செல்ல எல்லாம் தயார் நிலையில் இருந்தது. அறை மயக்கத்தில் இருந்தார். பெண் பிள்ளையை பார்த்தது அந்த நிலையிலும் கண்களில் ஓரம் கண்ணீர் அப்போது அவர் குழந்தையின் நினைத்து. அப்பாவின் கைகளை தொட… அவர் சாராவின் கைகளை இறுக்கமாக பற்றினார். அவரால் எதுவும் பேச முடியவில்லை.

கதவு அருகே நின்ற ஆதி மற்றும் அர்ஜுனைப் பார்த்து அருகில் வரும்வாறு கண்களை சிமிட்டி செய்கை செய்தார். இருவரும் அவர் அருகில் வந்து சாரா பின்னாடி நின்றனர். செல்வராஜ் ஏதோ சொல்ல முயற்சி செய்ய… பின் அது முடியாமல் போக அவர் போராட்டத்தை பார்க்க முடியாமல் சாரா

“ அப்பா எதுவும் சொல்ல வேண்டாம். உங்களுக்கு ஆபரேஷன் பண்ண சரியா போயிடும். அது வரைக்கும் ஆதியும், அர்ஜுனும் என்ன பார்த்துப்பாங்க. நீங்க கவலைப் படாம போய்ட்டு வாங்க” என ஆறுதல் வார்த்தை அவளிடம் இருந்து வந்த அடுத்த நொடி அவரின் நெஞ்சில் சுருக்கென்று ஆழமான வலி. உடல் தூக்கி போட… அருகில் நின்று இருந்த நர்ஸ் இவர்களை வெளியே அனுப்பிவிட்டு டாக்டர் அழைத்து சொன்னாள்.

அந்த இடமே பரபரப்பாகி விட்டது. சாரா என்ன என்று தெரியாமல் அழுதுகொண்டே இருக்க… இருவரால் அவளை சமாளிக்க முடியவில்லை. சிறிது நேரத்துக்கு பின் செல்வராஜ் இறந்த செய்தி தான் வந்தது.

***

எல்லாம் முடிந்து மூன்று நாட்கள் ஆகி விட்டது. வெறித்த பார்வையுடன், கலைந்த தலை முடி, முகம் வீங்கி, கண்களில் உயிர் இல்லாமல் அமர்ந்து இருந்தாள் சாரா. இந்த மூன்று நாட்களில் அவளின் துணைக்கு இரவில் மதி அக்கா வந்து விட… பகலில் ஆதி மற்றும் அர்ஜுன் வந்தனர்.

ஆமா, இல்லை, சரி என்ற பதில் மட்டுமே இந்த மூன்று நாட்களில். எதை கொடுத்தாலும் அடம்பிடிக்கமல் சாப்பிட்டுக்கொண்டாள். அவளுக்கு என்று இருந்த ஒரு இரத்த சொந்தமும் இப்போது இல்லை. உடல் நோவு வந்துவிட்டால் அது மற்றவர்களுக்கு இன்னும் சிரமம் ஆகிவிடும் என்பதனால் சாப்பிட்டாள்.

மதி அக்காவும் அவரின் வீட்டுக்காரருக்கு… ஆதி மற்றும் அர்ஜுன் பின்புலம் தெரிந்து ஆச்சரியம் ஆனார்கள். எப்படி இவ்வளவு பெரிய வீட்டு பிள்ளைகள் சாராவுக்கு உயிர் நட்பு ஆனார்கள் என்று. அதுவும் அவர்கள் பழகும் விதமும் எந்த ஒரு பகட்டையும் வெளிப்படுத்தாமல் இருக்க…. இருவரையும் பிடித்துவிட்டது. மூவரிடமும் இருக்கும் உண்மையான நட்பை இந்த மூன்று நாட்களில் பார்த்தார் அல்லவா.

செல்வராஜ் கொஞ்சம் நகையும், பணமும் சேர்த்து வைத்து இருந்தார். அதையும் அவர் சக்திக்கு மீறி உழைத்து சம்பாதித்த ஒன்று. சாரா மற்றும் அவளின் தந்தை பிணைப்பை பார்க்க ஆதி மற்றும் அர்ஜுனுக்கு வியப்பாக இருந்தது. என்ன ஒரு புனிதமான பந்தம்.

ஆதி அவனின் வீட்டை நினைத்துப் பார்த்தான். அவன் அம்மா தோழிகளுடன் ஐரோப்பிய சுற்றுலா சென்று விட்டார். இவனை அவ்வபோது தொடர்பு கொண்டாலும் அங்கு அவர் பார்த்த இடத்தை பற்றியும், சுவைத்த உணவை பற்றியும், அவர்களின் தொழில் பற்றியும் மட்டுமே இருக்கும் உரையாடல்.

அர்ஜுன் தந்தை தொழில் தொழில் என்று மட்டுமே இருப்பவர். நான் சம்பாதித்து தருகிறேன் உங்கள் தேவையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்க என்று எதிலும் தலையிடமாட்டார். ஆதியே அவனின் தந்தையிடம் பேசும் போது தொழில் சம்மந்த பட்ட விஷயம் மட்டுமே பேசுவான். தங்கச்சி கேட்கவே வேண்டாம் காசுக்காக மட்டுமே குடும்பத்தோடு இருக்கிறாள்.

ஆனால் சாரா அவள் தந்தை கஷ்டப்படுகிறார் என சூழ்நிலை புரிந்து கொண்டு அவருக்கு தெரியாமல் வேலைக்கு செல்கிறாள். அவளின் தந்தையோ வயதுக்கு மீறி உழைத்து பெண்ணுக்காக நகை, பணம் சேர்த்து வைத்து சென்றிருக்கிறார். இதனை பார்த்த ஆதி மற்றும் அர்ஜுனுக்கு தந்தை மகள் பாசப்பினைப்பை எண்ணி நெகிழ்ந்து தான் போயினர்.

ஆதி வாங்கிட்டு வந்த சாப்பாட்டை பிரித்துக்கொண்டு இருந்தான். சாரா இன்றைக்கு ஹாஸ்டல் செல்ல தேவையானவை எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். அர்ஜுன் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தான்.

“ சாரா, உனக்கு ஸ்பென்சர் பண்றவங்க வீட்ல தான உங்க அப்பா வேலை பார்த்தாங்க. அவங்க உனக்கு ஃபோன் பண்ணி பேசலையா? ஸ்பான்சர்ஷிப் என்ன ஆச்சு?” என கேட்டான் அர்ஜுன்.

“ பேசினாங்க அர்ஜுன், பெரிய ஐய்யா ஓட மேனேஜர் பேசினாரு. காலேஜ் முடிக்கிற வரைக்கும் ஸ்ப்பான்சர் பண்றதா முன்னாடியே அப்பா கிட்ட சொல்லிட்டாங்களாம். சோ, அதுல எதுவும் பிரச்சனை இல்லை. அப்பா இறந்த அன்னைக்கு எல்லாம் விசாரிச்சிட்டு, இது எல்லாம் அவரே சொன்னாரு”

இதனை அமைதியாக ஆதி மற்றும் அர்ஜுன் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

“ சரி மா, வா சாப்பிடலாம். அதுக்கு அப்புறம் போய் எடுத்து வை” என அர்ஜுன் அழைத்தான்.

அமைதியாகவே உண்டனர். பின் மதி அக்காவிடமும், அவர் கணவரிடமும்.. இன்னும் சிலர் பக்கத்து வீட்டினரிடமும் சொல்லிவிட்டு ஹாஸ்டல் கிளம்பிவிட்டாள் சாரா. இனி வார இறுதியில் வந்து வீட்டை பராமரிக்க வேண்டும். மூவரும் அர்ஜுன் காரில் அமைதியாக வந்து ஹாஸ்டல் வளாகத்தில் இறங்கினர்.


அவள் பையை எடுக்க உதவி செய்தனர். ஆதி மற்றும் அர்ஜுன் அவள் இருபக்கமும் வந்து தோலோடு அணைத்துக் கொண்டனர். சாரா கண்கள் கலங்கி இருந்தது.

“சாரா, இங்க பாரு ஏன் அழுற?! அதான் நாங்க இருக்கோம்ல ம்ம்… ஃபீல் பண்ணாம இரு சரியா” என ஆதியும்

“ஆமா சாரா, நாங்க இருக்கோம் உனக்கு. அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம். எதனாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணு சரியா. இன்னும் கொஞ்ச நாள் தான். அதுக்கு அப்புறம் சாரா அவளுக்கு பிடிச்ச வேலைக்கு போவா… அவா ஆசைப்பட்டது எல்லாம் நடக்க போகுது” என அவள் மனதை உற்சாக படுத்த அவ்வாறு பேசினான்.

எந்த இலக்கும் வாழ்வில் இல்லாத வாரு நினைத்துக்கொண்டு இருந்த சாராவுக்கு அர்ஜுன் வார்த்தை மனதை கொஞ்சம் மாற்றியது. சின்ன வயதில் இருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்த சாராவுக்கு நல்ல வேலைக்கு சென்று வாழ்வாதாரத்தை மாற்ற வேண்டும் என்று மனதில் எப்போதும் ஒரு வெறி உண்டு. அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து வருபவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் ஒரு ஆசை தான்.

அவள் அப்பாவையும் சேர்த்து பார்த்துக்க ஆசைப் பட்டாள் தான். ஆனால் இப்போது அப்பா இல்லை, ஆசை மட்டுமே மீதம் இருந்தது.

கலங்கிய கண்கள் ஊடே லேசாக சிரித்தாள். அர்ஜுன் மற்றும் ஆதி எப்போது போல் ஆளுக்கு ஒரு பக்கம் அவளை அணைத்துக்கொண்டனர். இருவரின் எண்ணமும் இப்போது சாரா அவர்களின் பொறுப்பு. நட்பாக மட்டுமே இருந்த சாரா இப்போது அவர்கள் வாழ்கையில் ஒரு படி மேலே வந்துவிட்டாள்.

அவளை ஹாஸ்டல் அனுப்பிவிட்டு ஆதியை அவன் வீட்டில் ட்ராப் செய்ய புறப்பட்டனர். போகும் போது ஆதி தான் பேச்சை எடுத்தான்.

“மச்சி, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். இது சாராவுக்கு கண்டிப்பா தெரியவே கூடாது டா. எனக்கே மூணு நாள் முன்னாடி தான் தெரியும்” என பீடிக்கையோடு ஆரம்பித்தான்.

அவன் என்ன என்று சொல்லும் முன்பே ஆயிரம் யோசனை அதற்குள் அர்ஜுன் தலைக்குல் வந்துவிட… ஒருவித ஆர்வத்துடன் “ என்ன டா அது?! சாரா கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்ற. அவ சம்மந்த பட்ட விஷயமா?”

“ ஆமா டா. அவளுக்கு படிக்க ஸ்பென்சர் பண்றதே எங்க அப்பா தான் டா. நம்ம கம்பனி ல இருந்துதான் ஸ்பென்சர் பண்றாங்க. எனக்கே சாரா அப்பா இறந்த ரெண்டாவது நாள் தான் தெரியும். அன்னைக்கு நான் கிளம்பி சாரா வீட்டுக்கு வரும்போது எங்க அப்பா ஓட மேனேஜர் பார்த்தேன். அப்போ தான் நெறைய பேருக்கு படிக்க ஸ்பென்சர் பண்ணிட்டு இருக்கிறதா பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. அந்நேரம் செல்வராஜ்னு‌ பெயர் அடிபட்டிச்சு. அப்போதான் எனக்கே தெரியும்”

“டேய் எப்புடி டா. உங்க அப்பா ஸ்பென்சர் பண்றவங்களுக்கு அவங்க பையன் படிக்கிற காலேஜ்லயே சீட்டு வாங்கி கொடுப்பாங்க?! அதுவும் இல்லாம உங்க அம்மா பிசினஸ் பார்ட்னர் வேற. அவங்க தான் ரொம்ப ஸ்டேட்டஸ் பார்ப்பங்களே?” என அர்ஜுன் தெரிந்துகொள்ள கேட்டான்.

“அதான் டா எனக்கும் புரியல. அம்மா இதுக்கு கண்டிப்பா விட்டிருக்க மாட்டாங்க. எனக்கு எனவே அப்பா தான் அவங்களுக்கு தெரியாம செய்யிராருனு நினைக்கேன்” என யோசனையுடன் பதில் சொன்னான் ஆதி.

“ சரி டா.. விடு பார்த்துக்கலாம். சாரா அப்பா எப்படி உன் அப்பாக்கு பழக்கம்?”

“நமக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு டா. அங்க பராமரிப்புக்கு இருந்திருப்பாங்கனு நினைக்கேன் மச்சி. சாரா கிட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் டா”

“அவா சும்மாவே நீங்க பெரிய இடம். பணக்கார பசங்கனு சொல்லி பாடம் எடுப்பா. இதுல உங்க அப்பா ஸ்பென்சர் பண்ணி தான் படிக்கிறனு தெரிந்த கண்டிப்பா நம்ம கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ண ஆரம்பிச்சுடுவா” என அவளைப் பற்றி சரியாக கணித்து சொன்னான் அர்ஜுன்.

பின் ஆதியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அர்ஜுன் சென்றுவிட்டான்.
 
Top