அர்ஜுன் ப்ரொஜெக்ட்டில் கண்ணாக இருந்தாலும் ஆதி மீதும் கவனம் வைத்தான். கொஞ்சம் மாதமாக அவன் சரியாக பேசுவதில்லை என்பதை உணர்ந்தவன் இன்று அவனை நேரில் சந்திக்க அவனின் வீட்டுக்கு வந்தான். இரண்டு படிகளாக தாவி குதித்து ஆதி ரூம் வர அவனோ வெளியே தெரிந்த இருட்டை வெறித்த படியே இருந்தான்.
"என்ன மச்சி பார்த்துட்டு இருக்க?" என ஆதி பார்வை சென்ற திக்கில் பார்த்தவாறு கேட்க
"ஒன்னும் இல்ல டா, சும்மா தான். நீ என்னடா இங்க? சாரா நல்லா இருக்காள்ல?"
"அவளுக்கு என்ன நல்லா இருக்கா....ரோட் சைட் ரோமியோ மாதிரி சுத்திட்டு இருந்த என்னோட நண்பன காணோம்னு தேடி வந்தேன்"
ஆதி செய்த செயல் சாராவை பாதிக்காமல் அவள் நன்றாக இருக்கிறாள் என்று அவனுக்கு குட்டு வைத்த பின், பழைய படி இருந்த நண்பனை காணும் என்பதையும் தெரிவித்தான்.
கசந்த புன்னகை ஒன்றை கொடுத்த ஆதி "அவன் எப்பவோ செத்து போய்ட்டான் டா, இப்போ இருக்கிறது வெறும் ஒடம்பு மட்டும் தான்" என சொன்னவனை தவறை எண்ணி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்.
"டேய் ஏன் டா இப்படி பேசுற, எனக்கு தெரியும் நீ ஏஞ்சலாவை ரொம்ப லவ் பண்றனு, அவா கிட்ட பேசி பாரேன் டா"
"என்ன டா பேச சொல்ற, முன்னாடி பண்ணாதே லவ் இல்ல, இப்போ எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு ஏஞ்சலா கிட்ட போய் அவளை லவ் பன்றேன்னு சொல்ல சொல்ற, ஒருவேளை இதுவும் அதே மாதிரி ஆகிட்டா? ஏஞ்சலா நிம்மதியா இருக்கட்டும் டா, அவளையும் சாரா மாதிரி நான் கஷ்ட படுத்திட கூடாது" என ஏக்கமாக சொல்ல
"உனக்கு இன்னுமா டா புரியல நீ அவளை லவ் பன்றேன்னு, உன் மூஞ்ச போய் கண்ணாடில பாரு எப்படி மெலிஞ்சி போய் இருக்கனு, உன்னோட கனவு பைக் ரேசிங்..அதை கூட பண்ணாம ஏஞ்சலா நினவுளையே சுத்திட்டு இருக்கியே அதுக்கு காரணம் என்ன?" என குரலை உயர்த்தி கேட்க
புருவம் சுருங்க ஆதி யோசிப்பதை உணர்ந்த அர்ஜுன் மேலும் தொடர்ந்தான் "நீ சாரா கிட்டயும் தான் பேசாம இருந்த அப்போ எல்லாம் இதே மாதிரி தான் நீ உணர்ந்தியானு உன்ன நீயே கேட்டுக்கோ? இத்தனை மாசத்துல நீ என்னையும் சாராவையும் பத்தி அதிகம் நினைச்சியா இல்லை ஏஞ்சலாவை பத்தி அதிகம் நினைச்சியா?" என நெத்தியில் அடித்தார் போல் கேட்க
ஆதி முக பாவனையில் இருந்தே ஏஞ்சலா என்ற பதில் கிடைத்தது.
"ம்ம், மூஞ்சிலையே எல்லாத்தையும் காட்டுனா மட்டும் பத்தாது, சம்மந்த பட்ட ஆள் கிட்ட பேசணும். ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி யோசி இந்த நிமிஷம் ஏஞ்சலா உன் முன்னாடி வந்து நின்னா என்ன பண்ணுவ?" என நண்பனின் தோளை தட்டிய படி சொல்லிவிட்டு பால்கனி பக்கம் சென்று நின்றுக்கொண்டான் அர்ஜுன்.
அர்ஜுன் சொன்னது போலவே ஆதி கண்களை மூடி... இருட்டி வெளிச்சமென தெரிந்தது ஏஞ்சலாவின் முகம். அவள் எப்போதும் போட்டிருப்பது போல் சட்டை, பாண்ட், ஒரு தொப்பி, கையில் ஹெல்மெட் சகிதம் ஸ்டைலாக பைக்கில் சாய்ந்த வாறு நின்றுக்கொண்டிருந்தாள்.
ஆதியின் மூளையை அவளை அப்படியே சென்று இறுக்க கட்டிக்கொள்ள சொல்லி தூண்டியது. அவன் நினைவுகளில் அவளின் கழுத்து முகம் புதைத்தவன் கீழே முன்னேற பட்டென கண்களை திறந்துவிட்டான். அவனுக்கே அவனை நினைத்து வெட்கமாக இருந்தது. அர்ஜுன் பக்கம் வந்து நின்றவன்
"கண்டிப்பா இந்த பீலிங் எதுவுமே சாரா கிட்ட வந்தது இல்ல டா, ஏஞ்சலாவை நினைச்சாவே அப்படியே மனசு உடம்பு எல்லாம் ஏதோ பண்ணுது டா" என இதயமே இருக்கும் பக்கம் தடவிய வாறே சொன்னான்.
"இப்போவாச்சும் உன்னோட இரும்பு மண்டைக்கு புரிஞ்சதே சந்தோசம் டா, உனக்கே இப்படி இருக்குன்னா, அந்த பொண்ணும் உன்ன பார்த்ததுல இருந்தே மனசுல ஆசைய வெச்சிட்டு இருக்கு அவளுக்கு நீ பேசாம எப்படி இருக்கும் என்னனு பேசு டா" என்றான் நல்ல நண்பனாக.
****
அடுத்து வந்த நாட்களில் ஆதியும் அர்ஜூனுடன் ப்ரொஜெக்ட்டில் இணைந்துவிட, அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றனர். பல நாள் தேடலுக்கு பின் நுணுக்கமாக சிற்பம் செதுக்குபவரை கண்டுபிடித்து கூட்டி வந்தனர். சாரா சொன்ன யோசனை நன்றாக வேலை செய்தது. அது ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க, ஆதி ஏஞ்சலாவை நேரில் சென்று இன்பதிர்ச்சி கொடுக்க யூகே கிளம்ப தயாராகினான்.
"ஏன் டா இந்த சாரா வர இவ்ளோ நேரம், ஆட்டோ ஏறிட்டேனு அப்போவே சொன்னாலே டா" என மணிக்கட்டில் இருக்கும் கடிகாரம் பார்த்த வாறே புலம்பினான் ஆதி
"அதான் டா எனக்கு தெரியல, தப்பு பண்ணிட்டேன். எப்பவும் போல நானே அவளை கூப்டு வந்திருக்கணும் அவளே தனியா வர்றேன்னு சொன்னாலும் நான் விட்டுருக்க கூடாது" என நெற்றியை தேய்த்த வாறே டென்ஷன் உச்சியில் இருந்தான் அர்ஜுன்.
"விடு டா, நம்ம ஊரு டிராபிக் பத்தி தான் உனக்கே தெரியுமே, நீ ரொம்ப டென்ஷன் ஆகாத வந்திருவா. ஒரு முறை போன் செய்துனா பாரு" என சொன்ன ஆதி..அர்ஜுனை விசித்திரமாக பார்த்தான்.
"ஹ்ம்ம், இங்க டவர் சரியா இல்லை. நான் அந்த பக்கம் போய் பாக்குறேன்" என நகர்ந்தான்.
வேகா எடுத்துக்களுடன் நடந்தவன் சாராவை தொடர்புகொள்ள பல முறை முயற்சி செய்ய ரிங் போனது. தலைமுடியை அழுத்த கோதியவாறு அவள் எடுப்பதுக்காக காத்திருக்க அதுவோ முழுவதுமாக அடித்து ஓய்ந்தது. அவள் இப்படி எல்லாம் செய்யமாட்டாளே என இன்னும் டென்ஷன் கூடியதே தவிர குறையவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய, ஒருகட்டத்தில் அழைப்பு துண்டிக்கப்பட அர்ஜூனுக்கும் பயம் பிடித்துக்கொண்டது. இதனை எல்லாம் ஆதி தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அர்ஜுனின் பதற்றம், பயம் எல்லாம் வேறு கதை சொன்னது.
பதற்றமாக ஆதி அருகில் வந்தவன் "டேய் அவா போன் எடுக்க மாட்டிக்கா டா. முதல்ல ரிங் போய் அதுவா கட் ஆச்சு ஆனா இப்போ கட் பண்ணி விடுறா. சாரா அப்படி எல்லாம் பண்ண மாட்டா. எனக்கு என்னமோ பயமா இருக்கு"
"சரி சரி டா, நீ டென்ஷன் ஆகாத. உங்க ஆபீஸ் செக்யூரிட்டி வெளிய தான இருப்பாரு அவருக்கு சாராவை தெரியும் தான, அவா கிளம்பிட்டாளாணு கேளு" என யோசனை சொல்ல
தலையிலே அடித்துக்கொண்டவன் "ஆமா டா, பாரு எனக்கு டென்ஷன்ல தோணவே இல்லை" என சொன்னவன் அவசரமாக போன் செய்து கேட்க, அவரோ சாரா ஆட்டோவில் கிளம்பிவிட்டாள் என சொன்னார்.
"ஆதி அவா கிளப்பிட்டானு சொல்றாரு டா, அப்புறம் ஏன் போன் கட் பண்ணுறா எனக்கு என்னமோ சரியா படல"
"நீ ரொம்ப யோசிக்கிறியோனு தோணுது, அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. மே பி அவா என்டெரென்ஸ் வந்துருக்கலாம்..நேர்லயே வந்து பேசலாம்னு கட் பண்ணி விட்டுருப்பா ஒரு 5 மினிட்ஸ் பாரு"
ஆதியின் சந்தேகம் உறுதியானது போல் இருந்தது அர்ஜுன் செய்கை எல்லாம். தானாக எதுவும் முடிவுக்கு வர வேண்டாம் என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்தான்.
5 நிமிடம் முழுவதுமாக முடியவில்லை, அதற்கு மேல் அர்ஜுன் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை, நேராக ஆதியிடம் வந்தவன்
"மச்சி நீ பார்த்து போயிட்டு வா. சாராவ தேடி நான் கிளம்புறேன். என்னால முடியல டா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ" என பாவமாக சொல்ல
ஆதிக்கும் பயம் பிடித்துக்கொண்டது சாராவை நினைத்து. கிளம்பிய அர்ஜுன் பின்னாடியே சென்றவன்
"இரு டா, நானும் வர்றேன். என்னாலையும் உங்களுக்கு ஒன்னுனா நிம்மதியா இருக்க முடியாது"
"பரவாயில்லை டா, நீ எத்தனை மாசம் கழிச்சு ஏஞ்சலாவை பார்க்க போற, அதை ஏன் டா வேண்டாம்னு சொல்ற. நீ கிளம்பு" என அவனை கிளப்புவதில் குறியாக இருக்க
"என்ன டா நினைச்சிட்டு இருக்க, எனக்கும் சாரா முக்கியம் தான். ஏஞ்சலா எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியலை ஆனா இத்தனை வருஷம் பழகுன நீங்க ரெண்டு பேரும் இந்த யூகே ட்ரிப் விட பெருசு தா. வா டா போகலாம்" என கோவமாக சொல்லிவிட்டு முதலில் நடந்தான் ஆதி.
அவனின் வார்த்தைகளை மனதில் ஓட்டி பார்த்த அர்ஜுன் வாயடைத்து போனான். நேரம் ஆவதை உணர்ந்து கிளப்பி சென்றான்.
அவளுக்கு என்ன ஆகி விட்டதோ என்ற பதற்றம் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. அவள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து ஏர்போர்ட்க்கு போகும் பாதைகளில் அனைத்து இருவரும் அலசி ஆராய ஆரம்பித்தனர்.
நேரங்கள் கரைந்ததே தவிர அவளை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. யாரிடமும் கேட்டு எந்த பலனும் இல்லை ஏனெனில் இவர்கள் இருவரை தவிர அவளுக்கு என்று யாரு இல்லையே. ஆதியும், அர்ஜுனின் வெவ்வேறு இடங்களில் தேடி கடைசியில் ஒரு இடத்தில் சந்திக்க அர்ஜுன் அழுதே விட்டான். முடி எல்லாம் கலைந்து, வேர்வையில் சட்டை எல்லாம் நனைந்து, முகம் கூம்பி போய் சாலை ஓரத்தில் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
ஆதியும் இப்போது வருந்துவதை விட அருகில் உள்ளவனுக்கு ஆறுதல் சொல்வதே பிரதானமாய் பட
"ஏன் டா அழுகுற, அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. வா டா போலீஸ் கம்பளைண்ட் கொடுப்போம்" என சோகத்தை மறைத்து அடுத்து நடக்க வேண்டியவையை சொன்னான்.
"முடியல டா அவா இல்லாம. தப்பு பண்ணிட்டேன். எல்லாமே என்னோட தப்பு தான், என்னோட தப்பு தான்" என சொல்லியபடியே தலையில் அடித்துக்கொள்ள... அவன் கையை தடுத்தவன்
"இதுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல டா. இப்போ அடுத்து பண்ண வேண்டியதை பண்ணாம நடந்ததை நினச்சு பொலம்பிட்டு இருக்க பாத்தியா அது தான் தப்பு, வா டா" என அவனை எழுப்ப ,முயலும் போதே அர்ஜுன் போன் அடித்தது.
இருவரும் பரபரப்பாக அதனை எடுத்து பார்க்க ரூபினி என்று வந்தது. அர்ஜுன் டென்ஷன் ஆகி விட்டான்.
"இந்த லூசுக்கு வேற வேலையே இல்லை. இவா மட்டும் அடுத்து என்னோட கண்ணுல படட்டும் அப்போ தெரியும் நான் யாருனு" என உறுமினான். ஆதிக்கு ரூபினி பற்றி தெரியும் என்பதால் அவனின் போனை எடுக்க வலியுறுத்தவில்லை.
மீண்டும் மீண்டும் அவள் போன் செய்துகொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அர்ஜுன் "என்ன டி வேணும் உனக்கு, அதான் எங்க அப்பா கிட்ட என்னை வாங்க டீல் பேசுனியே அது போதாதா உனக்கு. இப்போ தான் உன் அப்பனுக்கும் எங்க கம்பனிக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு ஆகிடுச்சுல அப்புறம் எந்த மூஞ்சிய வெச்சிட்டு எனக்கு போன் பண்ற. என் கண்ணு முன்னாடி வந்துறாத" என காட்டு கத்து கத்த
அந்த பக்கம் இவனின் சூடான பேச்சுக்கு எந்த வித எதிர்வினையும் இல்லாமல் கூலாக "மிஸ்டர் அர்ஜுன் பேசி முடிச்சிட்டீங்களா. நான் அந்த கம்பெனி டீல் பத்தி பேச போன் பண்ணேன்னு நினைச்சியா முட்டாள். ஹாஹாஹா... ரோட்ல நாய் மாதிரி சுத்திட்டு இருக்க போல" என எள்ளலாக வினாவ
"ஏய் ஏய் என்னடி பண்ண என்னோட சாராவ, மரியாதையா சொல்லு"
"பரவாயில்லை, ஒருவார்த்தையில கண்டுபிடிசிட்ட போல..ஹாஹா, அந்த சரஸ்வதி பின்னாடி போனா தெருவுல நாய் மாதிரி சுத்த வேண்டியது தான், இதுக்கு தான் என்னோட பின்னாடி வா... என்கிட்டே என்ன இருக்குனு அப்போ உனக்கு புரியும்" என ஒரு மாதிரி பேச
"சீச்சீ பொண்ணா டி நீ, ஒழுங்கா சொல்லு சாராவ என்ன பண்ண, நான் மட்டும் உன் வீட்டுக்கு வந்தேன்னு வெய் குடும்பத்தையே உரு தெரியாம அழுச்சிடுவேன்" என மிரட்டலாக பேச
அர்ஜுன் பேசுவதில் இருந்தே நடந்ததை யூகித்த ஆதி, ரூபினி மேல் கொலை காண்டில் இருந்தான். எனவே அர்ஜுன் பேசுவதை அவன் தடுக்கவில்லை. இதே ஆதியிடம் அவள் பேசிருந்தால் இன்னும் இவன் பச்சை பச்சையா கேட்டுருப்பான்.
"ஹ்ம்ம் என்ன கேட்ட, சாரா எங்கன்னு தான" இரண்டொரு நொடி இடைவிட்டவள் "மார்சுவரில" என சொல்லிவிட்டு வில்லி சிரிப்பு சிரிக்க
அர்ஜுன் கையில் இருந்த போன் நழுவு கீழே விழுந்தது, கூடவே கண்களில் ஓரிரு கண்ணீர்துளிகளும்.
அவனின் நிலை உணர்ந்து போனை எடுத்த ஆதி கேட்க நேர்ந்தது ரூபினியின் வார்த்தைகள் தான் "மார்சுவரில தான் இருக்கா, ஆனா உயிரோட. முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோ, நீ தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் அவளோட இதய துடிப்பு கொறஞ்சிட்டே இருக்கும்" என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
"டேய் அர்ஜுன் அர்ஜுன் இங்க பாரு டா, என்னை பாரு, சாரா உயிரோட தான் இருக்கானு சொல்றா டா" என சொன்ன பின் தான் அர்ஜுன் என்ற சிலைக்கு மூச்சே வந்தது.
"என்ன டா சொல்ற"
"ஆமா, நீ போன் கீழே போட்டுட்ட, நான் எடுத்து காதுல வெச்ச அப்போ தான் அவா சொன்னது கேட்டுச்சு. சீக்கிரம் வா டா, நம்ம போய் கண்டுபிடிக்கலாம். அதுக்கு அப்புறம் அந்த ரூபினிக்கு ஒரு வழி பண்ணலாம். அவளை எல்லாம் சும்மாவே விட கூடாது"
அப்போது சரியாக அர்ஜுனுக்கு மீண்டும் அழைப்பு வர... ரூபினி என நினைத்துக்கொண்டு "இவளை..." என சொன்னவாறே போன் எடுத்து பார்க்க 'sArA' என்று வந்தது. ஆதிக்கு நண்பனின் மனநிலை நன்றாக புரிந்த, அவனுக்கு சாராவின் மேல் இருக்கும் அதீத அன்பின் காரணம்.
வேகமாக அதனை அட்டென்ட் செய்ய, இணைக்கு துண்டிக்க பட்டது.
"ஆதி கட் ஆகிடுச்சு டா. ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல டா, இப்போ என்ன பண்றது"
"இந்த நம்பர் வந்த லொகேஷன் வச்சு ட்ராக் பண்ணலாம் டா, கொஞ்சம் இரு" என சொன்னவன் யாருக்கோ போன் செய்து சாராவின் நம்பர் கொடுத்து ட்ராக் செய்ய சொல்ல... அடுத்த 5 நிமிடங்களின் அவள் இருக்கும் இடம் தெரிந்தது. நொடியும் தாமதிக்காமல் அர்ஜுன் ஆதியின் வண்டியில் ஏறிக்கொள்ள, சீறி பாய்ந்து சென்றான்.
உள்ளே சென்றவர்கள் அங்கு இருந்த நபரிடம் இவர்கள் யார் பின்னணி என்பதை சொல்ல உள்ளே செல்ல உடனே அனுமதி கிடைத்தது. ஆதி அவன் கையில் இருந்த மாஸ்க் ஒன்றை குடுக்க அதைக்கூட கண்டுக்காமல் உள்ளே ஓடினான் அர்ஜுன். இன்று வந்த பிணங்களை என்று தேடாமல் பொதுவாக அங்கு இருக்கும் பிரீஸர் பாக்சில் தேடினர். இன்று வந்த பிணங்களுடன் வைத்து விடும் அளவுக்கு ரூபினி ஒன்றும் முட்டாள் இல்லையே.
அங்கு இருந்த நபர்கள் உதவியோடு ஒரு ஒரு பாக்ஸ்சாக திறந்து பார்க்க நேரம் எடுத்த. அதே அறையில் ஒரு பெட்டியில் இருந்த சாரா கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தாள். காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கை அந்த தருவாயில் மடிந்தது.
ஆதிக்கு மாஸ்க் போட்டுமே குமட்டலாக இருக்க, எல்லாத்தையும் பொருட்படுத்திக்கொண்டு சாராவை தேடுவதை மட்டுமே முன்னிறுத்தி தேடினான். சாரா கடைசி முயற்சியாக கையில் இருந்த போனை தட்டி ஒலி எழுப்ப, மூச்சு பேச்சு இல்லாமல் கண்களை மூடிவிட்டாள். அவள் எழுப்பிய ஒலி அர்ஜுன் இருந்த பக்கம் தான் கேட்டது எனவே எல்லாரும் அங்க பகுதியில் இருக்கும் பெட்டியை திறந்து பார்க்க, நிமிடங்கள் கடந்து அசைவின்றி கிடந்த சாராவை கண்டுபிடித்தனர்.
அர்ஜுன் 'சாரா' என பெருங்குரல் எடுத்து கத்த, ஆதியும் துடிதுடித்து விட்டான் அவர்கள் ஆருயிர் தோழியை நினைத்து. உடை கசங்கி, குளிரூட்ட பட்ட பெட்டிக்குள் இருந்ததால் உதடு எல்லாம் நீலநிறமாக மாறி, முகத்தில் ரத்த பிசைப்பு இன்றி வெளுத்து போய் இருந்தாள். கொஞ்சம் நேரமாக, அர்ஜுன் அவனாகவே இல்லை என்பதால் ஆதி தான் முதலில் அவளுக்கு இதயத்துடிப்பு இருக்கிறதா என்று பார்க்க, அவள் இன்னும் உயிரை பிடித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அர்ஜுனை தான் சமாளிக்க முடியவில்லை. இதற்கு முன்பு பார்த்த அர்ஜுன் இவன் இல்லையே என்பது போல் இருந்தது அவன் செய்கை எல்லாம். சாரா ஒருவேளை உயிரை விட்டிருந்தால் அவனும் உயிரை மாய்த்துக்கொள்வது போல் இருந்தான். சாரா இருந்த அறைக்கு நர்ஸ் போகையும் வரவுமாக இருக்க, வெளியில் இருந்தவர்களுக்கு பதற்றமாக இருந்தது. முக்கால் மணி நேரம் பின் டாக்டர் வந்து சாரா நன்றாக இருக்கிறாள் என சொன்ன பின் தான் தாளம் தப்பி துடித்த இதயம் சாந்தமானது. மகிழ்ச்சியிலும், நடந்த துக்கத்தையும் போக்க அருகில் இருந்த நண்பன் ஆதியை கட்டிக்கொண்டான் அர்ஜுன். இருவரின் கண்களிலும் கண்ணீர், அந்த நொடி உணர்ந்தனர் அவர்கள் வாழ்வில் சாரா எவ்வளவு முக்கியம் என்பது.
இருவரும் உள்ளே சென்று பார்க்க பிடிங்கி எரிந்த கொடி போல் கிடந்தாள். அவள் அருகில் சென்று ஆளுக்கு ஒரு கையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டனர். பல மணி நேரம் சென்றும் அவள் இன்னும் உறக்கத்தில் இருக்க, ஆதி சென்று இருவருக்கும் சாப்பிட வாங்கிக்கொண்டு வந்தான். சாப்பிடமாட்டேன் என அடம் செய்தவனை இரண்டொரு வார்த்தை போட்டு திட்டிய பின் தான் உண்டான்.
இருவரையும் நன்றாக காக்க வைத்த பின் மெதுவாக கண்களை திறந்தாள். மற்ற இருவரும் அவளையே தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். கண்களை திறந்த சாராவுக்கு தான் உயிரோடு இருப்பதே அதிர்ச்சி, கூடுதல் அதிர்ச்சியாக ஆதி மற்றும் அர்ஜுன் அவள் எதிரில் இருப்பது. கண்கள் கலங்க இருவரையும் பார்க்க, அவர்கள் இருவரின் கையும் அவள் கண்ணீரை துடைத்துவிட்டது.
அர்ஜுன் "ரொம்ப பயம் காட்டிட்ட டி" என்றான் தடுமாறிய குரலில்.
கஷ்டப்பட்டு புன்னகை செய்ய "எதுவும் வலி இருக்கா சாரா" என் கேட்டான் ஆதி. அவளுக்கு பெரியதாக எந்த அடியும் இல்லை என்றாலும் பிரீஸர் பாக்சில் இருந்ததால் ஏதேனும் ஆகிருக்குமோ என்ற பயம் இருக்கவே அப்படி கேட்டான்.
காய்ந்த உதடு ஒட்டிக்கொள்ள, கஷ்டப்பட்டு இதழ் பிரித்து "இல்லை, கொஞ்சம் டையர்ட் ஆ இருக்கு"
அர்ஜுனுக்காக தனிமை கொடுக்க வேண்டி "நீங்க இருங்க நான் போய் நர்ஸ் கூப்டு வர்றேன்" என சொன்னவன் பாசமாக சாரா தலையில் தடவி கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டான். நர்ஸை அழைக்காமல் வெளியில் இருக்கையில் அமர்ந்துக்கொண்டான். அவளுக்கு எதுவும் இல்லை, கண் முழித்த உடன் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என முன்பே கூறிவிட்டனர். அவர்களுக்கு தனிமை கொடுக்கவே இந்த ஒரு காரணம்.
அறையில் அமைதி, சாரா கை அருகே அர்ஜுன் தலை கவிழ்ந்து படுத்திருந்தான். சாரா அவனையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என தெரிந்தே இருந்தான் மேலும் நடந்த நிகழ்வுகளை கிரகிக்கவே கால அவகாசம் எடுத்துக்கொண்டான். அவன் இருக்கும் நிலைமையில் அவளை நெஞ்சில் புதைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருந்தான் அர்ஜுன். அப்போது சாரா கை அவனின் தலை முடியில் அலைய நிமிர்ந்து பார்த்தவன், தலையை அவளுக்கு இசைவாக கொடுத்த படியே எதுவும் பேசாமல் இருந்தான்.
"நான் நல்லா இருக்கேன் அர்ஜுன், எனக்கு ஒன்னும் இல்ல" என சன்னமான குரலில் பேச
அவள் கைகளை எடுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டவன் "பயமா இருந்தது டி" என கண்ணீர் சிந்த
சாராவும் நெகிழ்ந்து போய் இருந்தாள். அந்த பெட்டியில் இறுதியாக கண்களை மூடும் போதும் தனக்கு என்று யாரும் இல்லை என்றே நினைத்தாள். ஆனால் கண்களை திறக்கும் போது அவளின் ஆதியும் அர்ஜுனும் அருகில் இருப்பது தெரிந்த பின் இவர்களை விட தன் வாழ்வில் வேறு யாரு வேண்டும் என்றே தோன்றியது.
எழுந்து அமர முயற்சி செய்ய, கண்களை சட்டையில் துடைத்த அர்ஜுன் வேகமாக வந்து அவளுக்கு உதவி செய்தான். கட்டில் நடுவில் அமராமல் கொஞ்சம் ஓரமாக சாய்வாக அமர்ந்து அர்ஜுனை அருகில் அமரும் படி கண்களால் செய்கை செய்ய, வேண்டாம் என்றா சொல்லுவான் அடுத்த நொடி அமர்ந்திருந்தான்.
மருந்தின் வீரியம் இன்னும் இருப்பதால் தலையை சாய்க்கணும் போல் இருக்க அருகில் இருந்த அர்ஜுனின் சட்டை காலரை பிடித்து அருகில் இழுத்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு சென்ற அர்ஜுன், சாரா அவன் நெஞ்சில் சாய்ந்த போது கைகள் தானாக அவளை சுற்றி அணைத்துக்கொண்டது. சாரா படுத்த வாக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்க, அதனை உணர்ந்த அர்ஜுன் நன்றாக பின்னால் சாய்த்துக்கொண்டு ஒரு கை அவள் தோளில் இருக்க, மற்றொரு கையை கொண்டு அவள் இடுப்பை பற்றி இழுத்து தன் மேல் நன்றாக சாய்த்துக்கொண்டான். சாராவும் அவன் சட்டையை பிடித்த வாறு படுத்துக்கொண்டாள். அப்போது தான் இருவருமே நிம்மதியை உணர்ந்தனர். இருவரிடமும் இருந்த மௌனம் பல அர்த்தம் சொன்னது.
நிமிடங்கள் செல்ல அந்த நெருக்கம் போதாமல் சாரா அவள் முகத்தை நெஞ்சில் இருந்து அவன் கழுத்துக்கு இடம் மாற்றிக்கொண்டாள். பதிலுக்கு அர்ஜுனிடம் இருந்து அழுத்த நெற்றி முத்தம் ஒன்று வந்தது. இருவரில் உடலும் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. அவனின் உடல் கதகதப்பு நன்றாக இருக்க அப்படியே தூங்கியும் விட்டாள். அர்ஜுன் விரலை கூட அசைக்காமல் நிம்மதியில் கண்களை மூடிக்கொண்டான்.
இதனை வெளியில் இருந்து பார்த்த ஆதி சந்தோஷமாகவே உணர்ந்தான். இப்போது அவனுக்கு எந்த வித பொறாமையோ, தனிமையோ இல்லை. அவனின் குற்ற உணர்ச்சி அப்போது தான் விடைபெற்று சென்றது. கண்கள் குளிர பார்த்தவன் யாரும் உள்ளே போகாமல் பார்த்துக்கொண்டான்.
விடியற் காலையில் தான் அர்ஜுன் கண்விழிக்க சாரா இன்னும் அவன் மேல் சாய்ந்து தான் தூங்கிக்கொண்டு இருந்தாள். அப்போது தான் இருவரின் நெருக்கமும் விளங்கியது. இரவில் அவனே அவ்வாறு நடந்துக்கொள்வான் என நினைக்கவே இல்லை. ஆனால் சாரா அதனை ஏற்றுக்கொண்டது இன்னும் கேள்விக்குறி தான். இருவர் இருக்கும் நிலை பார்த்து லேசாக வெட்கம் வர, அவள் கையை சட்டையில் இருந்து பிரித்துவிட முயன்றான். அவளோ தூக்கத்தில் சட்டை மட்டுமே பற்றி இருந்த கையை எடுத்து அவனை நன்றாக அணைத்துக்கொள்ள, அவனுக்கோ 'அய்யோடா' என்றது போல் ஆனது. சாய்ந்து இருந்த தலையணையை அவள் அருகில் வைத்துவிட்டு வெளியே வந்துவிட்டான். ஆதி கையில் டீ வாங்கிக்கொண்டு வர, அவனை பார்க்க முடியாமல் சங்கடமாக இருக்க
"மச்சி, அது வந்து..."
"நம்ம இதை பத்தி அப்புறமா பேசலாம். டிரைவர் கிட்ட கார் எடுத்துட்டு வர சொல்லிட்டேன். உன்னோட வண்டியை ரோட்ல இருந்து அவரே உன் வீட்ல விட்டுறேன்னு சொல்லிட்டாரு. இப்போ டிஸ்சார்ஜ் ஆகிட்டு சாராவ அவா வீட்டுக்கு கூப்டு போகலாம்" என அடிக்கிக்கொண்டு போக
நண்பனை நினைத்து பெருமையில் அர்ஜுன் அவனை கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தம் வைக்க... அப்போது அவர்களை தாண்டி சென்ற நர்ஸ் முகத்தை அஷ்டகோணத்தில் வைத்து திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றார்.
ஆதியோ "ச்சீ கருமம், என்ன டா பண்ற? பேட் பாய்" என திட்ட
சிரித்தபடியே கையில் இருந்த டீயை வாங்கிக்கொண்டான் அர்ஜுன்.
சாரா வீட்டுக்கு வந்தாயிற்று. அவள் பிரெஷ் ஆகிவிட்டு வரவே இருவரும் காத்துக்கொண்டு இருந்தனர். விஷயம் தெரிந்து அருகில் இருக்கும் மதி அக்கா வந்து பார்த்துவிட்டு சென்றார். அவள் வந்த பிறகு தான் நேற்று என்ன நடந்தது என கேட்டு தெரிந்துகொள்ள முடியும். சோபாவின் ஆதியும் அர்ஜுன் அமர்ந்து இருக்க குளித்து முடித்து இலகுவான சுடிதார் ஒன்றை போட்டுக்கொண்டு வந்தாள். கொஞ்சம் காய்ச்சல் இருப்பதால் சோர்வாகவே இருந்தாள்.
"சாரி ஆதி, என்னால தான உன்னால யூகே போக முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு" என வருத்தமாக சொல்ல
"உனக்கு இப்போ காய்ச்சல் இருக்குனு தான் நீ பேசுறத கேட்டுட்டு இருக்கேன், இல்லனா என்கிட்டே இப்படி பேசுறதுக்கு அடி தான் டி வாங்குவ, எனக்கும் நீயும் முக்கியம் தான் சாரா"
"சரி சரி, இனிமேல் அப்படி சொல்லல, அதுக்கு ஏன் மூஞ்ச கொரங்கு மாதிரி வெச்சிருக்க, சிரியேன் கொஞ்சம்"
"நேத்து என்ன டி நடந்தது, நீ ஆட்டோல கிளம்பிட்டனு செக்யூரிட்டி சொன்னாரு. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?" என சீரியசாக வினாவ
நேற்றைய நினைவில் உடல் நடுங்கியது. முகத்தில் பயம் அப்பட்டமாக தெரியும் இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தவள் அர்ஜுன் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ள, ஆதி மடியில் காலை வைத்துக்கொண்டாள். பயத்தில் கால்கள் சில்லிட ஆரம்பித்தது, பாதத்தை பிடித்துக்கொண்டிருந்த ஆதி உணர்ந்தே இருந்தான்.
"சாரா பயப்படாத, இதுக்கு பின்னாடி யாரு இருக்கானு எங்களுக்கு தெரியும். ஆனா இடையில் என்ன நடந்ததுன்னு நீ தான் சொல்லணும்" என பொறுமையாக அர்ஜுன் சொல்ல
நேற்று நடந்ததை சாரா சொல்ல ஆரம்பித்தாள். ஆதியை வழியனுப்ப ஏர்போர்ட் வர ஆட்டோ ஏறினாள். அவன் ஏஞ்சலாவை சென்று சந்திக்க போவதாக அர்ஜுன் வந்து சொன்ன போது சந்தோசமாக இருந்தது. அதனை பற்றியே சிந்தித்த படியே வெளியில் வெடிக்க பார்த்த படியே பயணம் செய்தாள். இடையில் ட்ராபிக்கில் காத்திருக்க, பக்கத்தில் இருந்த காரில் இருந்து இரண்டு நபர் அவளை வம்படியாக அவர்கள் காருக்கு இழுத்து சென்றனர். அந்த ஆட்டோக்காரர் நக்கலாக சிரிப்பு சிரிக்க, அவரும் அவர்கள் ஆள் என்று புரிந்தது. பயத்தில் கத்தி, அவர்களிடம் இருந்து விடுபட முயல மயக்க மருந்து கொடுத்துவிட்டனர். முழுவதுமாக மயக்கம் போகும் முன் கையில் இருந்த போனை ஆடைக்குள் மறைத்துவைத்துவிட்டாள். லேசாகா முழிப்பு வந்து பார்க்கும் போது ஏதோ குளிரூட்ட பட்ட பெட்டிக்குள் அடைபட்டு இருப்பது தெரிந்தது.
கடைசியாக அர்ஜுன் போன் செய்திருக்க, திரும்ப முயற்சி செய்து பார்த்தது, அந்த பெட்டியில் இருந்து விடுபட எடுத்த போராட்டம் என எல்லாம் சொல்லி முடித்தாள். அமைதியாக மற்ற இருவரும் கேட்டுக்கொண்டு இருந்தனர். இருவரின் முகமே சொன்னது அளவுகடந்த கோவத்தில் இருப்பதை.
"நீங்க மட்டும் வரலைனா நான் என்ன ஆகிருப்பேனே தெரியாது. ஆமா, யாரு இப்படி எல்லாம் பண்ணா? எனக்குன்னு எதிரி யாருமே இல்லை, அப்படியே காசுக்காக கடத்தி இருந்தாலும் என்கிட்டே என்ன அவ்ளோ பணமா இருக்கு, வேறு எதுக்காக இருக்கும்?" என இருவரையும் பார்த்து கேட்க
"எல்லாம் அர்ஜுன் வாழ்க்கையில உன்னோட இடத்தை பிடிக்க" என ஆதி மறைமுகமாக சொல்ல
"ஹ்ம்ம், ரூபினி தான் இப்படி பண்ணிருக்கா, அவங்க உதவி இல்லாமையே நம்ம இந்த ப்ராஜெக்ட் பண்றோம்ல அதான். பொறாமை பிடிச்சவ. உன்ன வெச்சு இதை நிறுத்த முடிவு பண்ணிருக்கா." என்றான் அர்ஜுன்.
"இந்த மாதிரி பணக்காரங்களுக்கு, எதுவும் இல்லாத என்னை பகடையா பயன் படுத்துறதே வேலையா போச்சு" என பொதுவாக சொல்ல, ஆனால் ஆதிக்கு தான் அதுக்கு சுருக்கென்று தைத்தது.
"எதுவும் இல்லனு ஏன் சொல்ற, இப்போ அவளுக்கு தெரிஞ்சிருக்கும், உனக்கு ஒன்னுனா நாங்க ரெண்டு பேரும் வருவோம்னு. ஈசி சாரா, இதை அப்படியே விடு. நாங்க பார்த்துக்கிறோம்" என அர்ஜுன் சமாதானம் சொன்னான்.